அமரிக்க உளவு நிறுவனமான எப்.பி.ஐ இன் ஆவணம் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. வால் ஸ்ர்ரிட்டை ஆக்கிரமிக்கும் போராட்டத்தை( Occupy Wall Street (OWS)) முன்னெடுத்த தலைவர்களை படுகொலை செய்வதற்கு எப்.பி.ஐ திட்டமிட்டிருந்ததாக அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னதாக போராட்டத்தில் ஒட்போர் (OTPOR)போன்ற அமைப்புக்கள் கடத்துவதில் குறித்த வெற்றிகளைப் பெற்றிருந்ததால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை சமரசத்திற்கு வரத தொழிற்சங்கத் தலைவர்களையும், போராட்ட அமைப்புக்களையும் கொலை செய்யும் நீண்ட வரலாறு அமரிக்க உள்ளக உளவு நிறுவனமான எப்பிஐ இற்கு உண்டு என்று பிரஸ் தொலைக்காட்சியில் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆக்கிரமிப்புப் போராட்ட தலைவர்களைக் கொலை செய்யும் முயற்சியில் அதி தீவிர வலது சாரி அமைப்புக்களான நிறவாத அமைப்புக்களுடன் எப்பிஐ தொடர்புகளைப் பேணி வந்தது என்ற தகவல்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அமரிக்க உளவு நிறுவனமான எப்.பி.ஐ இன் ஆவணம் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. வால் ஸ்ர்ரிட்டை ஆக்கிரமிக்கும் போராட்டத்தை( Occupy Wall Street (OWS) )முன்னெடுத்த தலைவர்களை படுகொலை செய்வதற்கு எப்.பி.ஐ திட்டமிட்டிருந்ததாக அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னதாக போராட்டத்தில் ஒட்போர் (OTPOR)போன்ற அமைப்புக்கள் கடத்துவதில் குறித்த வெற்றிகளைப் பெற்றிருந்ததால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதே வேளை சமரசத்திற்கு வரத தொழிற்சங்கத் தலைவர்களையும், போராட்ட அமைப்புக்களையும் கொலை செய்யும் நீண்ட வரலாறு அமரிக்க உள்ளக உளவு நிறுவனமான எப்பிஐ இற்கு உண்டு என்று பிரஸ் தொலைக்காட்சியில் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். ஆக்கிரமிப்புப் போராட்ட தலைவர்களைக் கொலை செய்யும் முயற்சியில் அதி தீவிர வலது சாரி அமைப்புக்களான நிறவாத அமைப்புக்களுடன் எப்பிஐ தொடர்புகளைப் பேணி வந்தது என்ற தகவல்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அமரிக்க அரசின் அரச பயங்கரவாதம் உலகம் முழுவதிலும் மட்டுமல்ல உள்ளூரிலும் மக்கள் மீதான தாக்குதலைதலைத் தீவிரப்படுத்தியுள்ளதை வெளியான ஆவணம் சுட்டிக்காட்டுகின்றது.