போது அதனை கருத்தால் எதிர்கொள்ள முடியாத கோழைகள் வன்முறையை ஆயுதமாகக் கையாள்வது சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு வடிவங்களில் நடைபெறுகின்றது. இலங்கையில் கொலைசெய்யப்பட்ட ஒவ்வொரு ஊடகவியலாளரினதும் மரணத்தின் பின்புலத்திலும் கருத்தை எதிர்கொள்ளத் துணிவற்ற மனிதர்களைப் பார்க்கிறோம்.
பெரும்பாலும் அவதூறுகளிலிருந்து ஆரம்பிக்கும் இவ்வாறான வன்முறைகள் மனித அழிவுகள், மரண தண்டனை என்பது வரை நீடிப்பவை. மதங்களின் பெயாரால், இனவாதத்தின் பெயரால், நிறவாதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் வன்முறைகளின் பின்னணியில் அதிகார வெறிகொண்ட கோழைகளைக் காண்கிறோம்.
மக்களின் அவலங்களை தமது முதலீடாக்கிக்கொள்கின்ற சமூகக் கூறுகள், பெண்ணியம், தலித்தியம், தன்னார்வ நிறுவனங்கள், தேசியவெறி போன்ற உணர்ச்சிகரமான சுலோகங்களோடு முன்வருகின்ற தனிநபர்களால் தலைமைதாங்கப்படுவது சமூகப் பொதுப்புத்தியாக மாறியுள்ள ஆபத்துமிக்க அரசியல் சூழலில் வாழ்கிறோம்.
இலங்கையில் மகிந்த ராஜபக்ச பாசிச சர்வாதிகாரம் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட்டுள்ள இத்தாக்குதல்களுக்கு எதிராக “பெண்ணிலைவாதிகள்” குரலெழுப்புவார்கள் என்று எதிர்பார்த்து ஏமார்ந்தவர்கள் பலர். மேட்டுக்குடிப் பெண்ணிலைவாதிகளின் ஒருபகுதி ராஜபக்ச அரசோடு தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு பாசிசத்தின் நிழலில் குடியேறிக்கொண்டது. இன்னொரு பகுதி தன்னார்வ நிறுவனங்களோடு ஐக்கியமாகிக்கொண்டது. போர்க்குணம் மிக்க பெண்கள் கிறீஸ் மனிதர்களின் அடக்குமுறைக்கு எதிராக வாழ்வதற்காகப் போராடுகிறார்கள்.
இந்த வரிசையில் இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள கிறீஸ் பூதம் ஒரு அரசியல் பிரச்சனை அல்ல என்றும் சமூகப் பிரச்சனை என்றும் வாதிடும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் என்ற “பெண்ணிலைவாதி” நேற்று (13.09.2011) தீபம் தொலைக்காட்சியின் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டார்.
இலங்கை அரச சார்பாக இவர் முன்வைத்த கருத்துக்களை நாகரீகமாக இவரோடு கலந்துகொண்ட ஏனைய இருவரும் எதிர்கொண்டனர்.
உரையாடலின் சில பகுதிகளைக் கீழே பார்வையிடலாம்:
நேரஞ்சல் உரையாடலின் போதே ஆங்கிலத்தில் “நாகரீக வன்முறை” அதிகாரத்தைக் கையாண்ட ராஜேஸ் பாலா, நிழச்சி நிறைவின் பின்னர் நடந்துகொண்ட முறைமை அருவருப்பானது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பி.ஏ.காதர் அவர்களை நிகழ்ச்சி நிறைவுற்றதும் “வேசைமகனே” என விழித்து அவர் மீது கையில் கிடைத்தவற்றை வீசியெறிந்து தாக்குதல் நடத்தினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டிய ராஜேஸ் பாலா காதர் மீது அங்கு வக்கைப்பட்டிருந்த நீர்க் குவழையிலிருந்த நீரை ஊற்றி அவமானப்படுத்தினார்.
தீபம் தொலைக்காட்சி ஊழியர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்த நிலையில் ஐந்து நிமிடங்கள் வரை நீடித்த இவரின் வன்முறையிலிருந்து சுதாகரித்துக்கொண்டு அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.
முப்பது வருடப் பெண்ணிலைவாதி ராஜேஸ் பாலா பெண்ணியம் என்ற தலையங்கத்தில் திரைக்குப் பின்னால் நிகழ்த்திய கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான வன்மம் புரையோடிப் போன சமூகத்தின் குறியீடு.
இது தான் யாழ்ப்பாணத்து ஜனநாயகத்தின் உண்மையான முகம்.இதை தான் புலிகளும் தங்கள் காலத்தில் கண்டும் “காணமல்” விட்டு தங்கள் கருத்துக்களை மக்கள் மீது திணித்தவர்கள்.தங்கள் கருத்துக்களை ஏற்காதவர்களை இவ்வாறு வசை பாடுவதன் மூலமே சாதித்து வந்தனர்.இன்றும் எதிரான கருத்துக்களை கேட்க கூட திராணியற்ற ஒரு மக்கள் மன்னிக்கவும் மந்தை கூட்டமாக மாறிவிட்டது இந்த பாட புத்தகத்தை மட்டும் படித்து வந்த கூட்டம்.பாட புத்தகங்களை மட்டும் படிப்பதால் தான் என்நீயர், டாக்டர் ஆகலாம்.
மிக மிக பரிதாபமான நிலையில் நாம் இன்று உள்ளோம் என்பது இந்த செய்தியில்ருந்து தெரிகிறது.நம்மை எந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
ஐயா ஆஓ என்றவுடன் புலியும் யாழ்பாணம்தான் உங்களிற்கு வாய்ப்பாய் போச்சா! இந்த அம்மணி தீவிர புலி யாழ்ப்பாண எதிர்ப்பு மாற்றுக் கருத்து மாணிக்கம். சிறிலங்கா அரசபயங்காரவாத ஆதரவாளர். உங்களினது தீவிர புலி யாழ்ப்பாண எதிர்ப்பு மனநிலை உண்மையை ஏற்க மறுக்குதோ! புலியை எப்படியானவர்கள் எதிர்க்கிறார்கள் என்பது ஈழத்தமினுக்கு நன்கு தெரியும். அதற்கு நல்ல உதாரணம் தாங்களும் இந்த அம்மணீயும்தான்.
நன்றி வழிப்போக்கன் ,தங்கள் கருத்துக்கு
இது தான் யாழ்ப்பாணத்து ஜனநாயகத்தின் உண்மையான முகம்.இதை தான் புலிகளும் தங்கள் காலத்தில் கண்டும் “காணமல்” விட்டு தங்கள் கருத்துக்களை மக்கள் மீது திணித்தவர்கள்.தங்கள் கருத்துக்களை ஏற்காதவர்களை இவ்வாறு வசை பாடுவதன் மூலமே சாதித்து வந்தனர்.இன்றும் எதிரான கருத்துக்களை கேட்க கூட திராணியற்ற ஒரு மக்கள் (மன்னிக்கவும்) மந்தை கூட்டமாக மாறிவிட்டது .இந்த வகையில் இந்த பெண்மணியும் ,நிர்மலனும் ஒரே வகை .
மிக மிக பரிதாபமான நிலையில் நாம் இன்று உள்ளோம் என்பது இந்த செய்தியில்ருந்து தெரிகிறது.நம்மை எந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
சில வேளை டூட்டிங் அம்மனும் ,மாவீரர் உண்டியலும் இடம் மாறினால் ,காப்பாற்றுவா ஏன் எனில் அம்மன் இடமாற்றத்துக்காக
நிர்மலன் பத்தாயிரம் பவுன் நன்கடை வசுலிக்கின்றார்
ராஜேஸ் பாலா போன்ற சமூக சிதைவுக்கும் அழிவுக்கும் துணைபோபவர்களை இனங்காண முடிந்தமைக்கு மகிழ்ச்சி. இன்னுமொரு சந்தற்பங்களில் இப்படியான சமூக எதிரிகளை இப்படியான கருத்தரங்கங்களில் இணைத்துக்கொள்ளாமல் இவர்களை புறக்கணிப்பதே சமூக்த்திற்கு நல்லது.
