Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழக ஆட்சி பாசிசத்தின் மறு வடிவம் : அருந்ததி.

இனியொரு... by இனியொரு...
08/05/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
28
Home பிரதான பதிவுகள் | Principle posts

தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல் மிகவும் ஆபத்தான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது . நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட தமிழக முதவர் மு.கருணாநிதி அவர்கள் ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ஆட்சி இது. கடந்த காலங்களில் அவரது ஆட்சியில் இத்தனை ஒடுக்குமுறைகளையும் ஏதேச்சதிகாரத்தையும் தமிழகம் கண்டதில்லை. அல்லது அவற்றைப் புரிந்து கொள்வதற்கான காலச் சூழல் கனிந்து வரவில்லை. ஆனால் முன்னர் நடந்த கருணாநிதியின் ஆட்சிக்கும் இந்த முறை நடக்கும் கருணாநிதியின் ஆட்சிக்கும் ஒரு வித்தியாசம் துல்லியமாகத் தெரிகிறது.

தனது விருப்பங்களுக்கு ஏற்ப தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூகப்பணியாளர்கள், என அனைவருமே தான் விரும்பும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த ஆட்சியில் எதிர்ப்பார்க்கிறார்.
ஆனால் எப்போதுமே ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்கிணங்க மக்கள் நடந்து கொள்ள மாட்டார்கள்.

நடந்து கொள்ளவும் முடியாது கடந்த காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் நிலவிய அதே சூழல் இப்போது திமுக ஆட்சியிலும்! ஆசைகளையும் விருப்பங்களையும் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட திரு.மு. கருணாநிதி அதை மீறுகிறவர்கள், விமர்ச்சிக்கிறவர்கள் மீது மிகக் கொடூரமான தாக்குதல்களை அரசு இயந்திரத்தின் மூலம் நிகழ்த்தி வருகிறார்.

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு விதமான மக்கள் கொதி நிலை உயர்ந்து வருவதை நாம் சமூகத் தளத்தில் காண முடியும் நாடெங்கிலும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்ட விலைவாசி உயர்வாலும், தனியார் தாராளமயக் கொள்கைகளால் வறுமையில் கோரப்பிடியில் தள்ளப்பட்டுள்ள விவசாயிகளும் மத்திய மாநில அரசுகளின் மீது கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர். மக்களின் போதாக்குறையும் அன்றாடத் தேவைகளுக்கான போராட்டமும் சமூகத் தளத்தில் பல் வேறு எதிர்ப்பியங்களாக முகிழ்த்து வருகின்ற நிலையில் வழக்கம் போல அரசு இயந்திரம் அதை ஈவிரக்கமற்ற முறையில் ஒடுக்கி வருவதை நாம் பார்க்கிறோம்.

மக்கள் மீதான ஒடுக்குமுறை

இந்தியாவின் பிற மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களை அந்தந்த மாநில அரசுகள் ஒடுக்கின்ற விதமும் அது மக்களிடம் பெருங்கோபமாக உருவாகும் சூழலும் போராடும் சக்திகளுக்கு ஒரு நியாயமான பாதுகாப்பை வழங்கி விடுகிறது

இந்த இடத்தில் இருந்துதான் இன்றைய தமிழகத்தின் சூழலை நாம் விளங்கிக் கொள்ள முயல வேண்டும். அதிகளவான அந்நிய முதலீடுகளைக் கவரும் மாநிலமாக தமிழகம் உருவாகி விட்டதாக தமிழக முதலவர் கருணாநிதியும், துணை முதல்வர் மு,க. ஸ்டாலினும் பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் மூலதனக் குவிப்பால் உள்ளூர் மக்களின் வசிப்பிடங்கள், விவசாய நிலங்கள், குடியிருப்புகள், புழங்குமிடங்கள் என எல்லாம் அபாகரமான முறையில் பறிக்கப்படுவது குறித்து இந்த அரசு கவலைப்படவே இல்லை. அத்தோடு கூடவே மின்வெட்டு , மானியங்கள் வெட்டு அல்லது குறைப்பு என்று கிராமபுற மக்கள் பல் வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் இவர்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து ஜனநாயக முறையில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தால் கூட தமிழக போலிசாரால் ஈவிரக்கமற்ற முறையில் ஒடுக்கப்படுகிறார்கள். தமிழக காவல்துறை என்பது முதல்வர் கருணாநிதி அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருப்பது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழகம் முழுக்க சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டாலும் அவர்களை மோசமான முறையில் அடக்கி வரும் இந்த அரசின் அடக்குமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு ராஜகிரி சம்பவம்.

தஞ்சை, கும்பகோணம் சாலையில் இருக்கிற ராஜகிரி என்னும் கிராமத்தில் சுமார் பத்து மணி நேரம் வரை மின்வெட்டு கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. பல நாட்களாக சகித்துக் கொண்டிருந்த மக்கள் ஒரு கட்டத்தில் கொதித்துப் போய் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட அவர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி விரட்டிய போலீசார் சுமார் 250 பேர் மீது ஜாமீனில் வெளிவர இயலாத வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அ.அண்ணாதுரையிடம் கேட்டால் ‘இப்படியான வழக்குகளைப் போட்டால்தான்தான் மக்கள் இனி போராட மாட்டார்கள்‘ என்று தடித்தனமாக பதில் சொல்லி இருக்கிறார். இது ஒரு சின்ன சாம்பிள்தான்தான் கன்னியாகுமரி தொடங்கி செங்கல்பட்டு வரை தமிழக மக்கள் மின்வெட்டால் பெரும் அவதியுறுகிற நிலையில் தொடர்ந்து தமிழக முதல்வர் சப்பைக் கட்டு கட்டும் விதமாக அறிக்கை விடுவதும் அண்டை மாநிலங்களோடு ஒப்பிட்டு தங்களுடைய சீரழிவை நியாயப்படுத்துவதுமான ஒரு மக்கள் விரோதப் போக்கைக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, காவிரி, முல்லை அணைப் பிரச்சனை என்று தமிழக விவசாயிகளின் எந்த ஒரு பிரச்சனைக்கும் காத்திரமான ஒரு தீர்வைப் தேடுவதற்குப் பதிலாக பழி போடுவது, வஞ்சம் தீர்ப்பது, அல்லது போலீசை ஏவி அச்சுறுத்துவது என்ற புதிய அணுகுமுறையை கடை பிடிக்கிறார் கருணாநிதி. சென்னை, நகரை அழகுபடுத்தும் திட்டங்கள், செயற்கைத் துறைமுகங்கள், நவீன பூங்காக்கள், கூவம் அழகு படுத்தம் என்று பல்லாயிரம் மக்கள் தங்களின் பூர்வீக வசிப்பிடங்களை விட்டு தூக்கி எறியப்படும் சூழலும் அதிகரித்துள்ளது.

