தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ற தலையங்கத்தில் சுய நிர்ணைய உரிமை என்ற மக்களின் அடிப்படை ஜனநாயகத்தையே மக்கள் விடுதலை முன்னணி என்ற போலி இடதுசாரிக் கட்சி மறுத்து தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தலில் வாக்குப் பொறுக்கும் நோக்கத்துடன் ஜே.வி.பி முன்வைக்கும் திட்டங்களின் சாராம்சம் பேரினவாதக் கட்சி ஒன்றின் வேலைத்திட்டமே. ஜே.வி.பி இன் தீர்வு நாடகம் கீழே:
ஆங்கிலேயரின் ஆட்சிகாலம் தொடக்கம் மக்களை பிரித்தாளுவது மற்றும் பொருத்தமற்ற பொருளாதார கொள்கைகளின் பிரதிபலனாக இலங்கை தேச மக்களின் வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டதுடன், 1948 இற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களினால் அது மேலும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக இனங்களுக்கு இடையே முறுகல்கள் தோன்றியதுடன் அது கொடிய யுத்தம் வரை விரிவடைந்து சென்றமை கடந்த காலம் முழுவதும் இடம்பெற்றதுடன், இதன் காரணமாக எமது தேசம் சமூக-பொருளாதார சிக்கல்களுக்கு உள்ளானது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் தோன்றி புதிய நிலை தேசத்தினை வளர்ச்சிக்காக பயன்படுத்தப் படாமல் ஆட்சியாளர்களினால் தமது சுயபலத்தினை, அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது.
இலங்கையினை ஆட்சி செய்த சகல ஆட்சியாளர்களும் தமது அதிகாரத்தினை உறுதி செய்துகொள்வதற்காக இனவாதத்தினை ஊக்குவித்தார்கள். அதற்காக பல்வேறு அமைப்புக்களும் குழுக்களும் ஆரம்பிக்கப்படுவது இன்றும் இடம்பெறுகின்றது.
இதனூடாக அவர்கள் தமது இயலாமையினை மறைத்துக் கொள்வதுடன், மக்களை பிரித்து தமது அதிகாரத்தை தொடர்ந்தும் தங்க வைத்துக் கொள்கின்றனர்.
தீர்வு
சகல இன மக்களுக்கும் சனநாயம் மற்றும் சாதாரண உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியல் மற்றும் பொருளாதார திட்டத்தினை நிறுவல்.
இலங்கை சகல இன மக்களையும், சகல மதங்களையும், சகல கலாச்சாரங்களையும், ஏற்றுக் கொள்ளும் பலமான சனநாயக தேசமாக தொடர்ந்திட அதற்குள் பலமான தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பிட வேண்டும்.
செயற் திட்டம்
மக்கள் விடுதலை முன்னணி தமது தோற்றம் தொடக்கம் தேசிய பிரச்சினைகளை சரியான முறையில் காரணம் காட்டி செயற்பாட்டு முறையில் அதனை தீர்வு காண்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளை உள்ளடக்கி வெளியிட்டுள்ள ‘தேசிய பிரச்சினைகளை தீர்வு காண்பதற்காக வாயில்’ ஊடாக கூறப்பட்டு உள்ளவைகளை செயற்படுத்தல் ஆகும். அதில்,
1. பொதுசன வாக்கெடுப்பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய அரசியல் யாப்பின் ஊடாக வௌ;வேறு இனங்களை மாறுபட்ட விதத்தில் நோக்குவதும், இனங்களுக்கு மத்தியில் பேறுபாட்டையும் மோதல்களையும் தூண்டும் சகல செயற்பாடுகளையும் அரசியல் யாப்பின் மூலம் தடை செய்தல். அதன் மூலம் சகல இன மக்களுக்கும் சமனான உரிமைகள் அரசியல் யாப்பின் ஊடாக
உறுதிப்படுத்தப்படும்.
2. பல்வேறு காரணங்கள் காரணமாக இன்னல்களுக்கு உள்ளான மக்கள், அவ்வாறே மதவாதம் மற்றும் தேசியவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் முதலாளித்துவ அபிவிருத்தியால் பின்தங்கியுள்ள பிரதேசங்களை இலக்காக கொண்டு அவற்றின் பொருளாதார அபிவிருத்தி, நிர்வாக சிக்கல்களை தீர்வு கண்டு, கலாச்சார தனித்துவத்தை பாதுகாத்து தொடர்தல் ஆகிவற்றை நோக்காக கொண்ட நிர்வாகமாக ‘மக்கள் சபை’ யினை ஸ்தாபித்தல்.
• மக்கள் சபையினை நிறுவும் பிரதேசங்களை தீர்மானிப்பதற்காக நிபுணர்களின், பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஊடாக அரசியல் கட்சிகளின் பிரிதிநிதித்துவம், நிர்வாக அதிகாரிகள் அடங்கிய மக்கள் சபையினை தீர்மானிக்கும் ஆணைக்குழு’ நியமிக்கப்படும்.
• மக்கள் சபை மக்களின் வாக்குகளால் நியமிக்கப்படுவதுடன் அதன் ஆயுள்காலம் 05 ஆண்டுகளாகும். குறித்த காலத்திற்கு முன்னர் மக்கள் சபை கலைக்கப்பட மாட்டாது.