பூதவலத்தை நிறுத்தினால், பெண்கள் பாதிக்கப்படுவதும் நிறுத்தப்படும்.
அதை விடுத்து, பாதிக்கப்படும் பெண்களுக்கு எவ்வாறு மருந்து போடுவது
என்று கூறுவது அபத்தமாக இருக்கிறது. சுந்தரலிங்கம் அவர்கள் 70 களில்
அரங்கேற்றிய ‘அபசுரம்’ நாடகம்தான் நினைவிற்கு வருகிறது.
‘காற்றாடி வேகமாகச் சுழன்று கொண்டு இருக்கிறது.
மேசையில் கிடந்த காகிதங்கள் பறக்கின்றன.
கீழே விழுந்த காகிதங்களை, ஒருவர் பொறுக்கி எடுத்து மறுபடியும்
மேசையில் வைக்கின்றார்.
தொடர்ந்தும் காகிதங்கள் பறக்கின்றன.
பொறுக்குபவரும் தொடர்ந்து பொறுக்குகின்றார்.
இறுதியில் காற்றாடி இயங்குவதை ஒருவர் நிறுத்திவிடுகிறார்.’
மீன் சந்தையில் இருந்து கூவிக் கூவி மீன் விற்க மட்டும் தகுதியுள்ளவர்களை தொலைக்காட்சிக்கு அழைத்துவந்தால் இப்படித்தான்..மனிதர்களின் சுய ரூபத்தை மூன்று விதங்களில் புரிந்து கொள்ளலாம்..சிலரைப் பார்த்தவுடன் சொல்லலாம் அவர் எப்படிப் பட்டவர் என்று… சிலர் வாய் திறந்து பேசும்பொழுது சொல்லலாம் அவர் சுயரூபம் என்னவென்று… சிலரை பார்த்தாலும் சொல்ல முடியாது..அவர்கள் வாய் திறந்து பேசினாலும் சொல்ல முடியாது, அவர் எப்படிப்பட்டவர் என்பதை…இந்தப் பெண்மணி எந்த ரகம் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை. எந்த சூழ்நிலையிலும் கண்ணியம் காக்கும் காதர் எங்கே, எடுத்ததுக்கெல்லாம் அநாகரீகமான முறையில், சபையிலிருந்து விரலை விசுக்கி வாயை மூடு என்று மற்றவர்களுக்கு அதிகாரம் பண்ணும் இந்தப் பெண்மணி எங்கே? அந்த மனிதரைப் பார்த்தாலும் கண்ணியம் அவர் வாய் திறந்து பேசினாலும் கண்ணியம். பார்த்தாலே மரியாதைக் கொடுக்கத் தோன்றும் மனிதர் அவர். அவர் தாயைப் பெயர் வைத்து அழைப்பது தாய்க்குலத்தையே இழிவு பண்ணுவதுபோல்.. அவர் தாய் மட்டுமல்ல அம்மணி, உமது தாயாரும் அப்பழுக்கில்லாதவர் என்பதில் தாய்க் குலத்தை மதிக்கும் யாருக்கும் ஐயம் கிடையாது..பூவுடன் சேரும் நாறும் மணம் பெறும் பன்றியுடன் சேரும் கன்று “என்னவோ” சாப்பிடுமாம்… பணத்துக்காக ராஜபக்ஷே போன்ற கொலை காரருடன் திரிந்தால் இப்படித்தான்..பேச்சும் நடத்தையும் அனாகரீகமாகத்தான் இருக்கும்…உமக்கு எனது புத்திமதி என்னவென்றால் காதர் போன்ற கண்ணியமான மனிதர்களுடன் பேசிப் பழகும் இனி வருங்காலங்களிலாவது..
சிவப்புச் சேலை மங்காத்தா ..ஒரு கை குறையுதம்மா.
கொன்ஸ்டன் டினும் இருந்திருந்தால் ஆட்டம் நன்றாக இருந்திருக்கும்.
/இது தான் யாழ்ப்பாணத்து ஜனநாயகத்தின் உண்மையான முகம்./
ராஜேஸ் பாலா யாழ்ப்பாணத்தினைத் திட்டி, மட்டக்கிளப்பை முன்னிறுத்தி, பிரதேசவாதத்தைக் கிளப்பியே புகழ்பெற்ற மாதரசி. இதுக்கும் “இது தான் யாழ்ப்பாணத்து ஜனநாயகத்தின் உண்மையான முகம்” என்றா திட்டவேண்டும்? கோதாரியில போக!!.
ராஜேஸ்பாலாவின் அரசியல் அறிவு அவர் பீற்றித் திரியும் பெண்ணியம் மகிந்த ராஐபக்சேயுடனான அவரின் விசுவாசம் அனைத்தையும் அவர் கட்டுடைப்பு செய்து விட்டார்.
அடாவடித்தனத்தை,அதன் காட்சிகளை வெளியிடாது ஒளித்து வைத்திருப்பவர்கள், உரத்துப் பேசுகிற யோக்கியதை இழந்து போகிறார்கள்.
“ஆதாரம் தா” என்கிற அம்மணி பற்றிய செய்தியின் ஆதாரம் எங்கே? “யு டியூப்” பில காணல்லே.
அதற்காக இப்படி பதில் சொல்ல வேண்டாம்.
“Don`t tell me what to do! ok!”
அம்மணி பற்றிய செய்தியின் ஆதாரம் எங்கே?/
நல்ல கேள்வி (?)
பகுத்தாராயும் பக்குவமில்லாதோரிட்கு கண்டிப்பாக ஆதாரம் தேவை.இது அணைத்து தரப்பு (புலி சார் ,அரசு சார் )புலன் பெயர்ந்தோருக்கும் பொருந்தும்.
“வேசைமகனே” என விழித்து….
கையில் கிடைத்தவற்றை வீசியெறிந்து ….
ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி…..
நீர்க் குவழையிலிருந்த நீரை ஊற்றி அவமானப்படுத்தி……..
ஐந்து நிமிடங்கள் வரை நீடித்த இவரின் வன்முறை….
நடந்தது ஒளிப்பதிவு நிலையத்தில்.கமேராவைத் தொலைத்துவிட்டு,கண்களால் படமெடுத்து,கணனியில் வரைவதை, “பன்முகப் பார்வை” என்பதா “பகுத்தாராயும் பக்குவம்” என்பதா?
‘அனைத்து தரப்பிலும்’ சேராத தேவனே! என்ன நளினம் என் கேள்வியில் கண்டீர்?
ஐந்து நிமிடங்கள் வரை நீடித்த இவரின் வன்முறை….
////
ஆகவே ஆதாரம் எங்கே ?
நல்ல கேள்வி (?)
பகுத்தாராயும் பக்குவமில்லாதோரிட்கு கண்டிப்பாக ஆதாரம் தேவை.இது அணைத்து தரப்பு (புலி சார் ,அரசு சார் )புலன் பெயர்ந்தோருக்கும் பொருந்தும்.
எப்படி உங்களால் மட்டும் இதெல்லாம் முடிகிறது. முடியல …தாங்க
ராஜேஷ் அக்காவை பார்க்கும் பொது ராஜபக்சேக்கு சாரி [சேலை] கட்டின மாதிரி இருக்கு.இது இந்த ஆண்டின் மிக பெரிய ஜோக்.
அம்மாவின் உண்மை முகம் தெரிந்து விட்டது.நிர்மலன் அச்சா பொடியன்.புலிகள் விட்டு போன காசு அவரிடம் உள்ளதோ தெரியாது?
புலி யாழ் வசைபாடல்களில் அம்மாவினது முகமும் தங்களினதும் வழிப்போக்கன்
இனது முகங்களும் ஒன்றுதான் .
