Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழ் மொழி மாநாடு நிகழ்ச்சி நிரல் வெளியீடு அவசியம் படியுங்கள்.

இனியொரு... by இனியொரு...
06/09/2010
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

ஈழத்தில் பல்லாயிரம் மக்களைக் கொன்றொழித்த பயங்கரவாத இலங்கை அரசும். அந்தப் போருக்கு உதவி செய்த இந்தியாவும் இந்தியாவின் துரோகத்திற்கு துணை போன கருணாநிதியும் என ஒரு முக்கோண வலைப்பின்னலில் தமிழர்களைத் தாக்குகிறது இந்த இருண்ட மேகங்கள். உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தாங்க முடியாத வேதனையில் தவித்த போது பொறுப்பற்ற முறையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அனுமதியையும் மீறி தாந்தோன்றித்தனமாக செம்மொழி மாநாட்டை அறிவித்தார் கருணாநிதி. இப்போது உங்கள் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் இந்த செம்மொழி மாநாட்டு நிரலைப்பாருங்கள். இதில் எத்தனை பேர் தமிழறிஞர்கள், சினிமாக் கவிஞர்கள், ஆபாசக் கவிஞர்கள், இவர்களுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம். என்பதை உங்கள் அறிவுக்கேற்ப ஆய்ந்து முடிவு செய்யுங்கள். கோவையில் நடத்தப்பட விருக்கும் இம்மாநாடு உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடம் கருணாநிதி மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியைப் போக்க தனக்குத் தானே நடத்தும் மாநாடு என்றோம். தமிழின் நவீன கவிஞர்கள் பரும் இவ்வாறான விமர்சனங்களையே கொண்டிருந்தார்கள். பாலியல் வழக்கில் சிக்கி இப்போது தேவர் பேரவையில் செட்டிலாகியிருக்கும் புவனேஸ்வரி மட்டும்தான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வில்லை. மற்றபடி தமிழறிஞர் சிவத்தம்பியும் கலந்து கொள்கிறார். ஆபாசக்கவிஞர் வாலியும், பா.விஜய் போன்றோரும் கலந்து கொள்கிறார்கள். ஒட்டு மொத்தமாக ஏதோ ஒரு வகையில் கருணாநிதியால் ஆதாயம் அடைகிறவர்கள் இவர்கள் என்பதை பட்டியலைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.

 

முழுமையான

நிகழ்ச்சி நிரல்

.

தொடக்க விழா கோவை மாநாட்டு அரங்கில் 23-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்று பேசுகிறார்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் மாநாட்டை தொடங்கி வைத்து, “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை” பின்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு வழங்குகிறார். தமிழக ஆளுநர் பர்னாலா மாநாட்டு சிறப்பு மலரை வெளியிடுகிறார். அமைச்சர் அன்பழகன் தகுதியுரை நிகழ்த்துகிறார்.பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா), வா.செ. குழந்தைசாமி, கா. சிவத்தம்பி (இலங்கை) ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். தலைமை செயலாளர் ஸ்ரீபதி நன்றி கூறுகிறார்.

23ம் தேதி மாலை பிரமாண்டப் பேரணி

23-ந்தேதி மாலை 4 மணிக்கு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பேரணி நடைபெறுகிறது. இது கோவை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கி, அவினாசி சாலை வழியாக சென்று மாநாட்டு வளாகத்தை அடைகிறது.”இனியவை நாற்பது” என்ற தலைப்பில் இந்த பேரணி நடைபெறுகிறது. இதில் இலக்கியம், கலை, வரலாறு ஆகியவற்றை நினைவூட்டும் அலங்கார வண்டிகள், கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

24ம் தேதி மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சி

24-ந்தேதி காலை 10.30 மணிக்கு லாரன்ஸ் குழுவின் மாற்று திறனாளிகள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. பகல் 12 மணிக்கு பொது கண்காட்சியை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி திறந்து வைக்கிறார். மலேசிய மந்திரி சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.புத்தக கண்காட்சியை ஜி.கே. வாசன் திறந்து வைக்கிறார். மாலத்தீவு அமைச்சர் அகமது நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இணைய தள கண்காட்சியும் திறக்கப்படுகிறது.

அப்துல் ரகுமான் தலைமையில் கவியரங்கம்

பிற்பகல் 2.30 மணிக்கு “புதியதோர் உலகம் செய்வோம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் அப்துல் ரகுமான் தலைமை தாங்குகிறார். வ.மு. சேதுராமன், பொன்னடியான், ஆண்டாள் பிரியதர்சினி, வின்சென்ட் சின்னத்துரை, கவிதை பித்தன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.
மாலை 4 மணிக்கு “சமயம் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு சுந்தரலிங்க சாமியடிகளார் தலைமை தாங்குகிறார். பேராயர் சின்னப்பா, ஸ்ரீபால், சாரதாநம்பி ஆரூரான், காதர் மொய்தீன் உள்பட பலர் பேசுகிறார்கள். இரவு முதல்–அமைச்சர் கருணாநிதி எழுதிய “போர் வாளும் பூவிதழும் நாட்டிய நிகழ்ச்சியை பத்மா சுப்பிரமணியம் குழுவினர் வழங்குகிறார்கள். நடனம், நாடகம், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.

