Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

“தேசியத் தலைவரின்” பெயரால் … : அஜித்

இனியொரு... by இனியொரு...
01/10/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
13
Home பிரதான பதிவுகள் | Principle posts

1.

இலங்கை அரசியல் பின்புலம்

60 ஆண்டு இலங்கை அரச பேரினவாத அரசியல், 70 களின் பின்னர் அரசியல், பொருளாதார, கலாச்சார ஒடுக்குமுறை என்ற தளத்திலிருந்து நேரடியான அரச இயந்திரத்தின் வன்முறையாக வளர்ச்சியடைந்தது. உறுதியான மக்கள் சார்ந்த அரசியலை முன்வைத்துத் திட்டமிடப்ப்படாத தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்ப்புப் போராட்டம் அரச வன்முறையை எதிர்கொள்ளும் ஆயுதப் போராட்டத்தின் தேவையை உருவாக்கியது. 80களில் இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலை பல அப்பாவித் தமிழர்களின் உயிர்களைப் பலிகொண்டது. ஆயுதப் போரட்ட்த்திற்கான சமூக அங்கீகாரமும் தேவையும் பல ஆயுதக் குழுக்களை உருவாக்கியது.

80 களின் சமூகப் புறச் சூழல் போராட்டத்தின் தேவையை எவ்வாறு உருவாக்கியதோ, அதனிலும் அதிகமாக இன்றைய அரசியல் போராடத்தைக் கோரி நிற்கிறது.

முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்த இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையின் பின்னர், இலங்கை அரச பாசிசம் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பை நிகழ்த்துவருகிறது. சிங்கள – பௌத்த மயமாக்கல், பிரதேச ஆக்கிரமிப்பு, கலாச்சாரச் சீரழிப்பு, பேச்சுரிமை மறுப்பு, பாலியல் வன்முறைகள், அரசியல் படுகொலைகள் என்ற ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் சிறீ லங்கா அரச பேரினவாதம் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்திய அரசின் பின்பலமும், சர்வதேச அரசுகளின் மௌனமும், ஐக்கிய நாடுகளின் கண்துடைப்பும் இலங்கை அரச பாசிசத்தை எதிர்கொள்வதற்கான உறுதியான எதிர்ப்பியக்கத்தின் தேவையை உணர்த்தி நிற்கின்றது.

இவ்வாறான எதிர்ப்பியக்கம் உருவாவதற்கான அனைத்து வழிகளையும் இலங்கை அரசு அழித்து வருகிறது. உளவியல் யுத்தம், இராணுவ விஸ்தரிப்பு என்ற அனைத்து அடக்குமுறை எல்லைகளையும் விரிவாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலுள் பல தமிழர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

 2

 மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான போர்க்குற்ற வழக்கு

பல மாதங்களாக மகிந்த ராஜபக்சவோ அன்றி இலங்கை அரச சார் பிரதிநிதிகளோ பிரித்தானியாவிற்கு வந்தால் பிரித்தானிய சட்டவிதிகளுக்கு உட்படக்கூடிய போர்க்குற்ற விசாரணைக்கான வழக்கு முறையீட்டை நீதிமன்றத்தில் மேற்கொள்வதாக புலி சார் அமைப்புக்கள் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தன. மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வந்திறங்கியதும் இதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்று அவர்களிடம் பலர் கேள்வியெழுப்பினர். இது குறித்துக் கேள்வியெழுப்பிய ஒருவர் புலிகளின் அரசியல் வழிமுறை மீது நீண்டகாலமாகத் தீவிர விமர்சனத்தை முன்வைப்பவர்.

நவம்பர் 29ம் திகதி நடந்த உரையாடலில் புலிசார் அமைப்புக்களைச் சார்ந்தவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்.

1. வழக்குரைஞர்களுக்கான செலவுகளுக்குப் போதிய பணமில்லை.

2. பல வழக்குரைஞர்கள் போர்க்குற்ற வழக்கினால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

3. போதிய கால அவகாசமில்லை.

4. ஏனைய பல உறுப்பினர்கள் ஆர்வம் காட்டவில்லை.

 புலிசார் அமைப்புக்களைச் சார்ந்த சிலர் வழக்குத் தாக்கல் செய்யவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.

