மீள் பதிவு: Published on: Oct 16, 2011 @ 21:32
பிரித்தானியாவில் உயர்கல்வி கற்கும் நோக்கோடு அங்கு செல்கின்ற இந்திய மாணர்வகளில் பலர் மேற்கு லண்டன் பகுதியிலுள்ள சீக்கியர்களின் கோவிலுக்கு உணவிற்காக வருகிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது. பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாடம் காரணமாக அங்கு பகுதி நேர வேலை பெற்றுக்கொள்வது சாத்தியமற்ற நிலையில் மாணவர்கள் வெளி நாட்டு மாணவர்கள் நாளாந்த உணவிற்கா சீக்கியர்களின் கோவில் இலவச உணவைப் பெற்றுக்கொள்வதற்காக பல மைல் தொலைவிலிருந்து கூட வந்து சேர்வதாகத்ச் செய்திகள் வெளியாகியிருந்தன. 2009ம் ஆண்டு இறுதியில் இத்தகவல்கள் வெளியாகியிருந்தன. இன்று இரண்டு வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் பல மடங்காக அதிகரித்துள்ளது.
குறிப்பாக 25 வயதிற்கு உட்பட்ட பிரித்தனியர்கள் கூட நிரந்தர வேலை பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலுல்ளனர்.
இந்த நிலையில் இலங்கையில் பேரினவாத ஒடுக்கு முறையில் கோரப்பிடியிலிருந்தும், பொருளாதார நெருக்கடியிலிருந்தும் தம்மை விடுவித்துக்கொண்டு வெளி நாட்டுக் கனவோடு பிரித்தானியக் கல்லுரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் வரும் மாணவர்களின் அவலம் பேசப்படுவதில்லை.
பலர் நாளந்தத உணவிற்கே வழியற்ற நிலையில் காணப்படுகின்றனர். தங்குமிட வசதியின்றி தவிக்கின்றனர்.
லண்டனில் கற்பதற்கு அனுமதி பெற்றால் வேலைவாய்ப்புப் பெற்றுக்கொள்வது இலகுவானதென்றும் பகுதி நேர வேலைசெய்து கல்விக் கட்டணத்தையும் வாழ்க்கைச் செலவையும் சீர் செய்து விடலாம் என்றும் கூறப்படுகிறது. இலங்கையில் இங்குள்ள கல்விக் கூடங்களின் முகவர்கள் தமது வியாபாரத்தை நடத்துவதற்காக மிகப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குகின்றனர்.
இப்போது பிரித்தானியாவிற்கு வருகின்ற மாணவர்களுக்கு 10 மணி நேரம் மட்டுமே வேலைசெய்வதற்கான சட்டரீதியான அனுமதி வழங்கப்படுகின்றது. 10 மணி நேர வேலையில் பெற்றுக்கொள்ளும் அடிப்படை ஊதியம் பிரையாணச் செலவுகளுக்கே போதுமானதல்ல.
இந்த நிலையில் சட்டவிரோதமாக வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறனர்.
இந்த அவலத்தைப் பயன்படுத்திக் கொள்கின்ற பிரித்தானிய தமிழ் வியாபாரிகள் இங்கு வரும் தமிழ் மாணவர்களை அரசால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியத் தொகையிலும் மூன்று மடங்கு குறைவான ஊதியத்தில் வேலைக்கு அமர்த்திக்கொள்கின்றனர்.
பொதுவாக தமிழர்கள் சொந்தமாக வைத்திருக்கும் உணவகங்களிலும், பலசரக்குக் கடைகளிலும் வேலைக்குச் சேர்ந்து கொள்ளும் மாணவர்கள் அங்கு அடிமைகள் போல நடத்தப்படுகின்றனர். பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இலங்கையில் கலாச்சாரம் சீர்ழிவதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் “தேசிய வியாபாரிகளும்” இதில் அடங்குவர் என்பது கோடிட்டுக் காட்டப்படவேண்டிய ஒன்று.
1) திருகோணமலையிலிருந்து கல்வி கற்கவந்த மாணவர் ஒருவரின் அனுபவம்:
நான் 2011 ஆரம்பத்தில் லண்டனில் ஆங்கிலம் கற்கும் கல்வி நிலையம் ஒன்றில் கற்பகற்கான அனுமதிக்கு இலங்கையிலுள்ள முகவர் ஊடாக விண்ணப்பித்திருந்தேன். லண்டனில் நீண்டகாலமாக வாழும் எனது உறவினர்களோடு தொடர்பு கொண்ட போது அவர்கள் தற்காலிகமாகத் தங்குமிட வசதியும் பயணச் செலவையும் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார்கள். கல்வி நிலையக் கட்டணம் மற்றும் முகவர்ருக்கான செலவுத் தொகை என 7000 பிரித்தானிய பவுண்ஸ் வரை செலவு ஏற்பட்டது. அம்மாவிடம் இருந்த நகைகளை விற்றும் ஒரு பகுதிப் பணத்தை கடனாக வாங்கிக்கொண்டும் கனவுகளோடு லண்டனில் வந்திறங்கினேன்.
வசதிகளோடு மன்னர்கள் போல வாழ்வதாகச் சொன்ன எனது உறவினர்கள் வீட்டுக்குச் சென்ற போது அவர்கள் நாளாந்த வாழ்க்கைக்கே அல்லல் படுவதை உணரக்க்கூடியதாக இருந்தது. சில நாட்களுக்கு உள்ளாகவே இலங்கையில் வாழ்பவர்களுக்கு இங்குள்ள நிலைமைகலை மறைத்து வசதியாக வாழ்வது போல நாடகமாடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் தமது 13 வது மகனோடு சிறிய வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். நான் சென்றதும் அச்சிறுவனோடு அறையிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. லண்டனுக்கு வந்த முதலாவது நாளிலிருந்து வேலை தேடுவதற்கு ஆரம்பித்து நான்கு மாதங்கள் கடந்து போய்விட்ட்டன. நான் அவர்கள் வீட்ட்லில் வாழ்வதற்கும் வசதி இல்லாத நிலையில் எனது நண்பர்கள் சிலரின் உதவியோடு அவர்கள் தங்கியிருந்த வீட்டில் எனக்கும் தங்க இடம் தந்தனர்.
ஒரு சிறிய அறையில் ஏழு பேர் தங்கியிருந்தார்கள். நான் எட்டாவது. தமிழர் ஒருவர் தான் அந்த வீட்டின் சொந்தக்காரர். அவர்களின் உதவியோடு நாம் தங்கியிருந்த வீட்டிலிருந்து 2 மணி நேரப் பிரயாணம் செய்யும் தொலைவில் தமிழர் ஒருவரின் பலசரக்கு அங்காடி ஒன்றில் வேலை கிடைத்தது.
முதல் நாள் வேலைக்குச் சென்ற போது கடை உரிமையாளர் மூன்று வாரங்கள் பயிற்சி தருவதாகவும் அந்தக் காலப்பகுதியில் ஊதியம் எதுவும் தர முடியாது என்றும் சொன்னார்.
