Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

நாலு வார்த்தை பேச‌ விடு;எழுத‌ விடு! : சேர‌ன்

இனியொரு... by இனியொரு...
02/11/2009
in அரசியல்
0 0
7
Home அரசியல்

1.
உன்னுடைய கருத்துக்களின் ஒன்றுடனோடு கூட எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அக்கருத்துக்களைச் சொல்ல உனக்கு இருக்கும் உரிமையை என்னுடைய உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்;

இது ஊடக வட்டாரங்களில் அடிக்கடி எடுத்தாளப்படும் ஒரு கூற்றாகும். இக்கூற்றிற்குச் சொந்தக்காரர் பிரெஞ்சு மெய்யியலாளரும் அரசியல் சிந்தனையாளருமான வால்டயர். வால்டயரும் அவரோடு கூடவே ஜோன் லொக் (John Loke) கொட்பிறி லீப்நிஸ் (Gottfried Leibnitz) இம்மானுவல் கான்ட், (Immanuel Kant) டேவிற் ஹியூம் (David Hume)போன்றோர்களும் வேறும் பல அறிஞர்களும் ஐரோப்பிய அறிவொளிக் காலத்திற்கு சிறப்பாகப் பங்களித்தவர்கள். தாராளவாத ஜனநாயகம், மானிட உரிமைகள் சுதந்திரம் போன்ற கருத்தாக்கங்கள் மேல்எழவும் ஆழம் பெறவும் அறிவொளிக்காலம் துணை செய்தது. எனினும் இந்த மெய்யியலாளர்களதும் அரசியலாளரதும் சிந்தனைகளிலும் எழுத்திலும் உள்ளடங்கியிருந்த இனவாதமும் காட்டுமிராண்டிகள்- நாகரீகமற்றோர் என்ற இனம் சார்ந்த பிரிப்புக்களும் அறிவொளிக்காலத்திலும் பிற்பாடு தாராளவாத ஜனநாயகங்களதும் இரட்டை நிலைப்பாட்டைத் தெளிவாகக் காட்டுகின்றன.
எல்லோருடைய கருத்துச் சுதந்திரத்தையும் வலியுறுத்துகிற வால்டயர் தான் “குரங்குகளை விடக் கொஞ்சம் முன்னேறியவர்கள் நீக்கிரோக்கள்: அவர்களைவிட முன்னேறி உயர்ந்த தளத்தில் இருப்பவர்கள் வெள்ளையர்கள் என்று எழுதுகிறார்.

“உச்சி முதல் உள்ளங்கால் வரை அந்தப்பயல் மிக மிகக் கறுப்பாக இருந்தான் என்பது மட்டுமே அவன் சொன்னது எல்லாம் அபத்தம் என்பதை நிரூபிக்கப் போதுமாயிருந்தது” என்று எழுதுகிறார் இமானுவல் கான்ட். உரிமைகளும் சுதந்திரமும் கூட எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும் உரியன அல்ல என்பது தான் யதார்த்தம் போலும்.