ஊடகங்கள் மீதான அடக்குமுறை

மக்கள் மீதான ஒடுக்குமுறையும், எதிர்ப்பியக்கங்கள் மீதான ஒடுக்குமுறையும் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து விட்ட சூழல் நமக்கு மினி எமர்ஜென்சியையே நினைவூட்டுகிறது. ஆனால் மக்களோ தங்கள் மீதான இத்தகைய ஒடுக்குமுறைகளை அறிந்துகொள்ள முடியாத மனநிலையில் உள்ளனர். அன்றாடம் தங்களின் வாழ்க்கைப்பாடுகளுக்கே போராடிக் கொண்டிருக்கும் மக்களை இந்த ஒடுக்குமுறைகள் சென்றடைவதில்லை என்பதோடு. அரசின் ஒடுக்குமுறைகளை சமூக ஒழுக்கம் என்னும் பெயரில் அங்கீகரிக்கும் மத்திய தர வர்க்கத்து மனநிலையே பெரும் ஆபத்தான ஒன்றாக உருவாகி இருக்கும் நிலையில் அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் மாநில அரசு. பல சமையங்களில் மத்திய தர வர்க்கங்களின் மீதும் அடக்குமுறைகளை ஏவுகிறது.

அரசின் இத்தகைய ஏதேச்சதிகாரப் போக்கை கண்டிக்கவோ, தட்டிக்கேட்கவோ முனையும் ஊடகங்கள் ஒன்றிலோ சரி செய்யப்படுகின்றன. அல்லது அச்சுறுத்தப்படுகின்றன. தமிழகத்தின் இன்றைய ஊடகச் சூழல் மிகவும் ஆபத்தான ஒரு கட்டத்தை அடைந்திருக்கிறது. முதல்வர் கருணாநிதி அவர்களின் குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட கலகத்தில் மதுரை தினகரன் அலுவக ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கிரிமினல் குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்தது நீதிமன்றம். அதற்கு அரசு குற்றவாளிகள் மீது காட்டிய கரிசனமே காரணம் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த கொலை வழக்கில் தொடர்புடைய அட்டாக் பாண்டி என்னும் குற்றவாளிக்கு விடுதலையான சில மாதங்களிலேயே வாரியப்பதவி வழங்கப்பட்டது.
அப்போது கருணாநிதியினரின் குழுவினராலேயே சன் குழுமச் செய்தியாளர்கள் தாக்கப்பட்டார்கள்.

ஆனால் இன்று நிலமை வேறு அவர்கள் ஒன்று சேந்து விட்டார்கள். இவர்களின் குடும்பத்திற்குள் வந்த சண்டையால் கொல்லப்பட்டவர்களின் உறவுகளும், அடிவாங்கியவனும் மௌனவலியோடு அழுது கொண்டிருக்க தனக்கு ஒரு குடும்பம் இருப்பதாக வேறு அடிக்கடி பெருமைபட்டுக் கொள்கிறார் கருணாநிதி.

சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவுக்கு வந்தார் கருணாநிதி. ஏற்கனவே தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் இழைக்கப்பட்ட அநீதியிலும் வெறுப்படைந்திருந்த வழக்கறிஞர்கள் கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டினார்கள். தாங்கள் புழங்கும் இடமாக இருக்கும் நீதிமன்றத்த்திற்குள்ளேயே வழக்கறிஞர்களை கருணாநிதியின் அடியாட்கள் கொடூரமாகத் தாக்கினார்கள். கருணாநிதி கையில் இருக்கும் போலீஸ்துரையோ அதை கைகட்டி வேடிக்கை பார்த்தது. அந்த நிகழ்வில் தாக்கப்பட்டது வழக்கறிஞர்கள் மட்டுமல்ல செய்தி சேகரிக்க வந்த ஊடகவியளார்களும் கூடத்தான்! ஜெயா தொலைக்காட்சி கேமிராமேன் கொடூரமான தாக்கபப்ட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மிகச் சமீபமாக கட்டுரை எழுத்தாளரும் பேச்சாளருமான பழ, கருப்பையாவும் அவரது வீடும் தாக்குதலுக்குள்ளானது அவரது அரசியலோடு நாம் எள்ளளவும் உடன்படாத நிலையில் அவருக்கும் தன் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை அரசியல் சாசனம் அவருக்கு வழங்கியுள்ள நிலையில் தனக்குப் பிடிக்காத கருத்தை தெரிவித்தார் என்பதால் அவரையும் அவரது குடும்பத்தினரையும் கொடூரமாகத் தாக்கினார்கள்.

கடந்த காலங்களின் கருணாநிதியின் குடும்ப ஊடகங்களைச் சார்ந்த பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட போதெல்லாம், நக்கீரன் குழுமம் கடந்த அதிமுக ஆட்சியில் நசுக்கப்பட்ட போதெல்லாம் அறியப்பட்ட ஊடகவியளார்கள் என்று சொல்லப்படும் பெரும் மேதைகளை எல்லாம் தன் தலைமையில் ஒருங்கிணைத்து ஜெயலலிதாவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்திய கருணாநிதி இன்று அதே அடக்குமுறையை ஊடகவியளார்கள்மீது ஏவுகிறார். ஆனால் தட்டிக் கேட்பதற்கு நாதியில்லை. ஜெயலலிதா ஆட்சியின் போது ஊடகஒடுக்குமுறைக்கு எதிராக தங்களைக் காட்டிக் கொண்ட சக்திகளோ இப்போது கருணாநிதி அரசின் ஒடுக்குமுறைகளைக்கு ஊடக உதவிகளைச் செய்கிறார்கள். அல்லது கண் மூடி வாய் பொத்தி மௌனிகளாகி விட்டனர்.