நவம்பர் 30ம் திகதி இவ்வமைப்புக்கள் சார்ந்த ஒருவருடன் நிகழ்ந்த உரையாடலில் வழக்கைப் புலிசார் அமைப்புக்கள் தாக்கல் செய்யாவிடின் தாம் சார்ந்த அமைப்புக்கள் ஊடாக அம்முயற்சியை மேற்கொள்ளப் போவதாக அதே புலிசாராதவர் தெரிவித்திருக்கிறார். அதற்கு நாம் இது குறித்து உரையாடிக்கொண்டிருக்கிறோம் மறு நாள் பதில் தருவதாகக் கூறியிருக்கிறார். தவிர, போர்க்குற்ற வழக்கை புலிசாராத அமைப்புக்களும் மேற்கொள்ள முயற்சிப்பதாக ஏனையோருக்குத் தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

டிசம்ப்பர் 1ம் திகதி மதியமாளவில் பிரிஎப் உம் அதன் நட்பு அமைப்புக்களும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாகத் தீர்மானித்துள்ளதாகத் பிரிஎப் அமைப்பினைச் சார்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் புலிகளின் அரசியல்  வழிமுறை மீது விமர்சனம் கொண்டவர்களின் முயற்சி கைவிடப்பட பிரிஎப், ஜீரிஎப் ஆகியன நடவடிக்கைகளை கையிலெடுத்துக்கொண்டன.

இறுதியாக மகிந்தவும் அவரோடு பிரித்தானியா வந்திருந்த குழுவினரும் நாடு திரும்பிய பின்னரே வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

ஆக, வேறு சிலரும் வழக்குப் பதிவுசெய்வதற்கான முயற்சியை மேற்கொள்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தான் புலி சார் அமைப்புக்கள் அதற்கான முயற்சியை மேற்கொண்டனவா என்ற சந்தேகம் எழுவது இயல்பானதே.

குறிப்பு : மேற்குறித்த சம்பவம் “உரிமை கோரலாக” அன்றி புலிசார் அமைப்புக்களின் அரசியலில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் பின்னணியிலேயே முன்வைக்கப்படுகிறது.

3

இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல்

இனச்சுத்திகரிபையும், இனவழிப்பையும் திட்டமிட்டு மேற்கொள்ளுகின்ற இலங்கை அரசு இலங்கையில் தொடர்ச்சியான மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளளது. ஈழத் தமிழர்களது குரல் இலங்கையில் முற்றாக நசுக்கப்படுகின்ற நிலையில் புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் எழக்க் கூடிய எதிர்ப்பியக்கங்களையும், போராட்டங்களையும் கையாள்வதே இலங்கை இந்திய அரசுகளின் இன்றைய உடனடித் தேவையாக அமைந்துள்ளது. பிரித்தானிய, கனேடியத் தனியார் நிறுவனங்களுக்கு மில்லியன்களை வழங்கி வாடகைக்கு அமர்த்தி கொண்ட இலங்கை அரசின் நடவடிக்கை இங்கு கோடிட்டுக்காட்டத்தக்கது.

இந்த வகையில் மூன்று பிரதான செயற்பாட்டுத் தளங்களில் இலங்கை அரசின் நாடு கடந்த நடவடிக்கைகளை அவதானிக்கலாம்.

1. புலியெதிர்ப்பாளர்களைக் கையாள்தல்.

2. புலிகளின் வலையமைப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ளல்.

3. அரச எதிர்ப்பாளர்களுக்கு இவ்விரு பகுதியினரூடாகவும், சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட நிறுனவங்களூடாகவும் அரசியல் நெருக்கடிகளை உருவாக்குதல்.

புலியெதிர்ப்பாளர்களைக் கையாள்தல் என்ற வகையில், பிரதானமாக ஐந்து வேறு கூறுகளாக இவை நடைமுறைக்கு உட்படுத்தப்படுகின்றன.

1. அரச எதிர்ப்பாளர்கள் மீதான திட்டமிட்ட அவதூறுகள்.

2. புலிகளின் புலம்பெயர் வலையமைப்பைப் பயன்படுத்தல்.

3. அபிவிருத்தி, மறுவாழ்வு, ஜனநாயக மீட்ட்பு என்ற தலையங்கத்தில் உரிமைகான போராட்டத்தை மறுத்தல்.

4. புலிகள் அல்லது புலிகளின் இருப்பு குறித்த பய உணர்வை புலி எதிர்ப்பாளர்கள் மத்தியில் உருவாக்குதலும் அவர்களை அரச சார்பான தளத்திற்கு உள்வாங்குதலும்.

5. அழிவுகளை முன்வைத்துப் போராட்டத்திற்கான நியாத்தை மறுத்தல்.