உணவிற்கே பணம் இல்லாத நிலையில் பிரையாணச் செலவிற்கு எங்கே போவது? எனது நண்பர்களின் உதவியால் சிறு தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டேன்.
வேலை செய்ய ஆரம்பித்த முதல் நாளிலிருந்து நான் அனுபவிக்கும் வதைகளை இலங்கையில் கூட தொழிலாளர்கள் அனுபவிப்பார்களோ தெரியாது.
காலை எட்டு மணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டும். இரவு எட்டுமணி வரைக்கும் 12 மணி நேர வேலை. கடைகளில் சாமன்களை அடுக்குவதும், மூட்டை சுமப்பதும், சமான்களை விற்பதும் என்று ஓய்வற்ற வேலை. கடைக்குச் சென்ற உடனேயே கைத் தொலை பேசியை வாங்கி பூட்டி வைத்துவிடுவார்கள். யாரோடும் பேச முடியாது. கழிவறை வசதிகள் இல்லை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக உணவு அருந்துவதற்குக் கூட ஓய்வு தரப்படுவதில்லை. வேலையற்ற நேரங்களில் சக தொழிலாளர்களிடம் கூடப் பேசத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
கடையில் விற்பனை செய்யப்படுகின்ற சிறிய உணவுப் பண்டங்களை அங்கேயே வாங்கி உண்பதற்குத் தான் அனுமதி உண்டு.
இதெல்லாம் ஒரு புறமிருக்க பிரித்தானியாவில் அடிப்படை ஊதியம் மணிக்கு 6 பவுண்ஸ்கள். அங்கு வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படுவதோ மணிக்கு 2 பவுண்ஸ்கள் மட்டுமே. சராசரி மனிதனைப் போல் உணவருந்தினால் 6 பவுண்ஸ்கள் வரை தேவைப்படும். நாங்கள் பிஸ்கட்டுகளை மட்டுமே உணவாக உட்கொள்வோம்.
முன்று நாட்கள் வேலை. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்தாலும் 8 மணி நேரக் கணக்குப்படி 16 பவுண்ஸ்கள் மட்டுமே வழங்கப்படும். 3 நாள் வேலைக்கு 48 பவுண்ஸ்கள் கிடைக்கும். தங்குமிடம், உணவு போன்ற அடிப்படைச் செலவுகளுக்கு வாரத்திற்கு 50 பவுண்ஸ்களுக்கு மேல் தேவைப்படுகிறது. பிரையாணச் செலவு குறைந்தது 25 பவுண்ஸ்கள் செலவாகும்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இலங்கைக்குச் சென்று எனது பெற்றோருக்கு முன்னால் எப்படி நிற்பது. மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள்?
நான்கு மாதங்கள் தீவிரமாகத் தேடிக் கிடைத்த வேலையை விட்டு விலக முடியாது. இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
2) நான்கு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து லண்டனுக்கு முகாமைத்துவ கற்கைக்காக வந்த பெண் ஒருவரின் அனுபவம்:
நான் வந்த நாளிலிருந்து எனது அடிப்படைச் செலவுகளுக்காக வேலை தேடிய அலையாத இடமே கிடையாது. தற்செயலாகச் சந்திக்கின்ற நிறுவனங்களில் வேலை கேட்டி திருப்பி அவமானப்பட்ட சம்பவங்களும் உண்டு. இறுதியில் நண்பர் ஒருவர் ஊடாக தமிழர் ஒருவரை உரிமையாளராகக் கொண்ட பாஸ்ட் பூட் ஒன்றில் வேலை கிடைத்திருந்தது. 2 வாரங்கள் பயிற்சி என்ற அடிப்படையில் ஊதியமின்றி வேலை செய்யச் சொன்னார்கள் இரண்டரை பவுண்ஸ்களே 2 வாரங்களின் பின்னர் தருவதாகச் சொன்னார்கள்.
அதற்கும் மேலான அதிர்ச்சியாக, 50 வயது மதிக்கத் தக்க உரிமையாளர் என்னுடன் தவறாக நடக்க முற்பட்ட போது நான் வேலையை விட்டு அன்றே வந்து விட்டேன். எனது பகுதி நேர வேலைதேடும் படலம் தொடர்கிறது.
இவை இரண்டு உதாரணங்கள் மட்டுமே. நூற்றுக் கணக்கில் தமிழ் வியாபாரிகளால் பாதிக்க்ப்பட்ட தமிழ் மாணவர்களின் அவலங்கள் அவமானகரமான பதிவுகளாக எம் முன்னே நீண்டு கிடக்கின்றன. இவற்றிற்கு எதிராகக் குரல் கொடுக்க தேசியம் குறித்தும் கலாச்சாரம் குறித்தும் பீற்றிக்கொள்ளும் பிரித்தானிய தமிழர் அமைப்புக்களும் ஊடகங்களும் தயாரில்லை. இவ்வமைப்புக்களும் தமிழ் வியாபாரிகளின் கைகளிலேயே முடங்கியுள்ளன என்பது தான் இதன் பின்புலத்தில் பொதிந்திருக்கும் உண்மை.
காலை எட்டு மணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டும். இரவு எட்டுமணி வரைக்கும் 12 மணி நேர வேலை. கடைகளில் சாமன்களை அடுக்குவதும்இ மூட்டை சுமப்பதும்இ சமான்களை விற்பதும் என்று ஓய்வற்ற வேலை. கடைக்குச் சென்ற உடனேயே கைத் தொலை பேசியை வாங்கி பூட்டி வைத்துவிடுவார்கள். பிரித்தானியாவில் அடிப்படை ஊதியம் மணிக்கு 6 பவுண்ஸ்கள். அங்கு வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படுவதோ மணிக்கு 2 பவுண்ஸ்கள் மட்டுமே. சராசரி மனிதனைப் போல் உணவருந்தினால் 6 பவுண்ஸ்கள் வரை தேவைப்படும். நாங்கள் பிஸ்கட்டுகளை மட்டுமே உணவாக உட்கொள்வோம்.
அப்போதுதானே கடை முதலாளிகளின் வீட்டுப் பெண்கள் கழுத்து முறிய நகைகள் அணிந்து முதல்நாள் வெளியாகிய புடவை அணிந்து உலா வரலாம். முதலாளி பிஎம்டபிள்ளயூ வில் பவனி வரலாம். அடிக்கடி விமானங்களில் பநக்கலாம். வீட்டில் சமைக்க தேவையில்லை. சைனீஸ் பீடஸா என தொண்டைக் குழி வரை நிரப்பி விட்டு ஊரான் பிள்ளைகள் சாக காசைக் கொடுத்து விட்டு கால் நீட்டி உட்காரலாம். அன்பு மாணவர்களே இது தெரியாமல் லண்டன் வந்தீர்களே!
