Sunday, May 31, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சிங்களத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவோம் : புதிய திசைகள்

இனியொரு... by இனியொரு...
06/06/2011
in இன்றைய செய்திகள்
0 0
11
Home இன்றைய செய்திகள்

இலங்கை அரச படைகள் சிங்களம் பேசும் தொழிலாளர்கள் மீது நடத்திய வெறியாட்டத்தில் ஒரு தொழிலாளி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். முன்று பெண்கள் உட்பட கவலைக்கிடமான நிலையிலிருந்தவர்களுள் ஒரு தொழிலாளி இன்று கொலை செய்யப்பட்டார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொள்ளையிடுவதற்காகத் திறந்து விடப்பட்டிருக்கும் சுரண்டல் களமான சுதந்திர வர்த்தக வலையத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொலீசார் அரச ஆணைப்படி நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே கடந்த திங்களன்று பலர் காயமடைந்தனர்.

இன்று அவர்களில் ஒருவர் மரணமடைந்ததாகச் செய்திகள் வெளியாகின. சுமார் 200 தொழிலாளர்கள் காயமடைந்த இந்தப் போராட்டம் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மகிந்த அரசிற்கு எதிராக எழுந்த மிகப்பெரும் குரலாக கருதப்படுகிறது.

இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியம், உலக் வங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. இவற்றுள் ஒன்றான தனியார் ஓய்வூதியத் திட்டம் இலங்கைத் தொழிலாளர்களின் எதிர்காலத்தை முற்றாகச் சுரண்டும் சட்டமூலாமாகும். இதற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இலங்கை அரசின் பாசிச முகத்தை இன்னொரு முறை உலகிற்குக் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையிலுள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு சுதந்திர வர்த்தக வலையப் பகுதியை இலங்கை அரசு முற்றாக மூடியிருந்தது. அங்கு தொழிலாளர்கள் செல்லக்கூடாது என போலீசார் தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். அத்தடைகளை மீறி மக்கள் தமது உரிமைக்காகப் போராடிய வேளையிலேயே பொலீசாரின் துப்பாகிப் பிரயோகம் இடம்பெற்றது.

மக்கள் மீதான வன்முறைக்கு எதிராக இலங்கை காவல்துறை மா அதிபர் பதவி விலகியுள்ளார். இன்னும் சில தினங்களில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு ஓய்வூதியத்தில் செல்லவிருந்த காவல்துறை மா அதிபர் பாலசூர்யவின் விலகல் வெறும் கண்துடைப்பு என்று அறிவித்த தொழிற்சங்கங்கள் இன்று ஆர்ப்பாடம் ஒன்றை நிகழ்த்தியுள்ளன. 26 தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் “மகிந்த சிந்தனை இதுதானா”, “உலகவங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் ஓய்வூதியக் குழுவை தோல்வியடையச் செய்வோம்”. “தனியார் சட்டமூலத்திற்கு எதிராக 65 இலட்சம் பேர் போராட்டம்’, ” ஓய்வூதியக் குழு எங்களுக்கு வேண்டாம்’, “கடுநாயக்க ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பொலிஸ் நிலையத்திலா? போன்ற சுலோகங்கள் முன்வைக்கப்பட்டன.

நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட சிங்களத் தொழிலாளர்களின் எழுச்சி ஒவ்வொரு தடவையும் உத்வேகமடையும் போதும் அதனைத் திசைதிருப்புவதற்காகப் பேரினவாதத்தைத் தமிழ்ப் பேசும் மக்கள் மீது பிரயோகிப்பது வழமை.

இது குறித்துச் சிங்களத் தொழிலாளர்கள் விழிப்படைவதும், தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்கு முறை அவர்களுக்கும் எதிரானது என்பதை உணர்ந்து கொள்வதும் அவசியமாகும்.

தவிர, சிங்களத் தொழிலாளர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிக ஒவ்வொரு தமிழ்ப் பேசும் அமைப்புக்களையும் குரல் கொடுக்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறோம்.