ஈழ ஆதரவுப் போராட்டங்கள்…ஏன் இத்தனை கொடூரம்?

2008 – மத்தியில் இருந்து தமிழகத்தில் ஈழப் போருக்கு ஆதரவான போராட்டங்கள் எழுந்தன. 2009 ஜனவரியில் தொடங்கி மே மாதம் வரை பேரினவாத இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்ட போரில் ஈழ மக்கள் கொல்லப்பட அதைக் கண்டு தமிழக ஈழ விடுதலை ஆதரவாளர்கள் கொதித்தெழுந்தனர். தியாகி முத்துக்குமார் தன்னுயிரை ஈந்து ஈழத்தில் போர் நிறுத்தம் கோரினார். ஆனால் முத்துக்குமாரின் மரண நிகழ்வுகளில் இருந்து கருணாநிதி ஈழ ஆதரவாளர்கள் மீதான ஒடுக்குமுறையைத் துவக்கினார்.

மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது உயிர்நீத்த்த தியாகிகளுக்கு வருடா வருடம் மலர் அஞ்சலி செலுத்தும் கருணாநிதி ஈழத்திற்காக உயிர் நீத்தவர்களை மனநோயாளிகள், குடும்பப் பிரச்சனைக்காக தீக்குளித்தார்கள் என்று போலீசை ஏவி பிரச்சாரம் செய்தார்.

இன்றுவரை முத்துக்குமாருக்கு ஒரு சிலை கூட அதுவும் தனியார் இடத்தில் வைக்க முடியாத அளவுக்கு காட்டாட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில், இன்றைய கருணாநிதி அரசின் உச்சக்கட்டக் கோபம் என்பது ஈழப் போராட்டத்தை ஒட்டியே வெளிப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகமெங்கிலும் சுமார் 65 பேர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் குண்டர் சட்டத்தின் கீழும் சிறையிலடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடியவர்களாகவோ அல்லது ஈழத்திற்காக போராடியவர்களாவோ இருக்கிறார்கள்.

தமிழக வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தக் கைதும் அடக்குமுறையும் அளவு கடந்து சென்றது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த 22 பேர், மீதும் பெரியார் திராவிடர் கழத்தைச் சார்ந்த 6 பேர் மீதும், மதிமுகவினர் 3 பேர் மீதும், நாம்தமிழர் இயக்கத்தவர் 3 பேர் மீதும், தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்த ஒருவர் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மீது ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்ட காரணத்திற்காக இச்சட்டம் பாய்ந்துள்ளது.

ஆனால் இச்சட்டதின் கீழ் கைது செய்யபப்ட்ட ஒருவர் மீது கூட தேசியப் பாதுகாப்புச் சட்டம் உறுதியாகாமல் அனைவருமே பல மாத சிறைவாசத்தின் பின்னர் வெளியேறி வந்தனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இந்த அடக்குமுறை அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஈழத்தின் கோரத்தை சித்தரிக்கும் குறுந்தகடுகள் வைத்திருந்தவர்களைக் கூட சிறையிலடைத்தனர். இதன் உச்சக்கட்டமாக அராஜகமாக சென்னை இராயப்பேட்டையில் உள்ள பெரியாரின் சிலை திமுக தொண்டர்களாலேயே அடித்து நொறுக்கி வீசப்பட்டதோடு, பெரியார் நூலகமும் தீக்கிரையாக்கப்பட்டது.

இதனுடைய தொடர்ச்சியாக செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது.

செம்மொழி மாநாட்டை அரசு பெரும் பொருட் செலவில் அரசு இயந்திரங்களின் உதவியோடு கட்டி எழுப்பி நடத்தினாலும் அதற்கு உலகெங்கும் வாழும் கணிசமான தமிழர்களிடம் எதிர்பலைகளையும் உருவாக்கியது கொடூரமான இன அழிப்புப் போரின் காயங்கள் ஆறுவதற்குள் இப்படியான மாநாடு தேவையில்லை என்பது அவர்களின் வாதம். தமிழர்கள் எல்லாம் ஊனமாக்கப்பட்டு முட்கம்பி வேலிகளுக்குள் வதைபடும் போது தமிழுக்கு விழா தேவையில்லை என்பது தமிழக எதிர்ப்பாளர்களின் கருத்து. அதையொட்டி துண்டுப்பிரசுரங்கள்,சுவரொட்டிகள், எஸ்,எம்,எஸ்கள் மூலம் பலரும் செம்மொழி மாநாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர்.

கோவை, மதுரை, விழுப்புரம், போன்ற பகுதிகளில் சுமார் முப்பது பேரை எஸ்.எம்.எஸ் அனுப்பி இந்தியா மீது போர் தொடுத்ததாக தேசத் துரோக வழக்கில் சிறையிலடைத்தார் கருணாநிதி. அது போல தமிழகமெங்கிலும் செம்மொழி மாநாட்டுப் பிரச்சாரங்கள் சூடு பிடித்த நிலையில் விழுப்புரம் சித்தணியில் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டது. தமிழகம் முழுக்க சங்கிலித் தொடர் போல இப்படி தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டு சாகசமாக இரயில்கள் நிறுத்தப்பட்டன.

இத்தகர்ப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீஸ் கனத்த மவுனத்தை இப்போது சாதித்தாலும் அப்போது ஈழ விடுதலை ஆதரவாளர்களை நோக்கியே இச்சமபவத்தைக் கொண்டு சென்றது போலீஸ். தமிழகம் முழுக்க கடுமையான பதட்டத்தை அரசே தோற்று விக்கிறதோ என்ற அச்சம் பரவியதும் அப்போதுதான். இப்படி இந்த ஆட்சியில் அடக்குமுறைக்கும் அவலத்திற்கும் எத்தனையோ எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும். இதனுடைய உச்சக்கட்ட வடிவம்தான் திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டமை. அவர் பேசியதை நியாயப்படுத்து நமது நோக்கமல்ல ஆனால் நமது மீனவர்கள் தொடர்ந்து சிங்கள அரசாலும் இலங்கை மீனவர்களாலும் தாக்கப்படுகிற நிலையில், பல பத்தாண்டுகளாக இக்கொடுமை நீடித்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் நமது மீனவர்களைக் காக்கும் படி ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்ததுண்டா?

மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்கள் விஷயத்தில் பாரபட்சமாக நடந்து கொள்வதில் இருந்தே நாம் சீமான் பேசியதை அணுக வேண்டும். தவிறவும் தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் உழைப்பின் உரிமைக்கும் உரிய உத்திரவாதத்தை வழங்கி விட்டு பின்னர் சீமான் பேசியது இறையாண்மைக்கு எதிரானதா? என்பதை அணுகியிருக்க வேண்டும் செயலற்ற இரண்டு அரசுகள். உணர்ச்சி வெளியில் பேசுகிறவர்களை மட்டும் சிறையிலடைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான போக்காகும்.

ஈழ மக்களுக்காக போராடுகிற சக்திகள் இன்றுவரை ஒடுக்கப்படுகிற நிலையில் சீமான் கைது மேலும் அவர்களை அச்சுறுத்துகிறது. இனி இந்தியாவின் மத்திய மாநில அரசை மட்டுமல்ல இலங்கை அரசையோ ராஜபட்சேவையோக் கூட தமிழகத்தில் விமர்சித்தான் கடுமையான சட்டங்கள் பாயும் என்பதான நிலை தமிழகத்தில் நிலவுவதாக போராடும் சக்திகள் கருதுகிறார்கள்.

சட்ட ஒழுங்கும் காவல்துறையும்

தமிழக காவல்துறையினரை பொதுவாக ஸ்காட்லாந்து யார்ட் போலீசுக்கு இணையாக ஒப்பிட்டுப் பேசுகிற பழக்கத்தை எவரோ துவக்கி வைக்க இப்போதும் அது சடங்கான வார்த்தையாகப் பேசப்பட்டு வருகிறது

கடந்த ஆட்சியின் போது காவல்துறை தனக்கு இழைத்த அநீதியை வெட்ட வெளிச்சமாக்கிய கருணாநிதி இன்று தனது விருப்பங்களை ஈடேற்றும் காவல்படையாக காவல்துறையை மாற்றி விட்டார். கருணாநிதி ஆட்சிக்கு வந்த இந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் நடந்த என்கவுண்டர்களின் எண்ணிக்கை 25. கன்னியாகுமரி மாவட்டத்தில் ராஜன் என்பரில் தொடங்கி கொற நடராஜன் என்பவர் கொல்லப்பட்டது வரை 25 ரௌடிகள் காவல்துறையினரால் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற சர்ச்சை எழும் போதெல்லாம் இம்மாதிரி ரௌடிகள் சிலரை கேள்விகளுக்கிடமின்றி கொன்று விடுகிறார்கள்.

ஆனால் இவர்களைக் கொன்றதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகி விட்டதா? முன்னை விட கொலை, கொள்ளை, கடத்தல், வழிப்பறி எல்லாம் அதிகமாகியிருக்கிறது. உண்மையான காரணங்களைக் கண்டறிந்து அதை சரி செய்வதோ, குற்றவாளிகளைப் பிடித்து நீதியின் முன்னால் நிறுத்தி தண்டிப்பதையோ விட்டு விட்டு போலீஸ் இப்படியான சட்டவிரோத கொலைகளைச் செய்து கொண்டிருக்கிறது. பத்தட்டமான மாநிலங்களாக அறியப்பட்டுள்ள அஸ்ஸாம், சட்டீஸ்கர், மேற்குவங்கம், குஜராத், போன்ற மாநிலங்களிலும் காஷ்மீர் போன்ற பகுதிகள் தவிர்த்த அமைதி நிலவுவதாக நாம் நம்பிக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் எந்த ஒன்றிலும் இந்த மாதிரி சட்டவிரோத என்கவுண்டர்கள் நடந்ததில்லை. இது மிக மிக ஆபத்தான ஏதேச்சதிகார போக்காக வளர்ந்து நிற்கிறது.

தனியாக வீட்டில் இருக்கும் பெண்களைத் தாக்கி கொலை செய்யும் நிகழ்வுகள் சர்வசாதாரணமாகி விட்ட நிலையில் மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழலாம். அதுதான் நாம் கேட்க விரும்பும் கேள்வியும். இராமேஸ்வரத்தில் அன்றாடம் நமது மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட அங்கே அறிவிக்கப்படாத போர் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறது பேரினவாத இலங்கை அரசு.

ஒரு பக்கம் ரௌடிகளைக் கொன்று விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று பொதுப்புத்தியில் பேசும் திறமையற்ற காவல்துறை இன்னொரு பக்கம் அரசியல் ரௌடிகளின் முன்னால் கைகட்டி நிற்கிறது. சாதாரண நடுத்தர மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்து வீடுகளை ஆக்ரமிப்பதும் விவசாய நிலங்களை மிரட்டி அச்சுறுத்தி வாங்குவதும், இரட்டைப் பட்டா தயாரித்து நிலங்களை அபகரிப்பதும் தொடர்ந்து வருகிறது.

அரசியல் ரௌடிகளால் நடத்தப்படும் போக்கும் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுக்க அதிகரித்து வருகிறது. மக்கள் அச்சமடைந்த நிலையில் தங்களின் உணர்வுகளைக் கூட வெளிப்படுத்தும் திராணியற்ற மன நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களோ ஒடுக்கும் சக்திகளுக்கு ஆதரவாக நிற்கும் போது நாம் எந்த அரசியல் கட்சிகளையும் சாராமல் மக்களின் பக்கம் நிற்க விரும்புகிறோம்.

ஊடகத்துறை நண்பர்களே!


அரசியல்துறையினரே! அறிவுஜீவிகளே! இலக்கியவாதிகளே! பொது நிலையினராகிய பொது மக்களே இந்த அடக்குமுறைகள் ஏவப்படுவதனை நீங்கள் அறிவீர்களா? அல்லது உங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லையா? இன்று எங்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறை நாளை உங்கள் மீது ஏவப்படலாம். ஆகவே எங்களோடு கைகோருங்கள்…மக்கள் மீதான ஊடகங்கள் மீதான் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுங்கள்.

