இலங்கை அரசிற்குச் சார்பான பாதாளக் ழுக்களை நடத்திவரும் அமைச்சரான மேர்வின் டீ சில்வா பெஹலிய கொட மீன் சந்தை போன்ற இடங்களில் தனது அடியாட்கள் ஊடாகக் கப்பம் வாங்கி வருவதாகப் பலத்த குற்றச்சாட்டி எழுந்துள்ளது. மற்றொரு அமைச்சரான மைத்திரிபால சிரி சேனவின் அடியாட்கள் பொலநறுவையில் பாரிய கப்பம் கோரல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ரூபவாகினி தொலைக்காட்சி சேவை அரசு குறித்த விமர்சன அடிப்படையிலான செய்திகளை ஒளிபரப்பியதற்காக தொலைக்காட்சிச் சேவைக்கு நேரே சென்று தாக்குதல் நடத்திய மேர்வின் பின்னாளில் மகிந்த அரசின் ஊடகத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டவர்.
தமது அடியாட்கள் பெஹலியகொட மீன் சந்தையில் கப்பம் கோரி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்ற போதிலும், அந்தக் குற்றச்ச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என மேர்வி டி சில்வா மறுத்துள்ளார்.







