லண்டனில் அமைந்துள்ள எக்குவாடோரியன் தூதரகத்தைச் கண்காணித்தவாறு போலீசார் வலம்வருகின்றனர். இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக பிரித்தானிய அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து 11 ஆயிரம் பவுண்ஸ் களை செலவிடுகிறது. ஜுலியன் அசாஞ் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஆதாரபூர்வமாக நிரூபித்த பின்னரும், அவரை சுவீடனுக்கு நாடுகடத்த வேண்டும் என பிரித்தானிய அரசு தேட ஆரம்பித்தது. தான் அமரிக்காவிற்கு நாடுகடத்தப்பட மாட்டேன் என உறுதி வழங்கினால் சுவீடனின் விசாரணகளை எதிர்கொள்ளத் தயார் என அசாஞ் தெரிவித்திருந்தார்.
அதனை ஏற்றுக்கொள்ளாத பிரித்தானிய அரசு எக்குவாரோர் அரசு அகதி அந்தஸ்து வழங்கிய ஜூலியன் அசாஞ்சை கைது செய்வதற்காக 24 மணி நேரமும் காத்திருக்கிறது.








What a waste of money. I am sure that guy is relishing in all these attention.