இந்த இரட்டை நிலைப்பாடு, ஊடக சுதந்திரம், அடிப்படை உரிமைகள் தொடர்பாக தாராளவாத ஜனநாயக அரசுகளில் இன்று வரை தொடர்வதாகும்.
புயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற சுலோகமும் கருத்தியலும் அடிப்படை உரிமைகளை வேரறுக்கிற ஒரு பேராயுதமாக அரசுகள் பலவற்றால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆளுங்கட்சிப் புத்திஜீவிகளும் அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சர்களும் ஊடகத்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரு நிதிநிறுவனங்களும் இவற்றை நியாயப்படுத்தி வருகின்றன.
2.
1979 ஜுலை மாதத்திலிருந்தே பயங்கரவாதத் தடைச்சட்டமும் அவசரகால நிலையும் இலங்கையில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இடையிடையே ஒரு சில ஆண்டுகள் இவை நடைமுறையில் இருந்திருக்கவி;ல்லை என்றாலும் அவசரகாலநிலையின் கீழ் நீண்டகாலமாக ஆட்சி நடாத்துகிற அரசு இலங்கை அரசாகத் தான் இருக்க வேண்டும். விதிவிலக்காக அமைய வேண்டியதே விதியாக அமைகின்ற ஒரு அவலமான சூழல் இலங்கையில் நிலவுகின்றது. இலங்கை ஒரு ஜனநாயக அரசு என்பதை எத்தகைய கேள்விகளுக்கும் இடமில்லாமல் “சர்வதேச சமூக”மும் இந்திய அரசும் ஏற்றுக் கொண்டு நடப்பதால் ஊடக சுதந்திரங்களும் அடிப்படை உரிமைகளும் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமையும் மோசமாக மீறப்படுகிற போதும் போர்ச் சூழலில் இவை தவிர்க்க முடியாதவை எனவும், பயங்கரவாதிகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது எனவும் நியாயப்படுத்தப்படுகிறது. எதிரிகளுக்கும் காட்டுமிராண்டிகளுக்கும் எந்த உரிமையும் கிடையாது என்பதே தாராளவாத ஜனநாயகத்தின் இரட்டை நிலைப்பாடாக இருக்கிறது.
இதுவரை காலமும் இலங்கையில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஜனவரி 2006இலிருந்து டிசம்பர் 2008 வரை 20 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களுள் மிகப் பெரும்பாலானோர் இலங்கை அரச படைகளாலும் இலங்கை அரசின் கொலைக் குழுக்களாலும் கொல்லப்பட்டவர்கள்.20க்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர்கள் அரசியல் தஞ்சம் கோரி வேறு நாடுகளுக்குச் சென்று விட்டார்கள். ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு என்ற வரிசையில் முதல் இரண்டு இடங்களிலும் இருப்பவை ஈராக்கும் இலங்கையும் தான். காணாமல் போனோர் எண்ணிக்கையிலும் உலகின் முதலிடத்தில் இரண்டு இடங்களிலும் இருப்பவை இலங்கையும் ஈராக்கும் தான். எல்லைகளற்ற செய்தியாளர்கள் (Reporters sans Frontiers)அமைப்பு ஆண்டு தோறும் வெளியிட்டு வருகின்ற ஊடக சுதந்திர சுட்டெண் (Press Freedom Index) வரிசையில் 169 நாடுகளில் இலங்கை 153வது இடத்தில் இருக்கிறது. இலங்கையை விட மிக அதிகப்படியான ஊடக சுதந்திரம் சவூதி அரேபியாவிலும் சிம்பாவேயிலும் கிர்க்கிஸ்தானிலும் இருக்கிறது என்று RSF தெரிவிக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளிலும் குறிப்பாக இப்போதைய அரச அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பிற்பாடும் ஊடகவியலாளரதும் ஊடக சுதந்திரத்தினதும் நிலை பல மடங்கு மோசமாகி விட்டது. இலங்கையின் வானொலி தொலைக்காட்சி அச்சு ஊடகங்களில் பெரும்பான்மையானவை அரச கட்டுப்பாட்டில் இயங்குபவை. எனினும் தனியார் வானொலி தொலைக்காட்சி செய்தித்தாள்கள் இயங்கி வந்துள்ளன. போர்ச் செய்திகள், சிறுபான்மை மக்களது உரிமைகள் என்பவற்றைப் பொறுத்தவரை ஆங்கில சிங்கள மைய நீரோட்ட ஊடகங்கள் எல்லாவகையான இலங்கை அரசுகளுக்கும் மிகுந்த விசுவாசமாகவே எப்போதும் தொழிற்பட்டு வந்துள்ளன. ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் இல்லாத காலங்களில் மட்டும் சண்டே லீடர் சற்று விதிவிலக்காக இருந்தது என்று சொல்லலாம்.
மகிந்த ராஜபக்சவின் அரசில் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் ஒட்டுமொத்தமாகப் பறிக்கப்பட்டு விட்டது. நேரடியான தணிக்கைமுறை பெருமளவுக்கு இல்லாவிட்டாலும் பத்திரிகை ஆசிரியர்களையும் ஊடகவியலாளர்களையும் நேரடியாகவே எச்சரிப்பது, அச்சமூட்டுவது ஆகிய நடவடிக்கைகளால் ஊடகத்துறைக்குப் பெரும் வாய்ப் பூட்டுப் போடப்பட்டுள்ளது. போரைப் பற்றிய தகவல்களையும் இராணுவத்தின் “குரல் தரவல்ல அதிகாரி” அவ்வப்போது தருகிற செய்திகளை மட்டும் தான் இலங்கை ஊடகவியலாளர்கள் எழுத வேண்டும் பிரசுரிக்க வேண்டும் என்ற நிலை இப்போது உள்ளது. இவற்றைச் சற்று மீறினாலும் ஊடகவியலாளர்கள் கொல்லப்பகிறார்கள். (லசந்த விக்ரமதுங்க) அல்லது அடித்து நொருக்கப்படுகிறார்கள் (கீத் நொயார் – நேசன் ஆங்கில வாரஇதழ் போரியல் ஆய்வாளர்.) அல்லது நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.(ரோஹித பாசண ஹிரு பத்திரிகை ஆசிரியர், நடராசா குருபரன், சூரியன் FM செய்தி முகாமையாளர்).