கூலிக்கு மாரடிக்கும் இந்தக்கூட்டங்களை கவனித்து முக்கியத்துவப்படுத்துவதுதான் மிகத்தவறு.விடுதலைப்போராளிகளாக சுதந்திரம் பெற்றுத்தர புறப்பட்டவா்களே செஞ்சோற்றுக்கடன் தீா்ப்பதே தமது தலையாய கடமையாக எண்ணி ராயபக்சவிற்கு முண்டு கொடுக்கும் போது இவா் பெரியவிடயமில்லை.
கிறிஸ் மனிதனுக்கு பயந்து இருக்கும் குமரியின் கேள்விமீ
ண்டும் இனத் துவேசத்தையும் பயமுறுத்தலையும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது இலங்கை அரசு. அது தான் கிறிஸ் மனிதன் என்ற விவகாரம் மனித உரிமை அமைப்புகளினால் முன்வைக்கப்படும் போர்க்குற்றத்தை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதில் ஒரு அங்கமாக புலம் பெயர் நாடுகளிலுள்ள தமது ஆதரவாளர்கள் மூலம் இலங்கை அரசு கிறிஸ் மனிதன் என்ற விவகாரம் பொய் என்ற செய்தியை கூற முற்படுகின்றது. இதன் விளைவாகத் தான் அண்மையில் இலங்கை அரச ஆதரவு இணையத்தளங்களில் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் கட்டுரை ஒன்று (அரசியலாக்கப்படும் இலங்கைத் தமிழ்ப் பெண்களின் சமுதாய நிலை!) பிரசுரம், மறுபிரசுரம் செய்யப்பட்டதன் பின்னணியாகும்.http://www.oodaru.com/?p=3967
கருத்து மேலாதிக்கம் செய்ய முயன்று தோல்வியடைந்ததன் காரணமாக ராஜேஸ்வாி பாலசுப்பிரமணியம் கேவலமான முறையில் நடந்து கொண்டிருக்கின்றார். இங்கு பிரச்சனை புலிகளை எதிர்க்க வந்த பலரும் இன்ற படுமோசமான வகையில் அரசின் அடியாள்களாக மாறியிருப்பதும் அரசாங்க மட்டத்தில் உள்ளவர்கள் பேசுவதைக் காட்டிலும் அரசுக்கு யாள்ரா அடித்து வருவதன் பின்னனியில்தான் இதனைப் பார்க்க வேண்டும். இந்த பாலா இன்று நேற்றல்ல எழுத்துத் துறைக்கு வந்த நாளில் இருந்து புலிகளுக்கு எதிராகப் பேசி வந்தவர் ஆனால் புலிகள் அழிந்ததும் இரத்தக் காட்டோி அரசுக்கு யாள்ரா அடிப்பதை தனது தொழிலாகக் கொண்டு செயற்படுகின்றார். புலிகளை விமர்சிப்பதோ அல்லது நிராகாிப்பதோ இங்கு ஒரு விடயமல்ல அதற்காக அரசின் மிலேச்சத்தனமான நடவடிக்ககைகளுக்கு வக்காளத்து வாங்கும் போது இவர்கள் அம்மலப்பட்டு விடுகின்றனர். இவரதும் இன்னும் சிலரதும் முயற்சியில் கொழும்பில் எழுத்ததாளர் மகாநாடு நடந்ததும் இத்தகையதொரு அரச பின்னனியில்தான் என்பதை இப்போது விளங்கிக் கொள்வது இப்போது கஸ்ரமானதல்ல. ஆனால் இந்த அரச ஊதுகுழல்களை விளங்கிக் கொள்ள முடியாமல் இதில் போய் கூத்தடித்த கொஞச் அரை வேக்காடுகளையும் உந்த பாலா வகையறாக்கள் கைக்குள் போட்டுக் கொண்டனர். இன்று கிறிஸ் பிசாசு என்பதன் பின்னனி என்பது நன்கு வெளிச்சமாகிவிட்ட பின்னரும் கூட அதற்கு உந்தமாதிாி ஆக்களால் வக்காளத்து வாங்க முடிகின்றது என்றால் இவர்களை விளங்கிக் கொள்ள இனி என்ன ஆதாரம் வேண்டும். மாற்றுக் கருத்துக்கள் என்பது வேறு உண்மைகளை அற்ப நலன்களுக்காக இருட்டிப்புச் செய்வது வேறு. இவர்கள் இரண்டாவது வகை. இவர்களது தொழிலே படுபயங்கரமான ஒரு கொடுங்கோல் அரசை நியாயப்படுத்தி வயிறு வளர்ப்பதாகும். இதன் ஆரம்பம்தான் சர்வதேச எழுத்ததாளர் மகாநாட்டில் போடப்பட்டது. இவர்களின் ஒரு இரகசிய குழுவும் தற்போது யாழ்பாணத்திலும் கொழும்பிலும் இருந்தவாறு கிறிஸ் என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்று கோத்தபாய நமஸ்காரம் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் ம, க, யோ.க, அ என்ற முதல் எழுத்துகளிலான பெயர்களில் உலாவுகின்றனர்.
அனசுக்கு பொழுது போகேல போல கிடக்கு. எழுதுமையா ஒரு கவிதைத் தொகுப்பு.
‘அண்ணே நான் பூதமாகப் போகிறேன் ‘ , ‘பூதங்களின் நிலம்’, ‘பூதங்கள் கீறும் தேசம்’,
‘புளியமரத்தில் ஒரு பூதம்’…நல்ல தலைப்புக்கள்.
இதில் கலந்து கொண்ட நால்வரும் எழுத்தாளர்கள்.
பெரும் வேதனை.
This is Good.
மூன்றாவது காணொளியின் இணைப்பு,கட்டுரை வெளி வந்ததிலிருந்து `This video has been removed by the user`என்று சொல்கிறது.
இதுதான் “மங்காத்தா காணொளி”யோ எனத் தேடி ஏமாற்றம்.
கருத்தாளர்களோ,இணையகாரர்களோ ஏன் கண்டு கொள்ளவில்லை?
