Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சினிமாக் கலைஞர்களிப் பயன்படுத்தும் இலங்கை அரசு : கேசவன்

இனியொரு... by இனியொரு...
07/25/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
41
Home பிரதான பதிவுகள் | Principle posts

சமூகம் குறித்துச் சிந்திக்கும் வினைத்திறன் உள்ள ஒவ்வொரு மனிதனையும் இலங்கைத் தேசிய இனப்பிரச்சனை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கின்றது. தெற்காசியாவின் முக்கியத்துவமற்றதாகக் கருதப்பட்ட ஒரு மூலையில் சாட்சியின்றி நடத்தப்பட மனிதப் படுகொலைகள் எழுபத்தையாயிரம் உயிர்கள் வரை காவு கொண்டிருக்கலாம் என சர்வதேசச் சிக்கல்களுக்கான குழுமம் கருதுகிறது. ஐ.நாவின் அதிகாரி கோடன் வைஸ் இன் கணிப்பில் நாற்பதாயிரமாவது இருக்கலாம் என்கிறார். உலகின் அதிகார பீடங்கள் இருபதாயிரம் வரை செல்லலாம் என்கின்றன. எது எவ்வாறாயினும் இதன் எதிர்விளைவுகள் மனித சமுதாயத்திற்குப் எச்சரிக்கை விடுக்கின்றன.

a) முதலில் இத்தனையும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னரும் இலங்கை அரசு இனச் சுத்திகரிப்பை எந்தத் தடையுமின்றி நடத்திவருகின்றது. இந்திய அரசின் பின்பலத்தோடு அதன் அரசியல் பொருளாதார நலன்களுக்காக பயன்படுத்தப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் அவலங்கள் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை, அரசியல், கலாச்சார, பொருளாதாரத் தளங்களில் நடத்திவருகின்றது. இதன் மிலேச்சத்தனமான அருவருக்கத்தக்க வடிவங்கள் இலங்கைப் பிரச்சனையை அவதானிக்கும் சமூகப்பற்றுள்ள அனைவரும் அறிவர்.
இதற்கு எதிராகப் போராடவல்ல இலங்கை மக்களை அதிலும் ஈழத் தமிழர்களை கோரமான பயத்தின் விழிம்பிற்குள் வைத்திருக்க முனைகிறது இலங்கை அரசு. ஆக, அங்கு ஏற்கனவே புலிகளின் தலைமைக்குள் இல்லாதொழிக்கப்பட்ட மக்கள் சமூகங்களின் வெகுஜனத்ப் போராட்ட அமைப்புக்களின் இல்லாமை ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் ஈழத் தமிழர்கள் திறந்தவெளிச் சிறைக்குள்ளேயே வாழ்கின்றனர். மக்கள் கூட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த அடிப்படை உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

b) உலகில் எந்த அரசும் தனது சொந்த மக்களை அழிப்பதற்கு இலங்கை முன்னுதாரணமாக அமைய வாய்ப்புண்டு. இந்தியாவில் பழங்குடி மக்களின் மீது இதே பாணியிலான படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. காஷ்மீரில் இன்னொரு இனவழிப்புத் திட்டமிடப்படுகின்றது. இலங்கை அரசு தான் நிகழ்த்திய மனிதப்படுகொலையிலிருந்து தப்பித்துக்கொள்ளுமானால் இதே வகையான படுகொலைகளை எந்த அரசும் எப்போதும் நடத்தி முடித்துவிட்டுப் பயங்கரவாதத்திற்கான யுத்தம் என மார்தட்டிக்கொள்ள வாய்ப்புண்டு.

ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்தவும் அழுத்தங்களைப் பிரயோகிக்கவும் வலிமையுள்ள மூன்று பிரதான சக்திகளை இலங்கை இந்திய அரசுகள் கையாள முற்படுகின்றன.

1. தமிழ் நாட்டு எதிர்புச் சக்திகள்.
2. புலம்பெயர் நாடுகளில் எதிர்ப்புணர்வு.
3. இடது அணிகளிடமிருந்து உருவாகும் சர்வதேசிய எதிர்ப்புக்குரல்.

இதில் மூன்றாவது பலமடைந்ததாக இல்லை. இடது சாரிகள் இவ்விடயத்தில் தங்களை மீளாய்விற்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாகப் புலம்பெயர் நாடுகளில் இனிமேல் உருவாகவல்ல எதிர்ப்பை இல்லாதொழிக்க இலங்கை அரசிடம் நேர்த்தியான நிகழ்ச்சி நிரல் ஒன்று உண்டு. கே.பி, இங்கிலாந்திலுள்ள இலங்கைத் துணைத் தூதர் ஹம்சா, சார்ள்ஸ் போன்றோர் உட்படப் பலர் இதன் முகவர்களாகத் .தொழிற்படுகின்றனர்.

இதன் முதல் பகுதி தமிழ் நாட்டு எதிர்ப்பு சக்திகள். இல்ன்ங்கைப் பிரச்சனையை மட்டும் முன்வைத்து தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் எரியும் நிகழ்வுகளைப் புறக்கணித்து தமிழ் நாட்டு மக்களை வென்றெடுக்க எண்ணுவதெல்லாம் அறிவீனம். இவ்வாறான ஒரு தூய தமிழ்த் தொலை தூரத் தேசியவாதம் நிலைபெற எந்த வாய்ப்பும் இல்லை என்பது ஒரு புறத்தில் இருக்க சர்வதேசிய வாதிகளாகக் கருதப்படும் இடதுசாரிகள் தேசிய வாதிகளின் ஏமாற்றப்பட்ட உணர்வுகளை நெறிப்படுத முன்வரவேண்டும்.