• இம்மக்கள் சபையின் ஒரு பிரதிநிதியை உத்தியோகபூர்வ
அதிகாரத்துடன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யும் உரிமையை மக்கள் சபை பெற்றுக் கொள்ளும்.
• மக்கள் சபையில் பொருளாதார, சமூக கலாச்சார வளர்ச்சிக்கு தேவையான சகல செயற்பாடுகளுக்குமான நிதி போதியளவில் பாராளுமன்றத்தால் அவற்றுக்கு வழங்கப்படல் வேண்டும்.
3. மொழியினால் ஏற்படும் சிரமங்களை ஒழிப்பதற்காக மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டு இலங்கை மக்கள் பயன்படுத்தும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை தேசிய மொழிகளாக யாப்பின் ஊடாக உறுதிப்படுத்தி வேண்டியதொரு மொழி மூலம் செயற்படும் உரிமை பிரஜைக்கு உள்ளதை ஏற்றுக் கொள்ளல். இதற்கமைய செயற்படல். விசேடமாக வடக்கு கிழக்கு பகுதி நீதிமன்றம், பொலிஸ் நிலையம், அரச அலுவலகங்கள் ஆகிய சிவில் நிர்வாகத்திற்கு தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சுகாதாரம், போக்குவரத்து ஆகிய பொது சேவைகளுக்கும் தமிழ் மொழி மூலம் செயற்படும் அதிகாரிகள் மற்றும் அரச ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்தல்.
• இதற்கமைய, நீதிமன்றம், பொலிஸ் சேவை, பாதுகாப்பு படைகள் மற்றும் அரச நிறுவனங்களில் சேவை செய்யும் சகலருக்கும் தேசிய மொழிகளை கற்பிக்கும் விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு ஊக்குவிப்பதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுத்தல்.
4. தேசிய, மத மற்றும் வேறு எவ்வித வேறுபாடுகளுக்காகவும் எந்தவொரு பிரஜையும் அவமதிப்பிற்கு, அசௌகரியத்திற்கு, அநியாயத்திற்கு உள்ளாகல் முற்றிலும் தடை செய்யப்படல். அவ்வாறான நிலைக்கு உள்ளாகும் அனைவரினதும் முறைபாடுகளை ஏற்றுக் கொள்ளவும், விசாரணை செய்வதற்கு அவ்வாறானவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் அதிகாரம் கொண்ட ‘பாரபட்சத்தினை தடுக்கும் ஆணைக்குழு’ (CommissionAgainst Discrimination)நிறுவப்படும்.
5. வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தினால் பல்வேறு விதத்திலும் இன்னல்களுக்கு முகங்கொடுத்த மற்றும் இழப்புகளை சந்தித்தவர்கள் அது பற்றி தெரிவிக்கவும், அதன் உண்மை நிலையை ஆராயவும், இன்னல்களுக்கு முகங்கொடுத்தவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், தேசிய ஒற்றுமையை விருத்தி செய்யும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (truth and reconciliation commission ) நிறுவப்படும்.
6. யுத்தத்தினால் வீடுகளை இழந்த மக்கள் பொருத்தமான நிலையான
வீடுகளை அமைத்துக் கொள்ள கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தொகை போதுமானது அல்லாமையால், வீடுகளை இழந்த அனைவருக்கும் ரூ. 05 இலட்சம் வீடமைப்பு நிவாரணம் வழங்கல்.
7. யுத்தத்தினால் இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கை பிரஜைகளை இந்நாட்டிற்கு அழைத்து வருவதற்கும், இங்கு வந்து வாழ்வதற்கும் தேவையான பின்புலத்தை செயற்படுத்தும் வேலைத்திட்டங்களை துரிதபடுத்தல்.
8. வடக்கில் ஏற்பட்டுள்ள காணி பிரச்சினை மிகவும் பாரதூரமானதும்
உணர்ச்சிபூர்வமானதும் என்பதால் அதனை தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுத்தல். வடக்கில் காணிகளை இழந்தவர்களின் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக அதன் முதல் உரிமையாளர்களை அடையாளம் கண்டு உறுதிப்படுத்தி அதனை அவர்களுக்கு வழங்கும் தேவை இருப்பதுடன், ஏற்கனவே அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளுக்காக போதி இழப்பீட்டை வழங்கல் அல்லது அவர்களின் விருப்பத்தின் பேரில் மாற்றுக் காணிகளை வழங்கலுக்காக, நியமிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர்கள், மற்றும் காணி அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய முழுமையான அதிகாரம் கொண்ட காணி ஆணைக்குழுவினை நிறுவி காணிப்பிரச்சினையை தீர்வு காண துரித நடவடிக்கை எடுத்தல்.
9. பல்வேறு இனங்களின் உரிமையை யாப்பின் மூலமாகவே உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தல், அவர்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களுக்கு உடனடி தீர்வு பெற்றுக் கொடுக்கும் நிர்வாக செயற்பாடாக மக்கள் சபை இருக்கும் என்பதுடன் தேசிய பிரச்சினை எவ்விதத்திலும் பயனற்ற மற்றும் ஏற்கனவே தோல்விகண்ட மாகாண சபை திட்டம் இல்லாது செய்வதற்கும் இது உதவும்.