புலம் பெயர் தமிழர்களைப் பார்வையாளர்களாகக் கொண்டு உலகத் தமிழர் தொலைக்காட்சி(GTV) மற்றும் தீபம் ஆகிய தொலைக்காட்சி சேவைகள் பிரித்தானியாவை மையமாகக்கொண்டு ஒளிபரப்பாகின்றன.
தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளரான துரைசாமி பத்மநாபன் பணமோசடி வழக்கில் கைதானதன் பின்பு அத் தொலைக்காட்சி சேவை நெருக்கடிக்கு உள்ளானது. பிரித்தானிய மில்லியேனேர்களில் ஒருவரான பத்மநாபன், அவரது நிறுவனங்களின் முன்னைநாள் விற்பனை முகாமையாளர் மயூரன் குகதாசன் ஆகியோர் பின்னதாக பணமோசடிக் குற்றச்சாட்டுக்களுடன் விடுதலையாகினர். அவர்கள் மீதான வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் அவர் பிரித்தானியாவில் வியாபார நிறுவனங்களை நடத்துவதற்கான உரிமை தடைசெய்யப்பட்டது. இதனால் தீபம் தொலைக்காட்சி நோர்வேயிலுள்ள மக்களவையைச் சார்ந்த உறுப்பினர்களால் பொறுப்பேற்கப்பட்டது.
கடந்த நான்கு மாதங்களாக இவர்களது பொறுப்பில் இயங்கிவரும் தீபம் தொலைக்காட்சி நூற்றுக்கணக்கான சந்தாதாரர்களைக் கொண்டது. ஏறக்குறைய முப்பது ஊழியர்களைக் கொண்ட தீபம் தொலைக்காட்சி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தை இதுவரை வழங்கவில்லை எனத் தெரியவருகிறது. தொலைக்காட்சி ஊழியர்கள் தமது உழைப்பிற்கான பணத்தைக் கோரியபோது நிர்வாகத்தினர் தம்மிடம் பணம் இல்லை எனத் கைவிரித்துள்ளனர். அதே வேளை சட்டரீதியாக நிறுவனத்தை மூடும் நடவடிக்கை எதனையும் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொள்ளவில்லை எனவும் தெரியவருகிறது.
இதனிடையே தமிழ் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் புதிய தலைமுறை தொலைக்காட்சியைப் புலம் பெயர் நாடுகளில் தீபம் ஊடாக ஒளிபரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் எதிரொலியாகவே ஊதியங்கள் வழங்கப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் முதலாளி பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர்தான் புதிய தலைமுறையின் உரிமையாளர். பச்சைமுத்துவின் மகன் சத்தியநாராயாணா இந்த டி.வி. நிர்வாகத்தை கவனித்துக்கொள்கிறார்.
1969-ல் மேற்கு மாம்பலத்தில் எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேள் என்ற பெயரில் துவங்கப்பட்ட ஒரு பிரைமரி ஸ்கூல் இன்று தமிழகத்தின் மாபெரும் கல்வி சாம்ராஜ்ஜியமாக வளர்ந்தது எப்படி? இதற்கான பதிலில்தான் பச்சைமுத்து பாரிவேந்தரான கதையும் ஒளிந்திருக்கிறது.
மொத்தம் 43 வருடங்கள்… பச்சைமுத்து குடும்பம் கொள்ளையடித்திருப்பதோ பல லட்சம் கோடி ரூபாய். இரண்டு தலைமுறைகளாக தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கத்து பெற்றோர் சம்பாதித்துக் கொட்டிய பணம்தான் காட்டாங்கொளத்தூரில் பிரமாண்ட கட்டடங்களாக எழும்பி நிற்கின்றன. கொஞ்சநஞ்சமில்லை… ஒரு பொறியியல் சீட்டுக்கு 20 லட்சம், மெடிக்கல் சீட்டுக்கு 80 லட்சம், எம்.பி.ஏ. சீட்டுக்கு 15 லட்சம்… என நினைத்துப் பார்க்க முடியாத கல்விக் கொள்ளை. அண்மை வருடங்களாக சென்னையை தாண்டி தமிழகம் எங்கும், தமிழகத்தை தாண்டி இந்தியாவெங்கும் தனது வியாபாரத்தை விரித்திருக்கிறது எஸ்.ஆர்.எம். குழுமம்
பல தமிழினவாதிகள், இலங்கை பிரச்னை, மூவர் தூக்கு போன்றவற்றில் புதிய தலைமுறை தமிழர் நலன் சார்ந்து இயங்குவதாக சொல்கின்றனர். அப்படி குறிப்பாக சொல்லாதவர்கள் கூட, ‘அவங்க நல்லா பண்றாங்க, பரவாயில்லை’’ என்கிறார்கள். சமீபத்தில் எஸ்.ஆர்.எம். குழுமம் இலங்கையில் ‘எஸ்.ஆர்.எம். லங்கா’’ என்ற பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட செய்தி ஆதாரத்துடன் அம்பலமானது.
