இலங்கை அரசின் இனப்படுகொலைகளுக்க்கும் போர்க்குற்றங்களுக்கும் தமிழர் தரப்பிலிருந்து ஆதரவு வழங்கிய அரச துணைக்குழுவான ஈ.பி.டி.பி அமைப்பின் பொதுச் செயலாளரான டக்ளஸ் தேவானந்தா, பேரின வாதத்திற்கு வெளிப்படையான ஆதரவை வழங்கியுள்ளார். சிங்கள பௌத்த பேரினவாதிகளின் மொழி அடக்குமுறைகளின் இன்னொரு பகுதியான சிங்களம் மட்டும் தேசிய கீதத்தை டக்ளஸ் தேவானந்தா ஆதரித்துக் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் சிங்களத்திலேயே இசைக்கப்படுவது வழக்கம், அதில் தவறிருப்பதாக கூறமுடியாது என்று டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்துகின்றார்.
அந்த வகையில் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வும் கூட பிரதமர் கலந்து கொள்ளும் ஒரு தேசிய நிகழ்வு என்ற வகையில் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் தவறில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.








Why do we need to change? Why don’t the Sinhala people sing in Tamil? Where are we going and what direction the GoSL taking, more like, another Pirabakaran sure to rise. I rather advice not to make the same mistakes over and over again…i am not happy with the decision!!!
மகிந்தாவின் இனச்சுத்திகரிப்பிற்கு வாலாட்டும் டக்ளஸ்> இவர்களுக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன?
டக்கு மாமா போட்டிருக்கிறது என்னவோ” வெள்ளை ” உடுப்பு, ஆனால் தமிழ்மக்களுக்கு செய்யிறதெல்லாம்” கரி” வேலை. திண்டுகொழுத்த கோவில்மாடுமாதிரி, அரசாங்கம் சொல்லுறதுக்கெல்லாம் தலையாட்டுறதுதானே உந்தாளின் வேலை. உடையில் இருக்கிற கறையைப் போக்கிடலாம், ஆனால் உன் மேல் உள்ள கறையை,நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் போக்கிடமுடியாது துரோகியே தெரிந்துகொள். நான்கு விதவைப் பெண்களிற்கு தையல்மெசின், மூன்று கோவிலிற்கு கும்பாவிசேசத்திற்கு காசு, ஏதும் ஒரு வீதிக்கு சகாயவேலை, இதுதானே உன்னோட தமிழீழம்.யார் யாரோ தலையில இடி விழுது, இவென் பொரிவான் தலையில ஒண்டும் விழுகுதில்லையே.ஜயா..யமதர்மராசா, உன்னுடைய கடைக்கண் பார்வையை இவென் மேலையும் சீக்கிரம் காட்டுப்பா