எது எவ்வாறாயினும் தமிழ் நாட்டின் எழுச்சியும் எதிர்ப்புணர்வும் இலங்கை அரசிற்கும் இந்திய இலங்கைக் கூட்டுக்கும் சவாலாகவே அமைந்துள்ளது. ஐபா நிகழ்வின் தோல்வி இதன் ஒரு வெளிப்பாடாகும். திராவிட இயக்க மாயைகளுக்கு அப்பால் புதிய சக்திகள் உருவாவதற்கான ஆரம்ப நிலையாகக் கூட இதனைக் கருதலாம்.

இந்த அரசியல் பகைப் புலத்திலிருந்து இலங்கை அரசு இந்திய மத்திய மாநில அரசுகளுடன் இனைந்து தமிழ் நாட்டைக் கையாளும் நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதிதான் அசின், கருணாஸ் போன்றோரின் இலங்கைப் பயணங்கள். சாதாரண குடிமகன் இலங்கைக்குச் செல்வதற்கும் இவர்கள் இலங்கை அரசின் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதற்குன் நிறைய வேறுபாடுண்டு.
இவர்களின் பயணங்கள் வழியாக

1. தமிழ் நாட்டில் உருவாகும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தல்
2. இலங்கை இப்போது சுமூகமன நிலையிலிருப்பதான விம்பத்தைக் கட்டியமைத்தல்
3. இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களைத் தமிழ் நாட்டின் சினிமா மாயைக்கு உள்ளாக்கி அவர்களின் எதிர்ப்புணர்வைக் திசை திருப்புதல்.

போன்ற பல்வேறு நோக்கங்களை திரைப்படக் கலைஞர்களின் இலங்கை வரவு நிவர்த்தியாக்குகிறது.
அசின் என்ற நடிகையின் இலங்கைப் பயணம் உரக்கச் சொல்லும் இன்னொரு செய்தி, இப்போதெல்லாம் இலங்கை அரசை எதிர்க்க வேண்டாம், அங்குள்ளவர்களுகுச் சிறிய உதவிகளைச் செய்தால் போதுமானது என்பதாகும். கருணாஸ் கூட இப்படித்தான் பேசுகிறார்.

அசின் திரும்பியதும் நடிகர் சங்க சரத் குமார் என்ற நடிகர் சங்கத் தலைவர் தனது வியாபார நோக்கத்தையும் வெளிப்படுத்தினார்.
இதே சரத் குமார் கடந்த வாரம் பிரிதானியாவிற்கு வந்து இங்குள்ள டபிள்யூ.எச்.சிமித் என்ற ஐந்தாயிரம் கிளைகளைக் கொண்ட வெளியீட்டு நிறுவனத்தோடு இந்திய சினிமா சஞ்சிகை ஒன்றை வெளியிடுவதற்கான ஒப்பந்ததை பெற்றுக்கொண்டு, ஹரோப் பகுதியிலுள்ள உணவகத்தின் இலங்கைத் தமிழ் உரிமையாளர் வழங்கிய “விருந்துபசாரத்தில்” கலந்து கொண்டு தனது ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கச் சென்றுவிட்டார். அதுவும் இலங்கைத் தமிழர் செலவில் ஒழுங்கு செய்யப்பட்ட ரீகன் ஸ்ரீட், ஹில்லடன் ஹொட்டேலில் உல்லாசமாகத் தங்கிச் சென்றிருக்கிறார்.

அவருக்கு சிமித் புத்தக வெளியீட்டகத்தில் ஒப்பந்தம் பெற்றுக்கொடுக்க உதவியது இலங்கைத் தூதரகம் என்று அறிந்த போது இலங்கை அரசாங்கம் எந்த எல்லைவரை சென்றிருக்கிறது என்பது தெளிவாகிறது.

இது குறித்து விருந்துக்குச் சென்ற தமிழர்களிடம் கேட்ட போது இன்ப அதிர்ச்சியிலிருந்த அவர்கள் அப்படியெல்லாம் சரத் குமார் செய்யமாட்டார் என்றார்கள்.

இனியாவது இந்திய சினிமாக் குப்பைகளை இலங்கைத் தமிழர்கள் நிராகரிக்கும் நிலைக்கு வரவேண்டும். குறைந்தபட்சம் தமிழ் நாட்டில் எமக்காகத் தியாகம் செய்த ஆயிரம் தமிழர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.அழிக்கப்படும் மக்களின் பிணங்களின் மேல் வியாபாரம் நடத்தும் வியாபாரிகள் அன்னியப்படுத்தப்பட வேண்டும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழர்கள் வாழ்வதற்குப் பதிய வேண்டும்?

