எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள தமிழ்க கட்சிகளின் அரங்கக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொள்ளுவதற்கான அழைப்பினை அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேரடியாக கையளிக்கப்படுமென குழுத் தலைவர் இரா.சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கிறார். அத்துடன் தமிழ்க் கட்சிகளின் அரங்கக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொள்ளும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவத்திருக்கிறார்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை வழங்குதவற்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி பொதுநலவாய நாடாளுமன்றக் குழவினரிடம் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. இNது வேளை அண்மையில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ஏனைய கட்சிகள் அழைப்பு விடுத்தால் பேச்சு நடாத்தத் தயார் எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் தெரிவிந்திருந்தார்.
ஆனால் தமிழ்க கட்சிகளின் அரங்கத்திலுள்ள பல கட்சிகள் வன்னி யுத்தத்தின் போதும் மற்றும் யுத்தத்தின் பின்னரான காலத்திலும் அரசுடன் ‘இணக்கத்துடன்” செயற்பட்டு வருகின்றது. அத்துடன் அரசின் எந்தவகையான திர்;வுக்கும் அல்லது தீர்வை வழங்காத விடும் செயலுக்கும் இசைவுடன் நடந்து கொள்ளும் அவலநிலையையே கொண்டிருக்கின்றன.
வன்னியில் அகதி முகாம்களில் வாழ்வோரின் மீள் குடியேற்றம், மீள் குடியேறிய மக்களின் அவலம் போன்ற தமிழ் மக்கள் எதிர்நோக்கும் வாழ்வியல் நெருக்கடிகள் எவற்றிற்கும் தீர்வை பெற முடியாத தமிழ்க கட்சிகளின் அரங்கத்துடன் இணைந்து த.தே.கூட்டமைப்பு இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்துப் பேச்சு வார்த்தை நடாத்தப்போகிறது !
வெளீச்சம் ஜன்னலைத் தாண்டி விறாந்தை வரை வந்தது வெளீயே கிடந்த விளக்குமாற்ற எடுத்துக் கூட்டி மஞ்சல் தண்ணீர் தெளீத்தேன்.இனி எல்லாம் ஜெயமே என உள்ளூணர்வு சொன்னது.பழுத்துச் சிவந்த மல்கோவா மாம்பழங்கள எடுத்து வந்து வீட்டு சாப்பாட்டு ரேபிளீல் வைத்தேன்.வீட்டு முற்றத்து மணீவாழை மனசை வசீகரித்தது.குரோட்டன் செடியெல்லாம் அழகாய் வளர்ந்து என் தேசமும் செழிக்கும் என சேதி சொல்லியது.இப்பிடியே தமிழர் வாழ்வு இருந்து விடாது.ஒரு காலம் வரும்.