ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களுக்கு உள்ளாகவே ஏழை மக்களின் சமூக நலத்திட்டங்கள் பலவற்றிற்கு சாவு மணியடிக்கப்பாட்டுவிட்டது. வறுமையின் பிடியில் வாழ்விற்கும் சாவுக்குமிடையே போராடிக்கொண்டிருக்கும் ஏழைகள் அடிப்படை வசதிகளைக் கூட அழித்துக்கொண்டிருக்கும் அதே வேளை பல்தேசிய நிறுவனங்கள் கட்டற்று சந்துபொந்துக்கள் எல்லாம் நுழைந்து தமது ஆதிக்கத்தை நிறுவிக்கொள்கின்றன. இந்த நிலையில் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் துணை அமைப்புக்களும் நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளன.
பால், பேருந்து, மின்கட்டண விலை உயர்வு
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் 21.11.11
காலை 11 மணி
இடம் : தி.நகர் பேருந்து நிலையம்
ம.க.இ.க – பு.மா.இமு – பு.ஜ.தொ.மு- பெ.வி.மு