http://www.youtube.com/user/anasnawas#p/a/u/0/mjgXUZ4h-5M
பெண்களின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்> சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியிருத்தல் மற்றும் சட்டவாட்சியில்லாமை ஆகியவை பற்றிய பெண்களின் அறிக்கைஇந்த அறிக்கையானது பாதிக்கப்பட்ட பெண்களினதும் வடக்கு மற்றும் கிழக்கில் பணியாற்றும் பெண்கள் அமைப்புக்களினதும்; நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டதாகும். வடக்கு மற்றும் கிழக்கினைச் சேர்ந்த பல பெண்கள் 2011 ஆகஸ்ட் மாதத்திலே தனிப்பட்ட ரீதியிலே இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டிருக்கின்றனர். பொதுவாகப் பெண்களை இத் தாக்குதல்கள் அச்சமும் பீதியும் கொண்டவர்களாக மாற்றியிருக்கின்றது. இந்த இனந் தெரியாத மர்ம மனிதன் கிரீஸ் மனிதன் என்றே பொதுவாக அனைவராலும் அழைக்கப்படுகின்றான். இச் சம்பவங்களும் அதற்கு பதிற்செயற்பாடாற்றிய சட்டத்தை அமுல்படுத்தும் முகவர்களினதும் அரசாங்கத்தினதும் பாங்கானது வடக்கு மற்றும் கிழக்கில் நிலவும் சட்டம் மற்றும் ஓழுங்கு தொடர்பான நிலைமையில் காணப்படும் பாரிய பிரச்சினையினையே எடுத்துக் காட்டுகின்றது. சட்டவாட்சியின் இயலாமையும் சட்டத்தை அமுல்படுத்தும் முகவர்களின் தொடர்ச்சியான இயலாமையும் அல்லது தாக்குதலை நடத்தியோரைச் சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கான ஆர்வமின்மையினையுமே இவை எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாறு நடத்தப்படுவதாகக் கூறப்படும் தாக்குதல்கள் வடக்கு மற்றும் கிழக்கிற்கு வெளியே நடப்பதையும் நாம் அவதானித்துள்ள போதிலும் இந்த அறிக்கையானது இந்தப் பிராந்தியத்தில் மட்டுமே கவனம் குவிக்கின்றது. யுத்தத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பெண்கள் தமது வாழ்க்கையைத் தற்போதுதான் மீளக் கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளனர். இப் பகுதியில் வாழும் கணிசமான எண்ணிக்கையான குடும்பங்கள் பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களாகக் காணப்படுகின்றன. இவற்றில் பலவற்றிற்குப் பாதுகாப்பான வீடுகள் இல்லை. இக் காரணத்தினால் இந்தச் சமுதாயங்கள் பாதிப்புறு நிலையிலும் ஆபத்திற்கு எளிதில் இரையாகும் நிலையிலும் வாழ்ந்து வருகின்றன. இச் சூழமைவிலேயே இத் தாக்குதல்கள் புரிந்து கொள்ளப்படல் வேண்டும். சமுதாயத்தில் குழப்பத்தினையும் பயத்தினையும் உருவாக்குவதற்காகப் பெண்களைக் குறிப்பாக இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு மத்தியில் இச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி பெண்களைத் துன்புறுத்துவதற்காகவும் சிறு திருட்டுக்களை மேற்கொள்வதற்காகவும் இதே போன்ற சம்பவங்களை வேறு தனி நபர்களும் நிகழ்த்தி வருகின்றனர். வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் கடந்த 30 வருடங்களாக அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். யுத்தத்தின் காரணத்தினால் இந்த மக்கள் மரணத்தினையும் குடும்ப உறுப்பினர்களின் இழப்பினையும் கைதுகளையும் தடுத்து வைப்புக்களையும் சந்தித்து தற்போதுதான் தம் வாழ்க்கையினைக் கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளனர். இந்தத் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் மக்களின் வாழ்வினில் மீ;ண்டும் பயத்தினையும் பீதியினையும் ஏற்படுத்தியிருக்கின்றன> குறிப்பாகப் பெண்களின் வாழ்வினில் இந்நிலைமைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. யுத்தத்தின் கோர வடுக்களைச் சுமந்து வாழ்பவர்கள் பெண்களே. இப் பெண்களே மீண்டும் பாதுகாப்பின்றி வாழ்வதற்குப் பலவந்தப்படுத்தப்பட்டுள்ளனர். பல சமுதாயங்களில் அச்சத்தின் மட்டமானது மிகவும் உச்ச நிலையினை அடைந்து காணப்படுகின்றது. கலவரமடைந்த சமுதாயத்தினர் தமது பாதுகாப்பினைத் தாமே தேடிக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொலிசார் எதிர்வினையின்றி இருக்கும் இத் துரதிர்~;டமிகு சூழலில் மக்கள் சட்டத்தினைத் தம் கைகளில் எடுப்பதற்குத் தள்ளப்பட்டுள்ளனர். சமுதாயத்தின் மத்தியில் காணப்படும் அச்சமும் மக்கள் மத்தியில் காணப்படும் அச்சமும் அரசாங்கம் வழங்குகின்ற பாதுகாப்பிலே மக்கள் நம்பிக்கை இழந்ததுமே தாக்குதல் நடத்துவோர் மீதும் மேலும் அவ்வாறு தாக்குதல் நடத்தியோர் எனச் சந்தேகிக்கப்படும் ஏனையோர் மீதும் மக்கள் தாக்குதல் நடத்தக் காரணமாகும். இது தனி நபரொருவர் தன் மக்களுக்காக நீதி வழங்குவதை மீண்டும் தொடக்கியுள்ளதுடன் தனி நபர்கள் இலக்கு வைக்கப்படுவதற்கும் இட்டுச்சென்றுள்ளது. இது சட்டமற்றுப் போயுள்ள நிலைமைக்கும் இராணுவமயமாக்கத்திற்கும் பங்களிப்பு வழங்கத் தொடங்கியுள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறையானது வடக்கிலும் கிழக்கிலும் துரிதமாக அதிகரித்துள்ளது. வன்முறைக்கு முகங்கொடுத்த பெண்களுக்கு நீதி கிடைப்பது என்பது இலங்கையில் அரிதான ஒன்றாகவே இருந்து வருகின்றது. பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய வழக்குகள் அரிதாகவே நீதி மன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பாலியல் வல்லுறவு வழக்குகளிலும் வல்லுறவை நிகழ்த்தியோர் அரிதாகவே சிறையிலடைக்கப்படுகின்றனர். பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பாகக் காணப்படும் சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாப்புப் பெறும் இக் கலாசாரமானது கிறீஸ் மனிதனின் தாக்குதல் மூலமாக மீண்டும் துலாம்பரமாக்கிக் காட்டப் படுகின்றது. தாக்கப்பட்ட பெண்கள் பற்றிய கரிசனை குறைவாகவே காணப்படுகின்றது. ஊடகமானது இச்சம்பவங்களின் சுவாரசியங்களை அதிகரித்து அதில் ஒளிந்துள்ள மனித உரிமை மீறல்களையும் அராஜகத்தையும் அடக்கி வாசிக்கும் போக்கினைக் காட்டுகின்றது. தாக்குதலுக்குள்ளான பெண்கள் பொய் கூறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். சில வைத்தியசாலைகள் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்குக் கூட மறுத்திருக்கின்றன. இத் தாக்குதலின் காரணமாகப் பெண்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இப் பெண்களின் நடமாட்டமானது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவர்கள் வேலைகளுககுச் செல்வதும் தடைப்பட்டுள்ளது. இப்பிரதேசங்களைச் சேர்ந்த பல பெண்கள் நாட்கூலிகளாகவும் விவசாயிகளாகவும் அரசாங்க அலுவலகங்களில் சிற்றூழியர்களாகவுமே பணிபுரிகின்றனர். அச்சத்தின் காரணமாகவும் பாதுகாப்புப் பற்றிய குடும்பத்தினரின் கரிசனை காரணமாகவும் இப் பெண்கள் வேலைக்குச் செல்லாமலிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இது இவர்களின் பொருளாதார உரிமைகளைக் கீழறுப்பதுடன் இவர்கள் உதவுகின்ற குடும்பங்களையும் பாதித்துள்ளன. பல பெண்கள் தமது குடுமபத்திற்கு தன்னந்தனியே நிதி ரீதியாக உதவி வழங்கி வருகி;ன்றனர். பல கிராமங்களில் பெண்கள் இரவிலே ஒரு பொது இடத்திலே ஒன்றாகக் கூடி தம் எண்ணிக்கையினைக் கொண்டு தாம் யுத்த காலத்திலே பாதுகாப்புத் தேடியது போல் பாதுகாப்புத் தேடிவருகின்றனர். இப் பெண்கள் பல இரவுகளாகத் தம் இயற்கைத் தேவையினைக் கூடக் கழிக்கச் செல்ல முடியாதவர்களாகவும் இரவிலே தம் நிம்மதியான உறக்கத்தினைத் தொலைத்தவர்களாகவும் அல்லலுற்று வருகின்றனர். புனித ரமலான் மாதத்திலே தமது சமயக் கடமைகளை அனு~;டிக்க முடியாத நிலையில் முஸ்லிம் பெண்கள் மேலதிக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். தாக்குதல்களில் பெரும்பான்மையானவை பெண்களை இலக்கு வைத்து இரவிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ள பல சம்பவங்களில் தனிப்பட்ட பெண்கள் தம்மைத் தாக்க வந்த நபர்களை தமது இருப்பிடங்களில் வைத்துக் கண்டுள்ளனர். தாக்க வந்தவர்கள் கறுப்பு நிறத்திலான ஆடை அணிந்தவர்களாகவும் தம் முகத்தினைத் துணியினாலோ அல்லது கரி பூசியோ மறைத்திருந்ததாகவுமே இவர்களைக் கண்ட பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். சில சம்பவங்களில் பெண்கள் சிறு காயங்களுக்கும் இலக்காகியிருக்கின்றனர்.