போராடி மடிந்த சிங்களத் தொழிலாளிக்கு எமது அஞ்சலியையும் தெரிவிக்கிறோம்.

new.directions.nds@gmail.com

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் - கோதாபாயவே முழுப்பொறுப்பு : சரத் பொன்சேகா

Comments 11

  1. செங்கோடன் says:
    15 years ago

    சிறையில் வாடும் இலட்சக்கணக்கான தமிழர்களுக்காக சிங்கள தொழிலாளிகள் குரல்கொடுத்து போராடுவார்களா?

  2. யாழ் says:
    15 years ago

    நாற்பதினாயிரம் தமிழரை அழித்து எக்களமிட்டுச் சிரித்து வீதிதோரும் பட்டாசு கொழுத்தி பாற்சோறு உண்டு மகிழ்ந்த இனம் சிங்கள இனம். அதில் தொழிலாளியென்ன முதலாளியேன்ன. அப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்தே இனஅழிப்பின் போது ஆட்டம போட்டு மகிழ்ந்தனர். இன்று அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும போது நாம் குரல் கொடுக்க வேண்டுமா? இதுஎன் நியதி?  இந்த சிங்கள இனத்துவேசிகளே தான் அன்று பயங்கரவாத அரசையும் அதன் கொலைவெறி தலைவனையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். இன்று அதன் பலனை அனுபவிக்கின்றார்கள்.  இதில் பரிதாபப்படவோ அனுதாபம் தெரிவிக்கவோ தமிழரை நிர்ப்பந்திப்பது ஏன்?  எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறை இன்று அவர்கள் மீதும். அனுபவித்தால்தான் தெரியும தலைவலியும் திருகுவலியு்ம்.

    • THAMIL MARAN says:
      15 years ago

      அரசியல் வேசம் போட்டால் பேய்க்காட்டுவதே வழக்கமாயிற்றோ உலகில்.

    • Thevan 2 says:
      15 years ago

      .

      இந்த இனவாதம் பேசும் பாசிச அரசுகளும் அதற்கு எதிராக போராடுவதாக கூறிக்கொண்ட பாசிச ஆயுத போராட்ட இயக்கங்களும் மக்கள் விரோத போக்கு உள்ளவையே என்பதை சிங்கள, தமிழ் மக்கள் புரிந்து கொள்ளல் இந்த நேரத்திலாவது மிக அவசியமானது.
      (உதாரணம்:௮௦ களின் பிற்பகுதியில் நடந்த சிங்கள ஜேவிபி படு கொலைகள், மற்றும் தமிழ் புலிகளால், மற்றும் ஆயுத குழுக்களால் நடாத்தப்பட்ட சகோதர படு கொலைகள்)

      இந்த இனவாதத்தை சிங்கள, தமிழ் மக்கள் மீது திணித்து, பிரயோகித்து அதனூடாக தங்கள் நலன்களை பேன முற்படும் பிரந்திய, பூகோள வல்லரசுகளையும் அம்பலப் படுத்த தமிழ் சிங்கள போராடும் முற்போக்கு சக்திகள் இந்த நேரத்தில் இனவாதத்தில் ஊறிப்போயுள்ள தமிழ் மற்றும் சிங்கள மக்களை தெளிவு படுத்த வேண்டிய காலக் கட்டாயத்தில் உள்ளார்கள் என்பதையும் நாம் வலியுறுத்த வேண்டும்.
      ,