பிரபல ஆங்கிலப் பத்திரிகையான சண்டே ரைம்ஸ்இன் பத்தி எழுத்தாளரும் போரியல் ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் சென்ற வாரம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அத்தாஸ் இலங்கை ஊடகங்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் Jane’s Defence Weeklyபோன்ற சஞ்சிகைகளுக்கும் தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஊடகத்துறைக்காக சிறப்புப் பரிசுகள் பல பெற்றவர். இக்பால் அத்தாஸ் இலங்கைப் படையினருக்கும் அவர்களுடைய போருக்கும் ஆதரவான ஒரு ஊடகவியலாளர் தான். போரில் அரசு வெல்ல வேண்டும் என்பது அவரது விருப்பம் மட்டுமல்ல அவருடைய வேண்டுகோளுமாகும். எனினும் போர் நிலவரங்கள் பற்றியும் இருதரப்புக்கும் ஏற்பட்டு வருகின்ற இழப்புக்கள் பற்றிச் சரியான விடயங்களை இயன்றவரை முழுமையாகவும் உண்மையாகவும் எழுத முயற்சிப்பவர் அவர்.

“பலியாகி வருகின்ற இராணுவத்தினரின் எண்ணிக்கைமிக அதிகம் எனினும் அந்த எண்ணிக்கையை என்னால் குறிப்பிட முடியாமல் இருக்கிறது. அதற்கான காரணம் வாசகர்களுக்குப் புரியும்” என்று எழுதியமைக்காகவே நாட்டை விட்டு விரட்டப்பட்டுள்ளார். தன்னுடைய 40 வருட கால ஊடகத்துறை வாழ்வில் இவ்வளவு மோசமான நிலையைத் தான் ஒருபோதுமே சந்தித்திருக்கவில்லை. இவ்வளவு பயங்கரமான அச்சத்திற்கும் தான் இதுவரை ஆட்பட்டதி;ல்லை” என்றும் சொல்கிறார் இக்பால் அத்தாஸ்.

ஈழத்தமிழர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இந்தப் போர் உலக அளவில் மறக்கப்பட்ட ஒன்றாகும் . கொல்லப்படுவோர் எண்ணிக்கையிலும் மானிட அவலத்திலும் உலகின் மிக மோசமான போர் என்று சர்வதேசத் தொண்டு நிறுவனங்களாலும் மனித உரிமை அமைப்புக்களாலும் வர்ணிக்கப்படும் இந்தப் போர் பற்றிய சரியான விபரங்களையும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாரிய இழப்பக்கள் பற்றிய தகவல்களையும் க‌ள‌த்திலிருந்தும் த‌ள‌த்தில் இருந்தும் தருவதற்கு எந்தச் சர்வதேச ஊடகமும் இல்லை.

ஊடகவியலாளர்களையும் தொண்டு நிறுவனங்களையும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்களையும் போர்ப்பகுதிகளிலிருந்து அரசாங்கம் எப்போதோ வெளியேற்றி விட்டது. எந்த ஊடகவியலாளருமே அங்கு செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்திருக்கிறது. உடன்படுக்கையாளர்களாகக்(embedded!) கூட பத்திரிகையாளர்கள் அங்கு இல்லை.
இந்த நிலையில் இப்போது உக்கிரமாக இடம் பெற்று வரும் வன்னிப் போர் குறித்து இந்தியாவின் ஆங்கில ஊடகங்களும் சர்வதேசச் செய்தி நிறுவனங்களான ஏ.பி,ஏ.எப்.பி,ரொய்ட்டர் போன்றவையும் தருகிற “தகவல்கள்” நிதானமாகச் சிந்திக்கிற எந்த வாசகரையும் ஊடகவியல், செய்தி அறிக்கையிடல், ஊடகவியல் அறம் பற்றிய கேள்விகளை உரத்த குரலில் எழுப்பத் தூண்டும்.
இதுவ‌ரை கால‌ப் போரில் கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 70,000 என்ப‌தே இ ந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் கண‌க்கீடு. க‌ட‌ன ந்த‌ ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ மாறாம‌ல் இருந்து வ‌ந்த‌ 65,000 என்ப‌து இப்பொது ச்ற்றுக் கூடியுள்ள‌து. எனினும், Harvard Medical School, Washington University ஆய்வாள‌ர்க‌ளின் த‌க‌வ‌லின் ப‌டி ( Ziad Obermeyer, Christopher J.L. Murray, Emmanuela Gaidou)இதுவ‌ரையான‌ மோத‌ல்க‌ளில் 215,000 பேர் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.24,000 புலிக‌ளையும் அதே எண்ணிக்கையான‌ ப‌டையின‌ரையும் விட்டு விட்டால் மற்றைய‌ அனைவ‌ரும் பொது ம‌க்க‌ள்தான். எனினும், இன‌த்துவ‌ முர‌ண்பாட்டின் மூல‌ம், உண்மைத் த‌க‌வ‌ல்க‌ள், பின்ன‌ணி ப்ற்றியெல்லாம் என்த‌ அக்க‌றையும் இல்லாத‌ சோம்பேறிப் ப‌த்திரிகையாள‌ர்க‌ளும் அவ‌ர்க‌ளுடைய‌ அசையாப் புள்ளி விவ‌ர‌ங்க‌‌ளும்தான் பெரும் செய்தி நிறுவ‌ன‌ங்க‌ளின் மைய‌ம்.

இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு சுதந்திரமாகப் போய்வர எத்தகைய தடைகளும் இல்லாத காலத்திலும் கூட ஊடகவியலாளர்கள் பலர் இப்பகுதிகளுக்கு;ச செல்வதில்லை. கொழும்பின் சொகுசான குடியிருப்பக்களில் வாழ்ந்தபடி இராணுவத்தின் குரல் தரவல்ல அதிகாரிகள் சொல்வதை அப்படியே திருப்பி எழுதி அனுப்பி விடுவதே வழமையாக இருந்து வருகிறது. வாய்பாடு போல ‘இப்படி இராணுவம் சொல்கிறது’ என்ற ஒரு வரியைச் சேர்த்து விடுவது மட்டும் ஊடக அறத்தை நியாயப்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. எனினும் இந்து போன்ற பத்திரிகைகளும் வேறு பல இணையத் தளங்களும் இராணுவம் தருகின்ற செய்திகளை அப்படியே எழுதி விடுவது மட்டுமன்றி அவ‌ற்றின் செய்தித் தலைப்புகள் கூட இலங்கை இராணுவத்தின் தகவல் அடிப்படையிலேயே எழுதப்படுகின்றன. ஈராக் யுத்த காலகட்டங்களில் ஊடகத்துறையைக் கட்டுப்படுத்தவும் உடன்படுக்கையாளர்களாகவும் மாற்றுவதற்கு என்னென்ன முயற்சிகளை எல்லாம் செய்ததோ அதே முயற்சிகளையும் அதே நடவடிக்கைகளையும் நாங்கள் இப்போது பார்க்க முடிகிறது. ஊடகத்துறையின் அடிப்படையான அறமான செய்தி மூலங்களைச் சரிபார்த்தல் மீளவும் மீளவும் உறுதிப்படுத்தல், பக்கச்சார்பின்மை, பொதுமக்களின் நலன் போன்றவை காற்றில் பறக்க விடப்படுகின்றன.

இந்தியாவின் ஆங்கில ஊடகங்களைப் பொறுத்தவரை இந்து ஆஙகில‌ நாளிதழ் இலங்கைப் போர் பற்றியும் ஈழத்தமிழர்களின் தேசிய இனச் சிக்கல் பற்றியும் தருகிற செய்திகளும் வெளியிடும் கருத்துக்களும் கட்டியெழுப்பும் மாயைகளும் ஊடக அறத்தைக் குரூரமான களிப்போடு மீறுகிற ஒரு நடவடிக்கையாக இருக்கிறது. ஹிண்டு பத்திரிகையின் இந்த நிலைப்பாட்டுக்கு நீண்ட வரலாறு இருந்தாலும் அண்மையில் இடம் பெற்ற இரண்டு நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
கிளிநொச்சியை இலங்கைப்படையினர் ஆக்கிரமித்த பிற்பாடு இலங்கையின் தெற்குப் பகுதிகளில்; நடைபெற்ற கொண்டாட்டங்களையும் களிக்கூட்டுக்களையும் வரவேற்றுப் பேசிய அதிபர் மகிந்த ராஜபக்ச “தமிழ் பொதுமக்கள் ஒருவரையாவது கொல்லாமலேயே இந்தச் சாதனையை நாம் நிகழ்த்தியிருக்கிறோம் என்று குறிப்பிட்டார். கிளிநொச்சி வெற்றிக்குப் பிற்பாடு இலங்கை அதிபரோடு தொலைபேசியில் பேட்டி கண்ட என். ராம் அவர்களிடம் இலங்கை அதிபர் இதேகருத்தைத் தெரிவித்திருந்தார் “அப்பாவிப் பொதுமக்கள் ஒருவரையாவது கொல்வதில்லை” ( zero civilain casualty policy)என்பதே எனது கொள்கை என மீண்டும் வலியுறுத்தினார் இலங்கை அதிபர். ஏராளமான பொதுமக்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டமையும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தமையும் மருத்துவ வசதிகளின்றி நூற்றுக்கணக்கானோர் இறந்தமையும் பரவலாக எல்லோருக்கும் தெரிந்த செய்தி என்றாலும் இவை பற்றிய எந்த உணர்வுமில்லாது இலங்கை அதிபரின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் ஹிந்து நாளிதழ் செய்தியைப் பிரசுரித்திருந்தது. கொல்லப்பட்டவர்களில் எவருமே பொது மக்கள் அல்ல என்று வாதிடுவதானால் எல்லாப் பொதுமக்களும் புலிகள் தான் என்பதை விட வேறு தர்க்கம் இருக்க முடியாது. இலங்கை அதிபரும் இலங்கை அரசும் இந்தநிலைப்பாட்டில் இருப்பது பற்றி எவருக்கும் சந்தேகம் இருக்கத் தேவையில்லை. ஆனால் பொறுப்பான ஊடகங்கள் என்று பெயரெடுத்தவவை இப்படிச் செய்ய முடியுமா?