Comments 41

  1. யாழ் says:
    16 years ago

    பணம் புகழ் என்றால் செத்து நாறிய பிணம் கூட வாய் திறக்கும். இவர்களும் அது போலவே. தமது சுயநலன்களுக்காக மற்றவர்களின் உணர்வுகளைக் கூட மதிக்காத வியாபாரிகள். இவர்களுக்கு யார் இருந்தால் என்ன செத்தால் என்ன பணம் கிடைத்தால் போதும்.  கொலைவெறியன் மஹிந்தனின் சாணக்கித் தனமும் அதுவே.  எதைக் காட்டினால் இவர்கள் வாலாட்டுவார்கள் என்பதனை நன்றாகவே புரிந்து வைத்துள்ளான்.  யாழ்

    • thurai says:
      16 years ago

      புலிகளின் முகவர்களே துரோகத்தை இதுவரை கால்மும்

      செய்து
      வந்தனர்.
      செய்த்தோடு மட்டுமல்ல அதனைச் சுட்டிக்காட்டியவர்களையே துரோகிகளாக்கி
      படு கொலைகலையும் செய்தன்ர். இதனை புலிகள் இலங்கையில் அழிந்தபின்

      புலம்பெயர் புலித்துரோகிகள் தொடர முடியாத நிலமையிலுள்ளனர்.

      இப்போ சாதாரண தொழில் செய்யும் சினிமாவையும், தமிழர்களையும் இலங்கை அரசுடன்
      தொடர்பு என்பதற்காக. துரோகிகள் என்பதை உலக்ம் ஏற்காது.

      திரை மறைவில்
      புலத்துத்தமிழரிடம் மிரட்டிப் பறித்த சொத்துக்களில் சுகபோகம் காண்போரை
      முதலில் கண்டுபிடியுங்கள்.

      துரை

  2. ஊர்மிளா பிரபா says:
    16 years ago

    பத்திரமாக இலங்கை  போய் வரும் வெளிநாட்டு உல்லாச கனடா வாழ்  இலங்கை தமிழ் மக்கள் எப்போது துரோகிகள் அவார்கள். ?

    • saravanai says:
      16 years ago

      அசின், கருணாஸ் போன்றோரின் இலங்கைப் பயணங்கள். சாதாரண குடிமகன் இலங்கைக்குச் செல்வதற்கும் இவர்கள் இலங்கை அரசின் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதற்குன் நிறைய வேறுபாடுண்டு.

    • வன்னியன் says:
      16 years ago

      கனடாவில் இருதுகொண்டு இதை சொல்பவர்கள்தான் பெருந்துரோகிகள் ! இவர்கள்தான் எமுறவுகளை (வன்னிமக்களை) ஏதிலிகளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர்கள். இவர்கள்தான் அந்த மக்களின் அவலங்களில் வாழ்பவர்கள். முடிந்தால் அந்தமக்களுக்கு ஏதாவது உதவிசெயுன்கள் அதுதான் இன்று எம்முறவுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் செய்யவேண்டியது .

    • thurai says:
      16 years ago

      தமிழின உண்ர்வாள்ர்களின் உபதேசம் தமக்கோ, ஈழ்த்தமிழர்களிற்கோ அல்ல.
      ஊரிற்கே. கேட்பார் கேட்கலாம்.திட்டுவார் திட்டலாம். துரை

  3. manian says:
    16 years ago

    இவன் ஒரு ஈன பிறவி என்று நமக்கு காட்டி விட்டான்

  4. kuruvi says:
    16 years ago

    மன்னன் எவ்வழி மக்களும் அவ்வழி சரத்குமார் தனது பிறந்த நாள் எனக்கூறி பாடையில் கிடந்து அரசியல் செய்யும் மொத்த வியாபாரி கருணாநிதியின் காலில் விழுந்தபோதே தெரிந்துவிட்டதுகருணாநிதி மட்டுமல்ல நடிகர்கள் அரசியல்வாதிகள் எவரையும் நம்பி பலனில்லை மானமுள்ள தமிழ் மக்களையும் இந்த பச்சோந்திகள் விட்டுவைக்கப் போவதில்லை கருணாநிதி சாகும் வரை ஈழதமிழினம் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டுக்கொண்டேயிருக்கும், கருணாநிதியின் மறைவுக்குப்பின் ஒருவேளை ,,,
    ஈழத்தமிழர்கள்பற்றிய வரலாற்றுக்குறிப்பில் பாடத்திட்டங்களில் ,ஈழத்தமிழர் கமு,கபி,என்றுபதியப்படும்,

    • thurai says:
      16 years ago

      புலிகள் தமிழரைக் கொல்ல்லும் போது இந்ததமிழின உண்ர்வாள்ர் எங்கே இருந்தாரோ? துரை

      • paavi says:
        16 years ago

        புலி இலமல் உமக்கு வாழ்க்கை இல்லை போல….

  5. David says:
    16 years ago

    This investigation is 100 % correct.The Deputy High Commissioner of the Sri Lanka High Commission in London Mr.Amza is a very close friend of Sarath Kumar , Rathika and many film stars in Tamil Nadu..He built up his relationship when he was Duputy High Commissioner in Chennai.The GOSL has sent Amza to create problem among the diaspora in Europe and he is doing the job well with the supports of anti LTTE .He tries to take one by one from the LTTE support group to the Govt.Side.A lot of Tamil diaspora gather in London High Commission premises every month and passing all the information needed by the Sri Lankan intelligent agents.There will be no surprises if the GOSL promote Amza as High Commissioner to the UK.Note he is a best loyal friend of Mahinda Rajapaksha and his family.The present High Commissioner’s tour of duty is going to complete very soon.Mr.Amza is coming from Kattankudy which is located in the Batticaloa District.He always keeps on eye for his personnel benefits.He operates GOSL’s agenda with KP’s help now.The Sri Lankan Govt.l tries to destroy all minorities in Sri Lanka with the help of mionirties.Are we going to help to do this?