புதிய தலைமுறையின் புலம்பெயர் வருகை உண்மையானதாயின் அது ஆபத்தானதும் கூட..
ஈழத் தமிழர்களின் உணர்வுபூர்வமான தேசியப் பிரச்சனை மனிதாபிமானமற்ற அவமானகரமான வியாபாரப் பொருளாக மாற்றமடைந்துள்ளது. பிரித்தானியாவிலிருந்து இயங்கிவந்த தீபம் தொலைக்காட்சி சேவை ஏதோ மாற்றங்களை உருவாக்கிய ‘புரட்சிகர’ தொலைக்காட்சியல்ல. ஆயினும் ‘புதிய தலைமுறையின்’ ஊடாக இலங்கை இந்திய உளவுத்துறைகள் சீரழிந்துபோன புலம்பெயர் தமிழ்த் தேசிய அரசியலைக் கையகப்படுத்த முயற்சிக்கின்றனவா என்ற சந்தேகம் எழுவது இயல்பானதே.
பிரித்தானிய சட்ட வரைமுறைகளுக்கு ஒப்ப சட்டப்படி வேலை நீக்கம் செய்யப்படுகிறன்வர்கள் தமது வாழ்க்கைக்கான அடிப்படை உதவித் தொகையாக வேலையற்றோருக்கான சமூக உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள இயலும். தீபம் தொலைக்காட்சி ஊழியர்களை சட்டரீதியாக வேலை நீக்கம் செய்யாதிருப்பதால் அவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாத நிலையிலுள்ளனர். மாதந்த ஊதியத்தையே நம்பி வாழ்க்கை நடத்தும் கடன் கலாச்சார்த்துள் மூழ்கியுள்ள பிரித்தானிய சமூகத்தில் ஒரு மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படாமை என்பது குடும்பங்களின் வாழ்க்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
வணக்கம்:
“திவாலாகும் தீபம் தொலைக்காட்சியும் தெருவில் விடப்பட்ட ஊழியர்களும்” என்ற உங்கள் செய்தியை வாசித்தேன். என் மனதை வருடிய சில விடையங்களை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.
நீங்களே எழுதி இருக்கிறீர்கள் தீபம் ஏற்கனவே திவாலாகும் நிலையில் இருந்தது என்று. அப்படி என்றால் சுமார் 4 மாதங்களுக்கு முன்னரே அதன் ஊழியர்களும் தெருவில் தான் விடப்பட்டிருப்பார்கள். நோவேயைச் சேர்த்த குளோபல் மீடியாவால் தான் தீபம் வாங்கப்பட்டதே தவிர மக்களவையால் அல்ல. இவ்விடையம் தெரியாவிட்டால் தெரிந்த பின்னர் எழுதுவது நல்லது. லண்டனில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழ் வியாபார நிலையங்களில், அடிமைகள் போல பல தமிழர்கள் இன்னும் 3.50 க்கு வேலை செய்கிறார்கள். மாணவர் விசாவில் வந்த பல பெண்களை முதலாளி மார் ஏமாற்றுகிறார்கள். 1 மாதம் வரை வேலை செய்யச் சொல்லி பின்னர் சம்பளம் கொடுக்காலம் துரத்தியடிக்கிறார்கள், அது எல்லாம் உங்கள் கண்களில் படவில்லை. ஆனால் 1 மாதம் சம்பள பாக்கி என்பது மட்டும் தான் உங்கள் மேட்டுக்குடி வர்க்கத்துக்கு தெரிந்திருக்கிறதா ? கோட்டையும் சூட்டையும் மாட்டிக்கொண்டு வேலை சென்று திரும்பும் உங்களுக்கு , தொழிலார்கள் படும் கஷ்டம் புரியுமா ?
