Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சேகுவேராவின் நண்பர் ஆல்பர்ட்டோ கிரெனாடோ மரணம் உழைக்கும் வர்க்கத்திற்கு மாபெரும் இழப்பு : கு.கதிரேசன்

இனியொரு... by இனியொரு...
03/20/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
8
Home பிரதான பதிவுகள் | Principle posts

“உலகின் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்கமுடியாத ஆத்திரத்தால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!” என்று முழங்கிய மாபெரும் போராளி எர்னஸ்ட் சேகுவேரா. கம்யூனிச சிந்தனையும் மனிதாபிமானமும் நிரம்பிய குடும்பத்தில் பிறத்தவர் சே .இவர் 1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக , புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக் கொண்டு , அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் சைக்கில் நாட்குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூயார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

பரவலான வறுமை, அடக்குமுறை, அறியாமை என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சேகுவேரா பலமாக நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்க உருவாக வேண்டும் என்பது சேகுவேராவின் லட்சியமாயிற்று . இந்த பயணம் தான் சேகுவாரவை மாபெரும் புரட்சியாளனாக ஆக்கியது. இந்த பயணத்தின் போது உற்ற தோழனாக பயணித்தவர் ஆல்பர்ட்டோ கிரெனாடோ இவர் சே மீது எந்த அளவிற்கு அன்பு செலுத்தினார் என்றால் பயணத்தின் போது சேவின் பிறந்த நாளை கொண்டாட அனைவரும் தயாராகிறார்கள் ( ஜூன் 13 ) அன்று அமேசன் நதியின் மறுகரையில் இருக்கும் தொழுநோயாளிகளோடு தனது பிறந்த நாளை கொண்டாடப் போகிறேன், என்று நதியில் குதித்து நீந்தத் தொடங்குகிறார், அவர் கடுமையாக ஆஸ்துமா வின் பாதிப்பு உள்ளவர் , அமேசான் நதியோ மிகபெரியது என்ன செய்வது, அவருக்கு என்ன நேருமோ என்று தெரியாமல் கண்ணீர் விட்டு கதறுகிறார் கிரேனாடோ,சே நீந்தி கலைத்து போய் மறுகரையில் எழுகிறார், தொழு நோயாளிகளும் அவரை அன்போடு முகாமிற்கு தூக்கி செல்கின்றனர். அந்த உன்னதமான நண்பர்களின் பயணத்தின் போது இந்த மனித குலத்தின் மீது அளவற்ற அன்பு பெருக்கிறது, ஒரு சிலர் நலமாக வாழ லட்சகணக்கான மக்களை துன்பக்கடலில் ஆழ்த்தும் முதலாளித்தவத்தின் மீதும் ,ஏகாதிபத்திய அமெரிக்காவின் மீதும் , அதற்கு துணைபோகும் லத்தின் அமெரிக்க ஆட்சியாளர்கள் மீதும் பெரும்கொபம் கொள்கின்றனர் இருவரும் மக்களின் அறியாமையை நினைத்து பச்சாதப்படுகின்றனர்.இவை அனைத்துமே மார்க்சிய இலக்கியங்கள் மீதும் கம்யூனிசத்தின் மீதும் அவர்களுக்கு எல்லையையற்ற காதலை உருவாக்குகிறது. பயணத்தின் முடிவில் நண்பர்கள் பிரிய நேர்கிறது.