    • Shiva says:
      16 years ago

      David
      You are right to say that the chauvinist government is using minorities to destroy minorities
      If we do not want that to happen, there are things that each minority has to do.
      Is it not time that the Tamils made a start to mend fences with the Muslims? (Not the way Sampanthan & Hakeem make opportunist deals).
      The Tamil diaspora should think about this matter seriously too.

  6. vinothan says:
    16 years ago

    ராதிகா மன்மோகன்சிங்குக்கு சொன்ன புலிகள் இயக்கம் செயத கொலையை தான்நேரே பார்த்தது என்று ,

    • thurai says:
      16 years ago

      சாதி பேதம் பார்க்கும் தமிழனிற்கு தமிழினம் என்று கூறவே தகுதியில்லை.
      அப்படி சாதி பேதம் பார்ப்பவர்கள் தமிழீழ்ம் கேட்காமல் தம்து சாதிக்கெனெ
      ஓர்
      நாடு கேட்டு போரிடுவதே சரியான வழி. துரை

  7. thamilmaran says:
    16 years ago

    மிகச் சிறப்பான பதிவு.ஒரு கதாநாயகன் வில்லனாக இருப்பது ஆச்சரியம் தருகிறது.கோடலிக் காம்புகள் இருக்கும் வரை கோடலிகள் கொத்திக் கொண்டே இருக்கும் போலிருக்கிறது.

  8. velu says:
    16 years ago

    Sarath Kumars wife Is Radika, Radhika studied at St Bridgents convent in Colombo, she speaks fluent sinhala, her mother comes from Wennappuwa in Sri Lanka, she is a sinhalese, she was a actress, MR Radha had an affair with her while he was in Sri Lanka than Ceylon, to attend a cultural function, You can guess, from where Sarath Kumar got his influence

    • thurai says:
      16 years ago

      எத்தனை புலிகள் அன்றும் இன்றும் சிங்கள்வருடனும்,
      இலங்கை அரசுடனும் தொடர்பிலிருக்கின்றன்ர் தெரியுமா. புலிக்ளின் விடுதலைப் போராட்டம்
      தமிழ்ரின்

      ச்மூக, பொருளாதார விடுதலையை உள்ளடக்கவில்லை. இலங்கை அரசிடமிருந்து
      தமிழரை ஆழும் அதிகாரத்தை தம்தாக்கவே, சக இயக்கங்களையும் அழித்து தமிழினத்தில் இருந்த் அறிவாளிகள், சிந்தனையாளர்களையும் அழித்தன்ர்,
      என்வே
      அதிகாரம், புகழ் இதனைத் தேடுவோரிற்கு பணமே அவசியம்.இதனையே
      புலிகளின்
      புலம்பெயர் முகவர்கழும் முன்னோடிகழும் செய்து முடித்தனர். ஏழைகள் மடிந்தன்ர். இனியாவது மற்ரவ்ர்களைத துரோகியாக்குவதை விட்டு
      புண்பட்ட ஈழ்த்தமிழ்ர்களிற்கு ஆறுதல் கூறி வழிகாட்ட்டுஙக்ள்.

      இதுவரை

      துரோகிப்பட்டம் சூட்டி துரையப்பாவை கொன்றவரைக் காணவில்லை. ஆனால்

      அவரால் உருவாக்கப்பட்ட கே,பி எங்குள்ளார். கே,,பி யை உருவாக்குவதற்கா
      இத்தனை பேரை துரோகிகளாக்கி கொலை செய்தீர்கள்? துரை

      • Soorya says:
        16 years ago

        இந்தக் கட்டுரைக்கு கருத்து எழுதி முளுப் பக்கத்தையும் நிறைத்த சாதனையாளன் தொரை அவர்களே!

        திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லி பழங்கள்ளு புளிக்கும் என்றாலும் அதையே குடி என்பது நாகரிகமல்ல. எஙக பார்தாலும் புலி, புலி என்று வெருட்டுகிறீர்கள். பிரயோசனமாக வேறு ஒன்றுமே எழுதத் தெரியாதா?

        ஒரு போராளியை உருவாக்கும் போது அவன் பின்னாளில் துரோகியாவான் என்று உ

      • paavi says:
        16 years ago

        திருவாளர் துரை !

        உம்மக்கு என்ன பிரச்சனை ? புலிகள் பிழை என்று முடிவாகி விட்டது .நாங்கள் இப்பொ வெறு ஒரு விசயம் பற்றி பெசுகிறொம். சற்று இறகி வருகிறீரா? உமது கொபம் நமது எதிர் காலதுக்கு என்ன செய்யும் என்ட்ரு எண்ணீப் பாரும்.

        • thurai says:
          16 years ago

          புலிகள் என்று போராடி மண்ணில் மடிந்தவர்களிற்கும்,
          புலத்தில் தாங்கள் புலிகள் என்று உலகினை மிரட்டி
          வாழ்ந்தவ்ர்களிற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை
          கண்டறியவும். இலங்கையில் புலிகள் அழிந்ததால்
          புலத்திலும் மண்ணிலும் தமிழர் நிம்மதியாக வாழ்கின்றார்கள். இதனை ஏற்காதவ்ர்கள் தமிழரின்
          அழிவினில் ஆனந்தம் அடைபவர்கள்தான்.