இதயம் அவர்களே! உங்களுக்கு இளைக்கப்படும் அநீதியை சொல்வதும் கேட்பதும் நியாமானது. உரிமைக்குரியதே. ஆனால் முதலாளியின் மனைவியின் நகை புடவை முதலியின் கார் இவை பற்றி பேசுவது தவறானது. நாம் ஒரு மனிதனின் வெளிப்புறத்தைப் பார்ததே பேசுகிறோம். அவர் கட்டவேண்டிய கடன் வட்டி ஏன் அவரின் பின்னால் இருக்கும் உழைப்பு இவற்றைப் பற்றியும் எண்ணுவது அவசியம் ஒருவன் ஒரு பரீட்சையில் சித்தி அடைந்ததும ஆகா ஓகோ என்று பேசியும் பொறாமைப்படும் மனிதர்கள் சித்தியடைந்த மாணவனின் பின்னால் இருக்கும் கடின உழைப்பை பயன்படுத்திய நேரங்களை எண்ணுவதில்லை. ஊரில் கடை நடத்துவது போல் இங்கே கடை நடத்த இயலாது. காரணம் ஒவ்வொரு பொருழுக்கும் வரி; தொழில்கொடுத்தால் கொடுக்கும் சம்பளத்தில் 10சதவீதம் வரி; போட்ட முதலுக்கு வரி; அழுகி எறியும் பொருட்கள் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது; கடைதுப்பரவாக இல்லை யென்றால் சீல் பண்ணுவார்கள். இப்படி 1008 சட்டங்களும் வரிகளும். நடத்திப்பார்த்தால் தெரியும். வெளியில் முதலாளி என்று சோ காட்டுவார்கள். உள்ளே கொஞ்சம் போய்பார்த்தால்தான் தெரியும் நீங்கள் எவ்வளவோ மேல் என்பது புரியும். உங்களுக்கு கறுப்பில் வேலை தந்து பிடிபட்டால் அவர் கட்டப்போகும் அபராதத்துக்கு பேசாமல் கடையைப் பூட்டி விட்டே போகலாம். நாம் எமது பக்கத்து நியாயத்தைப் பேசும் போது மற்றப்பக்கத்து நியாயங்களையும் எண்ணிப்பார்ப்பது அவசியம். அதற்கா 2பவுணுக்கு வேலை கொடுப்பது படுமோசமானது. முதலாளியுடன் நீங்கள் கதைத்துப்பார்ப்பது நல்லது.
பூ ஒரு வியாபரி என்று நினைக்குறன். இவரை போல் மனசாட்சி இல்லாதவர்களால் தான் மாணவர்கள் இந்த நிலமை. ஏன் வியாபாரிகள் பொருட்களை சும்மாவா விற்கிறார்கள்.
I escaped from London. The essay is entirely true. Most of the Tamil business guys thinks nothing but money. I’m back to Sri Lanka. Happy!
Good for you as long as they come looking for you.
ஐயா சமூகசேவையாளர் சசீதரன்! விடயத்தை பிரித்தானியா அரசிடம் எடுத்துச்செல்வதில் ஏன் இன்னமும் காலதாமதம் செய்கிறீர்கள்???
அடப் பாவி மவனே இப்பிடியுமா சமூகத்தில் மனிதர்க? மனிதரில் இத்தனை நிறங்களா??
ஆமா! தங்களிற்கு பிரச்சினைக்கு தீர்வு தேவையில்லை. அதைவைத்து அடித்தவர்கள் மீது சேறடிப்பதுதானே தங்களிற்கு தேவை.
ராகு! எத்தனை நிறங்கள். நீலம்; ஊதா கலர்களும் உண்டோ?
மனிதாபிமானமற்ற செயல் .சட்ட விரோதமான செயல் .மனித உரிமை மீறல்
Oh yeah? Who forced them to work there? These people have choice to work or not. If they cannot afford, why would they go there in the first place? Think outside the box “கவிஞர் இரா .இரவி”.
அப்பு!! நானும் இங்க இங்கிலாந்து வந்துதான் படிச்சனான். இங்கிலாந்து எண்டாலே “லண்டன்” நகரம் மட்டும்தான் எண்டு ஓடுற ஆக்களுக்கு இப்படிதான் நடக்கும். லண்டன், மன்செஸ்டர்(Manchester), கார்டிப்(Cardiff), பிரிஸ்டல்(Bristol), பிர்மின்காம் (Birmingham) போன்ற பெரு நகரங்களை விட்டு அழகான, அமைதியான, வாழ்க்கைச் செலவு (உணவு, உடை, உறையுள்) உட்பட வேலையும் இலகுவாக பெற கூடிய நகரங்கள் எவ்வளவோ உண்டு. நானும் இங்கே உள்ள கோயிலுக்கு போய் சாப்பிட்டனாந்தான் அதில வெட்கபட என்ன இருக்கு?? வேலையும் கிடைத்தது, கோயிலுக்கும் போனம் வீட்ட சமைக்க பஞ்சியில!!! உடனே “லண்டன்” தான் வேணும் எண்டால் இதுதான் நடக்கும்.
உங்கள் கருத்தில் எனக்கு உடன் பாடு இல்லை. லண்டனில் கல்வியை கற்று கொண்டு நீங்கள் சொல்லும் இடங்களில் வேலைக்கு எப்படி வேலைக்கு போறது.
இந்த நிர்மலன் பேச்சை கேட்டு பொலிசுக்கு சொன்னால் பாதிக்கப்படுவது மாணவர்களே. நிர்மலனின் நண்பர்கள் வேலையை விட்டு தூக்கி விடுவார்கள். இலங்கையில் இருந்து வருபவர்கள் இந்த கயவர்களை நம்பி ஏமாந்து போகவேண்டாம். கட்டுரைஇயிலேயே சட்டவிரோதமாக வேலை செய்கிறோம் என்று சொன்ன பிறகு பிரித்தானிய அரசுக்கு சொல்லட்டாம். இவர் மாதிரியானவர்கள் எமது சமூகத்தின் புரையோடிப் போன புண்கள்.
சட்டப்படியான 10 மணித்தியால வேலையை பிரித்தானியாவில் அடிப்படை ஊதியம் மணிக்கு 6 பவுண்ஸ்கள் படி செய்தால் 60 பவுண்ஸ் கிடைக்கிறது. சட்டத்தை மீறி இந்த அரக்கர்களிடம் 3நாள் 12 மணித்தியாலத்திற்கு வேலை செய்து உழைப்பது 48 பவுண்ஸ்கள்.
ஆனால் தாங்களோ அந்த மாணவர்களிற்கு பரிந்துரைப்பது 36 மணித்தியால வேலைக்கு 48 பவுண்ஸ்கள். ஐயா தபங்கள் எத்தனைகடைக்கு சொந்தக்காரர் எத்தனை மாணவர்களின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்கிறீர்கள்? இப்ப யார் சமூகத்தின் புரையோடிப் போன புண்கள் என்பது தெரிகிறதா!
நகுல் என்பவரின் கருத்திலுள்ள நியாயத்தையும் கவனியுங்கள்.
முக்கிய பிரச்சனைகளை தவிர்த்து அந்த பிரச்சனைகளை ,அதன் மூல வேரை ஆராயாது அதற்க்கான தீர்வை முன் வைக்காது எழுந்தமானமாக முடிவிற்கு வருவது எமது பண்பாகவே பழக்கப் பட்டு விட்டது.