25ம் தேதி கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்க கூட்டம்

25-ந்தேதி காலை 10 மணிக்கு “கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்க கூட்டம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் வைரமுத்து தலைமை தாங்குகிறார். ஈரோடு தமிழன்பன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கவிதை படைக்கிறார்கள்.11.30 மணிக்கு “தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே, இடைக்கால இலக்கியமே, இன்றைய இலக்கியமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. சோ. சத்தியசீலன் நடுவராக பங்கேற்கிறார். குமரி அனந்தன் உள்பட பலர் பேசுகிறார்கள்.

25ம் தேதி கருணாநிதி தலைமையில் கருத்தரங்கம்

மாலை 4 மணிக்கு “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இதில் தங்கபாலு, சீத்தாராம் யெச்சூரி எம்.பி., கி. வீரமணி, டாக்டர் ராமதாஸ், இல. கணேசன், டி. ராஜா எம்.பி., ஆர்.எம். வீரப்பன், திருமாவளவன், ஸ்ரீதர் வாண்டையார், காதர் மொய்தீன், ஜெகன்மூர்த்தி, செல்லமுத்து, தாவூத் மியாகான், திருப்பூர் அல்தாப், சந்தானம் பஷீர் அகமது ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

26ம் தேதி வாலி தலைமையில் கவியரங்கம்

26-ந்தேதி “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. இதற்கு கவிஞர் வாலி தலைமை தாங்குகிறார். கவிஞர்கள் மு. மேத்தா, பா. விஜய் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.
அடுத்து வா.செ. குழந்தைசாமி தலைமையில் “செம்மொழி தகுதி” என்ற தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்பட பலர் பேசுகிறார்கள். இதையடுத்து க.ப. அறவாணன் தலைமையில் “கடல் கடந்த தமிழும் தமிழரும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.

நடிகை ரோகினியின் நாட்டிய நாடகம்

மாலை 4.30 மணிக்கு சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் “தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித் திரைக்கே, சின்னத்திரைக்கே, அச்சுத்துறைக்கே” என்ற தலைப்பில் நடக்கிறது. இதில் பாரதிராஜா, நடிகர் சந்திரசேகர், லியோனி, எஸ்.வி. சேகர், நக்கீரன் கோபால் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இரவு கொடிசியா வளாகத்தில் நடிகை ரோகிணி நடிக்கும் “பாஞ்சாலி சபதம்” நாடகம் நடக்கிறது.27-ந்தேதி காலை 10 மணிக்கு “வித்தாக விளங்கும் மொழி” என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கத்துக்கு நடிகர் சிவக்குமார் தலைமை தாங்குகிறார். சுப. வீரபாண்டியன், திருச்சி செல்வேந்திரன், ஜெகத்கஸ்பார் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

பிரணாப் தலைமையில் நிறைவு விழா

மாலை 4 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா நடக்கிறது. மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகிறார். ப. சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு தபால் தலையை மத்திய அமைச்சர் ராசா வெளியிடுகிறார்.முதல்வர் கருணாநிதி, “சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக் கியதற்கான “கணியன் பூங்குன்றனார்” விருது வழங்கி மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார். முன்னதாக தலைமை செயலாளர் ஸ்ரீபதி வரவேற்கிறார். முடிவில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு தனி அதிகாரி அலாவுதீன் நன்றி கூறுகிறார்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ராஜபட்சேவுக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு உச்சபட்ச மரியாதை.

Comments 4

  1. செழியன் says:
    16 years ago

    ராஜபட்சேவுக்கும் ஒரு அழைப்பை அனுப்பிஅவரையும் அழைத்து வந்திருந்தால் மாநாடு இன்னும் சிறப்பாக அமையும் இது பற்றி ஏன் யாரும் கருணாநிதிக்கு யோசனை கூறவில்லை..?

  2. pala.manickam says:
    16 years ago

    மனித உருவம் கொண்ட மிருகங்களே,உங்களூக்கு மனமெ இல்லையா.விரைவில் மாண்டு விடுங்கள்,வரும் தமிழனாவது நன்றாக இருக்கட்டும்.

  3. kryna says:
    16 years ago

    வாயில என்னன்னெமோ வருது. நவீன தமிழாய்வாளர்கள் எவர் ஒருவர்ம் இல்லை. வாலியும், வைரமுத்துவும்,பா.விஜய்யும் தமிழறிஞர்களா? அடக் கொடுமையே? பேசாமல் நமீதாவையும், குஷ்புவையும் மேடையேற்றி தமிழ் தாய் வாழ்த்துக்கு ஒரு குத்துபாட்டுக்கு ஆட விட்டிர்க்குலாம் மாநாடாவது களை கட்டும்.

    நன்றி

  4. thamimaran says:
    16 years ago

    தமிழாய் வாழும் தங்கத் தமிழ்ன் தரணீ போற்றூம் தமிழ் இனத் தலைவர் நிக்ழ்த்தும் செம்மொழி மகாநாடு தமிழுக்கான் முதல் மரியாதை தாயாம் தமிழுக்கான் அலங்கார அணீவ்குப்பு.நாம் தமிழராய் நிமிர நம்மை தமிழராய் உணர தலைவ்ர் கருணாநிதி செய்யும் பலகாரம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In