உலகத்தில் இன்று என்ன நடைபெறுகிறது என்பது குறித்த குறைந்தபட்ச புரிதல் ஈழப்போராட்டத்தின் இராணுவரீதியான தோல்விலிருந்து தமிழக மாணவர் எழுச்சி வரைக்கும் மதிப்பீடு செய்வதற்கு அவசியமானது. இன்றைய தமிழக மாணவர் போராட்டஙகள் ஈழப் போராட்டத்திற்கும் இந்திய மக்களுக்கும் மட்டுமன்றி உலகம் முழுவதற்குமே முன்னுதாரணமாக உருவாகக்கூடிய சூழலைத் தோற்றுவித்திருக்கின்றது. ஐ.நா தீர்மானத்தோடும் ஜெயலலிதாவின் தீர்மானம் நிறைவேற்றி நாடகம் நடத்திய கையோடும் மாணவர் போராட்டங்கள் அது ஆரம்பித்த வேகத்தில் அழிந்துபோய்விடும் என்று அங்கலாய்த்த அதிகாரவர்க்கம் தோற்றுப்பானது.
துனிசியாவில் மையான அமைதியைக் கிளித்துக்கொண்டு மேலெழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டோம். அங்கு சாரிசாரியாக மக்கள் தொலைதூரக் கிராமங்களிலிருந்தெல்லாம் நகரங்களுக்குப் படையெடுத்து போராடும் மக்களோடு இணைந்து கொண்டார்கள். துனிசியாவில் மூட்டிய நெருப்பு அரபு நாடுகள் முழுவதும் பரவியது. மக்கள் வெள்ளம் அரபு நாடுகளின் ஆயுதப்படைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இறுதியில் ஒரு சர்வாதிகாரிக்குப் பதிலாக மற்றோரு சர்வாதிகாரி பிரதியிடப்பட்டார்.
ஒடுக்குமுறை இயந்திரம் முன்னிலும் பலமாக்கப்பட்டது. இனக்குழுக்களிடையே மோதல்கள அதிகரித்தன. பல்தேசிய கொள்ளைக்காரர்கள் மக்கள் பணத்தைச் சூறையாடுவதற்காக முகாமிட்டுக்கொண்டார்கள்.
இதே போன்று, அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உருவான தன்னெழுச்சியான போராட்டங்கள் அந்த அரசுகளைக் கேள்விகேட்டன. உலகில் போராட்டங்களை ஒடுக்கும் அமரிக்க அரசின் முற்றத்திலேயே வால் ஸ்ரீட் போராட்டம் தோன்றி உலகின் அதியுயர் அதிகாரத்தின் வேர்களை விசாரணை செய்தது. ஐரோப்பிய நாடுகள் முழுவதும் அப்போராட்டங்கள் பரவிப்படர்ந்தன. எழுச்சி முழக்கங்கள் என்பதற்கு அப்பால் மேல் வளர்ச்சியடைய முடியாமல் அப்போராட்டங்கள் அனைத்தும் செயற்பாடற்று செத்துப்போயின.
1970 களில் ஆரம்பித்த உலக ஒழுங்கு இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. நவ தாராளவாத உலகமயமாதல் என அறியப்பட்ட உலக ஒழுங்கு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்ட தசாப்தங்களுக்கு உள்ளாகவே அது மீட்சியடைமுடியாத நெருக்கடியைச் சந்த்துள்ளது. 1990 ஆம் ஆண்டு இந்தியாவிலும் லத்தீன் அமரிக்க நாடுகளிலும் பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவித்த பின்னர் அந்த நாடுகளில் நவதாராளவாத உலகமயமாதல் தனது கோரக்கரங்களை இறுக்க ஆரம்பித்தது. முன்னெப்போதும் இல்லாதவாறு ஊழல், சதி, போர் ஆகியவற்றை உலகமயமாக்கியது. பல் தேசிய நிறுவவனங்கள் அமரிக்காவிலும் ஐரோப்பாவிலுமிருந்து அந்த நாடுகளில் சென்று குடியேறிக்க்கொண்டன. அங்குள வளங்களையும் தொழிலாளர்களைம் ஒட்டச் சுரண்டின.
உள் நாட்டில் நேரடியாகத் தமக்குச் சேவையாற்றும் அரசுகளை மக்களின் எதிர்ப்பின்றி உருவாக்கிக்கொள்வதே பல்தேசிய நிறுவனங்களுக்காகச் செயற்படும் அமரிக்க ஐரோப்பிய அரசுகளின் பிரதான அரசியல் ஆயுதமாகத் திழழ்ந்தது. இதற்காக உள் நாட்டில் பொருளாதர பலம் மிக்க விரல்விடுக் கணக்கிடக்கூடிய பணக்கார வர்க்கத்தை உருவாக்கினர். இவர்கள் உள்ளூரில் மக்கள் எதிர்ப்பின்றிய ஏகாதிபத்திய சார்பு அரசு ஒன்று செயற்படுவதை ஜனநாயகம் எனக் கருதினர். உள் நாட்டைச் சந்தைப்படுத்தக் கூடிய சூழலில் வைத்திருப்பதைச் சமாதானம் என மக்களின் பொதுப்புத்தியாகினர்.
சந்தைப்படுத்தும் சூழல் என்பது பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலுக்கான சூழல் என்பதே.
இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக அமரிக்கா தலைமையில் பல இராட்சத நிறுவனங்கள் உருவாகின. உலக வர்த்தக மையம்(WTO), உலக நாணய நிதியம், உலக வங்கிIMF), வட அட்லான்டிக் உடன்படிக்கை அமைப்பு (NATO) போன்ற நிறுவனங்கள் நேர்த்தியான திட்டமிடலுடன் உலகை அமரிக்கா தலைமையிலான ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தன.
பொருளாதார வார்த்தைகளில் சொல்வதானால், இந்தக் கட்டுப்பாட்டின் அடிப்படை நோக்கம் என்பது மூன்றாம் உலக நாடுகளிலிருந்து குறைந்த விலையில் இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் சுரண்டி ‘உபரி உற்பத்தியை’ உறிஞ்சிக்கொள்வதாகும்.
இவ்வாறான சுரண்டலால் உருவாகக் கூடிய வறிய மக்களும் உழைப்பாளிகளும் ஒரு நேர உணவிற்கே கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். வாழ்வதற்காகப் போராட ஆரம்பித்தனர். இவர்களது போராட்டம் சுதந்திட சந்தைக்கு அதாவது பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலுக்குத் தடையாக அமைந்தது. இவர்களைது போராட்டங்களைத் தற்காலிகமாகத் உறங்கு நிலையில் வைத்துக்கொள்ளும் நோக்கோடு தன்னார்வ நிறுவனங்களை (NGO) மேற்குறித்த இராட்சத நிறுவனங்களின் பண வழங்கலின் கீழ் உருவாக்கினர். தன்னார்வ நிறுவனம் என்ற கருத்துருவாக்கம் பின்னர் விரிவாக்கப்பட்டு பல அமைப்பு வடிவங்களைப் பெற்றது.
இவை அனைத்திற்கும் அப்பால் மக்கள் தாம் எதிர் நோக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட ஆரம்பித்தனர். அவ்வாறான போராட்டங்கள் ஆயுதப்போராட்டமாகத் தோன்றிய போது பல வழிகளில் அழிக்கப்பட்டன.
ஈழத்தில் சந்தைப்படுத்தும் சூழலைத் தோற்றுவிப்பதற்காகவே விடுதலைப் புலிகளும் மக்களும் இரவோடிரவாக அழிக்கப்பட்டனர்.
தவிர, திட்டமிட்ட அரசியலோடு அரசியல் அமைப்புக்கள் தோன்றுவதை ஆரம்பத்திலிருந்தே அழிப்பதற்கு இந்த இந்த ராட்சத நிறுவனங்களின் உதவியோடும் அரசுகளின் நேரடிக் கண்காணிப்பிலும் புதிய முறைகள் கையாளப்பட்டன. மக்கள் போராடுகின்ற போது அப்போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு நகர விடாமல் தடுத்தனர். போராட்டங்களைத் தாமே தமது உள்ளூர் முகவர்களுக்கு ஊடாகவும் சந்தர்ப்பவாத-பாராளுமன்ற அரசியல் கட்சிகளுக்கு ஊடாகவும் கையிலெடுத்துச் சிதைத்தனர்.
அரபு நாடுகளில் போராட்டங்களின் பின்னணியில் ஒட்பொர் (OTPOR) என்ற அமைப்பு செயற்பட்டது. அதே அமைப்புத் தான் வால் ஸ்ரீட் போராட்டத்தையும் கையகப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் தடுத்தது. சில வேளைகளில் போராட்டங்கள் உருவாகாமல் தடுப்பதற்காக தாமே போராட்டங்களை உருவாக்கி அழித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு 50 இற்கும் மேற்பட்ட போராட்டங்களை தோற்றுவித்து அழித்ததாக அமரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையகத்தின் (NSA) பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒட்போர் அமைப்பு வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டுள்ளது.
இனப்படுகொலைக்கு சகல வழிகளிலும் பின்புலத்தில் செயற்பட்ட அமரிக்காவே மனித உரிமைஅமைப்புக்களின் துணையோடு ஐ.நா போர்க்குற்ற விசாரணை குறித்த தீர்மானத்தையும் முன்வைத்தது .
இலங்கையில் ராஜபக்சவை இன்னொரு இனவாதியால் பிரதியிடும் முயற்சியை மேற்கொள்ளும் அமரிக்க அரசு அதற்கான முன் நிபந்தனைகளை இப்போதே உருவாக்க ஆரம்பித்துவிட்டது. திடீர் எழுச்சிகளை உருவாக்குவதும், புலம் பெயர் அமைப்புக்களை உள்வாங்கிக்கொள்வதும். தன்னார்வ நிறுவனங்களை நாடு முழுவதும் விதைப்பதும். இனவாதக் கட்சிகளை எழுச்சிக் கட்சிகளாக மாற்றுவதும் அவர்களின் உடனடிச் செயற்பாடுகள். அடுத்த தேர்தலுக்கிடையில் ராஜபக்ச அரசு அமரிக்கா எதிர்பார்பதற்கு மேலாக இலங்கையின் வளங்கள் முழுமையையும் சீனவிடமிருந்து பறித்தெடுத்து அமரிக்காவிற்கு வழங்கினால் எழுச்சிகள் நிறுத்தப்படும். இல்லையெனின் இலங்கையில் பேரினவாதம் எதிரியல்ல ராஜபக்சவே எதிரி என்று தேர்தலுக்கு முன்னதக அறிவிக்கப்படும்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கோடு அவ்வப்போது தோன்றும் திடீர் எழுச்சிகளுக்குப் பின்னணியில் ஒட்போர் போன்ற அமைப்புக்கள் செயற்படுகின்றனவா என்பற்கான ஆதாரங்கள் இன்னும் இல்லை என்றாலும் அதற்கான சாத்தியங்களை நிராகரிக்க முடியாது. ஒடுக்கப்படும் தமிழ்ப்பேசும் மக்களின் அடிப்படை உரிமையான சுய நிர்ணைய உரிமையைக்கூட அங்கீகரிக்க முடியாத இனவாதக் குழுக்கள் திடீர் மாணவர் எழுச்சிகளைத் தோற்றுவிப்பதன் பின்னணி குறித்த அரசியல் அவதானமாக நோக்கப்பட வேண்டும்.