இது மகிந்த மட்டும் தான் அல்லது புலிகள் மட்டும் தான் தமிழரின் இந்த நிலைக்கு காரணம் என்பது போல் உள்ளது.
பிரச்சனை 1://பிரித்தானியாவிற்கு வருகின்ற மாணவர்களுக்கு 10 மணி நேரம் மட்டுமே வேலைசெய்வதற்கான சட்டரீதியான அனுமதி வழங்கப்படுகின்றது.//
இந்த10 மணி நேரம் மட்டுமே சட்டத்திற்கு எதிராக ஏதாவது செய்ய முயட்சிப்பதுவே தீர்வு.
பிரச்சனை 2: இந்த அவலத்தைப் பயன்படுத்திக் கொள்கின்ற பிரித்தானிய தமிழ் வியாபாரிகள் இங்கு வரும் தமிழ் மாணவர்களை அரசால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியத் தொகையிலும் மூன்று மடங்கு குறைவான ஊதியத்தில் வேலைக்கு அமர்த்திக்கொள்கின்றனர்/////.
10 மணி நேரம் மட்டுமே என்ற சட்டத்திற்கு முதல் ஏதோ அரசால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியத் தொகை
வழங்கப் பட்டது என்று கூற முற்படுவது தவறு. தமிழ் வியாபாரிகள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் எவை?.எல்லாருமே தவறானவர்களா?அப்படியாயின் ஏன் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் ?அந்த மாணவன் வியாபாரியானால் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியத் தொகை தனது ஊழியர்கட்கு வழங்குவானா?
இந்த வியாபரிகள் வியபாரியாகமுன் தனது ஊதியமாக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியத் தொகை தான் பெற்றானா?
பிரச்சனை 3. லண்டனில் கற்பதற்கு அனுமதி பெற்றால் வேலைவாய்ப்புப் பெற்றுக்கொள்வது இலகுவானதென்றும் பகுதி நேர வேலைசெய்து கல்விக் கட்டணத்தையும் வாழ்க்கைச் செலவையும் சீர் செய்து விடலாம் என்றும் கூறப்படுகிறது.///
இந்த மாயையை தகர்த்து எறிவது எவ்வாறு ?எம் பங்கு என்ன?என்ன மாற்று வழி?
பிரச்சனை 4.
//இலங்கையில் இங்குள்ள கல்விக் கூடங்களின் முகவர்கள் தமது வியாபாரத்தை நடத்துவதற்காக மிகப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குகின்றனர்.//
இவர்களை தடுப்பது எவ்வாறு ?
இன்னும் பல கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.
வியாபாரிகள் மீது மட்டும் கையை காட்டுமுன்.
.
நகுல்,நிர்மலன்,
புள்ளி விபரங்களின் படி லண்டனைத் தவிர ஏனைய நகரங்கள் தான் வேலை இல்லா திண்டாட்டத்தால் அதிகமாகப் பாதிப்படைந்துள்ளன. 2 பவுண்சுக்குக் கூட வேலை இல்லை. வேலை இல்லாத் திண்ட்டாட்டம். அவ்வளவு மோசமானது. வாசகர்களுக்குப் பொய்யான தகவல்களைக் கொடுக்க வேண்டாம். கோயில் வியாபாரிகள், பலசரக்கு வியாபாரிகள் போன்றோர் இந்த சூழலை பயம்படுத்தி அப்பாவி தமிழ் மாணவர்களை சுரண்டுகிறார்கள் எம்பது தான் உண்மை. பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் இந்தக் கொள்ளையர்களின் தயவில் வாழ்வதால் அவர்களும் இதைப் பற்றிப் பேச மாட்டர்கள். இந்த அவலத்தை எங்கு சொல்வது?
வேலையில்லாத்திண்டாட்டத்தை வைத்து இரக்கமற்ற கடைக்காரர்கள் 216 பவுண்ஸ் வேலையை 48 பவுண்ஸ் கொடுத்துப் பெறுகிறார்கள் கிட்டத்தட்ட 4 மாணவர்கள் சட்டப்படி பெறவேண்டியவேலை நேரம் சம்பளத்தை ஒருவரை அடிமாடாக வைத்து ஏய்த்து பணம்சம்பாதிக்கிறார்கள் இரக்கமற்ற கடைக்காரர்கள்.தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் இந்தக் கடைக்காரர்களால்தான் வேலையில்லா பிரச்சினை மூன்று மடங்காக அதிகரிக்கிறது(4பேரின் வேலையை ஒருவரை வைத்து செய்விப்பதால்). இதை இங்கு பேசுவதால் மட்டும் தீர்வு கிடைக்குமா! விடயத்தை அரசிடம் கொண்டு செல்வதன் மூலம் தீர்வு கிடைக்குமா!
பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் என்ன பிரித்தானிய அரச இயந்திரமா இவ்விடயத்தில் தலையிட??? இவர்கள் இதில் தலையிட்டால் புலிகளின் சர்வாதிகாரமென்ற பிரச்சார துரும்பு கிடக்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறீர்களா!
இங்கு கடைக்காரர் மட்டும் தான் கருத்து எழுதுவதாகத் தெரிகிறது. மாணவர்களும் எழுதலாமே?
minimum salary determined by the british gov is £6. i have lots of friends working for tamil bosses, the maximum salary that ive heard is £3.50 from a tamil guy. if the business guys have guts just tell me who is giving the official minimum?
EXACTLY!
THIS IS NOTHING TO DO WITH 10 மணி நேரம் மட்டுமே , AND NOT ONLY FOR STUDENTS, IT IS APPLICABLE TO WHOEVER DON’T HAVE WORK PERMIT OR VISA OR ON THE DOLL. AS WELL.
ie:illegal Below minimum wage for
illegal working hours.
IT IS NOT only ONE WAY mistake
. both side mistakes.
to fight for the rights, we should respect those rights.IT is applicable to our Tamils struggle as well.
நியாயம் சொல்லுற தமிழ் அண்ணைமார்!
கோபுரம் இல்லாத பெரிய மண்டபத்தைக் கட்டி,கர்ப்பக்கிரகத்தில,பெரிய சமையலறையைக் கட்டி,பிரபல நடிகையின் பெயரோட அம்மன் கோவில் எண்டு பேரிட்டு,உந்த தூண் ஒவ்வொண்டிலும் தமிழ் பெரிய ஆக்களிட பேர் எழுதி,/’கோனார் உபயம்” எண்டு போட்டா,வருமானம் பின்னும்.
மாணவர்களின் சாப்பாட்டு பிரச்சினை தீரும். மாணவர்கள் தங்கிட கொஷ்யன் பேப்பரை,கோவில் உண்டியலில போடலாம்.கேள்விப் பேப்பர் மாத்தாத கல்லூரிகளில் படிச்சு பாஸ் பண்ணிறதும்,இதனால ஈஸியா இருக்கும்..இதுதான் நடைமுறைத் தீர்வு.
உந்த அம்மன் கோயில சாரிட்டியா ரெஜிஸ்டர் பண்ணி விட்டா,உந்தக் கடையள வைச்சு மாரடிக்கவும் வேண்டாம்.கடைக்காரரும் ஒருக்கா திங் பண்ணிப் பாருங்கோ.