இலங்கையில் சுதந்திர ஊடக இயக்கம் என்பது ஊடக சுதந்திரத்திற்காகப் போராடுகின்ற ஒரு முக்கியமான அமைப்பாகும். இதனுடன் சேர்ந்து இயங்கும் அமைப்புக்களான உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம். ஊடகத் தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு என்பன ஊடக சுதந்திரத்தை முன்னெடுப்பதற்காகத் தொடர்ச்சியாக நடாத்தி வந்த போராட்டங்கள் மிகவும் துணிச்சலானவை மட்டுமல்ல உலகளாவிய ஆதரவையும் பெற்று வருபவை. மகிந்த அரசு பதவிக்கு வந்த பிற்பாடு சிறிலங்கா மாஸ் மீடியா சொசைற்றி (Sri Lanka Mass Media Society) என்ற அமைப்பைத் தோற்றுவித்தது. அரசினதும் ஆளுங்கட்சியினதும் எடுபிடிகளாலும் அடிவருடிகளாலும் தொண்டரடிப்பொடிகளினாலும் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு நவம்பர் 2008இல் ஒரு விருது விழாவை நடாத்தியது. அந்த விருதுவிழாவில் மிகச்சிறந்த இலங்கைப் பத்திரிகையாக சண்டே ரைம்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆசியாவில் சிறந்த ஊடகவியலாளர் என்ற விருது என்.ராமுக்கு வழங்கப்பட்டது. சண்டே ரைமட்ஸ் வார இதழ் இந்த விருதை வாங்க மறுத்ததோடு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குகின்ற எந்த ஊடக நிறுவனமும் தருகிற விருதை தாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்றும் ஊடகவியலாளர் மீது நடைபெறும் தாக்குதல்களை மூடி மறைப்பதற்காகவே இந்த விழாவும் விருது வழங்கலும் நடைபெறுகிறது என்று காட்டமாக விமர்சித்திருந்தது சண்டே ரைம்ஸ். ஆனால் தனக்கான விருதை நேரில சென்று பெற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் “சமாதான முன்னெடுப்புக்களில் ஊடகத்துறையின் பொறுப்பு” என்னும் பொருள் பற்றிப் பேருரை ஆற்றினார் என். ராம். தாராளவாத ஜனநாயகத்தின் ஊட‌க‌ முக‌த்திற்கும் இரட்டை நிலைப்பாட்டிற்கு இதைவிடச் சிறப்பான தற்கால எடுத்துக்காட்டுக்கள் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
3.
படுகொலைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் அப்பால் இலங்கையின் ஊடகச் சூழல் சார்ந்து இன்னுமொரு முக்கியமான கேள்வியையும் நாங்கள் எழுப்ப வேண்டியிருக்கிறது. ஒரு ஊடகவியலாளர் கட்சி சார்ந்து அல்லது அரசு சார்ந்து அல்லது இயக்கம் சார்ந்து செயற்படுகிற போது அவர் கொல்லப்பட்டால் அல்லது காணாமல் போனால் அதனை நாங்கள் எப்படி அணுகுவது?
சின்னபாலா என்றழைக்கப்படும் பாலநடராஜஐயர் முன்னாள் ஈரோஸ் போராளி, எழுத்தாளர், இளையவன் என்ற பெயரில் பல நல்ல சிறுகதைகள் எழுதியிருப்பவர். பிற்பாடு டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இயங்குகின்ற ஈபிடிபியின் வாரஇதழான தினமுரசுக்குப் பொறுப்பாக இருந்தவர். இவர் விடுதலைப் புலிகளால் 2004 ஒக‌ஸ்ட் மாத‌ம் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2007 நவ.27 அன்று புலிகளின் குரல் வானொலி நிலையத்தை இலங்கை விமானப்படை குண்டு வீசித் தாக்கிய போது இசைவிழி செம்பியன், ரி.தர்மலிங்கம், சுரேஸ் என்ற மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள்.
இவ‌ர்க‌ளை விட‌ கேதீஸ் லோக‌நாத‌ன்( ச‌த்யா என்ற‌ பெய‌ரில் ப‌த்தி எழுத்தாள‌ராக‌ இருந்த‌வ‌ர்;மாற்றுக் கொள்கைகளுக்கான‌ நிலைய‌த்தில் ப‌ணி புரிந்து பின்ன‌ர் இல‌ங்கை அர‌சின் ச‌மாதான்ச் செய‌ல‌க‌த்தில் உய‌ர் ப‌த‌வியில் சேர்ந்த‌வ‌ர்) போன்ற‌ ப‌ல‌ர் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.
த‌ங்க‌ளுடைய‌ அமைப்புக்குச் சாத‌க‌மாக‌ச் செய‌ல் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அல்ல‌து த‌ங்க‌ள‌து அமைப்பை ஆத‌ரித்தோர் என்ற‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ ம‌ட்டுமே சில‌ ஊட‌க‌விய‌லாள‌ரின் ப‌டுகொலைக‌ளைக் க‌ண்டிப்ப‌தும் எனைய‌ ப‌டுகொலைக‌ளையிட்டு மௌன‌மாக‌ இருப்ப‌து அல்ல‌து நியாய‌ப்ப‌டுத்துகிற‌ ஒரு போக்கு ந‌ம் ம‌த்தியில் ஆழ‌மாக‌ இருக்கிற‌து. அல் ஜ‌சீரா மீதான‌ அமெரிக்காவின் தாக்குத‌ல்க‌ள், ப‌ல‌ஸ்தீன‌ ஊட‌க‌த்துறையின் மீதான‌ இஸ்ரேலின் தாக்குத‌ல்க‌ள் போன்ற‌வ‌ற்றைக் கார‌ண‌ம் காட்டி இவையெல்லாம் த‌விர்க்க‌ முடியாத‌வை என்று அமைதி கொள்ள‌ முடியாது.
எந்த அமைப்பு சார்ந்து இருந்தாலும் ஊடகவியலாளர்களின் படுகொலை அனுமதிக்கப்பட முடியாதது. நியாயப்படுத்தப்பட முடியாதது. இது பொதுவான அரசியல் அறத்தின்பால்
பட்டது மட்டுமல்ல, போர் அறத்தின்பால்பட்டதுமாகும். தமிழீழ‌த்தேசியத்தை உணர்வுபூர்வமாக வலியுறுத்துபவர்களும்
விடுத‌லைப் புலிக‌ளை விம‌ர்ச‌ன‌ம‌ற்று ஆதரிப்பவர்களும் நிமலராஜன், நடேசன், சிவராம் ஆகிய ஊடகவியலாளர்களின் கொலைகளைப் பற்றி மிகுந்த கண்டனம் தெரிவித்தார்கள். நிமலராஜனும் நடேசனும் சிவராமும் ஒரு வகையில் ஈழத்தமிழ் தேசியத்தின் ஊடக தியாகச் சின்னங்களாக மாறி விட்டார்கள். விடுதலைப் புலிகளாலும் ஏனைய இயக்கங்களாலும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்களைப் பற்றி இவர்கள் கண்டு கொள்வது கிடையாது. மறுபுறமாக விடுதலைப் பலிகளுக்கு எதிராக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிற கட்சிகளும் அமைப்புக்களும் புலிகளால் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை மட்டும் தமது தியாக சின்னங்களாக உயர்த்திப் பிடிக்கிறார்கள். மற்றத் தரப்பையும் ாற்றுத் தரப்பையும் சேர்ந்த ஊடகவியலாளர்களைக் கொல்வது அல்லது அவர்கள் கொல்லப்படும் போது அதை நியாயப்படுத்தவது வழமையாகி விட்டது.
ஊடகவியலாளர்கள் என்ற முறயல் எத்தரப்பைச் சார்ந்த ஊடகவியலாளர்களும் கொல்லப்படுகிற போது அல்லது காணாமல் போகிற போது அதற்கெதிராக குரல் எழுப்ப வேண்டிய தார்மீகப் பொறுப்பு எல்லா ஊடகவியலாளர்களுக்கும் இருக்க வேண்டும். இது இல‌ட்சிய‌ம் சார்ந்த‌ நிலைப்பாடு ம‌ட்டும‌ல்ல‌ அர‌சிய‌ல் க‌ட‌ப்பாடும் ஆகும்.
இல‌ங்கைச் சூழ‌லில் இப்போது இவ‌ற்றை எதிர்பார்ப்ப‌வ‌ர்க‌ள் யாராவ‌து இருக்கிறார்க‌ளா?
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
நாலு வார்த்தை பேச‌ விடு;எழுத‌ விடு!
சேர‌ன்