அரபு நாடுகளிலெல்லாம் அரசியலற்ற திடீர் தனெழுச்சிகளை உருவாக்கி அவற்றை அழிப்பதற்கு ஆட்சி மாற்றம் எனபது கருவியாகப் பயன்பட்டுள்ளது.
சனல் நான்கு பிரபாகரனின் மகன் உயிரோடிருக்கும் படத்தையும் கொல்லப்பட்ட படத்தையும் வெளியிட்டபோது மனிதாபிமானிகளைக்குற்ற உணர்வுக்கு உட்படுத்தியது. இந்திய மற்றும் தமிழ் நாட்டுத்தொலைக் காட்சிகளில் மீண்டும் மீண்டும் அது குறித்த காட்சிகள் திரையிடப்பபட்டன.
ஈழத் தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்று தேடித்தேடி வேட்டையாடிய ஜெயலலிதாவும் இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்துவதற்கு நேரடி ஆதரவு வழங்கிய கருணாநிதியும் புதிய வேகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்துப் பேச ஆரம்பிக்கின்றனர்.
துனிசியப் போராட்டத்திற்கு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட புறச் சூழலைப் போன்றே தமிழ் நாட்டிலும் போராட்டத்திற்கான சூழல் உருவாக்கப்பட்டது.
இவ்வேளையில் லயோலா கல்லூரி மாணவர்கள் தமது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கின்றனர்.
இனப்படுகொலையின் திரைமறைவுச் சூத்திரதாரிகளில் ஒருவர் எனக் கருதப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளரும் முன்னை நாள் புலிகளின் தமிழகத் தொடர்பாளர்களில் ஒருவருமான ஜகத் கஸ்பர் என்ற பாதிரி இப்போராட்டத்தின் பின்புலத்தில் செயற்பட்டார் என்ற நம்பத்தகுந்த தகவல் பல் சந்தேகங்களை ஏற்படுத்தியது.
ஜெகத் கஸ்பர் போன்ற உயர் குடிப் பாதிரிகளுக்கு ஏகாதிபத்திய நிறுவனங்களுடனான தொடர்பு குறித்து விளக்குப் பிடித்துத் தேட வேண்டிய அவசியமில்லை. வன்னி இனப்படுகொலையில் இவர்களின் பங்கே இதற்குப் போதுமான ஆதரங்களை வழங்கியுள்ளன.
லயோலாக் கல்லூரியில் ஜெகத் கஸ்பரால் தூண்டிவிடப்பட்ட போராட்டம், திராவிட இயக்கங்களின் சீர்திருத்தப் பாரம்பரியத்தில் வளர்ந்த தமிழ் நாட்டு மாணவர்களை குறித்த எல்லைக்குள் முடக்கிவிடவில்லை. அப்போராட்டம் அவருக்கு எதிரானதாகத் திரும்ப, அது கல்லூரி நிர்வாகத்தாலும் ஜெயலலிதா அரசாலும் அழித்துச் சிதைக்கப்பட்டது. பின்னதாக மாணவர் போராடங்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியாகத் தோன்றின. போர்க்குணம் மிக்க உணர்வுபூர்வமான போராட்டங்களாக தெருக்களில் மாணவர்கள் போராட ஆரம்பிக்கின்றனர். உலக மயம் உருவாக்கிய நுகர்வுச் சிந்தனைக்குள் முடங்கியிருந்த மாணவர்கள் தெருக்களில் புத்தகங்களையும் காவிக்கொண்டு போராட வெளிவந்தது ஆளும் வர்க்கம் எதிர்பார்க்காத அதிர்ச்சியை வழங்கியது.
திருஞான சம்பந்தர் என்ற பிராமணர் ராமேஸ்வரத்திலிருந்கு இலங்கையை நோக்கித் தேவாரம் பாடியதாக ஐதீகக் கதைகள் உண்டு. தமிழ் நாட்டிலிருந்து ஈழத் தமிழர்களுக்காக ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் வாழும் புலம்பெயர் நாடுகளை நோக்கித் தேவாரம் பாடும் ‘தமிழ் உணர்வாளர்கள்’ தன்னெழுச்சியான போராட்டங்களை பயன்படுத்திக்கொள்வதற்காக போட்டிபோட ஆரம்பித்த போது அது மாணவர்களிடையே பிளவுகளைத் தோற்றுவித்தது.