ரைட்-லெப்ட்;ரைட்-ரோங்;லீகல்-இல்லீகல் எல்லாம் பிறகு பாப்பம்.
பூ!! முதலாளி வாங்குகிற கடன் வட்டி வரி எல்லாவற்றிற்கும் எங்கிருந்தோ வந்த இந்த மாணவர்களா பொறுப்பு? கடன் வாங்கி வட்டி வரி கட்டி அடுத்தவர் உழைப்பையும் சுரண்டி எதற்கு சோ காட்ட வேண்டும்?
இவா்களில் அநேகமானவா்களால் ஒழுங்காக ஒரு வேலை செய்யமுடியாததாலும் அதிகம் உளைத்துவிடவேண்டும் என்ற வெறியாலும் முதலாளி என்று நான்கு மடையா்கள் அழைக்கவேண்டும் என்ற ஆசையாலும் கடன்பட்டோ பிச்சை எடுத்தோ அல்லது கடன் அட்டை மோசடி செய்தோ கடை நடத்தி துன்பப்படும்படி யார் கேட்டார்கள் ??
அகதியாக வந்தவா்கள் மனிதத்தை இழந்து அடிமைகளாக தன் இனத்தவனையே வைத்து துன்புறுத்துவதற்கு எந்த நியாயப்படுத்தலும் இருக்கமுடியாது.
தேவன்2,
இது வெறுமனே 10 மணித்தியால வேலை என்ற சட்டப்பிரச்சனை மட்டும் அல்ல! தமது இருப்புக்காகவும், வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் வியாபாரிகள், முகவர்கள், சமூகத்தின் இழிவான சிந்தனைகள் என்ற அனைத்தும் இணைந்து நடத்தும் பகற் கொள்ளை. இந்தப் பகற்கொள்ளைக்கு அடிமைகளாகப் பயன்படுத்தப் படுவோர் இலங்கையிலிருந்து கனவுகளோடு வரும் அப்பாவி மாணவர்கள். இத்தனைக்கும் இந்த திருட்டு வியாபாரிகள் சமூகத்தைப் பற்றி வேறு பேசுகிறார்கள். தொழில் அதிபர் என்ற அந்தஸ்து, மேடை, மைக்… . முதலில் பத்து மணித்தியால வேலை என்பதே சுரண்டல் என்பதை பிரித்தானிய இடது அமைப்புக்கள் பல தடைவைகள் சுட்டிக் காட்டியது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைப் போலும்.வன்னிப் படுகொலையின் இரத்தச் சுவடுகளோடு பிரித்தானியாவிற்கு வரும் மாணவர்களின் பக்கத்திலிருந்து சிந்தியுங்கள். இவர்கள் மீதான வன் முறைகள் சமூக அங்கீகாரம் பெறுகின்றது. இனிமேல் இது அவமானமாகக் கருதப்பட வேண்டும். அகதிகளாக வந்தவர்கள் மாணவர்களாக வருபவர்களை வருத்துவது நிறுத்தப்பட வேண்டும். இனிமேல் அடிமைகளாக நடத்தப்படும் மாணவர்களைக் கண்டால் அவர்களுக்கு உதவிசெய்வதற்கு சமூகம் முன்வர வேண்டும். இலங்கையிலிருக்கும் மாணவர்களும் பெற்றாரும் இங்குள்ள நிலைமையை உணர்ந்துகொள்ள வேண்டும்
மாணவர்களின் பக்கத்திலிருந்து சிந்தியுங்கள்/// + அகதிகளாக வந்தவர்கள் மாணவர்களாக வருபவர்களை வருத்துவது நிறுத்தப்பட வேண்டும்/// இந்த குறைந்த ஊதியம் மாணவர்கள் மீது மட்டும் தான் அல்ல. 10 மணி நேரம்/week மட்டுமே என்ற சட்டத்திற்கு முதல் ஏதோ அரசால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியத் தொகை
வழங்கப் பட்டது என்று கூற முற்படுவது தவறு. அதாவது இந்த குறைந்த ஊதியம் மாணவர்கள் மீது மட்டும் தான் அல்ல. ajith!
இந்தக் கருத்தில் முரண் படுகிறீர்களா?
வன்னிப் படுகொலையின் இரத்தச் சுவடுகளோடு////வேண்டாம் இந்த மனிதாபிமான சொற்பதங்கள்.வன்னிப் படுகொலையின் இரத்தச் சுவடுககள் இன்றி வரும் மாணவனிட்கு குறைந்த ஊதியம் என்பதுவும் தவறே.
ajith! உங்கள் முதன்மைப்
பிரச்சனை மாணவர்களாக வருபவர்களை வருத்துவது நிறுத்தப்பட வேண்டும்: லண்டனில் கற்பதற்கு அனுமதி பெற்றால் வேலைவாய்ப்புப் பெற்றுக்கொள்வது இலகுவானதென்றும் பகுதி நேர வேலைசெய்து கல்விக் கட்டணத்தையும் வாழ்க்கைச் செலவையும் சீர் செய்து விடலாம் என்றும் கூறப்படுகிறது.///
இந்த மாயையை தகர்த்து எறிவது எவ்வாறு ?எம் பங்கு என்ன?என்ன மாற்று வழி?
தீர்வு1:
இலங்கையிலிருக்கும் மாணவர்களும் பெற்றாரும் இங்குள்ள நிலைமையை உணர்ந்துகொள்ள வேண்டும்.
///
திருட்டு வியாபாரிகள் சமூகத்தைப் பற்றி வேறு பேசுகிறார்கள். தொழில் அதிபர் என்ற அந்தஸ்து, மேடை, மைக்///
லண்டனில இன்னொரு பிரச்சனை இப்ப தலை தூக்கி இருக்குது.
இது.. குடிவரவுத்துறையும்.. கல்வி நிறுவனங்களும்.. முகவர்களும் சேர்ந்து செய்யுற திருவிளையாடல்.
குடிவரவைக் கட்டுப்படுத்திறம் என்ற போர்வையில்.. சில காலமாக.. தர நிர்ணயம் வழக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மட்டுமே வெளிநாட்டு மாணவர்களை வரவழைக்க முடியும். அந்த நிறுவனங்கள் அடங்கிய பட்டியலை.. பிரித்தானிய எல்லை முகவர் நிலையம் நாளுக்கு நாள் அப்டேட் செய்து வெளியிடும். அப்படி செய்யும் போது.. சில கல்வி நிறுவனங்கள் திடீர் என்று அதிலிருந்து காணாமல் போக.. கல்லூரிகளை இழுத்து மூடிவிட்டு.. எல்லோரும் ஓடிவிடுகிறார்கள். மாணவர்கள் நடுவீதியில் கட்டிய காசையும் இழந்து நிற்கிறார்கள்.