பெண்கள் உதவி கோரிக் கூக்குரல் எழு;பபிய பல சம்பவங்களில் அல்லது பயத்தால் அலறிய பல சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்த வந்தவர்கள் இராணுவ அல்லது கடற்படைச் சோதனைச் சாவடி இருக்கும் திசையினை நோக்கியே ஓட்டம் பிடித்திருக்கின்றனர். தாக்குதல் நடத்த வந்தவர்கள் தமது விரல்களுடன் கூரிய உலோக நகங்களைப் பொருத்தியிருந்ததாகப் பல பெண்கள் குறிப்பிட்டிருந்தனர். கிராம மற்றும் நகரப் பிரதேசங்களில் இராணுவ மற்றும் கடற்படை முகாம்கள் இருக்கின்ற போதிலும் தாம் உதவி கோரிக் கூக்குரல் எழுப்பிய போது இராணுவ வீரர்கள் தலையிடவோ அல்லது உதவி செய்யவோ வரவில்லை எனக் கண்ணால் கண்ட சாட்சியினரும் பாதிக்கப்பட்டவர்களும் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும்> தாக்குதல் நடத்தியோருக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் குற்றஞ் சாட்டியுள்ள போதிலும் இது நிரூபிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.இருந்த போதிலும்> பல சந்தர்ப்பங்களில் இராணுவமோ அல்லது பொலிசாரோ இது தொடர்பாக எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என்பதையும் பல சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்தியோரைக் கைது செய்யாமலும் அவர்களை விசாரிக்காமலும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளனர் என்பதையும் இங்கே வலியுறுத்தியாக வேண்டும். கைது செய்யப்பட்டு சட்டத்தை அமுலாக்குவோரிடம் கையளிக்கப்பட்ட இவ்வாறான தாக்குதல் நடத்துவோர் எவருமே நீதி மன்றத்தின் முன் கொண்டு வரப்படவில்லை. கிறீஸ் மனிதர்கள் என யாருமே இல்லை என்பதையே பொலிசார் உத்தியோகபூர்வமாகக் கூறி வருகின்றனர். எவ்வாறாயினும் தமது கூற்றுக்கு மறுதலையாக கிறீஸ் மனிதர்கள் பற்றிய தகவல்களை நாட்டின் பல பாகங்களிலும் இவர்கள் வழங்கியிருக்கின்றனர். அத்துடன் கிறீஸ் மனிதர்களைப் பிடித்தால தாம்; வழங்கும்; தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை எடுக்குமாறு கூட்டம் வைத்து மக்களிடம் தெரிவித்துமிருக்கின்றனர். விரக்தியுற்ற மக்கள் தம் கரங்களில் சட்டத்தினை எடுப்பதற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாகத் தாக்குதல் நடத்த வந்த பல நபர்கள் கிராமத்தவர்களினால் நையப்புடைக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு பதிலாக இராணுவமானது கிராமத்தவர்கள் மீது சகட்டு மேனிக்குத் துப்பாக்கிச் சூடு நடத்;தியிருக்கின்றது. மரணம் சம்பவித்துள்ள பல சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. அண்மையில் 21ம் திகதி ஆகஸ்ட் மாதம் பொலிசார் ஒருவர் புத்தளத்தில் உயிரிழந்துள்ளார். வெறும் சந்தேகத்தின் பேரில் கிராமத்தவர்களினால் அப்பாவி மக்கள் தாக்கப்படுவதும் கிறீஸ் மனிதனைப் பிடித்த அல்லது துரத்திய கிராம மக்களை இராணுவமும் பொலிசாரும் தாக்கிய சம்பவங்களும்; நடைபெற்றுள்ளன. சட்டமும் ஒழுங்கும் செயற்படாத இந்த நிலைமை மிகவும் கவலைக்குரியதாகும். பொதுமக்களுக்கு ஏற்பட்ட விரக்தியினாலும் தாக்கப்படுவதனால் அவர்களுக்கு ஏற்பட்ட கோபத்தினாலும் பாதுகாப்பின்மையினாலும் தாக்குதல் நடத்துவோர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித் தாக்குதல்களை நடத்துவதால் ஏற்பட்ட கோபத்தினாலும் வடக்கு கிழக்கில் கடந்த சில வாரங்களாக பதற்றம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக கிராமத்தவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் பொலிசாருக்கும் இடையில் மோதல் நிலைமை காணப்பட்டு வருகின்றது. இராணுவச் சோதனைச் சாவடிகள் இருந்த போதிலும் மேலதிக இராணுவச் சோதனைச் சாவடிகளும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்ட போதிலும் கிராமத்திற்கு அண்மையிலே சிவிலியன் உடையில் இனந்தெரியாதோர் காணப்படுவதாக பல பெண்க்ள முறைப்பாடு செய்துள்ளனர். முகாம்களிற்குள் நுழைகையில் இப்பெண்கள் நிறுத்தப்பட்டாலும் கிராமத்தவர்கள் அல்லாதோர் சுதந்திரமாகக் கிராமத்தினுள்ளும் நகரத்தினுள்ளும் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்வரும் குறிப்பிட்ட சம்பவங்களைப் பெண்களின் செயற்பாட்டிற்கான வலையமைப்புத் தொகுத்து வழங்குகின்றது:
• புத்தளம் ஆகஸ்ட் 12இ 2011- கரம்பை> கல்பிட்டி – தாக்குதலை நடத்த வந்த நபர் தனது வீட்டின் வேலியினைத் தாண்டி வீட்டினுள் நுழைய முற்பட்டதை பெண் ஒருவர் கண்டு உதவிக்காகக் கூக்குரலிட்டபோது அந்த நபர் மரத்தின் மீதேறியிருக்கின்றார.; எவ்வாறாயினும் கிராமத்தவர்களினால் அந்த நபரைக் கண்டுபிடிக்கமுடியாமற் போயுள்ளது. அந்த நபர் அவரின் வாயினைக் கட்டியிருந்ததாகவும் உள்ளாடையினையும் சேர்ட்டினையும் மட்டும் அவர் அணிந்திருந்ததாகவும் அப் பெண் விபரித்தார். அவரின் கரத்தில் நீண்ட கறுப்பு நிற விரல்கள் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.ஆகஸ்ட் 17இ 2011இ மளிகபுரம் – கறுப்பு நிற ஆடை அணிந்த நபரொருவர் மலசல கூடத்தின் மீது இருப்பதைக் கண்ட பெண்ணொருவர் உதவிக்காகக் கூக்குரலிட்டபோது அந்த நபர் ஓடிவிட்டார். கிராமத்தவர்கள் பொலிசாருக்கு அறிவிக்காத போதிலும் அவ்விடத்திற்குப் பொலிசார் வந்தனர். எவ்வாறாயினும் தாக்க வந்தவரை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகஸ்ட் 19இ 2011 – கல்பிட்டி நகரம் – தொழுது விட்டு நோன்பு துறப்பதற்காக முகத்தினைக் கழுவ வெளியில் சென்ற பெண்ணினைக் கறுப்பு நிற ஆடை அணிந்திருந்த மனிதனொருவன் பிடித்து அவருடைய கையினைக் கீறி காயமேற்படுத்தியிருக்கின்றார். கூக்குரலிட்டு உதவிக்காக அலறிய பெண்னினை கிராமத்தவர்கள் வைத்தியசாலைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். எவ்வாறாயினும் அப்பெண் பொய் சொல்கிறார் எனக் கூறி அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். அப் பெண்ணுக்குப் பின்னர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர் எனக் கூறப்படுபவரைக் கிராம மக்கள் பிடித்து அடித்துள்ளனர். தாக்குதலை நடத்தியவர் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் எனக் கிராமத்தவர்கள்pல் பலரும் அடையாளம் கண்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த பொலிசார் அந்த நபரைக் கூட்டிச் சென்று அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர். நபருக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்ததுடன் அவரை அம்புலன்ஸ் வண்டியில் சிலாபம் வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையின் பக்கச்சார்பான இந்த இரட்டை நிலைப்பாட்டினை அவதானித்த கிராமத்தவர்கள் வைத்தியசாலையினைத் தாக்கினர்.ஆகஸ்ட் 20இ 2011 பாலாவி – தாக்குதல் நடத்த வந்த நபரைக் கண்ட பெண் கூக்குரலி;டவே அந்த நபர் ஓடிவிட்டார். கிராமத்தவர்களினால் அந்த நபரினைக் கண்டு பிடிக்க முடியவில்லை ஆகஸ்ட் 21இ 2011 – மணல்காடு – அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டினிலே இனந்தெரியாத நபரினைக் கண்டதும் கிராமத்தவர்கள் அவரைத் துரத்த ஆரம்பித்தனர். அவ்விடத்திற்கு வந்த பொலிசாரினை கிராமத்தவர்கள் தாக்கத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து பொலிசார் வானை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவே இரண்டு கிராமத்தவர்கள் அதில் காயமடைந்தனர். பின்பு கிராம மக்களைக் கொண்ட குழவொன்று பொலிசாரைத் தாக்கியதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் மரணமடைந்துள்ளார். இந்த அறிக்கை தயாரிக்கப்படுகையில் புத்தளம் நகரினுள் அதிகமான இராணுவம் குவிக
3வது பகுதி ஏன் நீக்கப்பட்டுள்ளது. ரோஜேஸ் பாலா ஏன் முன்னுக்குப்பின் முரணாகிறார். பெண்களுக்கு உதவுதல் என்றால் எவனாவது அடிக்கட்டும்> அடித்தவனைக் காப்பாற்றிக்கொண்டு காயத்திற்கு மருந்திடுவதா? ராஜேஸ் பாலா மருத்துவ பரிசோதனை செய்வது நலம். இவ எப்பவுமே இப்படித்தானா? ஸ்ஸ்ஸ்;ஸ்….. நிர்மலாவை> இவவை பார்த்தபின் பெண்ணியவாதிகள் என்றாலே பயமாக இருக்கிறது. மேல்தட்டில இருந்து பெண்ணியம் கதைச்சால் … என்னத்தை சொல்ல… இவையெ ஒரு தருத்தெண்டு கூப்பிடடுறவையை சொல்லோணும்.