          சிங்களவ்ர் தமிழர் பிரச்சினை பேசித்தீர்க்கப்பட வேண்டியது.. மலையகத்திலும், சிங்களவர் மத்தியிலும் வாழும் தமிழரும் தமிழர்தான். இதனையும் கருத்திற்கொள்ளவேண்டும். அத்கொடு முஸ்லிம் மக்க்கழும் தமிழர் என்று ஏற்றுப் பழக வேண்டும். இதனை விடுத்து வடக்கு கிழக்கில் வாழும் தமிழரே தமிழர் இவர்களிற்கே உருமை வேண்டும் என்பதனை உலகமேற்காது. என்வே
          மலையக்த்தமிழர்,முஸ்லிமக்கள் இவர்களை உள்ளடக்காத எந்தப்பிரச்சினையும் இலங்கைத்தமிழர் பிரச்சினையல்ல. என்பதே என் கருத்து. புலம்பெயர் நாடுகளில் வாழும் பெரும்பான்மையினரான வட பகுதித் தமிழரின் போராட்டம் தமிழர் மீதான் ஆதிக்கத்தை சிங்களவ்ரிடமிருந்து தாங்கள் பெறவேண்டுமென்பதே.. இதற்காக அவ்ர்களின் கையில் உள்ள ஆயுதம் இப்போது நாம் தமிழர்ரென்று உலகினை ஏமாற்றுவதேயாகும்.

          இவர்கள் உலகினையும் தமிழர்களையும் தொடர்ந்து ஏமாற்ரி வரும் கூட்டமேயாகும்.
          தமிழரின் உருமைக்குரல் ஒலிக்கவேண்டியது இலங்கைலில். போராடவேண்டியது உருமையிழந்தவ்ர்களேயாகும்.
          ஆதிக்க மோகம் கொண்ட தமிழரே ஈழாத்தமிழரின் அழிவிற்குக் காரணம்.. அதன் பின்பே சிஙக்ளவர்.

          சிஙளவர்மீது பகைமையையூட்டி மேலும் அழிவினைதேடுவதை முதலில்ந்திறுத்த வேண்டும்.

          துரை

          • sivamahan says:
            16 years ago

            நல்ல வியாகியானம். தம்ழர் பிரச்சனை பேசி தீர்கப்பட வேண்டியதோ? ம் !!!
            அப்படி என்டால் ஏன் சிஙளரை லச்சக்கனக்கில் வடக்கில் குடியேத்தீனம்? சும்மா தனிப்ப்பட்ட பிரச்சனைக்காக ஊர எமதுற வேல வேண்டாம் துரை. காசு தேவைக்கக இஙக எழுத வேண்டாம்.

          • thurai says:
            16 years ago

            சிங்களவரை வடக்கில் குடியேத்தினம் என்றால். ஏன் தென் இலங்கையில் தமிழர் குடியேறினார்கள். அப்போ தொப்புள்கொடி உறவுகள் மலையகத் தமிழர் நிலமை என்ன?

            புலிகளின் தமிழீழப்போராட்டம் சிஙகள்வரிடம் பொல்லைக் கொடுத்து தமிழரை அடிக்க விட்டுள்ளது.. இப்ப உள்ள்நிலமைக்கு புலிகளே பொறுப்பு. . விட்ட பிழையை
            முதலில் ஏற்காமல் மற்ரவர் மீது இன்னமும் குற்ரம் சொல்லவேண்டாம்..தமிழர்ரிடமிருந்த பயங்கரவாதப் புலி அழிந்து விட்டது, இனி சிஙளவரிடமுள்ள
            பயங்கரவாதமும் சிங்கள்வருட்ன சேர்ந்தே அழிக்கப்பட வேண்டும்.
            காலம் மாறும்..
            துரை

        • thurai says:
          16 years ago

          புலிகளை வழிநடத்தியவர்களே இன்று தொடர்ந்தும் தமிழ் தமிழ் என்று குரல் கொடுக்கின்றார்கள். இவர்களின் செய்ற்பாடுகள்
          அன்றும் இன்றும் தமிழரின் உருமைக்காகவல்ல.

          தங்களின் சுயநலனிற்காகவேயாகும். இதனால்
          புலி
          புலியென்று சொல்ல வேண்டியுள்ளது. இவர்கள்
          தமிழரின் பெய்ராலும், புலியின் பெய்ராலும் பிழைப்பு நடத்துபவர்கள். இவர்களின் செயற்பாடுகள் இன்றும் திரைமறைவில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 30 வருடத்திற்குப் பின்பே புலிகளின் போக்கும் அதன் விழைவுக்ழும்,பலரிற்குப் புரிந்தன, இதே

          போலவே தமிழ் தமிழ் என்று குரல் கொடுப்போரைப்பற்ரியும் இன்னமும் 30 ஆண்டுகளிற்குப் பின்பே அனைவரும் அறிவார்கள்..

          துரை

          • sivamahan says:
            16 years ago

            அப்ப கே பி சொலுறது தான் சரி என்டு சொல்றீர் – விழஙகுது …..