உங்கள் நண்பர் ஒருவர் ஊடாக கிடைக்கப்பெற்ற இச் செய்தியை நீங்கள் ஆராயாமல் போட்டுவிட்டீர்கள் போல எனக்கு தோன்றுகிறது. ஏற்கனவே இனி ஒரு இணையத்தில் லண்டனில் நடைபெற்றுவரும் சம்பள கொடுக்கல் வாங்கல் குறித்து நீங்கள் முன்னர் எழுதி இருந்தால், இதனையும் ஒரு சாதாரன செய்தியாக நான் ஏற்றுக்கொண்டு இருப்பேன். ஆனால் இச் செய்தி குறிப்பிட்ட ஒருவரை இல்லையென்றால் ஒரு அமைப்பை தாக்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். இது அடியேனின் அபிப்பிராயம் அவ்வளவுதான். நன்றி.
தோழமையுடன்,
கண்ணன்.
இலங்கையிலிருந்து கல்விகற்க லண்டன் வரும் மாணவர்களின் அவல நிலை : சசீதரன்
https://inioru.com/?p=23776
இன்னும்பல…
மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தான் இங்கு முதலிடப்பட்டிருக்கிறது. தீபத்தில் முதலிட்டவர்கள் யார் என்பதை கண்ணண் அறிவார். நோர்வே புலிகளின் முக்கிய நபர்கள் இவர்கள். தொழிலாளர்களான இவர்கள் தொழலதிபர்கள் ஆவதற்கு பணம் எவ்வாறு வந்தது? 1, 2 மில்லியன் இல்லை. உச்சிதனை முகர்ந்தால் தயாரிப்பில் எத்தனை மில்லியனை வெள்ளைப்பணம் ஆக்கினார்கள், அவர்கள் தற்போது வைத்திருக்கும் நிறுவனங்கள், தீபம் தெலைக்காட்சி ஆகியன எத்தனை மில்லியன் பெறும்?
துரை
இந்த கட்டுரையில் ,
1) மக்களவை தீபம் தொலைக் காட்சியை வாங்கவில்லை . மூன்று தனிநபர்களின் இணைந்த முயற்சி அது என்றே அறியப்படுகின்றது ..
2)பணம் இல்லை என்று சொல்லப்படவில்லை . 15 ஆம் திகதி சம்பளம் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
3) ////புதிய தலைமுறையின் புலம்பெயர் வருகை உண்மையானதாயின் அது ஆபத்தானதும் கூட..இது 100 வீதம் உண்மையானது /// என்பதும் மிகச்சரியான கருத்து .
/4) //ஈழத் தமிழர்களின் உணர்வுபூர்வமான தேசியப் பிரச்சனை மனிதாபிமானமற்ற அவமானகரமான வியாபாரப் பொருளாக மாற்றமடைந்துள்ளது. பிரித்தானியாவிலிருந்து இயங்கிவந்த தீபம் தொலைக்காட்சி சேவை ஏதோ மாற்றங்களை உருவாக்கிய ‘புரட்சிகர’ தொலைக்காட்சியல்ல. ஆயினும் ‘புதிய தலைமுறையின்’ ஊடாக இலங்கை இந்திய உளவுத்துறைகள் சீரழிந்துபோன புலம்பெயர் தமிழ்த் தேசிய அரசியலைக் கையகப்படுத்த முயற்சிக்கின்றனவா என்ற சந்தேகம் எழுவது இயல்பானதே.//// என்பதும் மிகச்சரியான கருத்து .