கிறீஸ் பூதம் சேலை கட்டி நேரலையில் வந்தும் பேசுமா? ஐயோ ! பயமா இருக்கே ?
ராஜேஷ் அக்காவை பற்றிய செய்தி தெரிந்தும் சமூக சிதைவுக்கும் அழிவுக்கும் துணைபோபவர்களை இப்படியான கருத்தரங்கங்களில் இணைத்துக்கொள்ளாமல் இவர்களை புறக்கணிப்பதே சமூக்த்திற்கு நல்லது.
காணோளியின் மூன்றாவது பகுதி தவறுதலாகப் பதியப்பட்டிருந்தது. இப்போது மீள இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
ராஸேஸ் அக்கா தீபத்தை போட்டுக் கொடுக்க வேண்டி வரும் என பகிரங்மாக மிரட்டுகிறீர்களே யாரிடம் போட்டு கொடுக்கப் போகின்றீர்கள் மகிந்தாவிடமா? அப்படியென்றால் பல காட்டிக் கொடுப்புகளை நீங்கள் நிறைவேற்றி இருக்கிறீர்கள். அந்தளவு செல்வாக்கு உங்களுக்கு மகிந்தாவிடம் இருக்கிறது.
இராணுவத்திடம் சரணடைந்து அகப்பட்ட தலைவர் மற்றும் ரமேஸ் போன்றோரின் நிலையை ஒத்ததாக அக்கா ராஸேஸின் நிலமை மிக பரிதாபமாக இருக்கிறது.
ராஜேஸ் அ(ய)க்காவை எல்லோரும் கூட்டுச் சேர்ந்து போட்டுத் தாக்குவது நல்லதல்ல.
“கேள்வி நேரம்” அனஸ், “புலி”யை இழுத்து கிறிஸ் யக்காவில் போட, எல்லாம் சமபலமாக ஆரம்பித்தது போலிருந்தது.
ஆயினும் அது சமநிலைப்பட்ட விவாத அரங்கை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
ஒரு பெண் ஓரணியிலும் இரு ஆண்கள் எதிரணியிலுமாக.
நீருற்ற வசதியா காதரை உட்கார வைத்தது யார்?
முன்னரே எழுதிய ஸ்கிரிப்ட்படிதான், நீரருந்தாத ராஜேஸ் அ(ய)க்காவிற்கு,பிளாஸ்டிக் கப் வைத்ததா?
சபா நாவலன் அந்தப்புரத்தை வெளிக்கொணர,சம்பந்தப்பட்ட அடுத்த மூவரும் “மௌனிப்பு” செய்வது ஏன்?
ஒளிவு மறைவும்,மௌனமும் எழுப்புகிற கேள்விகள் ஆயிரம்.
சாக்கிரிட்ஸ் போல “இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நன்னாச்சு” எனலாமா?.
நெருஞ்சி
!!! I think you haven’t read this following.
inioru: நேரஞ்சல் உரையாடலின் போதே ஆங்கிலத்தில் “நாகரீக வன்முறை” அதிகாரத்தைக் கையாண்ட ராஜேஸ் பாலா, நிழச்சி நிறைவின் பின்னர் நடந்துகொண்ட முறைமை அருவருப்பானது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பி.ஏ.காதர் அவர்களை ___நிகழ்ச்சி நிறைவுற்றதும்———- “வேசைமகனே” என விழித்து அவர் மீது கையில் கிடைத்தவற்றை வீசியெறிந்து தாக்குதல் நடத்தினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டிய ராஜேஸ் பாலா காதர் மீது அங்கு வக்கைப்பட்டிருந்த நீர்க் குவழையிலிருந்த நீரை ஊற்றி அவமானப்படுத்தினார்.
Hope It will explain more about ராஜேஸ் பாலா
READ,DIGEST,THINK—-ANALYSE—–, then express your views/comments.