  9. xxx says:
    16 years ago

    துரைக்குத் தமிழர் லட்சக்கணக்கில் அழிந்தது பற்றியோ கொலைகாரர்கள் யாரென்பது பற்றியோ அக்கறை இல்லை.
    புலிகள் கொல்லாத எவருக்காகவும் வருந்தமாட்டாத அளவுக்கு அவரது மனிதநேயம் வடிகட்டப்பட்டுள்ளது.

    • ஊர்மிளா பிரபா says:
      16 years ago

      தமிழர் லட்சக்கணக்கில் அழிந்தது யாரால்.? தங்களை நம்பி இருந்த ஏழை இளைஞர் 45,000+ உயர் களுக்கும் துரோகி என்ற பெயரில் பல ஆயரம் இளைஞர் ..பழிக்கு பழி என்ற பெயரில் இன்னும் பல ஆயரம் ..கடைசியாக கூட ஓடவிடாமல் துப்பாக்கி முனைல் பிடித்து வைத்திருந்து பழி கிடாகளாக மாற்றியது யார் குட்ரம் ?

      • thurai says:
        16 years ago

        இந்த உண்மையை இன்னமும் விளங்காம்ல் உள்ளனரா இவர்கள்.
        அல்ல்து விளங்காத்து போல் நடிக்கின்றன்ரா? துரை

        • ஊர்மிளா பிரபா says:
          16 years ago

          என்னங்கோ உண்மை ?. நர பலி முப்பது வருடமா தொழிலாக செய்ததது யாருங்கோ கண்ணு ? (வேற என்ன அபிவிருத்தி செய்தாங்கோ கொல்லும் தொழில் தவிர )

      • xxx says:
        16 years ago

        பாவம் ராஜபக்சவும் பேரினவாத அரசும் இந்தியாவும்.
        ஒரு கொலைக்குக் கூடப் பொறுப்பில்லாதவர்களை, தமிழ் மக்களை முட்கம்பிச் சோலையில் மிகக் கவனமாகக் காத்துப் பராமரித்து வந்தவர்களை எல்லாம் வீணே பழி சுமத்துகிறார்கள்.

        ஊர்மிளா பிரபா, , thurai,
        உங்களைப் போல சத்தியவான்கள் இருப்பதால் தான் சீனாவில் கூட மழை கொட்டோ கொட்டென்று கொட்டி வெள்ளம் பெருகுகிறது.

        வாழ்க உங்கள் பனி.

        • thurai says:
          16 years ago

          பிரபாகரனும், புலிக்ழும் தமிழரைக் கொலை செய்யும் போதும், மனித உருமைகளை மீறும் போதும், ஏன் என்று கேட்டதுமில்லை, தவறுகளைச்
          சுட்டிக்காட்டக் கூட மனதில் துணிவும் இருக்கவில்லை. எல்லாத்திற்கும் தலையாட்டியவ்ர்கள் தான் புலிகளின் பின்னால் சென்ற அறிவுக் கொழுந்துகள். புலிகளை 25 வருடங்களாக விமர்ச்சிப்போரையும், தீர்க்கதரிசனமாக அழிவுவ்ரும் என கூறியவர்களையுமே அழித்தவ்ர்கள் புலிகள்.
          அந்தக்கொலைகளிற்கு பாராட்டுத் தெரிவித்தவர்க்ழும், மெளனம் சாதித்தவர்க்ழும்
          இப்போது இராஜ்பக்ச படுகொலைக்காரன், இந்தியா துரோகம் செய்யுது, அமெரிக்கா துரோகம் செய்யுது
          என் எப்ப்டி பேச் முடியும்.
          அவர்களைக் கேட் க உருமையுடையவர்கள். புலியின் எதிர்ப்பாள்ர்களே.
          அத்ற்கும் இப்போ முடியாது. புலிகள் திரட்டிய பணத்தோடு இலங்கை அரசுடன் வர்த்தக்ம் அன்று மறைமுகமாக் இருந்த்து இன்று பகிரங்கமாகிவிட்டது.. இதனை மறைக்கவே உந்தபகைமைத் துவேசமெல்லாம்..

          எப்போதான் திருந்துவீர்களோ நீங்கள்.? துரை

  10. xxx says:
    16 years ago

    Velu has developed a fantastic model that can explain everything.
    In the Sri Lankan context, all you need to do is to find a blood connection (even through a consummated marraiage) to identify ‘Sinhala-contaminated’ blood in the person you wish to denounce.