இவ்வேளையில் ஏகாதிபத்தியத் தலையீட்டை நிராகரித்தும், போராட்டங்களின் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்வைத்தும் ‘ஈழத் தமிழர் தன்னுரிமைக்கான மாணவர் அமைப்பு’ எழுச்சி மிக்க போராட்டத்தை சென்னை விமான நிலையத்தில் நடத்தியது. தமிழகம் முழுவது இவ்வமைப்பினர் நடத்திய போராட்டங்கள் தொடர்கின்றன. தெளிவான உறுதியான முழக்கங்களோடு எதிர்காலத்திற்கான அரசியல் திட்டமிடலுடன் இம்மாணவர் அமைப்பு நடத்தும் போராட்டங்கள், அரபு எழுச்சிகள் கடத்தப்பட்டு அழிக்கப்பட்டது போன்றும், வால் ஸ்ரீட் வகைப் போராட்டங்கள் மடிந்துபோனது போன்றும் தற்காலிகத் தன்னெழுச்சிப் போராட்டங்களாக அன்றி உறுதியான வெகுஜன அரசியல் பலத்தோடு முன்னெடுக்கப்படுகின்றன.
ஈழத்தில் ஒடுக்கப்படும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்கக் கோரியும், ராஜபக்ச என்ற மனித குல விரோதிக்கு அதிகபட்ச தண்டனை கோரியும் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்தும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்வைக்கும் அரசியலை ஒட்போர் போன்ற அமைப்புக்கள் கையகப்படுத்தி சீர்குலைக்க முடியாது. அவர்கள் தெளிவாகத் தமது அரசியலையும் அதன் தலைமையையும் முன்வைக்கிறார்கள்.
பிரான்ஸ், கனடா, ஸ்பெயின், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பித்த மறுகணமே அசைவின்றி நின்றுபோன போராட்டங்களைப் போலன்றி தெளிவான அரசியலை முன்வைக்கும் இவர்களின் உறுதி ஏகாதிபத்தியங்களால் கையகப்படுத்தி அழிக்கப்பட்ட போராட்டங்கள் போன்றதன்று.
ஈழத் தமிழர் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் வெற்றி என்பது தமிழகத்திற்கு மட்டுமன்றி, ஈழத்திற்கு மட்டுமன்றி உலகத்திற்கே முன்னுதாரணத்தை வழங்கவல்லது.
தன்னார்வ நிறுவனங்களும் .புரட்சி வியாபார’ அமைப்புக்களும் போராட்டங்களை மிக இலகுவில் கையகப்படுத்தி அழிக்கும் புதிய ஏகாதிபத்திய அரசியலின் முன்பு அதற்கு எதிரான புரட்சிகர அரசியலை முன்வைப்பது குறித்து உலகம் முழுவதும் பேசப்படும் நிலையில் தமிழக மாணவர்கள் அதற்கு முன்னுதாரணமானத் திகழ்கின்றனர்.
நன்கு திட்டமிடப்பட்ட ஏகாதிபத்திய அழிவு நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாத இவர்களின் போராட்டத் தந்திரோபாயமும் உறுதியான நீண்ட மக்கள் போராட்ட அனுபவம் மிக்க அரசியல் தலைமையும் தமிழகத்தின் பிழைப்புவாதிகளையும் கூட மிரட்டியிருக்கிறது.
2009 ஆம் ஆண்டு வன்னிப்படுகொலைகள் நடைபெற்ற போது தமிழகத்தில் இரத்த ஆறு ஓடப்போகிறது என்று படம்காட்டிய இந்த இனவாதிகள், எல்லாம் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் பிரபாகரன் திரும்பி வருவார் என போலி நம்பிக்கை வழங்கி மக்களைப் போராடவிடாமல் தடுத்தனர். திட்டமிட்ட நிறுவனமயப்பட்ட மாணவர்களின் எழுச்சியின் வெம்மை தாங்காது தெருவிற்கு வந்த இந்த இனவாதிகள் மாணவர் போராட்டங்களுக்க அரசியல் வேண்டாம் என வெளிப்படையாகவே கூற ஆரம்பித்துவிட்டனர்.
உதிரிகளாக புலம் பெயர் தமிழர்களின் கடைகண் பார்வைக்காகவும், பொழுது போக்கு வியாபார விழாக்களையும், சினிமாக்களையும் விற்பனை செய்வதற்காகவும் ஈழ விடுதலை பேசும் பலர் மாணவர் போராட்டங்கள் குழுவாதத்திற்கு சிக்கியுள்லதாகக வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்துவிட்டனர்.
அழிக்கப்படும் மக்களின் அவலத்தில் அரசியல் வியாபாரம் நடத்தும் புலம் பெயர் அமைப்புக்கள் மாணவர் போராட்டத்தின் போர்குணத்தை அறிந்ததும் மௌனித்துப் போயினர். புலம் பெயர் ‘தேசிய’ இணையங்கள் போராட்டங்கள் குறித்த செய்திகளை முற்றாகப் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்தப் புள்ளியில் உலகின் போராட்டங்களுக்கே முன்னுதாரணத்தை வழங்கிய தமிழக மாணவர்கள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரிகளையும் நண்பர்களையும் இனம்காட்டியுள்ள்னர்.
