பெருந்தொகையான மக்கள் போரில் கொல்லப்பட்ட பின்பு இலங்கயில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இலங்கையில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளையும் பல் வேறு வழிகளில் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் முடிவை இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் எடுத்து விட்டன. தாம் திருப்பி அனுப்பட்டால் இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளைச் சந்திக்க நேரிடும் என்று அஞ்சும் ஈழ அகதிகள் தமிழகத்தில் இருந்தும் தஞ்சம் தரும் நாடுகள் நோக்கி இடம் பெயரத் துவங்கியுள்ள நிலையில் – முகாம்களில் இருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இலங்கை அகதிகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில், ஏராளமான இலங்கை தமிழர்கள் வசிக்கின்றனர். இலங்கையில் நடந்த இறுதிகட்ட போருக்கு பின், இலங்கை தமிழர்கள் அங்கு திரும்பி செல்வார்கள் என எதிர்பார்ப்பு நிலவியது. இலங்கையில் சூழல் சரியில்லாத நிலையில், அங்கு செல்ல இலங்கை தமிழர்கள் தயங்கமடைவதாகவும், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இலங்கை தமிழர்கள் அதிகளவில் வசிப்பதால், அகதிகள் இங்கிருந்து கடல் வழி தப்பி, அங்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, முகாம்களில் வசிப்போரை கண்காணித்து, அறிக்கை அனுப்ப வருவாய் துறை, கியூ பிரிவினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், முகாமில் இருந்து வெளியில் செல்வோர், மாலையில் திரும்பாவிட்டால், அவரை தொடர்பு கொண்டு விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.









இந்தியாவில் பங்களாதேசியர்கள் மில்லியன் கணக்கில் இருக்கின்றனர் அவர்கள கொல்கத்தா நன் கு கவனித்துக் கொள்கிறது தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் இருக்கின்றனர் யாரும் அவர்கள கவனத்திலும் எடுப்பதில்லை,அதே போல தமிழகத்துத் தமிழர் மலேசியத் தெருக்களீல் அனாதையாகத் திரிகின்றனர் யாரும் அவர்கள ஏறேடுத்தும் பார்ப்பதில்லை ஆனால் அய்ரோப்பிய நாடுகளீல் அகதியாய் வாழும் ஈழத் தமிழரே தமிழகத்தில் இருந்து தமது பெயரில் வரும் தமிழகத் தமிழரை தாயாய்,சகோதரமாய் பழகி உதவுகின்றனர்.நாமெல்லோரும் தமிழர் எனும் உணர்வு நமக்கு இதே உணர்வு எங்கும் வந்தால் தமிழன் அகதியாய் அலைய வேண்டியதில்லை.
தமிழ் மாறன்! ஒரு காலத்தில் தோட்டக்காட்டான் வடக்கன்,வடக்ஸ் என்றெல்லாம் சொல்லி வேலை வாங்கினான்(க. தோணி) இப்ப சற்று திருந்தியிட்டான் என்பது உண்மைதான்.அடி வாங்கினால்தான் ஜானம் பிறக்கும்
செல்வா
அடி வாங்கினோர் ஆண்டைகளல்ல, ஏழைப்பட்ட சனங்கள் தான் என்பதை மறந்து ஏதேதோ சொல்லுகிறீர்கள்.
ஆண்டைகளுக்கு இன்னும் ஞானம் பிறக்கவில்லை. அவர்கள் அமெரிக்காவோடும் இந்தியாவோடும் ஒட்டிக்கொண்டு தான் நிற்கிறார்கள்