பகுத்தாராயும் பக்குவமில்லாதோரிட்கு கண்டிப்பாக ஆதாரம் தேவை.இது அணைத்து தரப்பு (புலி சார் ,அரசு சார் )புலன் பெயர்ந்தோருக்கும் பொருந்தும்
கிறிஸ் பூதம் தொடர்பிலான எனது கருத்தை முன் வைப்பதற்கு முன்னதாக தீபம் தொலைக்காட்சியினரால் நடாத்தப்பட்ட கலந்துரையாடல் பற்றிய எனது கருத்தை பரிமாறிக்கொள்ள விரும்புகின்றேன். புலிக்கு உசுப்பேத்தி அதிலே ஊறிப்போன ஊடகங்கள் இன்னமும் தன்னளவிலே மாறுதலைக்காணாது குழல் ஊதுவதால் கொஞசம் மன அமைதியாக இருப்போம் என்பதற்காக தொலைக்காட்சிகள் பார்பதில் இருந்து சற்று விலகி இருந்தேன் தற்செயலாக இனி ஒரு தளத்தினை பார்க்க முற்பட்டபோது மிகவும் அருவருக்கத்தக்க ஓர் கலந்துரையாடலை
பார்க்க நேர்ந்தது மிகவும் வேதனையாக இருந்தது. பென்ணியம், தலித்தியம், இப்படியாக பல ஊடகங்களை நடாத்திகொண்டு சமூகத்தை ஏமாற்றி தங்களை சமூகஆர்வலராக காட்டிக்கொண்டு தங்களைத்தாங்களே ஊடகவியளாளர்களாக சித்தரித்துக்கொண்டு சுயநல அரசியலை நடாத்திக்கொண்டிருக்கும் பலரை கண்டிருக்கின்றேன். அப்பாவிகள் இருக்கும் வரை இப்படியானவ்ர்கள் முதிகில் ஏறி குதிரை ஓட்டத்தான் செய்வார்கள். இந்தவகையில்தான் இங்கு இராஜேஸ் பாலாவும் தன்னை வெட்கமில்லாமல் ஓர் பெண்ணியல்வாதி என்று நாகூசாமல் வெட்கமில்லாமல் பகிரங்க மேடையிலே கூறுவதை அவ்தானிக்க முடிகின்றது.தன்னை பெண்ணியல் வாதியாக காட்டிக்கொள்வதற்கு வேலிக்கு ஓணான் சாட்சிமாதி தள்த்திலேயுள்ள சிவசந்திரன் பெண்டாட்டியை சாட்சிக்கு அழைக்கின்றார், இவ யார் என்று பார்ப்போமாக இருந்தால் அண்மையில் வன்னிக்கு சுற்றுலாசென்றுவிட்டு மகிந்தவுக்கு சார்பாக அறிக்கைவிட்ட பேராசிரியர் சிவச்சந்திரனின் மனைவிதான் அந்த அம்மையார். இங்கே கருத்தாடுகளத்தினை நடாத்திய அன்ஸ் என்ன செய்தார் என்றே தெரியவில்லை. அவ்ரின் மூச்சு வார்தைகலால் வர்ணிக்கவே முடியவில்லை. இப்படிப்பட்ட அறிவிலியை மேடைக்கழைத்தது அனஸின் முதல் தவறு. இராஜபக்ச அரசாங்கம் நூற்றுக்கனக்கானோரை பல மில்லியன்கள் வளங்கி அரசுக்கு சார்பான பிரச்சாரங்களை மேற்கொள்ளுவதற்காக பல நாடுகளுக்கு அனுப்பியுள்ளமை எல்லோருக்கும் தெரிந்த உண்மை இங்கு இராஜேஸ்பாலா எதற்காக அரசுக்கு வக்காலாத்து வாங்க முற்படுகின்றா? என்னால் நிச்சயமாக கூறமுடியும் இரஜபக்ச அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு சதி வேலைதான் இந்த கிறிஸ் பூதம். அம்மாஇராஜேஸ்வரி அம்மையாரே நீங்க வேலிச்சண்டைக்குத்தான் சரியம்மா. உங்கள் புரிசனுக்காக கவலைப்படுகின்றேன். சரி விடயத்திற்கு வருவோம். கிறிஸ்பூதத்திற்கும் அரசுக்கும் தொடர்பிருக்கின்றதா இல்லையா என்பதை உறிதிப்படுத்த கெசல்வத்தை, கடவத்தை. பதுளை யாழ்ப்பாணம் செல்லத்தேவையில்லை. நீங்கள் கிண்ணியாவில் முஸ்லிம் சமூகத்தில் நடந்த சம்பவத்திற்கும் நாவாந்துறையில் நடந்தசம்பவத்திற்கும் என்ன நடந்தது என்பதற்கான அறிக்கையைமட்டும் மழுப்பாமல் நெஞ்சுரம் இருந்தால் முன்வையுங்கோ.
பெண்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமானால், பெண்கள் ஆண்கள் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பார் இந்த அம்மையார் -தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துவது என்றால் அவர்களுக்கு பூணூல் போடுவோம் என்று பாரதியார் செய்த மாதிரி!
பறுவதம் பாட்டிக்கு ஏன் ஊர்வம்பு? பேசாமல் மொட்டைமாடியிலை காயப்போட்ட அப்பளம் வடகம் மிளகாய்க்கு குருவி காகங்கங்கள் கொத்தாமல் காவல் இருந்திருக்கலாம்
ராஜேஸ்வரிபாலா உலகம்யறிப்பட்ட மனிதநேயப் பெண்மணி. அவரை யாரும் காசுவாங்கிக் கொண்டுதான் செயல்படுகிறார் என்பதை எந்த அறிவுள்ளவனும் ஏற்றுக் கொள்ளமாட்டான். அவர் செய்த தப்பு அறிவிலி
களுடன் ஒரு மேசையில் இருந்து கதைக்க புறப்பட்டதே!.
ஆகவே தமிழினம் தனது சுகந்திரத்தை வெளிபடுத்துவதாக இருந்தால் இன்னும் ஒருயாயிரம் ஆண்டுகாலம் பொறுத்திருக்க வேண்டும். தானே?.
Ithu Kusumbu.
ராஸேஸ்பாலா உலகமறியப்பட்ட மனிதநேயப் பெண்மணி எனில் பிரபாகனும் மகிந்தாவும் உலகப் புரட்சியாளர்களே மக்கள் தலைவர்களே எனக் கொள்க.
இந்த தீபம் புலியின் கொடடுமைகலை பற்றி ஒருநாளும் விவாதம் செய்தது இல்லை, வேசமகன் என்று சொன்னதில் தப்பில்லை, அவர் அப்படித்தான்
You are right. Use all sort of bad language to prove your democracy. Very good keep it up.
சந்திரன் அங்கிள் வேண்டாம்.,,,,, நீங்களும் ஏதாவது பெண்ணியம் ,தலித்தியம் அப்படி யேதாவது????? அல்லது இராஜபக்சாவிடமிருந்து,,,????? ஒத்துக்கொள்ளமாட்டீங்களே!!!!! சரி விட்டிடுங்க,,,,,மேடைநிகழ்வைப்பார்த்தவர்கள் யார் புத்தியீவிகள் யார் அறிவிலிகள் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பார்கள்
மருகனே! உங்கள் புத்திசாலித் தனத்தைத்தானே மூன்று சகாப்தற்கு மேலாக பார்த்தக் கொண்டிருக்கிறேம். இனி என்ன? விவேகம் வந்து விடப்போகிறது. ராஜேஸ்வரி பாலாவின் கையில் சுடுதண்ணி இல்லாத குறையே தவிர எனக்கு வேறு ஒன்றுமில்லை.
கிரிசுமனிதன் ,பென்னாகவும் இருக்கா? அதுவும் லன்டனில்… மகெஅம்மெ
veeran
சிங்கள பேரினவாதத்திற்கு மாமா வேலை பார்க்கிற உங்களின் வாயில் இப்படியான சொற்கள் வருவது சாதரணம்தான்.
சந்திரன்ராசா மாமாவிடமிருந்து வேறை உருப்படியான கருத்து எப்படி வரும்!
அந்த பெண்மணியை பற்றி எழுதி தமிழை கேவல படுத்த விரும்ப வில்லை. தயவு செய்து இனிமேல் உங்கள் தெரிவுகளை கவனமாக தேர்ந்தெடுங்கள் – இந்த பிழையை திரும்பவும் செய்து விடாதீர்கள்.
This lady appeared on Deepam TV many times. Not only her another man also doing the same thing. They are Deepam TV’s choice.
சில வாரங்களிற்கு முன்னர் இந்த ஒருமணிநேர தொலைக்காட்சி நிகழ்ச்சியை தேசியத்தை அழிக்கவந்த பூதம் என்று தம்மை தமிழ்த்தேசியகாவலராக கருதிக்கொள்ளும் சில குறுந்தேசிய குப்பைகள் பதைபதைத்தன. அட ஒரு மணித்துளி தொலைக்காட்சி நிகழ்ச்சியால் தொலைந்துபோகக்கூடியதா உங்கள் தமிழ்த்தேசியம் என்று யாராவது பகுத்தறிவுள்ளவர்கள் கேட்டுவிடக்கூடுமே என்ற சுரணையுமின்றி எதைப்பேசலாம் எதைப்பேசக்கூடாது என்று வரைமுறைகளை வகுத்தார்கள். சில பிழைப்புவாத பன்னாடைகள் இன்னும் ஒருபடி மேலே போய் வன்முறையை கையிலெடுத்தார்கள். பிழைப்பில் மண்விழக்கூடும் என்றால் கோபம் வருவது இயல்புதானே. மாற்று அரசியலை மகிந்தவின் வேட்டிமடிப்புக்குள் தேடுபவர்களும், இவர்களும் இணைகின்ற புள்ளியிது. இவர் இப்படித்தான், புலியை எதிர்த்தவர் எவரும் இவ்வாறுதான் என்று தீர்க்கதரிசனம் கூறுபவரே தலைவருக்கு எல்லாம் தெரியும்,” உள்ளுக்கை விட்டு அடிக்கபோகிறார்” என அடித்துக்கூறியவர் என்பதும் மனங்கொள்ளத்தக்கது. கடத்தல்காரர்களுக்கும், தமிழ்பொலிசாருக்கும் இடையிலான முரண்பாட்டில் கடத்தல்காரர்களால் தமிழ்த்துரோகிகளாக்கப்பட்டு, பொலிசார் கொல்லப்பட, கொன்றவர்கள் தேசியவீரர்களானதுதானே எம் வீரவரலாறு. கள்ளக்கடத்தல், கடனட்டைமோசடி,கந்துவட்டிக்கு காசுகொடுத்தல், தனிமனித திறமை அது சமூகவிரோதமல்ல என்று போக்கிரித்தனம் பேசிக்கொண்டே தேசிய போர்வாளாகவும் இருக்கமுடிகின்றது. கோயிலில் உண்டியல் வைத்து மொட்டையடிக்கமுடிகின்றது. இவர்களும் சர்வதேசபுரட்சி, தலித்தியம், பெண்ணியம், பேசியபடி பேரினவாத,கொலைகார அரசுடன் ஆலிங்கனம் செய்யும் புத்தியீவிகளும்,கு.தேசியகுப்பைகளும், வெளிப்படையான விவாதத்தின், வன்முறையற்ற கலந்துரையாடலின் எதிரிகள். நாம் போகவேண்டியதூரம் மிகதொலைவில்.