ஐரோப்பிய நாடுகள் நிதி வழங்கும் தன்னார்வ நிறுவனங்களின் நேரடியான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் பெரும்பாலானவை இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு என்ற முடிவிற்கு வந்துள்ளன. ராஜபக்ச அரசிற்கு மாற்றாக சந்திரிக்கா தலைமையிலான அரசை இலங்கையிலுள்ள பல்தேசிய தரகுகளின் ஆதரவோடு நிலை நாட்டுவதே அவர்களின் அடிப்படை நோக்கமாகக் காணப்படுகிறது. இந்த நிலையில் ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அடிப்படை முழக்கமாகக் கொண்ட தமிழக மாணவர்களின் போராட்டங்களை இலங்கையில் வாழும் தமிழர்கள் உன்னிப்பாக அவதானிக்கிறார்கள்.
முப்பது வருட ஆயுதப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக முதல் தடவையாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக எழுந்த மாணவர்களின் குரல் சந்தர்ப்பவாத அரசியலால் சிதைந்துபோகாது பாதுகாக்கப்பட வேண்டும்.
தங்களின் குரலிலுள்ள ஆதங்கத்தையே பெரும்பாலான தமிழர்களும் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் இம்மாபெரும் போராட்டம் சுயம்புவாகத் தோன்றியிருக்குமா? இதன் தொடர்ச்சி என்ன? தொடர்தோல்விகளைச் சந்தித்து வரும் எமது சந்தர்ப்பவாதத் தலைமைகள் இதனை வெல்ல அனுமதிக்குமா? சொற்பகாலத்தில் விடை தெரியத்தானே போகிது.
எதிர்காலத்திற்கான அரசியல் திட்டமிடலுடன் இம்மாணவர் அமைப்பு நடத்தும் போராட்டங்கள், அரபு எழுச்சிகள் கடத்தப்பட்டு அழிக்கப்பட்டது போன்றும், வால் ஸ்ரீட் வகைப் போராட்டங்கள் மடிந்துபோனது போன்றும் தற்காலிகத் தன்னெழுச்சிப் போராட்டங்களாக அன்றி உறுதியான வெகுஜன அரசியல் பலத்தோடு முன்னெடுக்கப்படுகின்றன.-Well said
கமல்ஹாசன் எடுக்கும் படம் நல்லாத்தான் இருக்கு
தியேட்டரில் சனம் காலியா இருக்கு
The article does not reflect the exact ground situation in tamilnadu, The movement mentioned in the article is floated by the Ma,ka,E,Ka which is Opposed to the concept of Tamil Eelam. It advocates the idea of joint struggle by the working class of the both tamil and Sinhala nationalities. Though this is against the principles of Marxism-Leninism which strongly advocate the principle ‘Right to self-determination’ including ‘Right to Secession’ from the oppressed nation from the oppressing nation.
They just keep silent all along . When the students began to struggle on their own, with the slogans in support of Tamil Eelam, the Ma.Ka.E.ka arose from the sleep and float a separate movement. The name of the movement itself tells the hidden agenda of Ma.Ka.E.Ka. The Ma.Ka.E.Ka did not contribute anything for the uprising of the student community. But they now simply said, “we will create the uprising of 1980s”. If so, what are they doing so far without working for the uprising. When the students began to agitate over the incomplicity of the Indian Government against the Tamils, the Ma.Ka.E.Ka which has no clear stand on the question on “National Issue” has began to divert the issue. The author has given undue credit to the movement of Ma.Ka.E.Ka. The author should not try to misrepresent the situation in tamilnadu to the world tamils. If u refuse to accept the truth, the situation will compel you to accept the truth.
ம.க.இ .க சொன்றும் செய்யவில்லை என்பது பொய்.அவர்கள் பேசி வந்த கருத்துக்கு இன்று தான் சூழ்நிலைகள் சரியாக அமைந்துள்ளது.இலங்கையில் சுயநிர்யணம் என்ற பொருளை முதலில் பேசியவர்களே கம்யூனிஸ்டுக்களே ! அவர்களும் ஒன்றும் செய்யவில்லை எற்று தான் ” தேசியம் ” பேசிய யோக்கிய சிகாமணிகள் சொல்லிவந்தார்கள்.
அதிகார வர்க்கத்தினரை வைத்து தமிழீழம் அடைந்து விடலாம் என்று தான் ஈழ அமைப்புக்கள் தொடங்கப்பட்டன.பின் பிரபாகரன் தலைமையில் புலிகள் , பிரேமதாசவுடன் இணைந்து இந்தியாவுடன் போரிட்ட போது என்ன அடிப்படையில் போராடினார் என்பதும் முன்பு இந்தியாவில் பயிற்சி எடுத்ததும் , இந்தியா எமது தந்தை நாடு என இறுதி வரை புலிகளின் கருத்தாகவே இருந்தது.சகோதர இயக்கங்கள் மீதான தாக்குதல்களும் ,அவர்களில் சிலரை இந்திய சார்பானவர்கள் ஆக்கியதும் புலிகளே!