இன்னும் சில நிறுவனங்களோ.. கல்லூரிக்கு ஆட்களை எடுக்க முகவர்களை நியமித்துவிட்டு.. அவர்களுக்கு வழங்கும் காசையும்.. மாணவர்களிடம் கல்விக்கட்டணமாக அறவிடுகிறார்கள். அப்புறம் என்ன.. கல்லூரியை எல்லை முகவர் நிலையம் மூடச் சொல்லி விட்டதாகக் கூறி.. ஓடிவிடுகிறார்கள்… அல்லது எல்லை முகவர் நிலையம் புதுக்கட்டுப்பாட்டைப் போட்டுள்ளதால்.. உங்களுக்கு விசா நீட்டிப்புக்கான CAS இலக்கத்தை தர முடியாது என்று சொல்லி மாணவர்களை விரட்டி அடிக்கும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இப்படிப் பாதிக்கப்பட்ட பல மாணவர்கள்.. கட்டிய காசை திருப்பிக் கேட்டால்.. கல்லூரியைக் காட்டி விசா எடுத்து விடுவதால்.. அல்லது விசாவுக்கு விண்ணப்பித்து விட்டதால்.. காசு தரப்படமாட்டாது என்றும்.. அல்லது நாட்டுக்கு திரும்பிப் போய் அதை உறுதி செய் தருகிறோம் என்று எல்லை முகவர் நிலைய முகவர்கள் போல.. கல்வி நிறுவனங்கள் செயற்பட்டு மாணவர்களிடம் காசை பறித்துக் கொண்டு விரட்டி அடிக்கிறார்கள். என்ன இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால்.. குட்டிக் குட்டியான எழுத்தில் பந்தி பந்தியாக அச்சிடப்பட்டுள்ள.. ரேம்ஸ்.. அண்ட் கெண்டிசனில (Terms and conditions) போட்டிருக்கு என்று சொல்லி விடுகிறார்கள்.
இப்படி பாதிக்கப்பட்ட பல வெளிநாட்டு மாணவர்களை குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் வராத நாடுகளைச் சேர்ந்த மாணவர்களைக் காண முடிகிறது.
பிரிட்டன்.. வெளிநாட்டு மாணவர்களையும்.. அவரவர் நாடுகளுக்கு ஏற்ப தரம் பிரித்து வேறுபடுத்தி கையாள்கின்ற.. அடிப்படை உரிமை மீறல் செயலையும் செய்து வருகிறது. அண்மைக் காலமாக.. Highly Risk மாணவர்கள் வரும் நாடுகள் பட்டியலில் சிறீலங்காவும் இடப்பட்டு கெடுபிடிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இத்தனைக்கும் சிறீலங்காவில் இருந்து வெறும் 10,000 மாணவர்களுக்கே பிரிட்டன் ஆண்டுக்கு பிரித்தானியாவுக்கு வர விசா வழங்குகிறது. இதுவே சீன.. இந்திய மாணவர்களுக்கு மிகப் பல ஆயிரமாக உள்ளது.
அண்மையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட 400 க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள்.. பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்படும் தமிழ் மாணவர்கள்.. அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்துவிட்டும்.. இருக்கிறார்கள். இன்னும் சிலர் செய்வதறியாது அலைந்து திரிகிறார்கள்.
பிரித்தானியா.. இப்போது.. மோசடிகள் அதிகம் நடக்கும் நாடாக மாறி வருகிறது. கல்லூரிகள்.. கல்வி நிறுவனங்கள்.. அவற்றின் பிராந்திய.. நாடுகளுக்கான முகவர்கள்.. மற்றும் எல்லை முகவர் நிலையம்.. எல்லாமே கூட்டு மோசடி செய்கின்றன.
எதிர்காலத்தில் பிரித்தானியாவிற்கு கல்வி கற்க வர விரும்புபவர்கள்.. Highly trusted கல்வி நிறுவனங்களில் அனுமதி பெற்று மட்டும் இருங்கு வர வேண்டும். அவர்களிலும் பட்ட மேற்படிப்புக்கு வருபவர்கள் மட்டுமே குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர முடியும். மற்றவர்களுக்கு முடியாது.
மேலும்.. அரச உதவி பெறும் Highly trusted பல்கலைக்கழகங்கள் தவிர வேறு எங்கு கல்வி கற்றாலும்.. எனி வேலை செய்ய அனுமதி தரமாட்டார்கள். இது கடந்த யூலை 4 இல் இருந்து அமுலிற்கு வந்துள்ளது.
மேலும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வோருக்கான வேலை நேரமும் வாரத்திற்கு 10 மணித்தியாலமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வேலை செய்து கொண்டு படிக்கப் போறன் என்ற கனவில எனி பிரித்தானியாவிற்கு வர வேண்டாம்.
அதுமட்டுமன்றி படித்த பின் பட்டம் பெற்ற பின் வேலை தேட என்று வழங்கப்பட்டு வந்த 2 ஆண்டு கால Poststudy work visa (PSW) எனி மேல் இல்லை. இது சமீபத்தில் இருந்து அமுலுக்கு வந்துள்ளது.
சட்ட ரீதியான குடிவரவை கட்டுப்படுத்தும் நோக்கோடு இது கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால்.. களவா அகதியா வந்து.. பொய் சொல்லி உட்கார்ந்து கொண்டால்.. கூப்பிட்டு வைச்சு நிரந்தர வதிவிட விசா கொடுக்கிறாங்கள். ஒரு சிலருக்கு மட்டுமே அது கடினமாக உள்ளது (சிறீலங்காவில் நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளதாக அதற்கு காரணம் சொல்கிறார்கள்.). அடிப்படை ஆங்கில அறிவு கூட இல்லாதவர்கள் பலருக்கு அரசியல் தஞ்ச ரீதியில் விசா மற்றும்.. பிரித்தானிய கடவுச்சீட்டுக் கூட வழங்குகிறார்கள்.
ஆனால் மாணவர்களுக்கும்.. வேலை தேடுவோருக்கும்.. பிற சட்ட ரீதியான குடியேற்றக்காரர்களுக்கும்.. சலுகைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. மேலும்.. பிரிட்டனின் வருமானத்தில் 3ம் இடத்தை வெளிநாட்டு மாணவர்களின் வரவின் மூலம் பெறும் பணமே பிடித்து நிற்கிறது. பிரிட்டனின் வருமானத்தில் 3 பில்லியன் பவுன்கள் வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கிடைக்கிறது.. ஆண்டுக்கு. ஆனால்.. அந்த மாணவர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட வழங்க மறுக்கிறார்கள்.
எதிர்காலத்தில் வெளிநாட்டு உயர்கல்வி பெற விரும்புவோர்.. பிரிட்டனை தவிர்த்து.. இந்தியா.. அவுஸ்திரேலியா.. நியூசிலாந்து.. சிங்கப்பூர்.. கனடா.. அமெரிக்கா.. ஜேர்மனி.. சுவீடன்.. நோர்வே.. பின்லாந்து.. மற்றும் ஹங்கேரி.. செக்.. போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நாடுவது நல்லது.
