தேசியம் குறித்த ஆரோக்கியமான உரையாடலை, குறைந்தபட்சம் முள்ளிவாய்க்கால் அழிவுகளுக்குப் பின்னராவது விவாதத்தளத்தை நோக்கி விரிவுபடுத்த முயன்ற போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. இந்த நிலையில் ந.இரவீந்திரனின் இரட்டைத் தேசியம் குறித்த “கருத்தாடல்கள்” புதிய வெளியை உருவாக்கியிருப்பது வரவேற்கத்தக்கதாகும். தினக் குரல் பத்திரிகையில் ரவீந்திரனின் “இரட்டைத் தேசியம் அறிதலும் அவசியமும்” என்ற கட்டுரை முன் நிறுத்தி இந்த உரையடல் தொடர்கிறது.
1. தேசியம் என்றால் என்ன?
முதலில் தேசியம் என்றால் என்ன என்ற தத்துவார்த்தப் புரிதலின் அடிப்படையிலிருந்தே உரையாடலை ஆரம்பிக்கலாம் என்பதே எனது கருத்து.
அயர்லாந்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் தேசிய ஒடுக்குமுறையின் போது தேசியம் குறித்து கார்ல் மார்க்ஸ் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தாலும் பின்னதாக லெனின் மற்றும் ஸ்டாலின் போன்ற அரசியல் மேதைகளால் தேசியம் குறித்த தெளிவான பார்வை முன்வைக்கப்படுகிறது. 70களில் ஏகாதிபத்தியக் கல்விசார் நிறுவனங்களில் குறிப்பாக மேற்கத்திய பல்கலைக் கழகங்களில் தேசியம் குறித்த கருத்துக்கள் மீண்டும் விவாதத்திற்கு உட்படுத்தப்படுகிறது. பல பிறழ்வுகளின் பின்னர் மீண்டும் தேசியம் என்பது குறித்த பொதுவான முடிபாக லெனின், ஸ்டாலின் போன்றவர்களின் கருத்துக்களே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
முதலில் தேசியம் என்பது முதலாளித்துவ உருவாக்கத்தோடு தொடர்புடையது. முதலாளித்துவதின் மத்தியத்துவப்படுத்தப்பட்ட சந்தையோடு நெருக்கமாகப் பிணைக்கப்படுகின்ற மக்கள் கூட்டம், தாம் ஒரு தேசத்தின் எல்லைக்கு உட்பட்ட தனித்துவமானதாக உணரும் போதே அது தேசியம் எனப்படுகின்றது. ஒரு குறித்த சந்தையை நோக்கி மத்தியத்துவப்ப்படுத்தப்படுகின்ற மக்கள் கூட்டம் வியாபாரப் பரம்பலுக்காக தமக்கிடையேயான தொடர்பு மொழி ஒன்றை தெரிந்தெடுத்துக் கொள்கின்றன. இந்தத் தொடர்பு மொழி தேசியத்தின் உருவாக்கத்தில் அடிப்படையான பங்கை வகிக்கின்றது.
இரண்டாவதாக பல மொழி பேசுகின்ற குழுக்கள் அவற்றிற்கே உரித்தான பண்பாடுகளைக் கொண்டிருந்தன. தேசங்கள் உருவாகின்ற போது அவை ஒன்றிணைந்து மூலதனதின் வளர்ச்சிக்கு உகந்த பண்பாட்டு அம்சங்கள் வேறுபட்ட குழுக்களிடமிருந்து உள்வாங்கப்பட்டு புதிய, பொதுவான கலாச்சாரம் ஒன்று உருவாகிறது.
பல முற்றிலும் வேறுபட்ட மொழி மூலங்களைக் கொண்ட குழுக்கள் ஒன்றிணைந்து பிரஞ்சு தேசம் உருவானபோது கோலுவா மொழி ஏனைய மொழிகளையும் உள்வாங்கிக் கொண்டு பிரஞ்சு மொழியாக உருவானது போலவே ஏனைய இனக்குழுக்களின் பண்பாட்டுக் கூறுகளும் உள்வாங்கப்பட்டன. அனைத்தினதும் இணைவாக பொதுவான கலாச்சாரம் ஒன்று உருவாகின்றது.
கலாச்சாரமும் மொழியும் ஒரு சந்தையை நோக்கி மத்தியத்துவப்படுத்தப்பட்டே உருவாகின்றது. சந்தையை நோக்கி மத்தியத்துவப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிப் போக்கை இலகுபடுத்தி வகைப்படுத்தும் போது பொதுவான பிரதேசம் மற்றும் பொதுவான பொருளாதாரம் என்ற இயல்புகளையும் தேசிய இனம் கொண்டிருப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் பிரன்ஸ் இத்தாலி போன்ற முதலாளித்துவம் உருவான நாடுகளைப் போலன்றி ஏனைய சில நாடுகளில் பல இனக் குழுக்கள் இணைந்து ஒரு தேசமாக உருவாகாத நிலை காணப்பட்டது. பால்கன் நாடுகள் இதற்கு உதாரணமாக அமைந்தது. இந்த நாடுகளிலெல்லாம் முதலாளித்துவம் சீராக வளர்ச்சி பெறாத தன்மை காணப்பட்டது. வேவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு அளவுகளில் அதன் வளர்ச்சி காணப்பட்டதால் வெவ்வேறு சந்தைகள் உருவாகின. ஒரு மொழி பேசிய இனக்குழுக்களை சுற்றி இந்தச் சந்தைகள் மத்தியத்துவப்படுதப்பட்டன. இவை ஒரு நாட்டின் எல்லைக்குள்ளேயெ வெவ்வேறு தேசங்கள் உருவாக வழிவகுத்தன. வெவ்வேறு தேசங்களின் மக்கள் வெவ்வேறு தேசிய இனங்களாக மாற்றமடைந்தனர். இந்த நாடுகளில் பெரும்பான்மைத் தேசிய இனங்களும் சிறுபான்மைத் தேசிய இனங்களும் உருவாகின.