—————————————————————————–

For more information on Press freedom issues and latest reports on the attacks and killings of jornalists in Sri Lanka check the following:

http://www.rsf.org/IMG/pdf/rapport_sri_Lanka.pdf
Free Media Movement is the most active organization for press freedom in Sri Lanka:
http://www.freemediasrilanka.org/English/
For civilian casualties in Vanni check:
http://www.nesohr.org/

Click to access victims_of_shelling_in_Vanni__.pdf

For Press freedom index check:
http://www.rsf.org/article.php3?id_article=2402press

–முன்னமே  பிரசுரமாகியுள்ள இப்பனுவல்  மறுபிரசுரத்திற்காக  சேரனால்  அனுப்பப்பட்டது.–

கோதபாய ராஜபக்ஷவின் செவ்வி:

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இனப்படுகொலையா? வெறும் குப்பைக்கதை:நிராகரிக்கிறார் அமைச்சர் சமரசிங்க .

Comments 7

  1. periyaaraan says:
    17 years ago

    //ஜனநாயகத்தின் ஊட‌க‌ முக‌த்திற்கும் இரட்டை நிலைப்பாட்டிற்கு இதைவிடச் சிறப்பான தற்கால எடுத்துக்காட்டுக்கள் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.//

    காலச்சுவடு – தினமலர்-இந்துராம்-சோ ….சேரன்… தொடர்கிறது இணைப்பாளர் பட்டியல்.

