2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த காலத்திலிருந்து பிரித்தானியாவின் தனி நபர் வருமானம் 6 வீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது என Fiscal Studies (IFS) என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுபக்கதில் வாழ்கைச் செலவு அதிகரித்துள்ளதால் குறைந்த வருமானமுடையயோரால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் சுட்டிக்கட்டியுள்ளது. மின்சாரம் உட்பட்ட எரிபொருட்களின் விலை இதே காலப்பகுதியில் 60 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மேலும் இந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
வேலையில்லாத் திண்ட்டாட்டம் அதிகரிக்கும் நிலையில் தனியார் நிறுவனங்களில் தொழிலாலர்கள் மீதான ஒடுக்குமுறை மிரட்டல் என்பன அதிகரித்துள்ளன. பல நிறுவனங்கள் தொழிலாலர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்துவருகின்றன. குறிப்பாக குறைந்த வருமானமுள்ள உழைப்பாளிகள் மீதான ஒடுக்குமுறை, வேலையிழப்புத் தொடர்பான அச்சம் என்பன பெரும் சமூகப்பதற்றத்தை ஏற்படுத்தும் என மற்றொரு ஆய்வு தெரிவிக்கின்றது.
முன்னெப்போதும் இல்லாதவாறு தொடர்ச்சியாக வீழ்ச்சியடையும் பிரித்தானியர்களின் வாழ்க்கைத் தரம் மீட்சியடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என IFS தெரிவித்துள்ளது.
Still Sri Lankan Tamils are crazy about going to the UK. United Kingdom. 1952. They will bring the Irish in and they will kick the Euro Dollars for the Sterling Pounds.
Weren’t you disparate to stay in the US though they wanted you out. Then you tried Canada. Now you are ridiculing other SL Tamils. Doesn’t it apply to the Singhalese and other races ? Makes me wonder who is the hypocrite here!