இப்பாவிகளின் வாழ்விலும் விளையாடும், பணத்துக்காக பிணத்தையும் தின்னும் எம் வர்த்தக பெருந்தகைகள் …
…. அண்மையில், .. சவுத்ஹரோவில் இருக்கும் “சம்பல் எக்ஸ்பிரஸ்” இல் பல இப்படி வந்த இளைஞர்கள் பகுதி நேரமாக வேலை செய்கிறார்கள், படித்துக் கொண்டு! அதில் ஓர் இளைஞன் உண்மையிலேயே பகுதிநேரமாகவே வேலையும் (இங்கு வெளிநாட்டு மாணவர்கள் 16ஓ 20 மணித்தியாலம்தான் வேலையும் செய்யலாம் என்ற கட்டுப்பாடும் உள்ளது) செய்து கொண்டிருந்திருக்கிறான். ஆனால் சாப்பாட்டுக்கடை நிர்வாகமோ, வேறு ஒருவர் வேலை செய்யும் சம்பளத்தையும், இவ்விளைஞனின் பெயரிலேயே தானாம் புக் பண்ணி கொடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். … அவனின் கெட்டகாலம் வீட்டுக்கந்தோர் பாய்ந்து விட்டது, பாவம் … அவனின் படிப்பு/கனவுகள்/எதிர்காலம் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு … வீட்டுக்கந்தோர் பிடித்து அனுப்பி விட்டார்கள்!!!
… இப்படி பல சம்பவங்கள் … வேலையை வாங்கி விட்டு சம்பளம் கொடுக்காத/கனக்க கதைத்தால் காட்டிக்கொடுப்போம் என்று மிரட்டும்/…. எம் வர்த்தக பெருந்தகைகளும்,!!
ilctamil என்ற வானொலி தமிழ் வர்த்தகர்களின் பெருமையையும் ,காருண்யத்தையும் பரப்பி வருகிறது.அவர்களது சுலோகம்
“தமிழ் வர்த்தகர்களின் வளர்ச்சி தமிழ் இனத்தின் வளர்ச்சி “யாம்.
குத்தாட்ட நிகழ்ச்சி இந்த மாதம் நடாத்த்கிரார்கள்.கண்டிப்பாக தமிழ் இன வளர்ச்சிக்கு பாடுபடுபவர்கள் திரள் திரளாக வரவேணும் என்று ஆசைப்படுகிறார்கள்.
போகாதவர்களை தமிழ் இன துரோகிகள் என்று சொல்லிவிடுவார்கள்.பார்த்து செய்யுங்கள்.
கழிவறை வசதி இல்லை என்று சொல்வது மிகைப்படுத்தப்பட்ட செய்தி. கழிவறை இல்லையென்றால் இங்குள்ள சுகாதார திணைக்களம் தொழில் செய்ய அனுமதிக்காது.
கறுப்பில் சம்பளம் கொடுக்கும்போது கடைக்காரரும் அதில் பாதிக்கபடுகிறார். ஆனால் 2 ப்வுண்ஸ் என்பது மிக குறைவு 4-5 பவுண்ஸ் கொடுத்தால் இருவருக்கும் சமப்படுத்தப்படும்.
கனவுகளோடு வருகின்ற இந்த மாணவர்களின் வாழ்க்கை கனவுகள் கானலாக எவ்வாறான துன்பத்தை அனுபவிக்கின்றார்கள் அவர்களுடன் உரையாடினாலே தெரிந்துகொள்ளலாம். கடந்தசில வருடங்களாகவே கோயில்களில் மதிய உணவுக்காக முண்டியடிக்கும் இவர்களை தம்மை பிரிட்டனில் முன் தோன்றி மூத்தகுடியினராக கருதிக்கொள்ளும் பிரஜாஉரிமை பெற்ற தமிழ்மக்கள் ஒருவிதமான வேண்டத்தகாத பிரகிதிகள் போலவே கருதிக்கொள்வதை காண்லாம். சில கோயில்களில் மாணவர்களை மதிய உண்வுக்கு வராமல் எவ்வாறு தடுப்பது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டிருக்கின்றது. ஒருபுறம் யூதர்களும் ஈழதமிழரும் ஒரேமாதிரியானவர்கள் என்று சுயபெருமை பேசியபடியே இந்தமாணவர்களின் உழைப்பை தமிழ்வியாபாரிகள் அட்டைபோல் உறுஞ்சுகின்றனர். இந்த ஈனத்தனத்தை சுட்டுகின்றபோது எல்லாவியாபாரிகளும், கோவில்காரரும் ஒரே குரலில் எதிர்ப்பதை மேலே உள்ள பின்னூட்டங்கள் வெளிப்படுத்துகின்றன. சிலர் டேவிட் கமரூன் ரேன்ச்சுக்கெல்லாம் போய் பிரச்சனையை பிரித்து மேய்கிறார்கள். மாண்வர்களை விடயம் தெரியாமல் இங்கு அனுப்பிவைக்கும் பெற்றோர்களுக்கெல்லாம் ஆலோசனை சொல்கிறார்கள். கலவரத்தில் ஈடுபட்ட சிறுவர்களின் பெற்றோருக்கு டேவிட் கமரூன் ஆலோசனை சொனனது போலவே. பொதுவான தொனியில் அவர்கள் குறைப்பட்டுக்கொள்வது சும்மா எதெற்கெடுத்தாலும் தமிழ்வியாபாரிகளை குறைசொல்லக்கூடாது. வியாபாரிகளினுடைய பக்கத்தையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதுதான். அடங் கொக்கா மக்கா என்ன உலகமடா இது.
முக்கிய பிரச்சனைகளை தவிர்த்து அந்த பிரச்சனைகளை ,அதன் மூல வேரை ஆராயாது அதற்க்கான தீர்வை முன் வைக்காது எழுந்தமானமாக முடிவிற்கு வருவது எமது பண்பாகவே பழக்கப் பட்டு விட்டது.
இது மகிந்த மட்டும் தான் அல்லது புலிகள் மட்டும் தான் தமிழரின் இந்த நிலைக்கு காரணம் என்பது போல் உள்ளது.
எங்கள் கனவுகள் கலைவதற்கு நாம் எப்போதான் பொறுப்பு எடுக்க போறோமோ அன்று தான் எம் இனத்திற்கே விடிவு
கனவுகளோடு வருகின்ற இந்த மாணவர்களின் //
அந்த கனவுகளில் இந்த மாணவர்களின் உழைப்பை தமிழ்வியாபாரிகள் அட்டைபோல் உறுஞ்சு மாட்டார்கள் என்றும் ஒரு கனவு. அடங் கொக்கா மக்கா என்ன உலகமடா இது.
எங்கள் கனவுகள் கலைவதற்கு நாம் எப்போதான் பொறுப்பு எடுக்க போறோமோ அன்று தான் எம் இனத்திற்கே விடிவு. இதை இனிவரும் மாணவ சமூகதிட்காவது சொல்லிக் கொடுப்போம்.நம் கனவுகள் கலைந்ததிட்கு மற்ற காரணிகள் மீது “மட்டும்” குறை கூறுமுன்.