பெரும்பான்மைத் தேசிய இனங்கள் சிறுபான்மைத் தேசிய இனத்தின் மூலதனச் சந்தையை கைப்பற்ற முயன்ற போது தேசிய இன ஒடுக்குமுறை உருவானது. இதன் பின்பே சுய நிர்ணய உரிமை குறித்த கருத்துக்கள் வலுப்பெறலாயின. சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது சந்தையை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பிரிந்து போகும் உரிமை என்பதே சுய நிர்ணய உரிமை என அழைக்கப்பட்டது.
இதற்கிடையில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி தடைப்பட்ட அல்லது நிலப்பிரபுத்துவம் முழுமையாக அழிந்துபோகாத நாடுகளில் தேசிய இனங்களாக வளர்ச்சியடையும் நிலையிலுள்ள இனக்குழுக்கள் காணப்பட்டன. சோவியத் ரஷ்யா இதற்குச் சிறந்த உதாரணம். இவை தேசிய சிறுபான்மை இனனங்கள் என அழைக்கப்பட்டன.
மேற்கின் முதலாளித்துவ உருவாக்கத்தோடு நெருக்கமான தொடர்பைக் கொண்டு உருவான தேசிய இனங்கள் குறித்த இக்கருத்துக்கள் ஒரு குறித்த வரலாற்றுக்கட்டத்திற்கு உரித்தானவை.
இதிலிருந்து சில முக்கிய முடிபுகள் முன்வைக்கப்பட்டன:
1. தேசிய இனங்கள் அல்லது தேசம் என்ற கருத்துருவாக்கம் வரலாற்றின் ஒரு குறித்த கட்டத்திற்கு உரித்தானது. அந்தக் குறிப்பான காலகட்டம் முதலாளித்துவ காலகட்டமாகும்.
2. தேசிய இனங்களிற்கே தேசிய உணர்வு அல்லது ஒருமைப்பாடு காணப்படும்.
3. தேசிய உணர்வு அல்லது ஒருமை என்பது முதலாளித்துவத்தின் உருவாக்கத்தோடு தொடர்புடையது.
2. தேசியம் குறித்த கல்விச் சமூகத்தின் மாற்றுக் கருத்துக்கள்
இந்த நிலையில் மேற்கின் கல்விசார் சமூகத்திலிருந்து தேசியம் குறித்த கருத்துக்கள் மிக நீண்ட காலத்தின் பின்னர் முன்வைக்கப்படுகின்றன. பின் அமைப்பியல் அதனோடு இணைந்த பின் நவீனனத்துவம் ஆகியவற்றோடு கைகோர்த்துக்கொண்டு இனத்துவம், இன அடையாளம், இனத்துவ எல்லைகள் போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் 1953ம் ஆண்டிலேயே இனத்துவம் என்ற சொல் இணைக்கப்படுகிறது. ஆங்கிலத்திற்கு கிரேக்க மொழியிலிருந்து அறிமுகமான இனம் என்ற சொல் பின்னதாக விரிவுபடுத்தப்படுகின்றது. கிரேக்கத்தில் எத்னோ என்ற சொல் யூதர்களும் கிறீஸ்தவர்களும் அல்லதவர்களைக் குறிக்கப் பயன்பட்டது.
70களின் பின்னர் மாக்ஸ் வெப்பர் இனம், இனத்துவம் அடையாளம் அதன் எல்லைகள் போன்றவற்றைப் பேச ஆரம்பிக்கிறார். பின் நவீனத்துவத்தின் அடையாளம் குறித்த “கருத்தாடல்” இன் தாக்கத்திலிருந்து இவ் விவாதங்கள் எழுந்தன.
70 களின் பிற்பகுதியில் தேசியம் குறித்த கருத்துக்கள் முனைப்புப் பெறுகின்றன. 90களின் ஆரம்பம் வரை தொடர்ந்த தேசியம் குறித்த விவாதங்கள் பின் நவீனத்துவம் மற்றும் பின் அமைப்பியல் போன்ற மார்க்சிய விரோதக் கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தன. மூன்று பிரதான ஆய்வாளர்கள் தேசியம் குறித்த விவாதங்களில் முனைப்புக்காட்டினர். முதலில் ஏர்னஸ்ட் கெல்னர், எரிக் கொஸ்பாம், பெனடிடிக்ட் அன்டர்சன் போன்றோர் தேசியம் குறித்த வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்தனர்.
70களின் பின்னர் மாக்ஸ் வெப்பர் இனம், இனத்துவம் அடையாளம் அதன் எல்லைகள் போன்றவற்றைப் பேச ஆரம்பிக்கிறார். பின் நவீனத்துவத்தின்
அடையாளம் குறித்த “கருத்தாடல்” இன் தாக்கத்திலிருந்து இவ் விவாதங்கள் எழுந்தன.
ஏர்னர்ஸ்ட் கெல்னர் தேசியம் குறித்த கருத்துக்களில் லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் ஆய்வுகளே சரியானவை என வாதிட்டவர். இவர் எழுதிய தேசமும் தேசியமும் என்ற மிகப் பிரபலமான நூல் தேசிய இனம் என்பது முதலாளித்துவ பொருளுற்பத்தியோடு தொடர்புடையது என வாதிட்டது. 70களின் பிற்பகுதியிலேயே கெல்னரின் தேசியம் குறித்த பல கட்டுரைகள் வெளியாகின. இந்த விவாதங்களில் கெல்னரின் கருத்து தேசிய இனம் என்பது முதலாளித்துக் காலத்திற்கே உரித்தான வரலாற்று வழிவந்த மக்கள் கூட்டம் என்பதாகும். கெல்னரின் கருத்திற்கு எதிரான தேசியம் குறித்த மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தவர் ஹொப்ஸ்பவம். ஹொப்ஸ்பவம் இன் கருத்தின் அடிப்படையில் தேசிய என்பது நிலப்பிரபுத்துவக் காலத்திலும் காணப்பட்டது என்பதை நிறுவ முற்பட்டார். தேசியம் என்பது முதலாளித்துவக் காலத்தில் உருவாகும் மக்கள் கூட்டத்தின் ஒன்றிணைந்த உணர்வு என்பதற்கு அப்பால் நிலப்பிரபுத்துவப் பொருளுற்பத்திக் காலகட்டத்திலும் காணப்பட்டது என்று வாதிட்டார்.