கருணாநிதி அரசின் மக்கள் விரோதப்போக்கு – எழுச்சிக் கூட்டம் : கருத்துரிமைக்கான கூட்டமைப்பு.

https://inioru.com/?p=15739

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

கருணாநிதி கைகழுவிவிடுகிறார் : கி.வெங்கட்ராமன்

Comments 28

  1. THAMILMARAN says:
    16 years ago

    மிகைப்படுத்தப்பட்ட் செய்திகளூம்,மீடியாக்களீல் சிலதும் அன்னை ஜெயலலிதாவை ஆட்சியிலேற்றப் பாடுபடுகின்றன், வளர்ப்பு மகன் வேறூ வனவாசம் முடிந்து ம்றூபடி வந்துள்ளார்.கலலைஜர் ஆட்சியைக்குற கூறீ பெரிய திருடர் எல்லாம் கல்லாவை நிரப்ப பார்க்கிறார்கள் இதனால் கலஜரைக் காலி பண்ணலாம் எனும் கனவோடு குழப்ப்ம் விளவிக்கிறார்கள் தமது ஆதரவாளர்கள வைத்துக் கலகம் செய்கிறார்கள் இதனால் மக்கள் மாறூவார்கள் என எதிர்பார்கிறார்கள்.இருந்து பாருங்கள் ஆறாவது தடவையாய் கலைஜர் அரியண ஏறூவதை.

  2. anpan says:
    16 years ago

    தமிழ் மாறன் எந்த மக்கள் சார்ந்த விஷயங்களிலாவது உமக்கு நேர்மையான மக்கள் நலக் கருத்து இருக்கிறதா? கலைஜ்ஜர்….கலைஜ்ஜர் என்று கூவுவதை விட்டு விட்டு மக்கள் விரோத ஜெ, கருணாவை எதிர்க்க வாரும், அறிவு கொண்டு யோசியும்.

  3. கருணா says:
    16 years ago

    ஆறாவது முறையாக பாடையில் பொவான் கருணா,.

  4. mathi says:
    16 years ago

    மிக நல்லக் கட்டுரை, கடந்த காலங்களில் இது போன்ற கேவலமான அடக்குமுறைகள் இருந்ததில்லை. இன்று கருணாநிதியின் ஆட்சி என்பது திமுக ஆட்சியல்ல, மாறாக அவரது குடும்ப ஆட்சி, கனிமொழிக்கு, ஆப்ரிக்காவில் சுரங்க நிறுவனம் இருக்கிறது. மாறன்களின் வளர்ச்சி அச்சுறுத்துகிறது. ஒன்றிலோ இவர்கள் தொழிலதிபர்களாக மட்டுமே இருக்க வேண்டும். அல்லது அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும். ஆனால் தொழிலதிபர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் இருந்து கொண்டு ஒட்டு மொத்த தமிழகத்தையுமே சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

  5. K.P.Nathan says:
    16 years ago

    This is very true article…keep it up!!!

  6. rukku says:
    16 years ago

    முரசொலிமாறன் செத்த போது கருணாநிதி அழுதார் கதறிகதறி அழுதார்,அழுதுகொண்ணே இருந்தார்.இரண்டு நாள் கழித்து தான் கவிதை எழுதினார்.ஆனால் ஆண்ணா செத்த போது இவர் முதல் வேலையாய் என்ன செய்தார் தெரியுமா?ஆல் இந்தியா ரேடியோவில் வாசிக்க நீண்ட கவிதை எழுதப் போய்விட்டார்.’பூ விதழின் மென்மையிலும் மென்மையான புனித உள்ளம் அரவணைக்கும் அன்பு உள்ளம்’என்று நாண்ட தேரம் யோசித்து எழுதி முடித்தார்.அண்ணா மேல் இவருக்கு உண்மையிலேயே அன்பிருந்தால் இப்படி அவசர அவசரமாய் இன்ஸ்டான்ட் கவிதை எழுதியிருப்பார்?இதை யெல்லாம் சின்ன வயதில் கேட்டபோது வியந்தோம்.மனப்பாடம் செய்து கழக க்கூட்டங்கள் துவஙெக்முன் சந்தடிச்சாக்கில் கிடைத்த மைக்கில் ஒப்பிப்போம்.அப்போது உலகமே கைக்கு வந்ததாய் மகிழ்வோம்.நம் அப்பாவோ அண்ணனோ இப்படி செத்துக் கிடக்கும் போது பொணத்தை விட்டுவிட்டு கவிதை எழுத வருவோமா?கவிதைதான் வருமாமா?என்றெல்லாம் இப்போது தமிழினத்துக்கு கருணாநிதி செய்த துரோகத்தை பார்த்த பிறகு பல கேள்விகள் எழும்புகிறது.அந்த கவிதையிலும் எத்தனை பொய்கள்.?செத்த பொணத்தின் இதயத்தை இரவலாக கேட்ட கலுணாநிதியின் அற்பபுத்தியை நினைத்தால் ஆத்திரம்தான் வருகிறது.அதிலும்’நான் வரும் வரையில் பத்திரமாய் வைத்திருந்துது உன் காலடியில் சேர்ப்பேனண்ணா?(இரவல் இதயத்தை இத்தனை நாள் வைத்திருந்தால் அது என்னவாகும்.பரலோகத்தில் எம் ஜி ஆரைப்பார்த்ததும் அண்ணா ‘அவன் எப்போ வருவா’னென்று கேட்டதாகவும் அதற்கு எம் ஜி யார் ‘அவர் எல்லோரையும் அனுப்பிவிட்டுதான் வருவார்’ என்று சொன்னதாகவும் ஒரு தகவல்)அதிலும் அண்ணாவின் இதையத்தை வாங்கிய மாதிரி கையில் கொடுக்காமல் அவர் காலடியில் வைக்க அது என்ன பேட்டா செருப்பா?இல்லை பேஷன் ஷூவா..?)கருணாநிதியின் இந்த அலம்பல்கள் அண்ணாவுக்கு தெரிந்திருந்தால் அண்ணா எங்வளவு வேதனைப்படுவார்.
    தான் தன் குடும்பம் தன்னை புகழ்வோர் என்று தன்னைச்சுற்றியே வாழும் கருணாநிதாயை தலைவனாக ஏற்று கடந்த ஆண்டுவரை அக்கட்சியில் உறுப்பினராக இருந்தமைக்காக வெட்கப்படுகிறேன்

    • thamilmaran says:
      16 years ago

      எருக்கு மிக மட்டமான ஆள்.காலைநேரம் நல்ல விசயத்த தேடும் போது இப்படியாபன புல்மபல்கள கேட்டா விடிஜ்ச மாதிரிதான்.ஏந்தான் இப்படி இருக்கிறார்களோ.