  3. Bharathi says:
    15 years ago

    யாழ், தமிழ் ஈழப் போராட்டட்தின் பேரால் அனுராதபுரத்தில் தொழுகையில் ஈடுபட்ட போது கோல்லபட்ட சிங்கள மக்களைப் புலிகள் கொலை செய்த போது கொக்கோ கோலா கொடுத்து வரவேற்றது ஈழத் தமிழ் இனம். யாழ்ப்பணத்தில் இருந்து முஸ்லீம்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட போது மூச்சு விடாமல் பார்த்துக்கொண்டிருந்தது தமிழ் இனம். சிங்களக் கிராமங்களில் மக்கள் குண்டு வைத்துக் கொலைசெய்யப்பட்ட போது அதைப் உற்சாகப்படுத்தியது தமிழ் இனம்.
    இன்னும் ஆயிரம் உதாரணங்களை எழுதலாம். இப்படியே மாறி மாறிக் குற்றம் சுமத்துவதல்ல இங்கு முக்கியமானது. உங்களைப் போன்ற உணர்வு கொண்டவர்கள் சிங்களவர்கள் மத்தியிலும் உள்ளனர். தமிழர்கள் அவர்களுக்கு விரோதிகள். நீங்களும் அவர்களும் ஒரு புள்ளியில் இணைகிறீர்கள். இருவருமே இலங்கை அரசிற்கும் அதன் பாசிசத்திற்கும் துணை போகிறீர்கள். இறுதியில் மக்கள் தமக்கிடையே மோதிக்கொண்டு இறந்து போக அந்த சாம்பல் மேடுகளை மகிந்த போன்றவர்கள் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டப் பயன்படுத்துகிறார்கள்.
    உங்கள் தமிழ் உணர்வின் பெயரால் மகிந்த ஆதரவாளராக இல்லாமல் மக்கள் உணர்வுள்ளவராக மாறுங்கள்.

    • THAMIL MARAN says:
      15 years ago

      எல்லோருமே இஜேசுக் கிறீஸ்துவாக இருந்தால் பிரச்சனை இல்லை என் கிறீர்கள் ஆனால் அதுகள் மனுசனைத் தின்னுற ஜாதி அதுகளீட்டப் போய் மனிதம் பேசினால் எடுபடுமே?

  4. அப்பு says:
    15 years ago

    சிங்கள பேரினவாதத்தின்வெறி ஒன்றா? இரண்டா?20 இலட்சம் தமிழர்கள் கடந்த நூறாண்டுகளில் கொல்லப்பட்டுள்ளனர்.20 இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர் .கடந்த நூறாண்டுகளில் தமிழரின் பிறப்பு விகிதம் மிகப்பெரிய அளவில் குறைந்ததன் விளைவாய் 50 இலட்சம் தமிழரின் இனவிருத்தி குறைந்துள்ளது.சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தமிழ. இனத்தின் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டா?மலையகத்தமிழ்த்தொழிலாளர்களை வெளியேற்றிய பொழுது சிங்கள தொழிலாளிகள் போராடினார்களா?யாழ் நூலகத்தை எரித்தபொழுது இவர்கள் எங்கே சென்றார்கள்?இங்கே தமிழனின் கறி கிடைக்கும் என்று எழுதி தொங்க விட்டது யார்?யாழில் தமிழ் இசுலாமியரை வெளியேற்றியதற்கு தமிழர்கள் புலிகள் எல்லோரும் வருந்தியாயிற்று.மன்னிப்பும் கேட்கப்பட்டுள்ளது.இன்று அவர்களை குடியேறவிடாமல் தடுப்பது சிங்கள பேரினவாத அரசுதானே?சிறையில் வாடும் தமிழர்களை விடுவிப்பதற்கு சிங்களத் தொழிலாளிய வர்க்கம் ஏன் போராடவில்லை.2009 மே 17,18,19 நாள்களில் ஒன்றரை இலட்சம் தமிழினம் கொல்லப்பட்டபொழுது சிங்களம் வீதியில் இறங்கி கொண்டாடியதா இல்லையா?பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக இந்திய வல்லாதிக்க அரசு புலிகளின் போராட்டத்தை நிர்மூலமாக்கிய பொழுது சிங்கள தொலைக்காட்சிகளில்தானே மூழ்கி சிறப்புத் திரைப்படம் போட்டு கொண்டாடினீர்கள்?உயிர் வாழ போராடிக்கொண்டிருப்பவன் வர்க்கப்போராட்டம் நடத்துவானா?இலசந்தா விக்கிரமதுங்க கொல்லப்பட்டபொழுது கூட வாய்மூடி மவுனம் காத்தது இனவாதமில்லாமல் வேறு என்ன?சரி தமிழர்கள் சிங்கள தொழிலாளிகளுக்காகப்போராட முதலில் அவர்களை சிறையில் இருந்து விடுவியுங்கள்?அதற்காகச் சிங்களதொழிலாளிகள் போராடினால் தமிழர்கள் விடுவிக்கப்பட்டபின் போராடுவார்கள்.