ஹொப்ஸ்பாமின் இந்த வாதத்திற்கான ஆதாரமாகப் பயன்பட்டது தேரவாத பௌத்தம். அதிலும் குறிப்பாக இலங்கையில் தேரவாத பௌத்தம் நிலப்பிரபுத்துவக் காலத்திலேயே தேசிய வாதக் கருத்துக்களைக் கொண்டிருந்தது என்பதையும், தேசிய உணவைக் கொண்டிருந்தது என்பதையும் வாதிடுகிறார். இந்த வாதத்தின் மையப் பொருளாக இலங்கையில் இந்து மன்னர்கள் கூட பௌத்ததையே தழுவிக்கொண்டதைக் குறிப்பிடுகிறார். மகாவம்சம் என்ற கற்பனைக் கதைகளில் குறிப்பிடப்படும் சம்பவங்கள் ஹொப்ஸ்பவமின் வாதங்களில் வந்து செல்கின்றன.
அமைப்பியல், பின்னமைப்பியல், பின்னவீனத்துவம் போன்ற கருத்துக்கள் திணிக்க்கப்பட்ட மேற்கத்திய கல்வித்துறை மார்க்சிய ஆய்வு முறையே சரியானது என்று ஏற்றுக்கொண்ட 90 களின் ஆரம்பத்தில் ஹொப்ஸ்பவமின் கருத்துக்கள் நூலுருவில் வெளியாகின்றது(Nations and Nationalism Since 1780: programme, myth, reality).
ஹொப்ஸ்பாவ்மின் கருத்துக்கள் தவறானது என்பதை நிறுவ சிக்கலான ஆய்வுகள் ஏனையோருக்குத் தேவைப்படிருக்கவில்லை. தேரவாத பௌத்ததின் காலத்தில் மக்கள் மத்தியில் இந்துத்துவ ஆதிக்கட்கத்திற்கு எதிரான கருத்துக்கள் காணப்பட்டாலும், ஒரு நாட்டின் எல்லைகள் மன்னர்களின் ஆட்சிக்கு ஒப்ப சுருங்கியும் விரிந்தும் சென்றன என்பது நிறுவப்பட்டது. தவிர, காலனிய ஆக்கிரமிப்பு வரை இலங்கையில் முழுமையான நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை காணப்பட்டவில்லை என்பதும் குழு நிலை சமூகமே காணப்பட்டது என்பதும் முக்கிய எடுகோளாக முன்வைக்கப்பட்டது.
எது எவ்வாறாயினும் பின் அமைப்பியல் அதனோடு இணைந்து உருவான பின் நவீனத்துவம் ஆகியவற்றின் மரணத்தின் பின்னர், பொதுவான ஆய்வுகளில் மார்கிசியத்தோடு முரண்பட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்ட மேற்கத்திய கல்விச் சமூகம், இறுதியாக கெல்னரின் ஆய்வையே ஏற்றுக்கொள்கிறது.
ஆக, தேசியம் என்பது முதலாளித்துவக் காலகட்டத்திற்கே உரித்தான வரலாற்று வழிவந்த மக்கள் கூட்டம் என்பதற்கு அப்பால் வேறெதுவும் இல்லை என்பது பொதுவானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது மார்க்சியம் முதலில் வரையறுத்த தேசியம் குறித்த கருத்துக்களை பல நீண்ட வருட விவாதங்களின் பின்னர் மார்கிசியம் குறித்துப் பேசாமலேயே கல்விச் சமூகம் ஏற்றுக்கொள்கிறது.
இப்போது தேசியம் குறித்த எந்த ஆய்வுமற்ற “ஆண்டபரம்பரைப்” பேர்வளிகள் குறித்துப் பேசுவது எனது நோக்கமல்ல. இவர்களில் ஒருபகுதி ஏமாற்றுக்காரர்கள். இன்னொரு பகுதி ஏமாற்றபடுகிறதுவர்கள்.
3.கெல்னரும் ஹொப்ஸ்பவமும் ந.இரவிந்திரனும்
கெல்னர் மற்றும் ஹொப்ஸ்பவம் ஆகியோரின் தேசியம் குறித்த கருத்துக்களில் கெல்னரின் கருத்துக்கள் பொருளுற்பத்தி எவ்வாறு தேசியம் என்ற சமூகச் சிந்தனையையும் அதன்
ஊடான ஒருங்கிணையவையும் ஏற்படுத்துகிறது என வாதிக்கிறார்.
ஹொப்ஸ்பவமைப் பொறுத்தவ
ரை தேசியம் என்பது பொருளுற்பத்தியோடு தொடர்பற்ற தனிவகையான ஒருங்கிணைவிற்கான சிந்தனை என்பதை இலங்கைச் சூழலை முன்வைத்து நிறுவ முயல்கிறார்.
கெல்னர் சிந்தனை என்பதைத்
தீர்மானிப்பது சமூகத்தின் வாழ்நிலை அல்லது பொருள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. சமூகத்தின் இயக்கத்தோடு தொடர்புடையது. இதனைப் பொருள்முதல்வாத அணுகுமுறை என்று மார்க்சியர்கள் குறிப்பிடுவர்.
ஹொப்ஸ்பவமைப் பொறுத்தவ
ரை பொருளுற்பத்திக்கு வெளியில் இந்தச் சிந்தனை வெறுமனே ஒருங்கிணைவு என்ற அடிப்படையில் உருவாவதாகக் குறிப்பிடுகிறார். இதனைக் கருத்து முதல்வாதம் என்கிறோம்.