  11. sonja says:
    16 years ago

    உங்கள் புலம்பல் விளையாட்ட்டுக்கு துறை போன்றோரே சரி,கருத்தில்லாத ஆய்வுரைகளை எழுதும் அறிவுக்கொழுந்துகளே ஒரு நாட்டு அந்நாட்டுக்கு திரும்பி பாதுகாப்பாக போய் வர முடிந்தால் அந்நாட்டில் பிரச்சனை இல்லை என அகதியந்தஸ்து கொடுக்கும் நாடுகள் கருதுகின்றன,ஆகவே கனடா,ஐரோப்பா,இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள்(,முன்னாள் அகதிகளும் அகதிகளே)திரும்பி செல்வது அல்லது சென்று வருதலே மிகவும் மோசமாகும்.அத்துடன் புலம் பெயர் சமூகம் இலங்கை அரசுடன் சுமூக உறவை வளர்ப்பதும் தவறானது,அதனால் இலங்கையில் சுமூகமாகிவிட்டது என்ற மாயை தோன்றும்.ஒரு இந்திய நடிகன்,நடிகை இலங்கை போகையில் அவர்களின் பாதுகாப்பை இந்திய இலங்கை அரசுகள் உறுதிப்படுத்தும்.ஏனெனில் அந்நிய பிரஜை களுக்கு ஆபத்துவரின் இலங்கையில் இன்னமும் பாதுகாப்பில்லை என்றாகிவிடும் என்பது அரசுக்கு தெரியும்.உலகம் நடிக நடிகைகளிடம் கருத்து கேட்காது,அதனது அமைப்புக்களான UN,UNHCR,Human rights watch,international amnesty போன்றவற்றிடமே ஆலோசனை,தகவல்களை பெறும்.சும்மா உள்ள நடிகர்களின் வயிற்றில் மண்போட்டு அவர்களின் பகையையும் சம்பாதித்து முழு இந்தியாவையும் தமிழரின் எதிரியாக்கி இலங்கைக்கு உதவிசெய்யும் உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்!!

    • kuruvi says:
      16 years ago

      இந்தியா எந்தக்காலத்தில் உங்களுக்கு உதவிசெய்தது நடிகர் நடிகைகளை தடுப்பது தடுக்காதது பற்றி யோசிக்கலாம் ,போனவருடம் கருணாநிதியும் மன்மோகனும் பசி யும் சோனியாவும் செய்த அனீதியை ஒரு வருசத்திலை மறக்கச்சொல்லுகிறீர்களா,

  12. Veera Paandi Koottayan says:
    16 years ago

    விரைவில் அதிசயங்கள் நிகழும். தென் தமிழகத்தின் முதல்வர் மு க அழகிரி – அவரால் முடியாதது எதுவும் இல்லை. வாழ்க தலைவர் அழகிரி:
    Hon. M. K. Azhagiri is our great leader. He will soon rule south Tamil Nadu (Tehn Tamil Nadu). He can prove who he is. Soon we will see the magic happen in front of our eyes.
    Long Live Muthalvar Azhagiri.
    Veera Paandiyan K.

  13. vinothan says:
    16 years ago

    சிங்கள அரசு 56ம், ஆன்டில் இருந்து இறுதி முள்ளிவாய்க்கால் வரை என்னசெய்தது என்று எல்லோருக்கும் தெரியும், ஆனால் அடிவருடிகள் எப்பொளுதும் போடும் மனித உரிமை புலிகள் கொலையென்றெல்லாம் பேசுவார்கள் , ஆனால் சர்வதேச பய்ங்கரவாதியும் இன்றைய கொலைகாரனைபற்றி ஏன் அடிமை கூட்டம் மெளனம் சாதிப்பது,?

    • thurai says:
      16 years ago

      தனது வீட்டுக்குள் கள்வரையும், கொலைகாரரையும் ஒழித்துவைத்துக் கொண்டு
      பிறரைக் கள்வன் கொலைகாரன் என்று கூறுவோரே துரோகிகள். தமிழினத்தினுள்ளே இயக்க படுகொலை செய்தவர்க்ழும், இயக்க பண்த்தினை
      சுருடியவர்களெல்லாம் புலம் பெயர்நாடுகளில் உல்லாச வாழ்வு வாழ்கின்றன்ர். இவர்க்ழும்தான் இப்போ சிங்கள் அரசு துரோகி, இலங்கை அரசு கொலைகாரக்கூட்டம்
      என் கூறுகின்றனர். இவர்க்ளின் மீது முதலில் யாரவது
      நடவ்டிக்கை எடுப்பீர்களா? அல்ல்து அவர்களில்நீங்க்ழும் ஒருவரா? துரை