      • rukku says:
        16 years ago

        தமிழ்மாறன் என்ற பெயரை கருணாமாறன் என்று மாற்றினீரென்றால்தமிழ் எழுதவராவிட்டாலும் உமக்கு தெலுங்காவது எழுத வரலாம், என்னவோதெரியவில்லை கருணாவை பின்பற்றுபவரெல்லாம் பண்புதெரியாதவர்களென்பது டமில்மாரனின்
        கலைஜஜர் எழுத்தில் எல்லோருக்கும் புரிந்திருக்கும்,

        • thamilmaran says:
          16 years ago

          கருணாநிதி தெலுங்கர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை,இசைவேளாளர்கள் தாய்மொழி தமிழே.கலைஜரால் தமிழும் தாய்மொழிமீது பிரியமும் கொண்டோராய் வைரமுத்து முதல் வைகைப்புயல் வரை வரலாறூ எழுதுகிறார்கள்.சோ வைக் கேளூங்கள் உங்கள் அன்னை ஜெயலலிதாவைக் கேளூங்கள் இன்னும் இத் தரை வாழும் தமிழரைக் கேளூங்கள்.ஏங்கு போனாலும் என்றூம் சூரியன் மறவதில்லை.தமிழ்மாறன்.

          • rukku says:
            16 years ago

            மகாநதியில் வேலுநாயக்கர்,கமல் நல்ல தமிழ் பேசுவார்,/பாஞ்சாலங்குறிச்சி சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மு,(பொம்மன்) தெலுங்கர் ,தமிழுக்காக உயிர்விட்டு ,வரலாற்றில் தமிழனாக போற்றப்படுபவர், /,கருணாநிதி என்னும் தெட்சணாமூர்த்தியின் தந்தையார் முத்துவேல் நாயக்கர்,தெலுங்கர் ஓரளவு தமிழ்பேசுவார்/அன்னை ஜெயலலிதை, கன்னட தெய்வம் நல்ல தமிழ் பேசுவார்/ /தந்தை ஈ,வே,ராமசாமிப்பெரியார் தமிழுக்காக வாழ்ந்த தியாகி நல்லதமிழ் பேசுவார் (தெலுங்கர்)/ இங்கே கருணாந்தியை பிரித்துக்காட்டவேண்டுமென்று எவருக்கும் தேவையில்லை ஏனென்றால் திராவிடநாடு ஆந்திரா,/கர்நாடகா/ கேரளா/தமிழ்நாடு பிரிவதற்குமுன் எல்லோரும் ஒன்றாகவிருந்தவர்கள்,அது வேறுகதை, /ஜேயலலிதாவிடம் கேட்டுப்பார்தால் தான் கர்னாடகாவில் பிறந்த தமிழிச்சி என்று அடித்துச்சொல்லுவா,/ அதுபோல கருணாநிதி தனது பயோடோட்டாவை விக்கிப்பீடியாவில், இசை வேளாளர் என்று குறித்துவிட்டால் தமிழராகிவிடமுடியாது,/எஸ்,பி,பாலசுப்பிரமணியம்,என்கிற தமிழ்போன்ற பெயரையும் 20,000 தமிழ்ப்பாடலையும் பாடிவிட்டால் தமிழராகிவிடுவாரா, ஒறிச்சினல் தெலுங்கை தாய் மொழியாகக்கொண்டவர் அவர்/, தமிழைத்தவிர வேறுமொழி உச்சரிக்காமல் முருகன் பாடல்களும் ,தமிழ்ச்சினிமாவுக்கே குரல் கொடுத்து தமிழனாகவே வாழ்ந்துகொண்டிருப்பதால் ரீ,எம்,சவுந்தரராசன் தமிழராகிவிடமுடியுமா;ரீ,எம்,எஸ்,ஒரு சௌராஸ்டிராக்காரர், உங்களைக்கேட்டால் ரீ,எம்,எஸ். மதுரைக்காரர் என்றுசொல்லுவீர்கள்/ தவிர,வைக்கோ/எம்ஜீஆர்/விஜயகாந்த்/இன்னும்பல பிரபலங்கள் தமிளரல்ல, அதனால்த்தான் அவர்களெல்லோரும் மேடைகளில் பேசும்போது “நான் ஒரு இந்தியன் “என்று உங்களெல்லோருக்கும் சேர்த்து குக்கூஸ்கெரில், தந்து உங்களுக்கு மொட்டாக்கு போட்டுவிடுவிதுண்டு,

  7. rukku says:
    16 years ago

    புலம்பெயர் இலங்கைத் தமிழருடன் சேர்ந்து நடத்திய” மே” 2009 ஆண்டின் “உண்ணாவிரத நாடகத்தைதான்” மேலுள்ள கட்டுரையின் புகைப்படம் விளக்கி நிற்கிறதே!.படுத்தார்,பாராளுமன்றத்தை வென்றார்!…. இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது!.(வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஒரு மில்லியன் வரையான தமிழர்களில் 90 வீதமானவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தும் ஏனைய பாகங்களில் இருந்தும் புலம்பெயர்ந்த யாழ்-சைவ-வேளாளரே. — த.ஜெயபாலன் – தேசம் நெட்).
    26 ஆண்டுகளுக்கு முன்பு,என்னுடைய தந்தைக்கே 47 வயதுதான்,நான் பள்ளிக்கூடம் படிக்கும் சிறுவன்,டாக்டர் கலைஞர் கருணாநிதி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசுகிறார்,”எனக்கு 60 வதுக்கு மேல் ஆகிவிட்டது(அப்போது எம்.ஜி.ஆர். இவரை பதவிக்கு வரவிடாமல் பல ஆண்டுகளாக தண்ணிக் காட்டிக் கொண்டிருக்கிறார்),நான் இன்னும் மூன்றாண்டுகளுக்கு மேல் உயிரோடு இருக்கமாட்டேன் என்று ஒருவர் ஆரூடம் கூறியுள்ளார்,ஆகையால் இதுவே என்னுடைய இறுதி தேர்தலாக உங்களை சந்திப்பதாக இருக்கலாம் என்று நா தழு தழுக்க கூறி கண் கலங்கினார்.என் தந்தையும்,என்ன தலைவர் இப்படி சொல்லிவிட்டாரே என்று கண் கலங்கினார்,எனக்கும் அழுகை அழுகையாக வந்தது,உடனே அந்த தேர்தலில் எங்கள் வீட்டு சேமிப்புப் பணம் காலி.தமிழனின் உள்ளத்தின் ஈரப்பதம்,உணர்ச்சிகளாக உறிஞ்சப்பட்டு,தனிமனிதர்களின் வாகனங்களில் பெட்ரோலாக செலவாகி வற்றியது!.பிரகு என் தந்தைக்கும் வயதாகி,தள்ளாடி இறந்துவிட்டார்,எனக்கும் வயதாகி விட்டது,ஆனால் அந்த நாடகம் இன்னும் தொடருகிறது..தலைவர் மட்டும் கட்டு(மஸ்தான்)மரமாக இன்னும் மிதந்துக் கொண்டே இருக்கிறார்…தேர்தல் வருகிறதல்லவா!!….