சேகுவேர ,பிடல் காஸ்ட்ரோவுடன் சேர்ந்து கொரில்லா யுத்தத்தின் மூலம் மக்கள் விரோத சர்வாதிகாரியாக இருந்த படிஸ்டாவின் அரசை தூக்கி எரிகின்றனர். கியூபாவில் புரட்சி வீரர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புதிய உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சி மலர்கிறது. 1960 சே தனது நண்பரை கியூபாவிற்க்கு வர அழைப்பு விடுக்கிறார். நண்பனின் அழைப்பை ஏற்று கியூபா வந்த

ஆல்பர்ட்டோ கிரெனாடோ ஹவானா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியமர்கிறார், பின்பு பல அறிவியல் கருத்தரங்குகளில் கலந்து கொள்வதோடு கியூபாவை மருத்துவ, கல்வி , அறிவியல் துறைகளின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றினார். சே வின் மறைவிற்கு பின்னரும் தனது உயிர் நண்பனின் நினைவாக அவர் மறையும் வரை கியூபாவிலையே தங்கி இருந்தார். தி மோட்டார் சைக்கில் டைரி என்ற திரைப்படம் வெற்றிப்படமாக அமைவதற்கு இவரின் பங்களிப்பு மிகவும் அதிகம் என்று கூறலாம். இவரது பயணக்குறிப்பில் சே என்ற மாபெரும் மனிதாபிமாணியை நாம் அருகில் இருந்து பார்க்க முடியும். இவர் 05.03.2011 அன்று தனது 88 வது வயதில் மரணத்தை தழுவினார். இவரை பார்க்கும் போதெலாம் சே எனும் மாபெரும் புரட்சியாளனை நாம் தரிசித்திருக்கிறோம். இவரின் இழப்பு அறிவியல் வளர்ச்சிக்கும், உழைக்கும் வர்கத்தினருக்கும் மிகப்பெரிய இழப்பேயாகும். சேவையும் அவரது நண்பர் ஆல்பர்ட்டோ கிரெனாடோவையும் நினைவு கூறுவோம், அவர்களின் வழியில் சோஷலிச சமுதாயத்தை அமைக்கப்பாடுபடுவோ

-கு.கதிரேசன் வழக்குரைஞர் (advkathiresan@gmail.com)

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழர்கள் வாக்களிப்பின் மூலம் வழங்கியுள்ள அரசியல் செய்தி : விஜய்

Comments 8

  1. THAMILMARAN says:
    15 years ago

    சேகுவாராவின் சிந்தனை வயப்பட்டவராக லண்டனில் வாழும் பிரித்தானியத் தமிழர் திரு போல் சத்தியநேசன் அவர்கள் அய்ரோப்பிய உழைக்கும் தமிழராகிய எம்மை ஒன்றாக்கும் சீரிய பணீயில் செயற்படுகின்றார்.இந்த மோட்டார் சயிகிள் டயறீ படம்தான் தன்னைத் தமிழ்த் தொண்டனாக்கியது எனும் உண்மையை ஒப்புக் கொள்ளூம் லண்டன் கவுன்சிலர் திரு சத்தியநேசன் லண்டனில் தமிழரை பெருமைப்படுத்தும் தமிழர்.

    • ramu says:
      15 years ago

      த.மாறன் இந்த வஞ்சப்புகழ்ச்சி வேண்டாமே. மோ.சை.டையறி படம் வரமுன்னரே கவுன்சிலாக இருக்கின்றார். அவர் எப்போதுமே சாதியதமிழர். மேடைக்கு அலைபவர்.

      • THAMILMARAN says:
        15 years ago

        சாதிய தமிழர் என தமிழரை இரண்டாக்கும் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் நீங்களூமா ராமு?

  2. Varathan says:
    15 years ago

    உழைக்கும் வர்க்கத்திற்கு மாபெரும் இழப்பு???/
    Can you explain how it will affect the life of a farmer or any normal worker in India?

    • THAMIL MARAN says:
      15 years ago

      வரதர் கேட்டாரே ஒரு கேள்வி வார்த்தையில் பதில் சொல்ல முடியாது?