ராஜேஸ்பாலாக்கு மனிதநேயப்பெண்மணி என்ற பட்டம் யார் கொடுத்தது. சந்திரன் ராஜா போன்றவர்களா? அப்படி ஒரு பட்டம் கொடுக்கப்பட்டாலும் அதுவும் பணம் கொடுத்துப் பெற்றதாகத்தான் இருக்கும். இவர் மனிதநேயப் பெண்மணி இல்ல மனநோய் அம்மணி. கணவனைப்பிரிந்த கடுப்பும் வெறுப்பு இவரை யாழ்எதிர்ப்பு வாதியாகப் பிரகடனப்படடுத்தியது. பெண்ணிணம் பற்றிப்பேசுவதற்கு ராஜேஸ்பாலாவுக்கு என்ன உரிமை இருக்கிறது. ஆண்களை எதிர்ப்பதும்; ஆண்கள்போல் நடப்பதும் தான் பெண்விடுதலை என்று எண்ணும் ஒரு பொறுப்பற்ற பெண்மணிதான் இவர். ஒரிரு யாழ்பாணத்தமிழர்களை வைத்துக் கொண்டு அனைவரையும் கணக்குப்போடும் ஒரு முட்டாள் கூட்டத்தின் வாரிசே இவர். தீபத்தில் நடந்த கேள்விநேரம் நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். கமராவின் முன் அமைதியாகப் பேசிவிட்டு கமரா திரும்பும் வேளை நாவலனுக்குக் கூறினார் நான் என்ன செய்யவேண்டும் என்பதை நீர் எனக்குச் சொல்லத் தேவையில்லை என்று ஆங்கிலத்தில் ஆவேசமாக. அரசசார்பாகக் கதைக்கும் போது அதற்கு எதிர்கருத்துடையவர்கள் அதைச்சுட்டியே கதைப்பார்கள் இந்தச் சின்ன உரைவளக்கையே புரிந்து கொள்ளமுடியாத மட்டக்களப்பு அம்மணி யாழ்பாணம் பற்றி பேசுகிறார். கேட்டகேள்விகளுக்குப் இவரிடம் பதில் இல்லை தெரியாது என்றே மழுப்பினார். நிகழ்ச்சியின் பெயரோ கேள்வி நேரம். பதிலில்லாக் கேள்விநேரமா? அதே போல் காதர் தனக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் தன்கருத்தைப் பேசும்போது “வாயை மூடு அது இது என்று ஒரு தொலைக்காட்சியின் முன் இருப்பதாகக் கூட எண்ணாமல் ஆங்கிலத்தில் வைதினார். இவர் என்ன வகையான மனிசி இவர். மனநோய் பிடித்த மாதுவுக்கு மனிதநேயப்பட்டமா? எந்த வானத்தில் இந்தப்பட்டத்தை விடப்போகிறீர்கள்
பிரபாகரன் புலித்தலைவர் என்பதற்காக புலிகள் எல்லாம் யாழ்பாணத்தாருடையது என்பது தவறு. பெரும்பான்மையான புலிகள் கிழக்கைச் சேர்ந்தவர்களே. யாழ்பாணத்தார் சுரட்டுகிறார்கள் என்னும் கிழக்கத்தையார் யாழ்பாணத்தில் வந்து இருந்த திண்டு கடித்துப பேண்ட பின் கிழக்கில் வந்து சோதனை எழுதி பட்டம் பெற்றதை நாம் நன்கு அறிவோம். ஆனால் எந்தயாழ்பாணத்தானும் கிழக்கானைக் குற்றம் சொன்னது கிடையாது. மாறாக ஆதரித்தோம். கருணா அம்மான் கூட மாதகல் லோக்கல்தான். ஆத்தாமையில் யாழ்பாணத்தாலை வைகிறார்கள்.. இதில் ராஜஸ்வரி தான் யாழ்பாணத்திலை கட்டி பிரச்சனைப்பட்ட குடும்பம் பிரிந்து என்றால் பின் ஏன் தனது சகோரத்துக்கு யாழ்பாணத்தாரை கட்டி வைத்தார். அதுவும் பிரிந்துபோய் நிற்கிறது. அப்போ இது யாழ்பாணத்துப் பிழை என்று மட்டும் சொல்ல ஏலாது. பொதுமேடை என்று வந்தால் தெருவில் போபவனும் கதைப்பான் எழுதுவான் என்பதை அவர் அறிந்த கொள்ள வேண்டும். இவர் சந்திக்கு வந்ததால் சந்தி மட்டுமல்ல சந்து பொந்துகளும் சரிக்கின்றன
யாழ்ப்பாணத்தான்,மட்டக்களப்பான் என்ற முரண்பாடல்ல இங்கு அலசுவதற்காக எடுக்கப்பட்ட விடயம்.கிறிஸ் பூதங்கள் ஒட்டுமொத்த இலங்கையின் மானிடத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதை உண்மையில் ஏற்றாக வேண்டும். தமிழருக்குக்கூட, சிங்களவருக்கு குறைய என்ரு வாதிக்க முற்படுவது முட்டாள்தனமானது. தமிழர்கள் காணியைப் பிடிப்பதற்காகத் தான் பூதங்கள் உருவானவை என்கின்ற நாவலன் அவர்களும்,மகிந்தவை சீனாவில் இருந்து வந்த உடனேயே சந்தித்து பூதம் பற்றியதை சொன்னார் என் தலைவர் ரவூப் கக்கீம் என் கின்ற காதரின் கூற்றும் கூட இங்கு காட்டமாக இல்லை. கக்கீம் இது வரை எதைக்கேட்டார் என்பது எல்லார்க்கும் தெரியும். திருமதி பாலா அவர்கள் பெண்ணியம் என்கின்ற ஒற்றைச் சொல்லைவைத்து பிழைப்பு நாடாத்துகிற பெண்மணி.நான் சிவச்சந்திரனைக் கேட்டேன் அப்படிஎதுவுமில்லையாமே என்று எதுவுமே அறியாத அப்பாவியாக தன் அறியாமையை வெளிப்படுத்துகின்றார். பாலா அரசு சார்பானவர் என்பது சகலரும் அறிந்த விடயம். பிறகேன் செத்த பாம்பைப் போட்டு எல்லோரும் அடிக்க நிற்கின்றீர்கள்.அவரைக்கூப்பிட்டு உடகார வைத்த அப்துல்லா அவர்களுக்கும் அது தெரியும். இந்தக் கேள்விநேரத்தால் இவர்கள் சொல்ல விளைந்தது எதுவுமேயில்லை என்பதும்,பாலா தன்னையோ மற்றவரையோ வேசைமகனே என்று சொல்லிப்போட்டா என்று பழிபோட்டது தான் மிச்சம்.