ந.இரவீந்திரன் ஹொப்ஸ்பவமின் கருத்துக்களுக்கு இசைவான தேசியம் குறித்த சிந்தனையை முன்வைக்கிறார். முதலாளித்துவப் பொருளுற்பத்தியோடு உருவாக்கம் பெற்ற வரலாற்று வழிவந்த மக்கள் கூட்டமே தேசிய இனங்கள் என்ற கருத்தை நிராகரிக்கும் ந.இரவீந்திரன் அதற்கு அப்பால் ஒரு மக்கள் கூட்டத்தின் ஒருங்கிணைவு என்பதே தேசியம் என்ற கருத்தை முன்வைக்கிறார்.
இவ்வாறான கருத்தின் அடிப்படையிலேயே சமூகத்தின் மேற்கட்டுமானமாக வெளித்தெரிவும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேந்தவர்களை ஒரு தேசியமாகக் கணிப்பிடுகிறார்.
கருத்துமுதல்வாத அடிப்படைகளைக் கொண்ட இக்கருத்து பல தடைவகள் கோட்பாட்டுத் தளத்தில் தோல்வியடைந்திருக்கிறது என்பது வேறுவிடையம்.
4. இலங்கையில் தேசியமும் பாசிசமும்
இலங்கை போன்ற நாடுகளில் தேசிய இனங்களின் வர்க்கக் கூறுகள் குறித்த பருமட்டான ஆய்விலிருந்தே தேசிய இயக்கங்கள் குறித்த முடிபிற்கு முன்வர முடியும். முதலாளித்துவம் இயல்பாகத் தோற்றம்பெற்ற மேற்கத்தை நாடுகளுக்கும் முதலாளித்துவம் ஏற்றுமதி செய்யபட்ட மூன்றாமுலக நாடுகளுக்கும் இடையே தேசிய உருவாக்கத்திலும் தேசியம் குறித்த கருத்துக்களிலும் மிகப்பெரும் வேறுப்பாடுகளைக் காணலாம்.
மேற்கத்திய தேசியம் தொடர்பான முன் உதாரணங்களை மாற்றங்களின்றி பிரயோகிக்கும் முறமை கோட்பாட்டுரீதியான பாரிய தவறுகளையும் அழிவுகளையும் நோக்கி இட்டுச் சென்றுள்ளன.
நேபாள விடுதலைப் போராட்டத்தில் தேசிய இனங்கள் குறித்து மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவரான பசுந்தாவுடன் உரையாடிய போது, தேசிய இனங்கள் குறித்த தமது நிலைப்பாடு பொருள்முதல்வாத அடிப்படையைக் கொண்டதாக அமைந்திருந்தாலும் மேற்கிலிருந்து வேறுபட்டிருப்பதை கவனத்தில் கொண்டக வேண்டியிருந்தது என்றார்.
இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சியின் போதே சந்தைப் பொருளாதாரம் உருவாகின்றது. சந்தைப் பொருளாதாரத்தின் தோற்றத்துடனேயே தேசிய இனங்களும் தேசிய உணர்வும் தோற்றம் பெறுகின்றது.
இலங்கையில் தோற்றம்பெற்ர சந்தைப் பொருளாதாரம் இலங்கையிலுள்ள தேசிய முதலாளிகளின் நலன்களின் அடிப்படையிலன்றி பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் நலன்களின் அடிப்படையிலேயே உருவாகின்றது. பிரித்தானியா தனது நேரடிக் காலனித்துவத்தை நிறைவு செய்து கொண்டு வெளியேறிய போது தனது முகவர்களை அதிகாரத்தில் அமர்த்திவிட்டுச் செல்கிறது. விதேசிகளான அன்னிய முகவர்கள் அல்லது தரகர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிகொள்ள தேசியத்தின் பெயரால் முழு நாடுமே சூறையாடப்படுகிறது. தவிர, வர்க்க அமைப்பு முறையில் தேசிய முதலாளித்துவத்தின் இருப்பு சாத்தியமற்ரத்தாகிவிடுகின்றது.
எது எவ்வாறாயினும் சந்தைப் பொருளாதாரம் தேசியத்தின் தேவையத் தவிர்க்க முடியாமல் உருவாக்குகின்றது.முதலாளித்துவ உற்பத்தி முறையில் மூலதனத்தின் பரம்பலுக்கு அவசியமான தேசியமும் தேசிய உணர்வும் தரகு முதலாளிகளின் விதேசியத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. தேசிய முதலாளித்துவ உருவாக்கத்தைத் தடுப்பதற்காக இன முரண்பாடு திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தப்படுகிறது. பிரித்தானிய ஏகாதிபத்தியமே தேசிய இன முரண்பாட்டை உருவாக்கியது.
இத்தேசிய இன முரண்பாடு பெருந்தேசிய ஒடுக்குமுறையாக வியாபித்து விடுதலைப் போராட்டத்திற்கான தேவையை சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியில் உணரவைக்கிறது.
இப்போது, வட கிழக்குத் தமிழர்களின் தேசிய விடுதலைக்கான போராட்டத்தை எடுத்துக்கொள்வோம். தேசியம், தேசம் போன்ற முழக்கங்கள் தேசிய முதலாளிகளின் நலன்களுக்காக முன்வைக்கபடுகின்றவை மட்டுமல்ல தேசிய விடுதலைப் போராட்டம் கூட அவர்களின் நலன் சார்ந்த ஒன்று. தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தேசிய முதலாளிகளே தலைமைதாங்கியிருக்க வேண்டும். அவ்வாறான ஒரு வர்க்கமோ அது உருவாகுவதற்கான குறைந்தபட்ச சூழலோ தேசிய மூலதனம் குறித்த கருத்துருவாக்கமோ அற்றுப் போன நிலையில் தேசிய விடுதலைப் போராட்டத்தை யார் தலைமைதாங்க முடியும்?