4

புலிகளின் புலம்பெயர் வலையமைப்பைப் பயன்படுத்தல்.

 

இலங்கை அரசாங்கம் புலிகளின் புலம் பெயர் வலையமைப்பைப் பயன்படுத்திக்கொள்ளல் என்பது சிக்கலான ஒன்றல்ல. உணர்ச்சியையும் அதன்வழியே உருவான சுலோகங்களையும், தனிமனித விசுவாசத்தையும் அடிப்படையாகக் கொண்டே புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குறைந்த பட்ச அரசியல் நோக்கங்களும் வழிமுறைகளும் கூட முன்வைக்கப்படாத நிலையில் இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் இலங்கை அரசின் உளவு வலைக்குள் தெரிந்தோ தெரியாமலோ சிக்குண்டிருப்பவர்களுள் புலி சார் அமைப்புக்களும் ஆதரவாளர்களுமே அதிகம்.

மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு விவகாரம் இவர்களின் அரசியலைப் புரிந்துகொள்வதற்கான சிறிய உதாரணம் மட்டுமே.
கே.பியை இலங்கை அரசு விலைக்கு வாங்கிக்கொண்ட காலகட்டம் குறித்து ஊகங்கள் மட்டுமே நிலவுகின்றன. ஆனால் முள்ளிவாய்க்கால் தோல்விக்குப் பின்னதாக நூற்றுக்கனக்கில் புலிகள் அமைப்பிலிருந்து அரச உளவாளிகள் உருவாகியுள்ளனர்.
புலிகள் என்ற சிந்தனை முறைக்குள் உள்ளடங்குவதற்கான சில வரைமுறைகள் உள்ளன.

1. பிரபாகரனைக் கடவுளாக மதிப்பது.

2. தவறுகளை விமர்சித்தலோ புதிய வழிமுறைகள் குறித்துப் பேசுதலோ குற்றம்.

3. புலிகள் இலச்சனை, கொடி, இறந்த போராளிகள் ஆகிவற்றை வழிபடுவது.

மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவிற்கு சென்ற போது அங்கு வழக்குத் தாக்கல் செய்யவெண்டும் என்பதில் தீவிர முனைப்புக்காட்டிய ஒருவர் புலிகளின் கடந்தகாலத் தவறை விமர்சித்த காரணத்தால் அதிர்வு என்ற அவர்களது இணையம் அவரைத் துரோகியாகச் சித்தரித்துக் கட்டுரை வரைந்திருந்தது.
தேசியத் தலைவர், புலி, புலிக்கொடி என்ற தலையங்கத்தில் “துரோகிகள்” குறித்துப் பேசும் அதிர்வு போன்ற புலிசார் இணையங்களை கூர்ந்து அவதானித்தால் அவர்கள் அரச ஆதரவாளர்கள் குறித்துப் பேசுவதில்லை. இவர்களில் பலர் புலம்பெயர் நாடுகள் எங்கும் பரந்து விரிகின்ற அரச உளவாளிகள் குறித்து மூச்சுக்கூட விடுவதில்லை.

புலிகளுக்கு வெளியில் இலங்கை அரசிற்கு எதிராக குரல்கொடுக்கும், செயற்படும் சமூக அக்கறை உள்லவர்களைத் துரோகிகளாகச் சித்தரிக்கும் இவர்கள், சிதைந்து போன உரிமைப்போராட்டத்தை முற்றாக அழிப்பதற்குத் துணை போகிறார்கள்.

அதிர்வின் கட்டுரை சொல்லும் செய்தி என்ன? இலங்கை அரச எதிர்ப்பு ஆதரவு என்பதெல்லாம் அவர்களுக்குப் பொருட்டல்ல. புலிகளையும் பிரபாகரனையும் ஆதரித்தால் நீங்கள் தியாகி; அன்றேல் துரோகி.

இந்தச் சிந்தனையைத் தான் இலங்கை அரசு பயன்படுத்திக்கொள்கிறது. புலிகளின் புலம் பெயர் வலையமைப்புக்களுக்கு இருக்கும் ஆட்பலம், பணபலம் என்பன உலகம் முழுவதும் இலங்கை அரச இனப்படுகொலையை உலகம் முழுவது தீவிர பிரச்சாரத்திற்கு உட்படுத்த பயன்பட முடியும். ஐக்கிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்குகும் போராட்டங்களை நிகழ்த்த முடியும்.