  2. vetry says:
    17 years ago

    1. Emmanuela Gakidou விற்கு (k) விடுபட்டுவிட்டது. இது எல்லா இடங்கிலும் ஓசையுடன் ஒலிக்கிறது.

    2. // னினும்இ Harvard Medical School, Washington University ஆய்வாள‌ர்க‌ளின் த‌க‌வ‌லின் ப‌டி ( Ziad Obermeyer, Christopher J.L. Murray, Emmanuela Gaidou)//

    இதில் முதலாமவர் மட்டும் இரண்டு இடங்களிலும் தொடர்புடன் இருக்கிறார். மற்றவர்கள் வாசிங்ரன் பல்கலைக் கழகத்துடன் மட்டும் தொடர்புடையவர்கள். அதுவும் ஆங்கிலத்தில் சொல்வதானால் University of Washington not Washington University

    நல்ல தரவைக் கொண்டுவந்திருக்கிறார் சேரன். ஆய்வாளார்கள் தரவுகளில் கவனமுடன் இருப்பது நல்லது.

  3. proffessor says:
    17 years ago

    எந்த அமைப்பு சார்ந்து இருந்தாலும் ஊடகவியலாளர்களின் படுகொலை அனுமதிக்கப்பட முடியாதது. நியாயப்படுத்தப்பட முடியாதது. இது பொதுவான அரசியல் அறத்தின்பால்
    பட்டது மட்டுமல்ல, போர் அறத்தின்பால்பட்டதுமாகும்-

  4. நந்தி says:
    17 years ago

    சேரனின் கட்டுரையை நீண்ட காலத்திற்கு பிறகு வாசிக்க கிடைத்தது.
    சரிநிகர் போன்ற மாற்று பத்திரிகையின் அவசியம் இப்போதுதான்
    இங்கு பலராலும் உணரப்படுகிறது. இன்றைய இலங்கைச் சூழல் கருத்து
    சுதந்திரத்தை இல்லாமல் செய்துவிட்டது. இந்த நேரத்தில் இனியொருவருவது
    நம்பிக்கையை தருகிறது.

  5. kumaran says:
    17 years ago

    நந்தி உங்கள் கடிதத்தை படிக்கும்போது இலங்கையில் வசிப்பவராக நினைக்கிறேன். அங்கு மாத்திரமல்ல புலம் பெயர்ந்த இந்த சூழலுக்கும் ஒரு மாற்று பத்திரிகை அவசியப்படுகிறது. சேரன் போன்றவர்கள் நீதியோடும் நியாயத்தோடும் எழுதவேண்டும். துணிந்து தம் கருத்துக்களை வெளியிட வேண்டும். சேரன் சமூகத்தின் முக்கிய பிரதிநிகள் என்பதால் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வருவது தவிர்க்க முடியாதது. தனிப்பட்ட தாக்குதல்களை சேரன் புறக்கணித்துவிட்டு தன்மீது எழுப்பப்படும் அரசியல் விமர்சனங்களுக்கு இவ்வாறான கட்டுரைகளை எழுதுவதற்கு ஊடாக பதிலளிக்க முடியும். இந்த இனியொரு கட்டுரை சேரன் மீது நான் கொண்டிருந்த அரசியல் நம்பிக்கையின்மையை அகற்றியுள்ளது. தொடர்ந்து சேரன் தமிழில் எழுதவேண்டும். அத்தோடு சரிநிகரைச்சேர்ந்த சிவகுமார் உட்பட பலபேர் இங்கு புலம்பெயர்ந்துவிட்டதாக அறிகின்றேன் எனவே புகலிடத்தில் மாற்று பத்திரிகையின் அவசியத்தை உணர்ந்து சரிநிகரை இங்கு கொண்டுவர முயலலாமே. என்னைப்போன்ற பலர் பலவகையிலும் உதவ தயாராக இருப்பார்கள். இந்த முயற்ச்சி பற்றி யோசிக்கவும்.