மத்தியதர வர்க்க இளைஞர்களிடமிருந்து தோற்றம்பெற்ற தேசிய விடுதலை உணர்வைத் தலைமைதாங்க உறுதியான தேசிய முதலாளித்துவ வர்க்கம் அற்றுப் போயிருந்த நிலையில், அதன் தலமையைப் பலம் மிக்க ஏற்கனவே ஒழுங்கைமக்கப்பட்டிருந்த தரகு முதலாளித்துவ வர்க்கம் கைப்பற்றிக்கொண்டது. தரகு முதலாளித்துவம் தேசியத்திற்கு எதிரான முதலாவது நேரடி எதிரி வர்க்கம். அதாவது தேசிய விடுதலைப் போராட்டத்தை அதன் எதிரிகள் கையகப்படுத்திக்கொண்டனர்.
தேசியம் குறித்துப் பேசிய அனைவத்து போராட்ட இயக்கங்களுமே ஏகாதிபத்தியங்களுடன் சமரசம் செய்து கொண்டன. தமிழ்த் தரகு முதலாளிகளைப் பிரதினிதித்துவம் செய்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலே அனைத்து விடுதலை இயக்கங்களதும் அரசியலானது. வேறுபட்ட அளவுகளில் இவை அனைத்துமே ஏகாதிபத்திய சார்பு கொண்டவையாக மாற்றமடைந்தன.
இடதுசாரி முனைப்புக்கொண்ட தேசிய விடுதலை இயக்கங்கள் என்று ஆரம்பிக்கப்பட்டவை கூட நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏகாதிபத்திய – தரகுமுதலாளித்துவம் சார்ந்த இயக்கங்களாக இறுதியை அடைந்தன.
தேசிய விடுதலைக்கு எதிரான கோட்பாட்டுத் தலைமை தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கியதால் அது பாசிசக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது. மத்தியதர வர்க்கத்தின் மத்தியிலிருந்து எழுந்த தேசிய சக்த்திகளை இப் பாசிசக் கூறுகள் முற்றாக அழித்தன. இறுதியில் புலிகளின் தலைமையில் மொத்த விடுதலைப் போராட்டமும் அழிந்து சிதைந்துபோனது.
5.என்ன செய்யலாம்?
தேசிய முரண்பாடு கூர்மையடைந்துள்ள சூழலில் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்கும் உறுதியான வர்க்க அணியைப் பலப்படுத்தி அதன் தலைமையில் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன் நகர்த்துவதே இதற்கான ஒரே மாற்று.
இலங்கையில் ஒடுக்கப்பட்ட வறிய கூலி விவசாயிகளை ஒரணியில் திரட்டுவதன் ஊடாகவே, அமைப்பு மயமாக்குவதனூடாகவே இதனைச் சாத்தியப்படுத்த இயலும்.கடந்தகாலத்தில் இவ்வகையான முயற்சிகள் வெற்றியளித்தமைக்கான சான்றுகள் பல காணப்படுகின்றன.
தேசிய முதலாளித்துவ வர்க்கம் உறுதியான வர்க்கமாகக் காணப்பட்ட சூழலில் வரைமுறைக்கு உட்படுத்தப்பட்ட தேசிய இனங்கள், சிறுபான்மைத் தேசிய இனங்கள், தேசிய சிறுபான்மை இனங்கள் என்பவற்றிற்கும் வெளியால், வேறுபட்ட சூழலிலேயே இலங்கையில் தேசிய இனங்கள் காணப்படுகின்றன. சந்தைப் பொருளாதாரத்தின் தோற்றத்தோடு ஆரம்ப நிலையை அடைந்த தேசிய இனங்களில் தோற்றம் அதே நிலையிலேயே இன்றும் காணப்படுகிறது. உற்பத்தி சக்திகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டதற்கான சான்றுகள் இன்னும் பெரிதாகக் காணப்படவில்லை. இலங்கையில் தேசிய இனங்கள் இன்னமும் வளர்ச்சியடையும் நிலையிலேயே காணப்படுகின்றன. இந்த்ச் சூழல் சாதீய முரண்பாடுகளையும், பிரதேச முரண்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இவ்வகையான முரண்பாடுகளின் இருப்பு என்பது மூன்றாம் உலக நாடுகளில் தேசிய இனங்கள் குறித்த குழப்பமான கருத்துக்களை உருவாக்குகின்றன. வலன்டைன் டானியல், ஜேகப் பாண்டியன் போன்ற கல்வியாளர்கள் மூன்றாம் உலக நாடுகளில் தேசியம் என்பது சாதிய முரண்பாடுகளையும் அங்கீகரித்த ஒன்றாகவே அமைந்திருக்கும் என்ற தவறான கருத்தை மேற்கின் கல்விச் சமூகத்திற்குக் கற்பிக்கின்றனர். தேசிய இனங்கள் இன்னமும் வளரும் நிலையிலேயே காணப்படுகின்றன என்ற கருத்துச் சொல்லப்படுவதில்லை. சண்முகதாசன் குறைனிலை வளர்ச்சியடைந்த தேசிய இனங்கள் என்ற கருத்தை “தேசிய சிறுபான்மை இனங்கள்” என்ற மேற்கின் பிரதியீடாகவே முன்வைத்தார்.
7.பிரிந்து செல்லும் உரிமை
கோட்ப்பாடுத் தளத்தில் சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்லும் உரிமையே. ஒடுக்கப்படும் தேசிய இனம் தனது ஒடுக்குமுறையிலிருந்து பிரிந்து சென்று தனியான தேசிய அரசை அமைத்துக் கொள்வதற்கான போராட்டமே சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம். மறுபுறத்தில் நடைமுரை சார்ந்து இது மாறுபடலாம். குறிப்பாக இலங்கைச் சூழலில் தமிழ்ப் பேசும் மக்கள் பிரிந்து செல்வதற்கான உரிமைய அங்கீகரிக்க வேண்டும் என்ற குரல்கள் தெற்கிலிருந்து எழுமானால் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பிரிந்துசெல்லும் உரிமையுடன் இணைந்து வாழ்வதற்கே விரும்பும் என்பது வெளிப்படை. இன்றைய பேரினவாத ஒடுக்குமுறை உச்சமடைந்துள்ள சமூகப் புறச் சூழலில் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுதல் தவிர்க்க இயலாத ஒன்று.
