விவசாயிகள் தற்கொலை தொடர்பான செய்தியொன்றை வெளியிட்டமை தொடர்பில் சிங்கள பத்திரிகையொன்றின் ஆசிரியர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
ஜனரல“ என்ற சிங்கள பத்திரிகையின் ஆசிரியரான சந்தன சிறிமல்வத்தை என்பவருக்கே இலங்கை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளனர்.
அவரது அலுவலகத்துக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று புதன்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்காவது மாடிக்குச் சமூகமளிக்க வேண்டுமென தெரிவித்துச் சென்றுள்ளனர்.
வரட்சி மற்றும் வறுமை காரணமாக கடந்த வருடம் 13 விவசாயிகள் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி ஒன்றினை வெளியிட்டமை தொடர்பிலேயே இவர் விசாரணைக்கு உடபடுத்தப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு நிகரனதாக சிங்கள உழைக்கும் மக்கள் மீதான மகிந்த பாசிசத்தின் ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளன. இந்த இரண்டு பகுதினரும் போராட்டத்தில் இலங்கை அரசிற்கு எதிராக ஒன்றிணைவதைத் தடுப்பதற்கு மகிந்த பாசிசம் தன்னாலான அனைத்தையும் செய்துவருகிறது. இதனையே குறுந்தேசிய வாதிகளும் செய்துவருகிறார்கள்.








Quality counselling is essential through the country. That is could be helped.
இந்தச் செய்திக்கு உரிமையாளர் என யாருடைய பெயரும் தெரிவிக்கப்படாத படியால் இனியொரு இந்தச் செய்திக்கு உரிமை கோருகின்றது என நம்புகின்றேன்.
“தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு நிகரனதாக சிங்கள உழைக்கும் மக்கள் மீதான மகிந்த பாசிசத்தின் ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளன.”
தமிழ் பேசும் மக்கள் தனிநாடு கோருவது தான் அவர்கள் மீதுள்ள ஒடுக்குமுறைக்குத் தீர்வாயின் சிங்கள மக்களும் தனிநாடு கோருவதை – அது எவ்வளவு கோமாளித்தனமாக இருந்தாலும் – அவர்களுக்கான தீர்வாக வைக்க வேண்டி வரும்
உண்மையில் இரு பகுதியிலுள்ள மக்களும் இணைந்து கொள்வதால் மட்டுமே விடிவு சாத்தியம்.