  6. vr says:
    17 years ago

    சேரனின் “நாலு வார்த்தை பேச விடு: எழுத விடு!:” படித்தேன். முன்பு காலச்சுவட்டில் 1983 கலவரம் பற்றிய மொழி பெயர்ப்பும் படித்தேன். இரண்டும் இரு வேறு முனைகளில் ஆனால் காலமறிந்த செய்யப்பட்ட பணி.
    இங்கே எல்லோருக்குமாக ஒருவரே பேசுவார். எழுதுவார். அது வன்னி யுத்தத்திற்காக மட்டுமல்ல. சம்பள உயர்வுக்கான போராட்டத்திலிருந்து எரிபொருள் விலை குறைப்பு வரை .. காட்டாட்சி ( இது என் வார்த்தை இல்லை) வளர்ந்து வருகிறது.
    பிறகெப்படிப் பேசுவது.. எழுதுவது…பேசமுடியாத – எழுத முடியாத விடயங்களே ஏராளம்..
    வன்னி யுத்த நிலைமைகள் ஒரு பெரும் பரந்த கூட்டு முயற்சியாக மக்களுக்கெதிராகப் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் பெறப்பட்ட பரந்த அனுபவம் – அறிவுடன் நடைபெற்று வருகின்றன போல் தெரிகிறது. மிகப் பெரும் மனிதப் பேரவலம் நடைபெறுகிறது.
    அத்தகைய அழிவுகளிலிருந்து தான் தென்னாசிய வல்லரசும் – உலக சனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டியிருக்கிறது !
    உண்மை நிலையை இருட்டடிப்புச் செய்கிற ஊடகத்துறைக் கட்டுப்பாடு அல்லது ஊடகத்துறை அழிப்பு “மக்களுக்கெதிரான கூட்டணியினரின்” முக்கிய முயற்சியாக விளங்குகிறது. விடுவிக்கப்பட்ட கிழக்கிலிருந்து வடக்கு வரை மக்களுக்கெதிராக நடாத்தப்படுகின்ற கொடுமைகளைக் கூட வெளிப்படுத்த முடியாதவர்களாக இருந்து வருகின்றோம். இது நீண்ட காலமாக நடந்து வருகிறது.
    சரிநிகர் கூட பல கட்டுப்பாடுகளுடனே வெளிவந்தது. கொலை செய்தவனைக் கொலைகாரன் என்றோ- கற்பழித்தவனை கற்பழித்தவன் என்றோ எழுதித் தொலைக்க முடியாத “சனநாயக” வற்புறுத்தல்கள்; வேறு.
    எப்போதும் “மனதை இறுக மூடிவிட்டு” எழுது – பேசு என்கிற உரிமைதான் வழங்கப்பட்டு வருகிறது.
    இது போதாது. மக்களுக்குரிய – அடக்கு முறைகளுக்குட்பட்ட மக்களுக்குரிய குரலாக அமையும் ஒரு செய்தி முறை – ஊடக முறைமை உருவாக்கப்பட வேண்டும்.
    ஆகக் குறைந்தது நமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு வந்துள்ள ஒடுக்குமுறைகளை பதிந்து வைத்துக் கொள்ளும் முயற்சிகளாவது நடக்க வேணடும்.
    தமிழர் மத்தியிலான சனநாயக சக்திகளும் இத்தகைய அழிவுகளிலிருந்து தான் தங்களைப் புத்துயிர் பெறச் செய்யக் காத்திக்கிடக்கிறதோ !! இல்லையெனில் …
    – ஈவியார்.

  7. meerabharathy says:
    17 years ago

    நண்பர்களே!
    தங்களின் கருத்துக்களுன் உடன்படுகின்றேன்…
    சேரன் தொடர்பாக தேசம்நெட்டில் நட்சந்திரன் செவ்விந்தியன் புலி சார்பு பட்டத்தை வழங்கி தூற்றியிருந்தார்…
    சேரனும் பிரபாகரனின் மாவிரர் உரை தொடர்பாக விளக்கவுரை எழுதியிருந்தமையினால் இந்த அவதுருக்கு உட்பட்டார்…ஏன் அவர் எழுதினார் என்பதற்கு அவர்தாக் பதிலளிக்க வேண்டும்….
    மேலும் சேரன் தன் மீதான அவதூருகளைக் கனளய தனது கட்டுரைகளையே பயன்படுத்தவேண்டும் என்ற கருத்து நல்லது…
    இது போன்ற நடுநிலையான கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகள் நிறைய வரவேண்டும்….
    அதுவே தமிழ் பேசும் மனிதா;களிடம் விழிப்புணர்வைக் கொண்டுவரும்…
    ஆகவே புலம் பெயர் நாடுகளில் மட்டுமல்ல தமிழகம் இலங்கை போன்ற நாடுகளிலும் நடுநிலையான மனித நலன்களை வாழ்வை உரிமையை முன்நிலைப்படுத்தும் பத்திரிகையின் அவசியம் நிறையவே உள்ளது..
    மேலும் சேரன் பங்குபற்றிய சில கூட்டங்களுக்கு சென்றிருந்தேன்… அவற்றில் எப்பொழுதும் சேரன் புலிகள் சார்ந்து பேசியதில்லை…நியாயமான நடுநிலையான கருத்துக்களையே முன்வைத்திருந்தார்…..
    ஆனால் அவரை ;நோக்கி ஏன் புலிசார்ந்த குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன என்பது ஆச்சாpயமான ஒன்றாகவே எனக்கு எப்பொழுதும் இருக்கின்றது…
    சேரனின் இவ்வாறான எழுத்துக்கள் தான் அக் குற்றச் சாட்டுக்களுக்கான பதில்களாக இருக்கும்….
    நன்றி…
    மீராபாரதி

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In