மாத்தறை நீதவான் திரு. கே.டீ.எல் சமன்குமார மற்றும் அவரது மனைவியான ஜி.எல் தில்ஹானி ஆகியோரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாத்தறை, 3ஆவது கெமுனுஹேவா முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் 16 பேரையும் பொலிஸிடம் ஒப்படைப்பதை இராணுவப்படை தவிர்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை கடற்கரை வீதியில் நீதவானும், அவரது மனைவியும் பயணித்த அரச வாகனத்துக்குக் குறுக்கே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து கைத்தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவரிடம், பாதையை விட்டு சைக்கிளை அப்புறப்படுத்துமாறு நீதவான் தெரிவித்ததனாலேயே தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.
இனப்படுகொலையைப் பயங்கரவாதத்தை வென்றதாகத் தெரிவிக்கும் இலங்கை அரச படைகளின் இராணுவப் பயங்கரவாதம் அனைத்து மக்களையும் இன்று வன்முறையின் விழிம்பில் வாழ நிர்ப்பந்திக்கிறது.