இன்று சட்டத்தரனி உதுல் பிரேமரத்ன தன்னை கடத்த பொலிசார் முயற்சிப்பதாகக் கூறி நீதி மன்றத்திற்குச்சென்றுள்ளார்.
அதன் விபரம் பின்வருமாறு,
நான் தவறு செய்யவில்லை இருந்தாலும் பொலிசார் என்னை கைது செய்வதற்காக எனது வீட்டிற்கு பல முறை சென்றுள்ளனர் அதனால்தான் குற்றம் செய்யாத நான் நீதியை மதித்து நீதி மன்றம் வந்துளேன்.
சுமார் எட்டு தடவைகள் உதுல் பிரேமரத்னத மீது பொலிசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் .அதில் 02 வழக்குகளில் இருந்து விடுபட்டுள்ளதுடன் இன்னும் மூன்று வழக்குகள் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இதில் உதுல் செய்ததாகக் கூறப்பட்டும் எந்தக் குற்றத்தையும் பொலிசாரினால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியாமல் போயுள்ளது
பொரள்ளயில் கைது செய்யப்பட்டவர்ளை விடுதலை செய்யவேண்டும் எனக்கோரியதற்காகவே உதுல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நேற்று இது சம்பந்தமாக உதுல் மனித உரிமை காரியாலயத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதுடன் இன்று அளுத்கடை பொலிசில் இது சம்பந்தமாக உதுல் தான் வழக்கரிஞர் என்ற அடிப்டையில் பொலிசார் தன்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.