    • Vijiya says:
      15 years ago

      போராட்டம் என்ற பேரில 50 ஆயிரம் பேரைப் பலிகொடுத்துப் போட்டு உள்ள எல்லாத்தையும் சீரழிச்சுப் போட்டு கொஞ்சம் கூடக் குற்ற உணர்வில்லாமல் எப்படி உங்களால் இன்னும் இப்படிக் கதைக்க முடிகிறது. உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் மக்கள் இன்னும் செத்துக்கொண்டுதான் இருப்பினம். மகிந்தவுக்கு நீங்கள் தான் வேணும்.

  5. நெருஞ்சி says:
    15 years ago

    தறி கெட்டுப் போனவர்கள்,வெறி கொண்ட இனத்திற்கு ‘வெள்ளாவி’ வைக்கிற வியாவாரந்தான் புதிய திசையோ!

  6. அப்பு says:
    15 years ago

    போராடாத காலத்தில் தமிழினத்தை வாழவைத்த இலட்சணம் தெரியாதா? போராடினோம் சரி கொன்றது ஏன்?போராடவைத்தது யார்?தமிழர்களின் நாட்டில் சிங்கள பேரினவாதிகளுக்கு என்ன வேலை?முதலில் சிங்களர்கள் தமிழீழத்தை விட்டு வெளியேறட்டும்.வரலாற்றின் எந்தக்காலக்கட்டத்தில் சிங்களப்பேரினவாதத்துக்கு ஈழம் அடிமையாக இருந்தது?வெள்ளையர்கள் இருந்தபொழுதே தமிழ் இசுலாமியரை 1915இல் இனப்படுகொலைசெய்தது ஏன்?தமிழருக்கு அதிகாரம் வழங்கலாமா என்றதற்காக சிங்கள வெறியர்கள் பண்டார நாயக்காவை கொன்றது ஏன்? கேட்ட கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக மறுப்புரையுங்கள்.நெஞ்சில்திராணியும் நேர்மையும் உண்டா? இவ்வளவு வரிந்து கட்டும் சிங்களம் சரியான ஆண்மை உள்ள இனமாக இருந்திருந்தால் தனித்து நின்று விடுதலைப்புலிகளை எதிர்கொண்டு வென்றிருக்கவேண்டும் .பேடிகளாய் நின்று பலநாடுகளின் துணையோடுதானே 1இலட்சம் பேரைக்கொன்றீர்.கொத்து குண்டுகளை வீசீனீர்.சிங்கள தொழிலாளருக்குப்போராடுங்கள் என்று பல் இளித்தால்?சிறையில் உள்ள தமிழர்கள் எப்படி போராடுவார்கள்?வசயா…………உங்களைப்போன்று மனசாட்சியே இல்லாமல் உளறுபவர்களால்தான் மகிந்தா இன்னும் பிணம் உண்ணும் பேடியாய் இருக்கிறான்?துரோகத்தால் தமிழினம் வீழ்ந்ததுபோதும்

  7. kathiresan.k says:
    15 years ago

    உலகம் முழுக்க அனைத்து பிரச்னைக்களுக்கும் காரணமான முதலாளித்துவம் வேரடி மண்ணோடு வேட்டிஒழிக்கப்பட வேண்டும் . அத்தோடு இலங்கை தமிழ் மற்றும் சிங்கள முதலாளிகள் இருவருமே தொழிலாளி வர்க்கத்தின் எதிரிகள் என்பதை சிங்கள, தமிழ் தொழிலாளிகள் உணர வேண்டும்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...