  14. velu says:
    16 years ago

    http://www.vikatan.com/jv/2010/aug/01082010/jv0201.asp

    முன் வரிசையில் அமர்ந்து இதை எல்லாம் கேட்ட கருணாஸ் நம்மிடம்,
    ”நான் புதுக்கோட்டையில் பிறந்தவன். ஈழம்தான் என் பூர்வீக பூமி. தமிழீழம் பெறவேண்டும் என்கிற வெறி, சீமானைவிட எனக்கு அதிகம் உண்டு. நான், இயல்பாகவே முருகபக்தன். ‘தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உண்டே… அதில் ஏதாவது ஒரு கோயிலுக்குப் போகலாமே…’ என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அதெல்லாம் குலதெய்வத்தை வழிபடுவதுபோல் ஆகுமா? என் குலதெய்வமான முருகன் கோயில், கதிர்காமத்தில்தானே இருக்கிறது? அங்கே நான் நேர்த்திக்கடன் செலுத்துவது தப்பா? முதலில் வர்மா என்ற ஒருவர் செல்போனில் தன்னை, ‘சீமான் உதவி யாளர்’ என்று சொல்லிக்கொண்டு, ‘இலங்கைக்கு நீ போகக்கூடாது. போனால், தொலைத்து விடுவோம்…’ என்றார். அடுத்து, ‘நாம் தமிழர்’ இயக் கத்தைச் சேர்ந்த அதியமான் ரொம்பவும் மோசமாக மிரட்டினார். அதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து பலர், ‘நீ சிங்களவனுக்குப் பிறந்தவனா?’ என்று கொச்சை கொச்சையாக எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள். இதை எல்லாம்தான் அப்படியே கமிஷனர் ஆபீஸில் புகாராகக் கொடுத்தேன். நான் சிங்களனிடம் பணம் வாங்கிக்கொண்டு இலங்கை செல்வதாக அவதூறு பரப்புகிறார்கள். பணத்துக்கு ஆசைப்படுகிறவனா நான்? உச்சத்தில் இருக்கும் விஜய், சூர்யா எல்லாம் இரண்டு பசங்களை இன்ஜினீ யருக்குப் படிக்க வைக் கிறார் என்றெல்லாம் பேசுகிறார்களே… சின்ன நடிகனான நானே மெரிட் அடிப்படையில மார்க் எடுத்தும் கஷ்டப்படுகிற 25 மாணவர்களை இன்ஜினீயருக்குப் படிக்க வைக்கிறேன். என் பணக் கார நண்பர்களிடமும் ஏழை மாணவர்களுக்குப் படிக்க உதவச் சொல்லி வருகிறேன். இதை எல்லாம் என்றைக்காவது வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறேனா..?
    அது போகட்டும், முதலில் இந்த விஷயத்தில் என்ன உண்மை என்பதைத் தெரிந்து கொள் ளுங்கள். இலங்கையில் ஒரு தமிழ் எஃப்.எம். இருக்கிறது. அது 24 மணி நேரமும் தமிழிலேயே ஒலிப்பது. அங்கே 300-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கிறார்கள். அதில் 250 பேர் ஈழத்தமிழர்கள். அந்த நிறுவனத்தை இந்தியாவில் இருக்கும் பஞ்சாபி ஒருவர் நடத்துகிறார். அந்த ரேடியோ தொடங்கி 12 வருடங்கள் ஆகின்றன. அதற்காக இலங்கைக்கு வரும் என்னையும் கலந்துகொள்ளச் சொல்லி அழைத்தார்கள். ‘நான் வரமாட்டேன். கொழும்பில் தங்கி அங்கிருந்து கதிர்காமம் செல்கிறேன். வேண்டுமானால், கொழும்பில் இருக்கும்போது என் அறைக்கு வாருங் கள்…’ என்றுதான் சொன்னேன். ஆனால், நான் என்னவோ அந்த நிகழ்ச்சிக்குத்தான் செல்வது மாதிரி தவறாகத் திரித்து விட்டார்கள்.” என்றார் கருணாஸ் ஆதங்கத்தோடு

    • thurai says:
      16 years ago

      புலிகளை அழித்து தமிழர்க்ளையும் சிங்களவ்ர்களையும் இலங்கை அரசு பயங்கரவாத்த்தில் இருந்து விடுவித்து விட்டது. இனிமேல் தமிழரின் உருமைப்பிரச்சினைதான் தீர்க்கப்பட வேண்டிது. ஆனால் தமிழீழம்கோரிப்
      போராட்டம் நடத்தியதாக் கூறும் புலிகளோ அன்றும் இன்றும் தமிழரை

      மிரட்டி வாழ்வதே வழக்கம். இவர்கள் தான் தமிழரை அழிக்கும் கோடரிக் காம்புகள்.
      இவர்களை நம்பி உயிரை கொடுத்து ஏமாந்த தமிழர்க்ளே தமிழரால் மதிக்கப்பட
      வேண்டியவ்ர்கள். துரை

  15. ஊர்மிளா பிரபா says:
    16 years ago

    அது சரி ..தமிழ் சினிமா மேதாவிகள் அனாத்தையாக எல்லாம் இழந்து நிற்கும் தொப்புள் கொடி உறவு வன்னி மக்களுக்கு செய்தது என்ன ..”ஒரு நாயும் போய் பார்க்கவும் கூடாது ” என்ற தீர்க்க தரிசனமா ? அம்மா ஒரு சொட்டு துணியும் இல்லாமல் அம்மணமா நடுத்தெருவில் நிற்கும் போது மகன்கள் தங்கள் பரம்பரை பெருமை பேசுவதுதான் இங்கு சிலரின் கருத்து

  16. velu says:
    16 years ago

    if Karunas wants to go to Sri lanka, let hom go, after all he awnts to go to Kathirgamam, tens of thousand of eelam tamils from eurpe and North America are in Sri lanka, thus contributing to Sri lankas economy, so y only Karunas cant go.

  17. Kamaraj says:
    16 years ago

    Tamil cinema still alive because of World Tamil People. Sarathkumar is actor in cinema and real life. As a true tamilian we should not trust him. All the tamil actors, actress, directors (except Seeman, and Ameer) are doing double role in their life and they are Selfish. No one has the real concern about Tamil brothers and sisters at Eelam. No one has raised their voice against Seeman’s arrest. No one has the brave to deal this issue.

    Asin is pretending as a true saviour of Eelam Tamil people. Where did Asin go at the time of Srilanka war?

    I kindly request all the Tamil brothers and sisters , We will raise our voice and spread this issue to every True Tamilians in the World.

    Dont expect any Rebel from Tamil Cinema field . No one has such Qualities.

    As a True Tamilians , we should take a oath now , “From now onwards we should not see any Tamil films.”

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...