  8. அருண் says:
    16 years ago

    இவர் இனி என்ன தகிடு தத்தம் செய்தாலும் தமிழ் சனம் நம்பாது. போன தடவையே உண்ணாவிரதம் இருந்தப்போ செத்துப் போயிருவோம்ணு பயந்துதான் கலைஞர் எழுந்து போயிட்டார். இனி உண்ணாவிரதம் இருந்தா…. உண்மையிலேயே சாக வேண்டியிருகுய்ம்/

  9. ஆதவன் says:
    16 years ago

    இது நல்லக் கட்டுரை. கருணாநிதி சுத்தமாக பாசிஸ்டாக மாறி விட்டார். திராவிடக் கொள்கைகளுக்கு முதல் எதிரியே திமுகாதான். அதுதான் உண்மை.

  10. யோகன் says:
    16 years ago

    வணக்கம் ஆதவன்( டென்மார்க் ) ,தமிழ்மாறன் கொஞ்சம் கலைஞர் பித்தேறி திரிவதாக கேள்வி.

  11. ஆதவன் says:
    16 years ago

    ஆமாம் யோகன் அவரோட கலைஞர் பித்திற்கு ஒரு அளவே இல்லை. இந்த பித்துதான் மக்கள் பிரச்சனையில் கூட பலரது கண்ணை மறைத்து விடுகிறது. கருணாவாவது, ஜேவாவது மக்கள் விரோதிகளை அம்பலப்படுத்துவதுதான் ஒரு எழுத்தாளனின் கடமை.

    • thamilmaran says:
      16 years ago

      மக்கள் விரோதிகள அம்பலப்படுத்துவதுதான் எழுத்தாளன்,பத்திரிகையாளன்,நல்ல குடிமகனின் கடமை ஆனால் இதில் யார் மக்கள் விரோதி என்பதுதானே கேள்வி.

      • ஆதவன் says:
        16 years ago

        ஆமாம் உமக்கு மக்கள் வீரோதி என்றால் அது யாரெல்லாம் கருணாவை எதிர்க்கிறார்களோ அவர்கள் எல்லாம் மக்கள் விரோதிகள். நமக்கொ ஜெயலலிதா, கருணா, பசையுள்ள இடத்தில் ஒட்டும் ராமதாஸ் உள்ளிட்ட அனைவருமே மக்கள் எதிரிகள்தான்.

        • thamilmaran says:
          16 years ago

          இப்படித்தான் மக்கள் எதிரிகள் என்றூ சொந்த மக்களேயே உதைத்தவர்தான் இன்றூ மக்களூக்கு எதிரியானார்கள்.உல்கமே சரியாக இல்லாதபோது உல்கில் யாருமே சரியாக இருக்க முடியாது,இருப்பதில் நல்லதை தேர்ந்தெடுப்பதே சிறந்தது.

          • அருண் says:
            16 years ago

            அதாவது கழுத விட்டயில் முன் விட்டை எது பின் விட்டை எது தேர்ந்து பொறுக்கணும் இல்லையா?

  12. rukku says:
    16 years ago

    தமிழ்மாறனுக்கு சில தரவுகள்;மகாநதியில் வேலுநாயக்கர்,கமல் நல்ல தமிழ் பேசுவார்,/பாஞ்சாலங்குறிச்சி சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மு,(பொம்மன்) தெலுங்கர் ,தமிழுக்காக உயிர்விட்டு ,வரலாற்றில் தமிழனாக போற்றப்படுபவர், /,கருணாநிதி என்னும் தெட்சணாமூர்த்தியின் தந்தையார் முத்துவேல் நாயக்கர்,தெலுங்கர் ஓரளவு தமிழ்பேசுவார்/அன்னை ஜெயலலிதை, கன்னட தெய்வம் நல்ல தமிழ் பேசுவார்/ /தந்தை ஈ,வே,ராமசாமிப்பெரியார் தமிழுக்காக வாழ்ந்த தியாகி நல்லதமிழ் பேசுவார் (தெலுங்கர்)/ இங்கே கருணாந்தியை பிரித்துக்காட்டவேண்டுமென்று எவருக்கும் தேவையில்லை ஏனென்றால் திராவிடநாடு ஆந்திரா,/கர்நாடகா/ கேரளா/தமிழ்நாடு பிரிவதற்குமுன் எல்லோரும் ஒன்றாகவிருந்தவர்கள்,அது வேறுகதை, /ஜேயலலிதாவிடம் கேட்டுப்பார்தால் தான் கர்னாடகாவில் பிறந்த தமிழிச்சி என்று அடித்துச்சொல்லுவா,/ அதுபோல கருணாநிதி தனது பயோடோட்டாவை விக்கிப்பீடியாவில், இசை வேளாளர் என்று குறித்துவிட்டால் தமிழராகிவிடமுடியாது,/எஸ்,பி,பாலசுப்பிரமணியம்,என்கிற தமிழ்போன்ற பெயரையும் 20,000 தமிழ்ப்பாடலையும் பாடிவிட்டால் தமிழராகிவிடுவாரா, ஒறிச்சினல் தெலுங்கை தாய் மொழியாகக்கொண்டவர் அவர்/, தமிழைத்தவிர வேறுமொழி உச்சரிக்காமல் முருகன் பாடல்களும் ,தமிழ்ச்சினிமாவுக்கே குரல் கொடுத்து தமிழனாகவே வாழ்ந்துகொண்டிருப்பதால் ரீ,எம்,சவுந்தரராசன் தமிழராகிவிடமுடியுமா;ரீ,எம்,எஸ்,ஒரு சௌராஸ்டிராக்காரர், உங்களைக்கேட்டால் ரீ,எம்,எஸ். மதுரைக்காரர் என்றுசொல்லுவீர்கள்/ தவிர,வைக்கோ/எம்ஜீஆர்/விஜயகாந்த்/இன்னும்பல பிரபலங்கள் தமிளரல்ல, அதனால்த்தான் அவர்களெல்லோரும் மேடைகளில் பேசும்போது “நான் ஒரு இந்தியன் “என்று உங்களெல்லோருக்கும் சேர்த்து குக்கூஸ்கெரில், தந்து உங்களுக்கு மொட்டாக்கு போட்டுவிடுவிதுண்டு,