1.இரும்பைத் தின்ற எலிகள்.[மக்களவை-மூன்று தனிநபர்கள்]
2.இண்டைக்கு(15 ஆம் திகதி) சம்பளம் எடுத்தவை, போய்க் கொத்துரொட்டி வாங்கிக் கொண்டாடியாங்கோ;ஒரு ‘பார்ட்டி’ போடுவம்.
3,4.”புதிய தலைமுறை” என சொற்கள் வந்தால்,”மிகச்சரியான கருத்து” என நிரப்பவும்.
வணக்கம்.
தீபம் தொலைக்காட்சியின் புதிய நிர்வாகம் மீதான அதிர்வு கண்ணனின் ஜால்ரா எமக்கு ஒன்றும் அதிர்ச்சியாக இல்லை. காரணம், அதிர்வு கண்ணன், தீபம் தொலைக்காட்சியின் புதிய முதலாளிகளில் ஒருவருக்கு மச்சான் முறை. அதனால் ஜால்ரா அடிக்கிறார். அடிக்கட்டும். அது அவரது உரிமை. ஆனால் அவரது கருத்துப்படி பார்த்தால் தமிழ்க் கடைகளில் ஒழுங்காக சம்பளம் கொடுக்கப்படவில்லைத்தானே, அதனால் தீபத்திலும் சம்பளம் கொடுக்கப்படாவிட்டால் அது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை என்பதுபோல் சொல்கிறார். அப்படியாயின் அவரது மச்சான் இப்போது ஒரு தமிழ்ப் பலசரக்குக் கடையையா வாங்கியுள்ளார் ?
ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்று புதிய முதலாளிகள் சொன்னது ஆதாரபூர்வமாக ஒலிப்பதிவாக உள்ளது. வேண்டுமானால் வெளியிடுவோம். இறுதியாக புதிய நிர்வாகம் சொன்னது, ஏப்ரல் மாத சம்பளத்தின் 50 வீதத்தை மே மாதம் 15 ஆம் திகதியும் (நாளை மறுதினம்), மிகுதி 50 வீதத்தை இம்மாதம் இறுதியிலும் தருவதாகவும், மே மாதம் 15 ஆம் திகதிவரை மட்டுமே தம்மால் சம்பளம் கொடுக்க முடியும் என்றும் (அதுவும் தமக்கு பணம் கிடைத்தால் மட்டும் ) மே மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் சம்பளம் கொடுக்கப்பட மாட்டாது என்றும் சொல்லப்பட்டது. அத்துடன் மே மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்னர் ஊழியர்களை சம்பளம் இல்லாமல் தொண்டு அடிப்படியில் வேண்டுமானால் வெலைசெஇயுமாரும் , அப்படி சம்பளம் இல்லாமல் வேலை செய்ய விருப்பம் இல்லை என்றால் விட்டுவிட்டு போகுமாறும் சொல்லப்பட்டது. ஊழியர்கள் சம்பளம் வேண்டும் என்று கேட்டால் நிறுவனத்தை வங்குரோத்து செய்துவிட்டு போய்விடுவோம் என்றும் மிரட்டினார்கள். அவையும் ஒலிப்பதிவாக உள்ளது.
அதிர்வு கண்ணனுக்கு வேண்டுமானால் பிரித்தானிய சட்டதிட்டங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பது தெரியும். அதிர்வு கண்ணனுக்கு வேண்டுமானால் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய முடியுமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படியல்ல. மச்சானுக்கு ஜால்ரா அடிக்க அதிர்வு கண்ணனுக்கு தேவையாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு தேவையில்லை.
மேற்படி இனியொரு கட்டுரையில் தீபம் தொடர்பில் கூறப்பட்ட விடையங்கள் எவையும் உண்மைக்குப் புறம்பானவை இல்லை. இதில் கூறப்படாத விடையங்கள் பலவும் நடக்கின்றன. உண்மைகள் இவைதான். அதிர்வு கண்ணனின் ஜால்ராக்கள்தான் பொய்யானவை.