வியாபாரிக்கு ” 10 மணி நேரம் மாணவனும்” இன்னுமொரு உழைப்பாளி மட்டுமே .10 மணி நேரம் ,முழு நேரம் , விசா இல்லாதவன் எல்லாமே ஒன்றுதான். குறைந்த ஊதியம், மற்றும் சில போக்குகள் என்பது தொடர்ந்து இருக்கும் ஒரு பிரச்சனை.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு தான் “10 மணி நேரம் மாணவனுக்கும்” தீர்வாகும்.
பிரச்சினையின் மூலவேரை ஆய்வு செய்வதெல்லாம் நல்ல ஆரம்பம்தான். அதற்குரிய தளம்தான் இனியொரு. எந்த ச்மூகத்திலும் பலகீனமான நிலையில் உள்ளவர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிக்கெதிரான தார்மீக கோபம் வேண்டுமே. “அந்த மாணவன் வியாபாரியானால் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியத் தொகை தனது ஊழியர்கட்கு வழங்குவானா?”
“இந்த வியாபரிகள் வியபாரியாகமுன் தனது ஊதியமாக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை ஊதியத் தொகை தான் பெற்றானா?”
நாயகன் கமல் பாணியில் அவனை நிறுத்தச்சொல்லு. நான் நிறுத்துகின்றேன் என்று வியாபாரிகள் சொல்லுகின்ற நியாயத்திலிருந்து எவ்வாறு மூலவேரை ஆய்வுசெய்வது. பேசாமல் ஆதாரங்களுடன் காவல்துறையை நாடினால் என்ன? என்று சில வியாபாரிகள் கபடத்தனமாக பேசுகின்றார்கள். இந்த அமைப்பின் எந்தவகையான சட்டரீதியான உதவிகளையும் பெற்று கொள்ளமுடியாத நலிந்த பிரிவினர் என்று தெரிந்துகொண்டிருப்பதனால் வருகின்ற எக்காளம் அது. உலக மயமாக்கப்பட்ட நவதாதாராள பொருளாதார அமைப்பில் நலிந்தவர்களுக்கு கனவுகள் மட்டும்தான் விஞ்சுகிறது. பிரித்தானியாவிலே வறியபகுதிகளில் வளருகின்ற சிறுவர்களுக்கு ஊடகங்களிலே காட்சிப்படுத்தப்படுகின்ற வண்ணமயமான இலத்திரனியல் சாதனங்களையோ, வண்ண மயமான வாழ்க்கையோ பெற்றுக்கொள்வதற்கான எந்தவாய்ப்புக்களும் அற்ற நிலையில்( அன்றில் ஒருவர் உதைபந்தாட்ட வீரராக, பாடகராக வெற்றிபெற்றால் மட்டும்) அதனை பெற்றுக்கொள்ள லும்பன் களாக சமூகவிரோதசெயல்களிலும், கலவரத்திலும் ஈடுபடுகின்றார்கள். எமது நாட்டில் மணியோடர் பொருளாதாரம் மூலம், புலம்பெயர்ந்தோரும் விதைக்கின்றனர். வேலையில்லாபிரச்சினை, இனவொடுக்குமுறை எல்லோருக்கும் தெரிந்தவிடயம்.
ஈழ விடுதலைப் போரில் பாதிக்கப்பட்டு சிங்கள வெறி கொண்ட நாயிடம் இருந்து உயிர் காக்க தப்பி வந்து அவஸ்தைப் படுகின்ற எங்கள் தமிழ் உறவுகளை சரியான முறையில் இனம் கண்டு அவர்களுக்கும் நல்லதொரு வாழ்வழிக்க வர்தக தமிழ் உறவுகள் மனம் வைத்தால் முடியும்.உங்கள் இன உறவுகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
கிழக்கு இலன்டன் பகுதியில் என்னுடடைய மருமகன் ஒரு கடையில் வேலை செய்கிறார். அவர் ஒரு அமைப்பின் பிரமுகர், பிள்ளையார் கோயில் பிசினஸ் வேரு நடத்துகிறார். அவரது சுப்பர் மார்க்கட்டில் சம்பளம் 3 பவுண்ஸ். திட்டோ திட்டென்று திட்டுவாராம், கை தொலைபேசியை பூட்டி வைத்து விடுவார். கமராவில் பார்த்துக்கொண்டிருப்ப்தாக சொல்லி மிரட்டுவார். தலைவாரமல் வந்த ஒரு மாணவனை சீப்பு வாங்கி வரச்சோல்லி அனுப்பினார்.
இந்த விசா. இல்லாத. மற்றும். மாணவர்கள். இல்லை என்றால். எமமவரல். அடிப்படை. சம்பளம். கூட கொடுத்து. கடை. நடத்த. முடியுமா ஆக. அவர்களுக்காக. நிங்கள் வேலை. கொடுப்பது. என்று.சொல்லவேண்டாம் உங்களாலும். ( முதலாளி. ). சட்ட. புர்வமாக. தொழிலாளி. அமர்த்த. உங்கள். பொருளாதாரம். இடம். கொடுக்காது.
Really the student don’t like to work on out side cities. because i am work in one of the company as a Manager.still we are looking for a staff. we normally pay them 6.30 per hour. I try to appoint our country people but they don’t like to work on out side London. first change that mentality. if u have visa and working hours.then u can get good job in outside.
Dear Mr Manager please let us know the job details like where, who and how to contact. We are looking for such good paying jobs, a bunch of us will be at your doorstep tomorrow.
Dear friends you can contact me through this email.for ur all inquires about your job,
manager.shell4030@gmail.com
Well done, Tharan.
பலப்பெயர்வு வாழ்வு குறித்து விரிவாக எழுதவேண்டிய தேவை உள்ளது. புலப்பெயர்வின் பல்வேறு பரிமானங்களும் வெளியாக வேண்டும். புலம் பெயர் தமிழர்கள் தங்கள் நிலை குறித்து சரியான முடிவகள் எடுக்கவும் புலம் பெயர விரும்புவர்களுக்கு வழிகாட்டவும் இது அவசியமானது. இலங்கையில் – வட கிழக்கில் புலப்பெயர்வு குறித்து பெரும் கனவு கட்டமைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு அவுஸ்திரேலிய சென்றவர்கள் கூட உழகை;கிறார்கள் – பணம் சம்பாதிக்கிறார்கள் – நாட்டுப் பிரச்சினை இன்றி இருக்கிறார்கள் என்றெ கருதப்படுகிறது. கதைக்கப்படுகிறது.
விஜய் சொல்வது சரி தாம் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் எனப் படம் காட்டுவதற்காக வெளி நாட்டுல் வாழ்பவர்கள் கட்டமைக்கும் விம்பமும் இதற்குக் காரணம். இது ஒரு இரும்புத் திரை. அடிமைகள் போல வாழும் இவர்களுக்கு மகிழ்ச்சி கிடையாது. அடிமைகள் போல 30 வருடங்களாக வேலை செய்யும் இவர்கள் வாழ்க்கை முழுவதும் வங்கிக்கும் பண நிறுவனங்களுக்கும் கடனாளிகள். பெரும்பாலானவர்கள் துறைசாரா வேலைகளையே செய்கின்றனர். புதிதாக வருகின்றவர்களின் நிலை பெரும் அவலஙகள் நிறைந்தது.