பிரிந்து செல்வதா இல்லையா என்ற எதிர்காலம் குறித்த வினாவிற்கு எதிர்காலத்தில் பெருந்தேசிய அரசுகளின் தன்மையைக் குறித்தே முடிவுகள் அமையும்.ஒரு அரசு எம்மீதான ஒடுக்குமுறையைப் பிரயோக்கிக்கும் என்ற தெரிந்துகொண்டே இணைந்து வாழ்வோம் என்று எப்படி அடம்பிடிப்பது?
பெருந்தேசிய இனத்தின் மத்தியில் இணைந்து வாழ்வதற்குரிய சோசலிச அரசை உருவாக்குவதில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் பங்களிக்கலாம் என்பதும், முழு இலங்கை தழுவிய கம்யூனிச இயக்கத்தின் பகுதியாக சிறுபான்மைத் தேசிய இனங்களின் போராட்டம் அமையலாம் என்பதும் ஆரோக்கியமான கருத்துக்கள்.
எது எவ்வாறாயினும் தேசிய ஒடுக்குமுறைகு எதிரான போராட்டம் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களோடும் ஒடுக்கப்படும் சிங்கள மக்களோடும் இணைந்து முன்னெடுக்கப்படுமாயின் பிரிவினைக்குப் பதிலாக ஒற்றுமையே இறுதியாகும் என்பதே எனது கருத்து.
சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்வது என்பது கோட்பாடு ரீதியானது. பிரிந்து செல்வதா இல்லையா என்று தீர்மானிப்பது நடைமுறை சார்ந்த பிரச்சனை.
7.தேசிய இனப்பிரச்சனை குறித்த வேறுபட்ட கருத்துக்கள்
1. தேசியம் என்பதே தவறான கருத்தாக்கம் அது பாசிசத் தன்மை கொண்டது
2. சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்வதற்கானதல்ல.
3. சோசலிச அரசு உருவானால் தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டுவிடும் தனியான போராட்டம் தேவையற்றது.
4. தமிழர்கள் மேலானவர்கள் எது நேரினும் அவர்கள் பிரிந்து சென்று மேலான அரசை உருவாக்க வேண்டும்.
ஏனைய அனைத்து உப கருத்துக்கள் அனைத்துமே இந்த நான்கு வகைப்படுத்தலுக்குள் உள்ளடக்கப்படலாம்.
தேசியம் என்பது தவறானது என்பது குறித்து ஆதங்கப்படுகின்றவர்கள் அடிப்படையில் மார்க்சியத்தை நிராகரிக்கின்றவர்கள். பெனடிக்ட் அண்டர்சனின் ‘கற்பனை சமூகம்’என்ற நூலை முன்வைத்து இக்கருத்துக்கள் 90களின் பிற்பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டதெனலாம். பெனடிக்ட் அண்டர்சன் தனது துறைசார் தேவைக்காக மார்க்சியம் வரையறுத்த தேசியக் கோட்பாட்டின் ஒரு பகுதியை பிரித்தெடுத்து தேசிய உணர்வு கற்பனையானது என்றும் அந்தக் கற்பனைச் சமூகத்தை உருவாக்குவதற்கு அச்சு ஊடகங்களின் பங்கு முக்கியமானது என்றும் வாதிக்கிறார்.
ஐரோப்பிய மையவாத சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்ட தமிழ் நாட்டின் நகர்ப்புறச் சிந்தனையாளர்கள் இதனை இன்னொரு படி மேலே கொண்டு சென்று தேசியம் கற்பனையானது ஆகவே அது பொய்யானது என்று வாதிட்டனர். அதன் கூறுகள் ஈழ அரசியலிலும் ஒரு எல்லைவரை செல்வாக்குச் செலுத்தியது. சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் கற்பனையான பகுதியை நாம் எப்போதும் காணலாம் என்பதை மார்க்சியர்கள் நிராகரிக்கவில்லை. ஆனால் அவ்வாறான மேற்கட்டுமானம் தோன்றுவதற்குரிய உற்பத்தி முறை என்ன என்பதே பிரதான ஆய்வாக வேண்டும் என்பதே மார்க்சியர்களின் வேண்டுகோள்.
இரண்டாவதாக சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்லும் உரிமையல்ல என்பது தவறானது என்பது குறித்து கட்டுரையின் ஏனைய பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளது.
மூன்றாவதாக சோசலிச சமூகத்தி தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டுவிடும் என்றும் இப்போது சுய நிர்ணய உரிமைக்காகப் போராடாமல் இன ஒடுக்கொமுறைக்கு எதிரான போராட்டமே போதுமானது என்றும் சிங்களப் பகுதியிலிருந்து கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பதே சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது குறித்த விளக்கங்களும் மேலே தரப்பட்டுள்ளன.
நான்காவதாக இலங்கையில் குறுந்தேசிய சிந்தனையாளர்களும் புலம் பெயர் நாடுகளில் இதனால் ஆட்கொள்ளப்பட்ட அடையாளச் சிக்கல்கொண்டோரும் முன்வைக்கும் சுலோகங்கள். தேசியத்தின் அன்னிய மூலதன மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மைகளை நிராகரித்து உணர்ச்சி அரசியலை முன்னெடுப்பதற்கான அரசியல் இவர்கள் மத்தியிலிருந்தே ஊற்றெடுக்கிறது. ஏகாதிபத்தியங்களாலும் அன்னிய சக்திகளாலும் பேரினவாதிகளாலும் இலகுவாகப் பயன்படுத்தப்படும் இவர்கள் தேசியத்தை பாசிச அரசியலை நோக்கி நகர்த்தும் காவிகளாகவும் தொழிற்படுகின்றனர்.