புதிய முதலாளிகள் தீபத்தை மேற்கொண்டு நடத்த பல இடங்களிலும் பெருமளவு பணம் சேர்த்துள்ளார்கள். பழைய ஊழியர்களில் பெருமளவானோரை வெளியேற்றிவிட்டு தமக்கு நீண்டகாலமாக தெரிந்தொரை போட்டு நடத்த முயற்சித்தார்கள். பிரித்தானிய சட்டப்படி அப்படிச் செய்வதாயின், நீண்டகாலமாக வேலைசெய்யும் பழைய ஊழியர்களுக்கு குறிப்பிட்டளவு ரிடண்டன்சி பணத்தைக் கொடுத்தே அவர்களை வேலை நீக்கம் செய்யமுடியும். அப்படி ரிடண்டன்சி பணத்தைக் கொடுக்க புதிய முதலாளிகளுக்கு விருப்பமில்லை. வாய்ப் பேச்சின் மூலம் ஊழியர்களை வெளியேற்ற எத்தனித்தார்கள். அதற்கு ஊழியர்கள் எவரும் உடன்படவில்லை. காரணம், அனைத்து ஊழியர்களும் இந்த ஒரு வருமானத்தை மட்டும் நம்பியே இங்கு வாழ்கிறார்கள். குடும்பச்சுமை உட்பட பல பொறுப்புகள். ரிடண்டன்சி பணத்தைக் கொடுக்காமல் திடீரென வேலையை விட்டு நீக்கினால் அடுத்த வேலை கிடைக்கும்வரை அனைவருக்கும் பெரும் நெருக்கடி. அதனாலேயே ஊழியர்கள் ரிடண்டன்சி கொடுப்பனவில்லாமல் வேலையை விடமுடியாது எனக் கூறிவிட்டனர். அதற்குப் பழிவாங்கும் முகமாகவே இப்போது சம்பளத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து, ஊழியர்களை அவர்களாகவே ஓடச் செய்கின்றனர்.
இவை ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் புதிதாக சம்பளத்துக்கு ஊழியர்களை வேலைக்கமர்த்தும் நடவடிக்கைகளும் நடக்கின்றன. அவறிற்கும் ஆதாரங்கள் உள்ளன.
பழைய TTN தொலைக்காட்சி ஊழியர்களோடு பிரான்ஸ் , ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட்டங்களும் நடந்துள்ளன. இதற்கும் மேலாக லண்டனில் ஒரு நிறுவனத்துக்கு கடந்த வாரமா கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பவுண்ட்ஸ் கொடுத்து தீபம் தொலைக்காட்சியை IPTV இற்கூடாக ஒளிபரப்ப நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பழைய ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்றால், புதிதாக சம்பளத்து ஊழியர்களை வேலைக்கமர்த்த பணம் எங்கிருந்து வந்தது ? IPTV தொடங்க பணம் எங்கிருந்து வந்தது ?
திரைமறைவில் பல நடக்கின்றன. ஆரம்பத்தில் இருந்து ஒரே ஒரு பெண் ஊழியர் (கோமதி சுரேன்) மட்டும் புதிய முதலைகளின் கைப்பொம்மையாக இருந்து வந்தார். சென்ற வாரம் சம்பளம் கொடுக்கமுடியாது, விரும்பினால் தொண்டராக வேலை செய்யுங்கள் எனச் சொல்லப்பட்டபோது அந்தப் பெண் ஊழியர் மட்டும் தான் தொண்டராக வேலை செய்வதாக கூறினார். இப்போது பழைய ஊழியர்களில் மூன்று நான்கு பேர்களை மட்டும் தமது பக்கம் இழுக்கும் நடவடிக்கையை புதிய முதலாளிகள் செய்கிறார்கள். தமது நோக்கம் நிறைவேறும்வரை அந்த மூன்று நான்கு பேர்களை மட்டும் வைத்து தொலைக்காட்சி நின்று விடாமல் இருக்க விரும்புகிறார்கள். அவர்களின் அந்த நோக்கம், பழைய ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தமக்கு வேண்டியவர்களை உள்ளே கொண்டுவந்து தொலைக்காட்சியை நடத்துவது. அதற்கு அவர்களுக்கு ஒரு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்குத்தான் அந்த மூன்று நான்குபேரும் தேவைப்படுகிறார்கள். ஆனால் புதிய முதலாளிகள் விருக்கும் வலையில் கோமதி சுரேன் என்ற ஒருவரைத் தவிர வேறு எவரும் விழவில்லை. இவைதான் உள்ளே நடக்கும் உண்மைகள். இந்த உண்மைகள் தெரியாமல் எவரும் ஜால்ரா அடிக்கவேண்டாம்.
