ரஜினி அரசியலுக்கு வர மாட்டேன் என அறிவித்து விட்ட நிலையில், ரஜினி துவங்கப் போகும் கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த தமிழருவி மணியனும் போகிறேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுச் சென்றுள்ளார்.
இந்த அறிக்கையில் ரஜினியிடம் இருந்த நேர்மை கூட இல்லை. தான் இனி சாகும்வரை அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்துள்ள தமிழருவி தரம் தாழ்ந்தோரின் விமர்சனங்கள் தன் மனைவி,குடும்பத்தினரை காயப்படுத்தி விட்டதாகவும் அதனால் விலகுகிறேன் என்றும் அறிவித்துள்ளார்.
இக்கடிதத்தில் ஒரு வரி கூட ரஜினியை நம்பி வந்தேன். அவர் அரசியலுக்கு வரவில்லை என்று விட்டார்.ஆகவே எனக்கும் வேலையில்லை. அல்லது வேறு அரசியலை நோக்கிச் செல்கிறேன். அல்லது அரசியலில் இருந்து ஒதுங்கிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், பொய் பித்தலாட்டம், காந்தீய இந்த்துவம், ஆன்மீக அரசியலையே தன் அரசியலாகக் கொண்டு தமிழருவி மணியன் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த மண்ணுக்காக உழைத்த திராவிட இயக்கத்தை மிக மோசமாக விமர்சித்து வந்து விட்டு இப்போது செல்லாக்காசு ஆகி விட்ட வெறுப்பில் உண்மையை பேசாமல் தன்னை அவதூறு செய்து விட்டதாகச் சொல்கிறார். கடந்த பல ஆண்டுகளாகவே தமிழருவி சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டே வருகிறார்.அப்போதெல்லாம் தோன்றாத காயம் இப்போது தோன்றியுள்ளதா என வேடிக்கையாக கேட்டு வருகிறார்கள்.