வன்னிப் படுகொலை நிகழ்த்தப்பட்டு ஒன்றரை ஆண்டுகளின் பின்னரும் பிரபாகரன் வாழ்கிறாரா இல்லையா என்ற என்ற மூடத்தனமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் இவர்களின் வியாபார நலன், படுகொலைகள் குறித்த முழுமையான ஆவணம் ஒன்றைத் தயாரிபதற்குக் கூட இடம் கொடுக்கவில்லை.

ஆரம்பத்தில் போர்க்குற்றங்கள் குறித்தும் படுகொலைகள் குறித்தும் கண்டனம் தெரிவித்த ஆயிரக்கணக்கான மனித உரிமைவாதிகளிடமிருந்தும், ஜனநாயாக சக்திகளிடமிருந்தும் கூட இவர்கள் அன்னியப்பட்டுள்ளனர்.

5.

என்ன செய்யவேண்டும்?

80 களில் போராட்டம் என்பது இலங்கை இந்திய அரசுகளைப் பிரதான எதிரியாகக் கொண்டதாக அமைந்திருந்தது. இன்றோ அதே போராட்டம் எதிர் கொள்ள வேண்டிய மற்றொரு பகுதி மில்லியன்களை தமது உடமையாக்கிக்கொண்ட புலிகளின் வலையமைப்புக்குள்ளிருந்து அரச ஆதரவாளர்களாக மாறிவரும் மாபியா அழிவு சக்திகள்.

புலிகள் மீண்டும் மீட்சிபெறுகிறார்கள் என்று இலங்கை அரசு வதந்திகளைப் பரப்பிவருகிறது. இதனை ஆதராமாகக் கொண்டு தமிழ்ப் பிரதேசங்களை யுத்தகளம் போல இராணுவ மற்றும் உளவுத்துறையின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்தியுள்ளது.

சில நாட்களில் சரத் பொன்சேகா சார்பான இராணுவத்தினர் மீது புலிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட அரச ஆதரவாளர்களை வைத்தே தாக்குதல் தொடுத்துவிட்டு, புலிகள் தான் அதனை மேற்கொண்ட்டார்கள் என்று பிரச்சாரம் மேற்கொள்ளும் போது புலம் பெயர் புலியமைப்புக்களின் அரச கூறுகள் அத்தாக்குதலை காட்டியே பணம் வசூலித்து இலங்கை அரசோடு பகிர்ந்து கொண்டாலும் வியப்படைவதற்கில்லை. யாழ்ப்பாணக் குடா நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் இவ்வாறான ஒரு நடவடிக்கைக்கு முன்னறிவிப்போ என அஞ்சத் தோன்றுகிறது.

“தேசியத் தலைவர்”க் கடவுளாக உருவகித்துக்கொண்டே இலங்கை அரசு தனது அதிகாரத்தையும் அழிப்பையும் தீவிரப்படுத்திவருகிறது. புலிகளைக் காட்டியே தனது இருப்பை நிலை நாட்டிக்கொள்கிறது. இதற்கு எதிரான அரசியலுக்குப் ஈழப் பிரச்சனையில் சமூகப் பற்றோடு அக்கறை கொண்டவர்களைத் தயார்படுத்துவதே இன்று எமக்கு முன்னாலுள்ள கடமை. இது இலங்கையில் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கை அரச பாசிசத்தின் மறைமுக அரசியலை இனம் கண்டுகொள்வதற்கு மக்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்,

1. இலங்கை அரசிற்கு எதிரான செயற்திட்டம் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகிறதா அல்லது தேசியத் தலைவர், புலிகளின் தாகம் போன்ற வெற்று முழக்கங்கள் முன்வைக்கப்படுகிறதா என்று பிரித்தறியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

2. இலங்கை அரசிற்கு எதிரான தேசிய ஜனநாயக சக்திகளைப் புலிகளை முன்வைத்துப் பிளவுபடுத்தும் செயற்பாடு குறித்த எதிர்ப்  பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

3. இலங்கை இந்திய அரச பாசிசங்களுக்கு எதிரான சக்திகள் புலிகள் என்ற அடையாளத்திற்கு அப்பால் மக்கள் சார்ந்த ஒன்றிணைய வேண்டும்.