தமிழரசுக் கட்சியினர் தங்கள் எதிரிகளை மிரட்ட , ஏவல் படையாக செயல்பட்ட இளைஞர்களின் படையாகவே தமிழ் இயக்க தலைமைகள் இருந்ததன.சிங்கள இனவெறிக்கு நிகராக நடவெடிக்ககைகளையே தமிழ் தலைமைகள் செய்தன.அதுமட்டுமல்ல இரட்டை வேடமும் அவர்களது தந்திரோபாயம்.ஆங்கிலத்தில் அந்த கட்சியின் பெயர் Federal Party ,ஆனால் அதன் தமிழ் பெயர் தமிழரசுகட்சி ! எந்த ஒரு தமிழ் தலைவனும் சிங்கள மக்கள் மத்தியில் பேசியது கிடையாது. ஆனால் பல சிங்கள தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டம் போட்டிருக்கிராகள்.ஆய்த போராட்டம் ஒற்று நடந்தால் ரத்த ஆறு ஓடும் என்று ” தளபதி ” அமிர்தலிங்கம் ஏற்க்கனவே நன்கு அறிந்தும் , தங்கள் பாராளுமன்ற நாற்காலி சுகத்திற்க்காக நடைமுறையில் சாத்தியப்படாத ” தமிழ் ஈழம் ” என்ற
கொள்கையை முன் வைத்தார்.அவர்கள் என்றும் இடதுசாரிகளை நம்பியதே கிடையாது.அவர்கள நம்பியதெல்லாம் ஐக்கிய தேசிய கட்சி என்ற ஏகாதிபத்திய ஆதரவுக் கட்சியையே!அவர்களும் [ ஐக்கிய தேசிய கட்சி ] ,இவர்களும் ஏகாதிபத்திய தமிழ் விசுவாசிகள் என்பதும் முக்கியமானது.இருவரும் சேர்ந்தே இலங்கையை இனவாத சேறுக்குள் தள்ளினார்கள்.
இடதுசாரிகள் ஏகாதிபத்தியங்கள் பற்றி பேசிய போதெல்லாம் புலிகள் எள்ளி நகையாடினார்கள்.அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சிங்கள ஏகாதிபத்தியமே.!
இன்று ஏகாதிபத்தியங்களால் தான் புலிகள் ஒழிக்கப்பட்டார்கள் என்று எந்த பாமரனும் அறிவான்.சாகசவாதிகளையும் , பிரபலங்களையும் அதிகாரவர்க்கத்தினரையும் சார்ந்து , அவர்களை தாஜா பண்ணி ” விடுதலையை ” வென்றுவிடலாம் என்பதே ஈழம் எடுக்கப் போராடிய பல இயக்கங்ககளின் நிலைப்பாடாக இருந்தன.
அந்நிய ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கம் மிக்க ஒரு நாடாக இலங்கை எப்போதும் இருந்து வந்துள்ளது.இந்த சதி வலையை மக்கள் புரிந்து கொள்ள விடாமல் சிங்கள / தமிழ் ஏகாதிபத்திய விசுவாசிகள் கவனமாகப் பார்த்துக்கொண்டனர் என்பதே உண்மை.
துவக்கு இருந்தால் தமிழ் ஈழம் எடுத்து விடுவோம் என்று தான் தமிழ் இயக்கங்கள் பல உருவாக்கப்பட்டன. மக்கள் சக்தி என்பதை புறம் தள்ளினார்கள்.அதன் விளைவு தான் இன்று முள்ளிவாய்க்காலில் முடிவடைதுள்ளது.
ஏகாதிபத்தியங்களையும் , இந்திய அதிகார வர்க்கத்தையும் எதிர்த்து போராடாமல் இந்தியாவிலோ ,இலங்கையிலோ மக்கள் விடுதலை என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை கடந்த 30 வருடமாக ம.க.இ.க தங்கள் கருத்தாக அவர்களது இதழ்களான புதிய ஜனநாயகம் , புதிய கலாச்சாரம் இதழ்கள் மூலம் சொல்லி வந்திருக்கிறார்கள்.
அவர்கள் சொல்லி வந்த கருத்துகளுக்கான சரியான் சூழ் நிலை இன்று வாய்த்துள்ளது.அதனை அவர்கள் சரியான திசை வழியில் பயன்படுத்துகிறார்கள்.
வாழ்த்துக்கள்.
மிகவும் நல்ல கட்டுரை.
வாழ்த்துக்கள்.
@ yogan: simply criticising the bourgeious movement alone is not enough. A communist party should take lead in fighting against the National oppression. It is the duty of the proletariat of oppressing nationality to fight against their national oppression against the oppressed . only if they do so, the working class of the oppressed nation can unite with them. If they fail to do so, the working class of the oppressed nation will have to lead the fight to secede from the oppression. If they don’t, surely the bourgeious movement will hijack the sentiments of the people.
When there is a national oppression, fighting against imperialism should include the fight against national oppression also. Leaving anyone will cause the people to suffer.
In srilanka, the proletariat movement of the Sinhalas has failed to accept the right to self-determination of the tamils and has failed to fight against their Sinhala ruling class oppression of tamils. In that situation, the working class of the tamils should take the lead in fighting against the oppression, but they speak for unity. That’s why the bourgeious movements take the lead.
