Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம்

இனியொரு... by இனியொரு...
05/27/2011
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

ஊழல் மலிந்த கருணாநிதியின் குடும்ப ஆட்சியை முடிவிற்குக் கொண்டுவரை மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இப்போது ஜெயலலிதாவின் ஆட்சி சமச்சீர்க் கல்வியை நிறுத்துவதில் ஆரம்பித்திருக்கிறது. இத்திட்டத்தின் அடிப்படையில் ஜெயலலிதா தனியார் கல்வி நிலையங்களிடம் பெருந்தோகையான பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளாரா என்ற சந்தேகம் வலுவடைவதாகத் தமிழ் நாட்டின் அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை, சமச்சீர் கல்வி முறையை இந்த கல்வியாண்டிலேயே தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக பண்ருட்டியைச் சேர்ந்த எம். சேஷாச்சலம், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை எஸ்.டி. மனோன்மணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் இருவர் சார்பிலும் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் சமச்சீர் கல்விச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் எடுக்கப்படும் ஒரு கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா?
தமிழக அரசின் சமச்சீர் கல்விச் சட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு, ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஒரு கொள்கை முடிவின் மூலம் செல்லாதது ஆக்க முடியுமா?
முந்தைய அரசு எடுக்கும் கொள்கை முடிவை, அடுத்து பொறுப்புக்கு வரும் அரசு மாற்றுவது நல்லதல்ல என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறையை, இப்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசு கொள்கை முடிவு என்ற பெயரில் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகளை நீதிமன்றத்தில் வில்சன் எழுப்பினார்.
சமச்சீர் கல்வித் திட்டத்தை கைவிடுவது என்பது, அரசுக்கு 200 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் மாணவர்களின் நலனையும் பாதிக்கும் என்று அந்த பொதுநல வழக்கில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்ட சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:
சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த வல்லுனர்களைக் கொண்ட ஆய்வுக் குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கெனவே, பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையை செலவிடுவது அவசியம்தானா?
இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
மேலும், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, இந்த நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகள் மனுதாரர்கள் சார்பில் எழுப்பப்பட்டுள்ளன.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

யுத்தவெற்றியும் மகிந்தவின் பெருந்தேசிய வெறியும்

Comments 4

  1. thava says:
    15 years ago

    ஏற்கனவே கே.பி என்பவர் ஜெயலலிதாவையும் ஈழத் தமிழ்ர்களையும் பிரிக்க சதி செய்கிறார் என அரசியல் ஆய்வு செய்து புலி வாதிகள், டொன்டி பார்த் புலிகேசியாக முடி சூட்டிய நிலையில் இனியொருவுக்கு தேவையில்லாத வேலை இது.

  2. THAMILMARAN says:
    15 years ago

    அம்மா ஆங்கிலமும் செந்தமிழும் இன்னும் தெலுங்கும் பேசக் கூடியவர் அவர் பேச்சில் மயங்கி எம்ஜிஆரும் அவர் மூச்சு உள்ளவரை அவர் முந்தானை முடிச்சிலே கிடந்தார் இப்போது எல்லாத் தமிழருக்கும் அன்னையாகி உள்ள அம்மா அடிக்கடி ஆத்திரப்படுபவர் அவரால் எல்லாம் தடாலடியகவே நடக்கும்.குருடர் பார்க்கிறார் வாய் பேசாதவர் பேசுகிறார் எனும் இஜேசு அழைக்கிறார் கூட்டம் போல அம்மா கூட்டமும் ஆனவரை சுருட்டிக் கொண்டு எல்லோருக்கும் ஆப்பு அடித்துவிட கடைசியில் கலைஞ்ர்தான் தஞ்சம் தமிழருக்கு.

  3. Ramea says:
    15 years ago

    ஜெயலலிதா தனியார் கல்வி நிலையங்களிடம் பெருந் தொகையான பணத்தைப் பெற்றுக் கொண்டு இருந்தால் இதுஅவருடைய நோக்கத்தில் கிடைத்த பக்க விளைவே ஆகும். முக்கியமான நோக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி கிடைக்கும் பாதையில் தடங்கல் ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.

  4. ராவணன் says:
    15 years ago

    மக்கள் கொள்கை ரீதியில் ஜெ. வுக்கு வாக்களிக்கவில்லை. கடந்த ஆட்சியின் மீது உள்ள கோபம் காரணமாகத் தான் ஜெ.வுக்கு மக்கள் வாக்களித்தார்கள். தி.மு.க வை மக்கள் புறக்கணித்தது சரியானது தான் என்றாலும் இந்த வெற்றியக்கு ஜெ. தகுதியானவர் தானா எனபது சிந்திக்க வேண்டிய ஒன்றே.. இருவரும் புறக்கணிக்கபபட வேண்டியவர்கள் தான் மக்கள் எப்போது உணர்வார்கள் என்று தெரியவில்லை. மாற்றி மாற்றி நம்மை ஏமாறறுவதுதான் இவர்களின் வேலையாக இருக்கிறது..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...