இவைகள் புதிய மக்கள் பற்றுள்ள ஜனநாயக முன்னணிக்கான அடிப்படைகளாக அமையும். இலங்கை அரசின் பயன்பாட்டிற்கு வழிகோலும் புலிகளின் சிந்தனை முறையைத் தகர்ப்பதற்கான குறைந்தபட்ச அடிப்படை இதுவாக அமையலாம். மக்கள் பற்றுள்ள ஒவ்வொரு மனிதன் முன்னாலும் உள்ள அவசர பணியாக இவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மன்னாரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள்

Comments 13

  1. Pingback: Tweets that mention “தேசியத் தலைவரின்” பெயரால் … : அஜித் - :::இனியெ
  2. siva says:
    15 years ago

    புலி எட்கிர்ப்புக் கூட்டம் பற்றி எழுதியது போதது. புலி ஆதரவுக் கூட்டம் அம்பலப் பட்டுள்ளது.

  3. Para says:
    15 years ago

    முஸ்லீம்கள் நபியை நம்புவது போல தமிழர்கள் பிரபாகரனை நம்புகிறார்கள். அவரும் அதற்கேற்றபடி நடந்து காட்டியுள்ளார். உங்களுக்கு என்ன பிரச்சனை? சரி, பிரபாகரன் இருந்தபோது இந்தப் புத்திமதியை அவருக்கு ஏன் சொல்லவில்லை? அப்போ எங்கே போனீர்கள்?

  4. ithayan says:
    15 years ago

    புலிகளையும் அதன் சிந்தனையையும் எப்படிக் கையாள்வது என்றும் பயன்படுத்துவது என்றும் இலங்கை இந்திய அரசுகளுக்கு ஒரு திட்டம் இருக்கும் போது போராட்டத்தில் நம்பிக்கை வைப்பவர்களுக்கு ஒரு திட்டம் இருக்கக் கூடாதா என்ன? அதன் ஆரம்பமாக இந்தக் கட்டுரையைக் காணலாம்.

  5. சோமண்னை says:
    15 years ago

    கட்டுரையின் சாராம்சம் புலிகள் என்ற நாமகரணம் இல்லாமல் போகவேண்டும் என்பதை மறைமுகமாக சாடுகின்றதே தவிர வேறு எந்த முற்போக்கையும் காட்டவில்லை,ஆளாலுக்கு எடுத்துவிடும் கருத்துக்கள் , பிரிவினைக்கு நல்லாத்தான் இருக்கு.யதார்த்தப்பிறழ்வை எவரும் கவனிப்பதாகவில்லை, காலம் பதில்சொல்லும்.

  6. Ranjini says:
    15 years ago

    i think that you have just touched the imporatnt part of the way of thinking of tamils. thanks for it and keep it up!!

  7. Nila says:
    15 years ago

    மக்களே நீங்க நன்கு அறிவீர்கள் எந்த இணையத் தளம் உண்மையான செய்தியனை பிரசுரிக்கும் என்று. அதிர்வு போன்று ஸ்ரீலங்கா அரசுக்கு துணை போகும் இணையத் தளங்களை இனம் கண்டு மக்களுக்கு தெரிவிக்க யாரும் ஒரு இணையத் தளம் முன் வர வேண்டும் என்பது எனது அசை.