    • xxx says:
      16 years ago

      ருக்கு,
      உங்கள் தகவல்கட்கு ஒரு பிற்சேர்க்கை.
      சுப்பிரமணியம் என்ற பேர் தமிழருக்கு மட்டும் உரியதல்ல. வடக்கில் அப் பேர் பிரபலமானதல்ல எனினும், சுப்பிரமணிய சுவாமி என்றவர் இருக்கிறார்.
      நீங்கள் சொல்வது போல, தமிழருக்கு நன்மை செய்ய ஒருவர் தமிழராகத் தான் இருக்க வேண்டியதில்லையே.

      • rukku says:
        16 years ago

        xxx நானும் அதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறேன் அதில் எந்த மாற்றமும் கிடையாது,ஆனால் கருணாநிதியின் செயற்பாட்டில் சரியோ பிழையோ தெரியாது எனக்கு மனவேதனையுண்டு,

        • rukku says:
          16 years ago

          சுப்பிரமணியம் சுவாமி வடக்கத்தியரல்ல,சோழவந்தான். த்ஞசாவூர் தமிழர் ,,டில்லியில் வாழ்க்கை அமெரிக்காவில் பேராசிரியராக இருந்தவர்,

      • xxx says:
        16 years ago

        சுப்ரமணிய சுவாமியின் பூர்விகம் மகாராஷ்ட்டிரம் என்று கேள்விப்பட்டதனாலேயே எழுதினேன். மீள விசாரித்துப் பார்க்கிறேன்.

        • THAMILMARAN says:
          16 years ago

          சுப்பிரமணீய சுவாமி, ஜெயலலிதா,தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

          • rukku says:
            16 years ago

            good,,

  13. maniyan says:
    16 years ago

    கருணா தன்னை பகுத்தறிவுவாதி, நாத்தீகம் என்று பேசினாலும் சோதிடர்களின் ஆலோசனை இரகசியமாக ராசாத்திஅம்மா, தயாளுபாட்டி,கீர்த்திகாஅம்மா,ஆகியோர் மூலம் நடந்துகொண்டுதானிருக்கிறது,ராசாத்தியம்மா ஒரு சோதிடரிடம் போயிருக்கிறா படுபட்சி தென்பட்டு கவலையுடன் கனிமொழிக்கு ரகசியமாக முடிவைச்சொல்லியிருக்கிறார்.கனிமொழியும் ஸ்ராலின் மனைவி (சாந்தா இப்போ துர்கா எனசோதிட ஆலோசமைப்படி பெயர் மாற்றப்பட்டிருக்கிறது,)இருவரும் பிரபல சோதிடர் ஒருவரிடம் போயிருக்கின்றனர்,இனி கருணாநிதிக்கு முதல் மந்திரி பதவிக்கான யோகமில்லை என்று சோதிடர் கைவிரித்திருக்கிறார்.இதை கருணாநிதிக்கு சொல்லியிருக்கின்றனர், யோசித்த்ச் கருணா அடுத்த தேர்தலில் ஸ்ராலினை முன்னிலைப்படுத்தலாம் ஆனால் அழகிரி ஒத்துக்கொள்ளுவானோ தெரியவில்லை ,அழகிரியிடம் பேசுங்கள் என்று சொல்லியிருக்கிறார், எவருக்கும் அழகிரியிடம் இதுபற்றிப்பேச துணிவில்லை,என்ற பேச்சு வருகிறது மொத்தத்தில் 2010 ம் ஆண்டுடன் தி.மு.க. வீழ்ச்சியடையும் என்பது நடக்கலாம்,

  14. JAMES FRIEDRICH says:
    16 years ago

    எனக்கு நன்றி சொல்ல நீ யார்?-வீரபாண்டி ஆறுமுகத்திடம் கருணாநிதி:தர்மகர்த்தா வந்தார். எனக்கு பாடல் சொல்லி கொடுத்தவர் எழுந்து நின்று அவரை வரவேற்று துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டார்.அந்த துண்டு நான் வாங்கியது. நான் ஏன் இடுப்பில் கட்டவேண்டும் என சுயமரியாதையோடு கேட்டு கட்டவில்லை.தஞ்சையில் நடந்த தூக்கு மேடை நாடகத்தின்போது எம்.ஆர். ராதா அவர்கள் தெரிவிக்க, தளபதி அழகரி சாமி, எனக்கு கலைஞர் பட்டத்தை தந்தார்.—
    எத்தனை தர்மக்த்தாக்களை நீ, இடுப்பில் துண்டை கட்டிய பிறகும் எட்டி உதைத்து பழிவாங்கினாய்!.பட்டுகோட்டை அழகிரிசாமி “சாவுக்கு” அவரின் ஏழ்மையை கருதி (சினிமாவால் உன் கையில் பசை),நீ செல்லவில்லை!.நீ முதலில் அமைச்சரான போது எம.ஆர்.ராத சிறையில்,போய் பார்த்தாயா!நடிகை ரம்பா திருமணத்தில் கூடதான் கலைஞர் கருணாநிதி கலந்துக் கொண்டார்.நடிகை ரம்பவும்,வீரபாண்டி ஆறுமுகமும் ஒரே தட்டில் வைத்திருக்கும் “கட்சிக்காரன் -பிச்சைக்காரன்” தர்மம்தான் கருணாநியியுடையது!.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...