8.தலித்தியம் மற்றும் தேசியம் குறித்த உரையாடல்கள்
இந்தியாவில் தலித்தியம் என்ற கருத்துருவாக்கம் குறித்தோ அன்றி இலங்கையில் அதன் விரிவாக்கம் குறித்தோ என்னிடம் தெளிவான ஆய்வுகள் இல்லை. அனுபவம் சார்ந்த சில கருத்துக்களை முன்வைக்கிறேன். 80 களின் நடுப்பகுதியிலிருந்து வடக்கில் தேசிய விடுதலை இயக்கங்கள் முன்வைத்த அரசியலுக்கு அப்பால் கிராமப்புறங்களில் வறிய கூலி விவசாயிகளை அணிதிரட்டும் அரசியல் வேலைகளை முன்னெடுத்த அனுபவங்களின் அடிப்படையில் இக்கருத்துக்களை முன்வைக்கிறேன்.
ஆயுதம் தாங்கிய இயக்க அரசியல் மேலோங்கியிருந்த அந்தக் காலப்பகுதியில், கிராமிய உழைப்பாளர் அமைப்பு, தேசிய மாணவர் மன்றம், மாதர் மறுமலர்ச்சிப் பேரணி, விழிப்புக் குழுக்கள் என்ற நான்கு வேறுபட்ட அமைப்புக்களுக்கூடாக மக்களை அணிதிரட்டும் வேலைகளை பாசறை என்ற சிறிய மார்க்சியக் குழுவினூடாக முன்னெடுத்திருந்தோம். மக்கள் திரள் அமைப்புக்களை உருவாக்கி அதனூடாக போராட்டத்தை மக்கள் போராட்டமாக முன்னெடுக்கவேண்டும் என்ற கோட்ப்பாட்டின் அடிப்படையில் இவ்வமைப்புக்களை தோற்றுவித்தோம். கிராமிய உழைப்பாளர்களுக்கான அமைப்பு ஏற்கனவே சில கிராமங்களில் தனது குழுக்களைக் கொண்டிருந்தது. பொதுவாக நிலத்தோடு இணைந்த கூலி விவசாயிகளின் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இந்த அமைப்பில் இணைந்து கொண்டிருந்தனர். இந்தக் கிரமங்களில் கம்யூன்களை ஒத்த நிர்வாக அமைப்புக்களாக விழிப்புக்குழுக்களை ஆரம்பித்திருந்தோம். இவை எதிர்பாராத வெற்றியை எமக்குப் பெற்றுத் தந்திருந்தது.
உரும்பிராய் கொலனி, மொண்டி, கல்லாக்கட்டுவன், மத்தாளோடை, சங்குவேலி போன்ற தாழ்த்தபட்ட கிராமங்களில் அமைந்திருந்த இந்த அமைப்புக்களை ஏனைய கிராமங்களுக்கும் விரிவு படுத்தினோம். பல சிக்கல்களுக்கு மத்தியில் இணுவில் மானிப்பாய் தாவடி போன்ற உயர்சாதி வேளாளர் கூலி வறிய வாழும் கிராமங்களில் அமைப்புக்களை உருவாக்ககினோம். மத்தியதர வர்க்கத்தின் மேலணிகள் வாழும் பிரதேசங்களில் யாரையும் அணுகக் கூட முடிந்ததில்லை. அவர்கள் குறிப்பாக பள்ளர்களின் அமைப்பு என கேலி செய்வதையே காணக்கூடியதாக இருந்தது.
இதே வேளை நளவர் மற்றும் பறையர் சமூகங்கள் வசதிபடைத்தோராக வாழ்ந்த நல்லூர் பகுதிகளில் அமைப்பு வேலைகளை நகர்த்துவதும் இயலாத ஒன்றாக இருந்தது. அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினராகத் தம்மை அடையாளப்படுத்தத் தயாராக இருக்கவில்லை. மேட்டுக்குடி வேளாளர் சமூகத்தில் எதிர்கொண்டதிலும் அதிகமான சிக்கல்களை வசதிபடைத்த தாழ்த்தப்பட்டோரிடமிருந்து எதிர்கொண்ட அனுபவத்தை காணக்கூடியதாக இருந்தது.
தலித்துக்கள் என்ற பொதுவான அடையாளத்திற்கு உள்ளாக தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒன்றிணைய எப்போதும் தயாராக இருந்ததில்லை. தவிர, பெரும்பான்மையான ஏனைய சாதியினரைச் சார்ந்த தொழிலாளர் விவசாயிகளின் நெருக்கமான ஆதரவின்றி சிறுபான்மையினரான தாழ்த்தப்பட்ட சாதியினர் தமது சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தல் தர்க்கீக அடிப்படையில் சாத்தியமற்ற ஒன்று.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்களுள் பெரும்பான்மையானவர்களுள் மேட்டுக்குடி வேளாளர்களே. இதனால் குறிப்பாக வடக்கில் சாதீய வரம்புகள் சற்றே தகர்ந்துள்ளன. இவற்றை மீள்கட்டமைப்பதற்கான முயற்சிகள் புலம்பெயர் நாடுகளிலிருந்தே பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றன என்பது எனது கருத்து. புலம் பெயர் நாடுகளின் குறுந்தேசிய வாதிகளின் ஊடகங்களின் கலாச்சாரச் சீரழிவு குறித்த மிகைப்படுத்தப்பட்ட புனைவுகளில் இவற்றைக் காணலாம். தவிர விடுமுறைக்காகப் புலம்பெயர் நாடுகளிலிருந்து தமிழ்ப் பகுதிகளுக்குச் சென்று வருகின்றவர்கள் அங்குள்ள கோவில்களைப் புனரமைப்புச் செய்வதையும் பழமையை மீட்கும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் காணலாம்.