  8. S.G.Ragavan says:
    15 years ago

    சோமண்ணை, பரா அண்ணை குறைந்த பட்சம் தமிழ் மக்களின் கையறு நிலை குறித்து அஜித் ஆதங்கப் பட்ட விடயங்களில் கவனம் செலுத்தியிருப்பீர்கள் என நினைத்தேன், ஆனால் பராவின் கருத்துக்களில் நக்கல் தொனிப்பது நன்றாகவே தெரிகின்றது ஆளான ஆன பிரபாகரனே இல்லை இப்ப நீங்க புடுங்கித்தான் என்பது போல இருக்கின்றது. சோமண்ணை மணியண்ணை ஓமண்ணை, நாம் எல்லோரையும் துரோகி துரோகி எண்டு சொல்லி சொல்லி இறுதியில் தமிழர்களில் பலர் நாமும் தான் அந்த துரோகியாக போய் பார்த்திடுவோம் என்று சொல்லி பலர் அரசுடன் இணைந்து கொண்டு மிகவும் தந்திரமான குத்தாட்டம் ஆடுகிறார்கள். “கட்டுரையின் சாராம்சம் புலிகள் என்ற நாமகரணம் இல்லாமல் போகவேண்டும் என்பதை மறைமுகமாக சாடுகின்றதே தவிர வேறு எந்த முற்போக்கையும் காட்டவில்லை” என்ற சோமண்ணையின் அவதானிப்பு விளக்கமின்மையா? அல்லது வில்லங்கமாக விளங்க மறுப்பதா? என்பது தெரியவில்லை. “புலிகளின் புலம் பெயர் வலையமைப்புக்களுக்கு இருக்கும் ஆட்பலம், பணபலம் என்பன உலகம் முழுவதும் இலங்கை அரச இனப்படுகொலையை உலகம் முழுவது தீவிர பிரச்சாரத்திற்கு உட்படுத்த பயன்பட முடியும். ஐக்கிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களை நிகழ்த்த முடியும்.” இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள் சோமண்ணை பரா அவர்களே? உங்களை மாத்துவது கடினம் ஏனெனில் அஜித் சொல்லுவது போல் …. “இலங்கை அரசாங்கம் புலிகளின் புலம் பெயர் வலையமைப்பைப் பயன்படுத்திக்கொள்ளல் என்பது சிக்கலான ஒன்றல்ல. உணர்ச்சியையும் அதன்வழியே உருவான சுலோகங்களையும், தனிமனித விசுவாசத்தையும் அடிப்படையாகக் கொண்டே புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குறைந்த பட்ச அரசியல் நோக்கங்களும் வழிமுறைகளும் கூட முன்வைக்கப்படாத நிலையில் இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் இலங்கை அரசின் உளவு வலைக்குள் தெரிந்தோ தெரியாமலோ சிக்குண்டிருப்பவர்களுள் புலி சார் அமைப்புக்களும் ஆதரவாளர்களுமே அதிகம்.” என்பதில் சோமண்ணை பரா போன்றவர்களின் பின்னூட்டங்கள் வலுச்சேர்க்கின்றன.

    • para says:
      15 years ago

      எஸ்.ஜீ அண்ணா என்று உங்களை நான் கூப்பிடலாமா. உங்கள் கருத்துக்களில் தான் நக்கல். நான் உங்கள் பல எழுத்துக்களை படித்திருக்கிறேன் என்பதால் மட்டும் எழுதுகிறேன். பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்று வாதம் செய்வதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். பிரபாகரன் பிழைகள் செய்தாலும் அவரை கடைசி வரைக்கும் களத்தில் நின்று குடும்பத்தோடு மடிந்தவர் என்ற வகையில் மக்கள் அவரை மதிக்கிறார்கள். இறந்து போனார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவிக்கிறார்கள். இன்னும் பல வருடங்களுக்கு இது தொடரும். அவ்வளவு தான்.

      • S.G.Ragavan says:
        15 years ago

        “பிரபாகரன் பிழைகள் செய்தாலும் அவரை கடைசி வரைக்கும் களத்தில் நின்று குடும்பத்தோடு மடிந்தவர் என்ற வகையில் மக்கள் அவரை மதிக்கிறார்கள்”. நானும் மனதாரவே மதிக்கிறேன். எனது கவலை எல்லாம் அரிச்சந்திரன் போல் ஊகிக்கும், கருத்துக் கூறும் திறைமையாளர்கள் புலிகளை வழிநடத்தப் போகிறார்களே என்பதுதான்.

      • S.G.Ragavan says:
        15 years ago

        அப்போ “பிரபாகரன் இருந்தபோது இந்தப் புத்திமதியை அவருக்கு ஏன் சொல்லவில்லை? அப்போ எங்கே போனீர்கள்?” என்று கேட்பது ஆதங்கமா?!……………… மன்னிக்கவும் நான் நினைத்தேன் நக்கல் என்று. தவறான புரிதலுக்கு வருந்துவோம்.

  9. அரிச்சந்திரன் says:
    15 years ago

    பிரபாகரன் அவர்கள் இறந்து விட்டார் என்று கூறுபவர்களை, இலங்கையரசிடமிருந்து அவருடைய இறப்பு அத்தாட்சி பத்திரத்தை வெளிக்கொணர்வதற்கு கடுமையாக உழைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

  10. Star says:
    15 years ago

    உண்மையாக மக்கள் பக்கம் நிற்கிறார்கள் என்பதற்கான அளவுகோல் பிரபாகரனோ புலிகளோ அல்ல. இலங்கை அரசுக்கு எதிராக இதய சுத்தியோடு யார் குரல் கொடுக்கிறார்கள் என்பதே அளவு கோல். இலங்கை அரசிற்கு எதிரானவர்களைப் பிளவுபடுத்தும் போலிகளை இனம்காட்டுவோம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...