மேலதிக விபரங்கள் பின்னர் தொடரும்.
தீபம் தொலைக்காட்சியை வாங்கியது மக்களவை தான் என்பதும் உண்மையே.
உண்மை பெயரில் கருத்தை வெளியிடமுடியாமல் தீபம் தொலைக்காட்சி ஊழியர் என்ற பெயரில் வாய்க்கு வந்தபடி எழுதுவது என்ன நாகரீகம்.
கோமதி சுரேன் என்று கைப்பொம்மையாக செயற்படுகின்றார் பெயரைக்குறிப்பிடும் ஊழியரே உங்கள் மனத்தாங்கல்களை கொட்டித்தீர்த்து ஜால்ரா அடிக்கிறார். தீபம் தங்களுடையதே என்று நேயர்களுக்கும் வெளீயாருக்கும் போட்ட நாடகங்கள் உடைப்படப்பொகிறது என்ற மன அழுத்தம் உங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறது.
மக்களவையோ அல்லது பத்பநாபனோ என்று ஆராய்வு செய்யபோன உம்மைப்போன்ற ஊழியர்களால் தான் தீபம் தெருவுக்கு வந்துவிட்டது.
உங்கள்போன்ற உள்வீட்டு தகவல்களை உண்மைகளை உருட்டிபிரட்டி தீபத்தின் பெயர்கெடுக்க செயற்படும் ஊழியர்களை தெருவில் போடுவது நல்லது.
who is this deepam ‘ooliyar’? what the hell are you talking? dont you have guts to talk with your own name? there are internal structure in all the companies. if you expose all to out side, you cannot run a company. i think deepam is processing their own way to build the company in a different way. let them do it.
// let them do it.//
ஓம் ஓம் .. கனபேரை, வேலையால நிப்பாட்டியாச்சாமே. அதுவும் internal structure ஓ. புதிய தலைமுறைக்காறர் நோர்வேக்கு வந்து போனது எதுக்காம்?
அதுவும் internal structure ஓ..
சரி சரி .. மக்களின்ட காசுகளை கொள்ளையடித்ததும் internal structure ஓ
கேட்பவன் கேனயன் என்றால் ஓனான் ஏரோப்பிளேன் எண்டும் சொல்லுவீங்க நீங்க.
தீபம் தொலைக்காட்சி ஊழியர் தன் சுய நலத்துக்காக தன் மன வெம்பல்களை கொட்டி தீர்த்திருக்கிறார்.ஊழியர்கள் சம்பளம் வேணும் என்பதை கேட்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் அவரின் கருத்தில் அதுகுறித்து கருத்து வெளியிடதை விட மன வெம்பல்களே வெளித்தள்ளியிருக்கிறாது.அதற்குள் தீபம் என்றால் நான், நான் என்றால் தீபம் என்று பூச்சாண்டி காட்டி குடும்பத்தோடு சுரண்டி உழைத்து பிரித்தனியாவில் தீபத்தால் உல்லாச வாழ்வு வாழ்ந்து ..
அவர் இது மட்டுமல்ல இன்னும் எழுதுவார்.ர். இவையெல்லாம் போக போகிறது என்பதற்காக பொதுவாக தீபத்தின் பெயரால் கருத்து எழுதியிருக்கிறார்.அவ்வளவு தான்.
மேலும் தொடரும்
தீபத்தில் வேலை செய்த எல்லாரும் வேறுபாடுகளை மறந்து ஒன்றாக நிற்கின்றனர். இதுதான் ஒரு குடையின் கீழ் இணையுங்கள் என்று அவர்கள் சொல்வதோ?
Usual ignorant Tamil lumpens.
Someone from somewhere may going to land on mars but this stupids remain the same obviously, they convinced them self are clever,one like Kannan.
உலகத் தமிழருக்கு ஒரு தொந்தரவு – தீபம்