The behavior of the working class of the oppressed nationality is the deciding factor in determining the stand the working class of the oppressed nationality should take, whether to unite or to secede
The communists should introspect themselves apart from criticizing others.
please read the last para as below
“The behavior of the working class of the oppressing nationality is the deciding factor in determining the stand, the working class of the oppressed nationality should take, whether to unite or to secede
The communists should introspect themselves apart from criticizing others”
ஈழத்தமிழர் பிரச்சினைக்கு கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வெற்றி என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மை நிலவரம் வேறு. தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கும் கல்லூரிகளில் ஒரு சிலவற்றில் மட்டும் மாணவர் போராட்டம் தலையெடுத்தது. அந்த கல்லூரிகளிலும் அனைத்து மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. (சென்னையில் மட்டும் 500 கல்லூரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை கல்லூரிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர்? வெகு சொற்பமே!). கலந்து கொண்ட மாணவர்களிலும் பெருவாரியானவர்கள் peer pressure காரணமாகத்தான் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் தெரியாது. மேலும் கடனை உடனை வாங்கி மிகுந்த கஷ்டத்தோடு பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். ஆனால் அவர்கள் போராட்டம் கீராட்டம் என்று அலைந்து தங்கள் வாழ்க்கையில் மண்ணைப்போட்டுக்கொள்கிறார்கள் என்று பல பெற்றோர்கள் அங்கலாய்த்துகொண்டதையும் காணமுடிந்தது. பல பெற்றோர்களுக்கு இந்த போராட்டம் வெறுப்பை தான் ஏற்படுத்தியது. நிறைய மாணவர்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை கேட்டு கை கொட்டி மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தார்கள். இதை நானே வேதனையோடு கண்டேன். இங்கே எங்கே இருக்கிறது ஈழ மக்களின் மீதான கரிசனையும் மனிதாபிமானமும்? கோவையை சேர்ந்த ஒரு பேராசிரியை, இந்த போராட்டம் பிரபாகரன் மகன் கொல்லப்பட்டதை கண்டித்து நடக்கிறது என்று தொலைப்பேசியில் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தமிழகத்தில் இருக்கும் படித்தவர்களே ஈழ மக்களின் பேரழிவை இந்த லட்சணத்தில் புரிந்து வைத்துள்ளார்கள். சாதாரண மக்களை பற்றி என்ன சொல்ல?. இந்த போராட்டத்தை கம்யூனிச அமைப்புக்கள் தங்கள் கொள்கை வக்கிரத்துக்கு ஏற்ப வளைக்க முயற்சித்தன. கிறித்துவ அமைப்புக்கள் தங்கள் கொள்கை வக்கிரத்துக்கு ஏற்ப வளைத்தார்கள். திராவிட கட்சிகளோ இந்த போராட்டத்திற்குள் நுழைந்து ஆதாயம் அடைய முயற்சித்தன. ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம். எதிர்காலத்தில் என்ன ஆகுமோ தெரியவில்லை. ஆனால் இவற்றுக்கிடையில் சில விஷயங்களும் நடந்தன. அக்கிரகாரப்பண்ணை என்று அழைக்கப்படும் ஐ.ஐ.டி-க்குள் மாணவர்கள் ஈழ மக்களுக்காக பேரணியும் உண்ணாவிரதமும் நடத்தியது ஒரு பெரிய ஆச்சரியம். அந்த மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினை பற்றி அனைத்தும் தெரிந்திருந்தது. விஷயம் தெரிந்தவர்களை கூட்டி வந்து கருத்தரங்கமும் நடத்தினார்கள். மற்ற மாநில மாணவர்களின் ஆதரவையும் திரட்டினார்கள். ஒரிரண்டு நாட்கள் மட்டுமே நடந்தாலும் இது மிகப்பெரிய விஷயம். அவர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த போராட்டத்தின் போது இலக்கில்லாத பல விஷயங்கள் இடம் பெற்றன. தமிழீழம் தான் வேண்டும் என்று பதாகை வைத்திருந்தது. பிரபாகரனின் படத்தை தூக்கிக்கொண்டு திரிந்தது. இதெல்லாம் இந்த போராட்டத்துக்கான ஆதரவு தளத்தை மிகவும் குறுகியதாக்கிவிடும். அனைத்திந்திய அளவிலும் உலகளவிலும் ஈழ மக்களுக்கு ஆதரவு கிடைக்கவேண்டும் என்றால் மேற்கண்டவற்றை தவிர்க்க வேண்டும். கீழ் கண்ட இரண்டு விஷயங்களை மட்டும் பிரதானப்படுத்தவேண்டும்.
1. போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலையும் வக்கிரமாக நடைபெற்றன. சாதாரண பொது மக்கள் ஒரு லட்சத்தக்கும் மேல் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இதற்கு சிங்கள படையினரும் அவர்களின் மிகுந்த உயர் மட்டத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களுமே பொறுப்பு. விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் இன்று இல்லை. கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனில் சர்வதேச அளவில் சுதந்திரமான போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இப்போது சுதந்திரமாக அதிகாரத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
2. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் எஞ்சி இருக்கும் தமிழர்களுக்கு பிரச்சினை தீரவில்லை. அவர்களின் நிலமும் வீடுகளும் ஆக்கிரமிக்கப்டுகின்றன. வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்படுகின்றன. அவர்களின் அடையாளம் துடைக்கப்படுகிறது. வாழ வழியில்லாத இம்மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். ஒரு காத்திரமான சுயாட்சிக்கு பண்ணாட்டு சமூகம் வழி வகை செய்ய வேண்டும். தமிழர் பகுதியில் ராணுவ மயமும் சிங்கள மயமும் அகற்றப்பட வேண்டும். இதற்கு பண்ணாட்டு சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட இரண்டு விஷயங்கள் மட்டும் எப்போதும் முன்வைக்கப்பட வேண்டும். பிரபாகரனின் படம் அல்ல.
தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில் மிகப்பெரும்பாலானோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். எப்படிப்பட்ட வஞ்சகமும் அநியாயமும் ஈழ மக்களுக்கு நடந்திருக்கிறது என்பதை அறியாத மாணவர்கள் பல இடங்களில் சிரித்துக்கொண்டே குரல் எழுப்புவதையும் மறியல் செய்வதையும் புகைப்படங்களில் காண முடிந்தது. இத்தகைய அலட்சியமான செயல்பாடுகளுக்கு காரணம் அறியாமையே. இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் குறிப்பாக மாணவர்களிடத்தில் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இன்றைய மாணவர்கள் தான் எதிர்காலத்தில் பல்வேறு அதிகார அமைப்புக்களிலும் தொழில்களிலும் (உள்ளூரில் இருந்து உலகளவில்) பொறுப்பு வகிக்கப்போகிறவர்கள். அடுத்த தலைமுறைக்கு இந்த விடயங்களை கொண்டு போகிறவர்களும் இவர்கள் தான். ஆகவே தமிழகத்து மாணவர்கள் ஈழ விவகாரத்தில் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கு விளக்கி அறிவூட்ட வேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன். தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடிய மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் அதிகம் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களுக்கு மனிதாபிமான உணர்வு இல்லையா? கடின உழைப்புக்கும் நுண்ணறிவுக்கும் சொந்தக்காரர்களான அவர்களின் ஆதரவையும் பங்கெடுப்பையும் பெற வேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது. இன்றைக்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் பத்து லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்களாகவும் மிகப்பெரிய பதவிகளிலும் இருக்கிறார்கள். பலர் பெரும் பணக்காரர்களாக உள்ளார்கள். ஆகையால் தான் இந்தியா போன்ற பெரிய நாடுகளின் தடைகளையும் மீறி சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக இவர்களால் உலகளவில் லாபி செய்யவாவது முடிகிறது. இன்றைய உலகில் சாதாரண மக்கள் எத்தனை கோடி பேர் ஒன்றாக சேர்ந்து கொண்டு போராடினாலும் அதற்கு பலன் அவ்வளவாக இருக்காது. ஆனால் அறிவுஜீவிகளை அதிகம் கொண்ட ஒரு சிறிய இனம் உலகத்தையே கட்டுப்படுத்த முடியும். வெறும் ஒன்றரை கோடி பேர்களை கொண்ட யூத இனம் இதற்கு ஒரு உதாரணம். ஆகவே தமிழகத்தில் மிகுந்த ஆங்கில புலமையும் தமிழ் இன உணர்வும் கொண்ட திறமையான மாணவர்களை உருவாக்கவேண்டும். உலகெங்கிலும் தமிழர்கள் உயர் அதிகார பீடங்களை அலங்கரிக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நம் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். (ஐ.நா மனித உரிமை குழுவின் தலைவராக இருக்கும் நவநீதம் பிள்ளை அம்மையார் எனும் ஒரே ஒரு நபர் சிங்கள அரசுக்கு எத்தகைய நெருக்கடியாக மாறினார் என்பதை சொல்ல தேவையில்லை) இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. சிங்களர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரை கோடி தான். ஆனால் தனி நாடும் இறையாண்மையும் இருப்பதால் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டையும் தமிழர்களையும் உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும். தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிடையே இவ்விடயத்தில் புரிந்துணர்வும் கருத்தொற்றுமையும் தேவை. ஆனால் தி.மு.க என்னும் கட்சி இருக்கும் வரை தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை வருவது கடினம் என்றே தோன்றுகிறது. இவர்களின் ‘டெசோ’ சார்பில் நடந்த முழு அடைப்பே இதற்கு ஒரு உதாரணம். ஆளும் கட்சியின் ஆதரவு மறைமுகமாகவாவது இருந்தால் தான் இம்மாதிரியான போராட்டங்கள் முழு வெற்றியடைய முடியும். ஆனால் ஆளும் அ.தி.மு.க-வின் ஒப்புதல் இல்லாமல் கருநாநிதியாலும் அவரின் எடுபிடிகளாலும் அரசியல் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்டது தான் இந்த டெசோ பந்த். இப்போது தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த ஈழப்பேரழிவை முன்னிறுத்தி சுய ஆதாயம் தேட கருநாநிதி முயன்று வருகிறார். வரும் நாட்களில் இவரும் இவர் கட்சியும் எடுபிடிகளும் பல்வேறு போராட்டங்களையும் பித்தலாட்டங்களையும் முன்னெடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயல்வார்கள். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வருகிறதல்லவா? ஆகவே கொலைகாரனின் கூட்டாளியாக இருந்து ஆதாயம் தேடியது போதாதென்று பிண வீட்டிலும் ஆதாயம் தேடும் இந்த மாதிரியான திராவிட கட்சிகளிடம் தமிழகத்து மக்கள் வரும் நாட்களில் உஷாராக இருக்க வேண்டும். அது தான் இப்போதைய தேவை.