இவை தவிர சாதிய அமைப்பை மீளமைப்புச் செய்து கொள்வதற்கு வர்க்கப் பார்வையற்ற தலித்திய கருத்துக்களும் துணைபுரிகின்றன. யாழ்ப்பாண மேட்டுக்குடி வேளார்களின் ஆதரவைப் பெற்றுள்ள இலங்கையில் முளைவிடும் இத்தலித்திய அமைப்புக்கள் சாதி அமைப்பு முறையை ஆழப்படுத்தவே வகைசெய்யும்.
சாதீயம் என்ற அடையாளத்தை வர்க்கம் கடந்து அணுகும் மற்றொரு வழிமுறைதான் அதனை ஒரு தேசியமாக அணுகுவது. முதலில் முன்னமே கூறியது போன்று தேசியம் என்பது சந்ததைப் பொருளாதார உருவாக்கத்தோடு தோற்றம்பெற்ற கருத்து என்பதை மறுக்கும் கருத்து முதல்வாதப் போக்கே இது, இரண்டாவதாக ஒடுக்கப்பட்ட சாதியினர் மத்தியில் ‘நாம் ‘என்ற உணர்வு காணப்பட்டதில்லை, மாறாக அவர்களின் வர்க்கம் சார்ந்த உணர்வு விடுதலைப் போராட்டம் ஒன்றின் தலைமை சக்திகளாக மாற்றமடையும் போர்க்குணம் என்பவையே இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
தொடர்புடைய பதிவு:
முதலில் இரட்டைதேசியம் என்பது பின்நவீத்துவ செலலாடகவே கருதவேண்டியுள்ளது. ஒடுக்கப்படும் தொழிலாளி விவசாய வர்க்கதன் தலைமையில் இலங்கையின் சமுகமாற்கஙளுக்கான நடைமுறை செயற் தந்திரம் தேவையே ஒழியதலித் தலைமையிலான தேசிய விடுதலை அல்ல
சாதியத்தை தேசியத்தின் ஓர் கூறாக பார்க்கக் கூடாதோ?
சரியாக கேட்டீர்கள் நண்பரே. கருத்துகள் மீதான விமர்சனத்தை விட இரவீந்திரன் மீதான காழ்புணர்வே சற்குருநாதனில் முனைப்குற்றிருக்கின்றது.
Joseph Stalin the Georgian ruined the world revolution. Eduard Shervadnadze another Georgian helped to dismantle the Soviet Union. Sri Lankan Tamils have gone all over the world. What a country Sri Lanka is? You can get a passport in less than a day!
Very good concept. Ravi is a real fighter. I know him from his teen age. Go head Ravi!
நேர்மையான மனிதன் ஒருபோதும் பொய்யாக வாழ மாட்டான். ரவீந்திரன் வாழ்ந்த வாழ்வை விமர்சிக்க எவருக்கும் தகுதி கிடையாது. அவரை ஊக்கிவித்து இன்னும் நல்ல கருத்துகளையும், அறிவையும் பரிமாறச் செய்யுங்கள். அதுதான் இன்று இந்த நாட்டின் தேவை. உங்கள் மலையகத்தையும், அங்குள்ள அரசியலையும் அவர் உருவாக்கினார் என்பது மக்கள் அறிவார்.
வாணன் நேர்மையாகவே கூறினீர்கள். மலையகத்தில் என் போன்ற தலைமுறையினருக்கும் நேர்மையாக வழிகாட்டியுள்ளார். அமைப்பு பற்றிய சிந்தனை எம் மத்தியி்ல் உருவாக்கியவரும் அவரே.
Self determination is a word that came into usage in 1948 the year Ceylon (Sri Lanka) became independant. It is still dangling in the international arena because of Palestine and Kashmir. That is all to it. Both parliamentarians Sivajilingam and late Nadarajah Raviraj were invited by Sinhala media television stations to appear in their programs. In one they used this word. In the other they talked about the Bandaranaike- Chelvanayagam and Dudley Senanayake – Chelvanayagam pacts.
ந.ரவீந்திரன் மிக நேர்மையானவர் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை அவர் எனக்கும் ஆசிரியர் அது பிரச்சினையல்ல இங்கு அவரது கருத்து இயக்கம் சார்ந்த பிரச்சினைச்சினைகளையே விவாதிக்க வேண்டியுள்ளது.நிலமானிய அச்சாணியான சாதியத்யத்தை முன்நிறுத்தி அதற்கு தேசிய கருததுருவாக்கத்தை ஏற்படுத்தி அதற்கு பண் பாட்டு அடையாளத்தை கொடுக்கும் கருத்துசார்ந்த பிரச்சினை பற்றியே பின் நவீனத்தின் அடையாளமாக தலித் தேசியத்தை வலியுறுத்துவதையே
இதற்கான பதிலை இரவீந்திரன் தான் சொல்லவேண்டும்.
நாடும், மொழி சார்ந்த இனங்கள,; இனக் குழுமங்கள் மட்டும்தான் தேசியமோ? பண்பாட்டுத் தளத்தில் ஆதிக்கம் செலுத்துபவைகளை எப்படி அழைப்பது? சாதியம் என்றென்றும் பண்பாட்டுத் தளத்தில்தான் இயங்கக்கூடியதொன்றோ? முன்னையதிற்கு பொருள்முதல்வாத அடிப்படை இருந்தால், பின்னையத்திற்கு இல்லையோ? உரையாடல்களை சமூக-விஞ்ஞானத் தளத்தில் இருந்து பகிர்வோம். பின்நவீனத்துவம், திரிபுவாதம் போன்ற முத்திரை குத்தல்களை தவிர்ப்போம!; மார்க்சிஸத்தை செழுமைப்படுத்தும் நோக்கில் சகலதையும் உரையாடுவோம்
1952. Mother Language Day. Dhaka, Bangladesh.