    • mani says:
      15 years ago

      அவர் உழைக்கும் மக்களுக்காக பாடுபட்டவர் மார்க்ஸ், லெனின் , எங்கல்ஸ்,மாவோ போல

  3. chandran.raja says:
    15 years ago

    ஒருநாட்டின் முதாலித்துவத்திற்கெதிரான போராட்டமாக இருக்கட்டும் ஏகாதிபத்தியத்தியதிற்கெதிரான போராட்டமாக இருக்கட்டும். இல்லையேல் பசுமைக்கட்சி நடத்துகிற உலகம்மாசுபடுத்தப்படுகிறது என்பதாக இருக்கட்டும். அதில் ஒருவரையாவது யாரும் சேக்குவாராவின் ரிசேட்யுடன் அடையாளம் காண முடியும். சேக்குவரா அவ்வளவுக்கு மனிதநேயத்திற்கு பிரபல்யம் வாய்ந்து விட்டார். நிமிர்ந்த நடையும் நேரான பார்வையும் என்று சொல்வார்களே பாரதிக்கடுத்தது இரண்டாம் இடத்தில் இருப்பது இந்த ஆஜந்தீனியா இளையன்தான். கீயூபாவின் புரட்சி இலட்ச்சியத்திற்கு வித்திதிட்டவர்கள் அதை சாதனையாக்கி இறுதிவரைக்கும் அதாவது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கழிந்தும் தாம் வேறுபட்டமனிதர்கள் இன்றும் பறைசாற்றிக் கொண்டிருப்பதற்கு பிடல்கஸ்ரோ மாத்திரம் அல்ல இந்த மருத்துவபட்டப்படிப்பை இடைவழியில் நிறுத்திவிட்ட இந்த ஆஸ்மாவியாதிக்காரனா இந்த இளையனும் தனது கணிசமான பங்கை வழங்கியிருக்கிறான் என்பதை எமக்கு இடித்துச் சொல்லுகிறது. 55-65காலப்பகுதி உலகத்திலேயே தனியொருநாட்டில் சோசலிசமும் அதைபின் தொடர்ந்து வந்த கொறிலாயுத்தங்களும் கொடிகட்டிப் பறந்தகாலங்கள். பொலியாவ காட்டில் இந்த துடிப்புள்ள மனிதன் இறந்து போனதற்கு இவரின் வங்குரோத்துதனமான சிந்தாந்த அறிவே காரணமாக இருக்கிறது என்பதை இவரின் கொலைக்கு பொறுப்பொறுப்பெடுகிற அமெரிக்க சி.ஐ.ஏ. யே நல்ல உதாரணம். ஆதாயத்திற்காண உற்பத்தியை நிறுத்துவதிலும் கூலிஉழைப்புக்காண போராட்டத்தை தொடருவதிலும் இந்த குட்டிமுதாலித்துவ சிந்தனையாளர்கள் எந்த பாத்திரத்தையும் வகித்திடமுடியாது. இது நேரடியான சர்வதேசதொழிலாளவர்க்கத்தின் தலையீடே!. உனக்கு மகத்துவமான கொள்கை இருக்கவேண்டுமாக இருந்தால்.. மகத்துவமான புரட்ச்சிகர கட்சி இருந்தாக வேண்டும். மனிதநேயத்திற்கான இலட்சியங்களும் போராட்டங்களும் பெறுமதியாக்கப்படல் வேண்டும். இதை வரலாற்று ரீதியாக எந்தவித சலசலப்பும் இல்லாமல் அமைதியாக வழிநடத்துவது சர்வதேசசம்பந்த குழுவால் வழிநடத்தப்படுகிற நான்காம்அகிலம் ஒன்றுமட்டுமே! நாளை பொழுதுதின் விடிவை-அதற்கான பதிலை அவர்களுடன் கலந்து உரையாடிவீர். இது சேக்குவரா தன்னில் குத்தியுள்ள பட்டயத்தை விட பெறுமதியானது. வலுசேர்ப்பது. உலகத்தொழிலாளர் ஐக்கியம் ஓங்கட்டும். இதுவே நான்காம் அகிலம்.

    • mani says:
      15 years ago

      this is good

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...