Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சிங்கள தேசத்தின் ஜனாதிபதித் தேர்தலும்! தமிழ்பேசும் மக்களும்!! ஒட்டகத்துக்கு …அலையும் கூட்டமைப்பும்!!!:எஸ்.ஜி.ராகவன்

இனியொரு... by இனியொரு...
12/28/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
4
Home பிரதான பதிவுகள் | Principle posts

சபாநாவலனின் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? என்ற கட்டுரையில் வந்த பின்னூட்டம் ஒன்றில்  “உண்ணியில் உள்ள குறைபாடுகள் பற்றி விலாவாரியாக அலசப்படும் . உண்ணியை எப்படி அகற்றுவெதென்பது மட்டும் சொல்லப்பட்டிருக்காது” என்ற ஓர் வாசகரின் கருத்தின் பாதிப்பே இக்கட்டுரை ஆகும். அப் பின்னூட்டக்காரரின்  ஆதங்கம் தமிழ் பேசும் மக்கள் அனைவரினது ஆதங்கமும் ஆகும். ஆம் வழிமுறைகளும்,  தெரிவுகளும், மூலோபாயங்களும் அற்று தெருவோரத்தில்  இன்னும் இன்னும் அனாதைகளாய் நாம்…… அலைகிறோம் (உண்ணியை அகற்ற  வழியற்று) ஆனால் எஜமானர்கள் எம்மை பொறுத்து இருக்கட்டாம் அவர்களின் தலைவன் உ(…..)ண்ணியை அகற்ற இந்தியாவில் இருந்து வருகிறாராம், என்ற பீடிகையுடன்  மாத்திரம் தற்போதைய களநிலவரம் “நகர்ந்து செல்ல வைக்க படுகிறது”.

அதுவரையில் நாம்  முடிந்த  வரை உண்ணியை அகற்றும் வழிமுறையை தேடி  வில்லங்கப்படுவோம். எனவே வாசகர்கள் சலிக்காது வாசிக்கவும்.

(இத் தேர்தல் தமிழ் மக்களை பொறுத்தவரையில்  முக்கியமா? இல்லையா?! என்ற விவாதம் கூட எழும். ஒற்றைச் சொல்லில் இன்றைய சூழலில் தமிழ் மக்களுக்கு இத் தேர்தல் முக்கியமே.)

இலங்கையின் ஜனாதி பதி தேர்தலில்  யாரை ஆதரிக்க வேண்டும் என்பதில் நான் நாலு வகையான சிந்தனைகளை அல்லது  எத்தனிப்புகளை அல்லது அவ தானங்களை  வைத்திருந்தேன்.

  1. மகிந்தவை ஆதரித்தல் :-

mahinda_rajapaksaதேவை : வெளி உலகத்தோடு கடும்போக்கு கொள்கையை பின்பற்றும் மகிந்தவின் நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டுவர மாத்திரம் வெளி உலகம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தூக்குகிறது. இவ்வாறு மகிந்த சர்வதேச மோதல்களின் விளைபயனை நாம் எமக்கு சாதகமாக திருப்புதல் ( யார் திருப்புவது என என்னிடம் யாரும் திருப்பி கேட்டால் என்னிடம் பதில் இல்லை, தமிழ் தேசிய கூட்டமைப்பு  அத்தைகைய வினைத்திறனுடன் செயல் படுவதாக  இல்லை).

ஒப்பீட்டளவில் மைத்திரியா மகிந்தவா  என்றால்? மூலோபாய  நோக்கில்   மகிந்தவையே நான் தெரிவு செய்வேன். ஏனனெனில் மகிந்தவின் முகம் சிங்களவர்களுக்கு முழுதாக தெரிய வரும் போது ஏற்படும் நிலைமைகள் தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையலாம்.

.

  1. மைத்திரியை ஆதரித்தல்.:-

 

maithiripalaதேவை: இன்று  இருக்கக் கூடிய அதிகூடிய இன ஒறுப்பின் வீரியம் ஒப்பீட்டளவில் குறையும் என்ற எதிர்பார்ப்பு. (இது என்னிடம் இல்லை).  சர்வதேசம் மைத்திரியின் வரவை எதிர் பார்ப்பதால் அதன் மூலம் நாம் ஏதேனும் காரியம் சாதிக்கலாம்??? எனும் நிலைப்பாடும் சர்வதேசத்தை அனுசரித்து போகும் தேவை தமிழர்களுக்கு உண்டு என்பதாலும், மைத்திரியை ஆதரித்தல். ஆனால் இங்கு காரியம் ஆற்றும் வீரியம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருக்கின்றதா?…… என்ற கேள்விக்கு என்ன பதில்?

ஆனால் மைத்திரியையும் அவர்களின் கூட்டையும் இறந்தகாலத்திலும் நிகழ் காலத்திலும் பார்க்கிறோம் நிலைமை அப்படி இருக்க எதிர்காலத்தை பார்க்கும் படி கூறின்……….

ஆம்! த.தே. கூட்டமைப்பினர்   ஒட்டகத்தின் கொட்டை எப்போது விழும் என அலையும் ஓநாய் போன்று  சதா ஒவ்வொரு ஒட்டகத்தின் பின்னாலும் அலைகிறார்கள். தமிழ் மக்களையும் அலையும் படி கட்டாயப் படுத்துகிறார்கள். ஆனால் அது…. விழாது என்று தமிழ் மக்களுக்கு தெரியும். அப்படி தப்பித் தவறி விழுந்தாலும் அழுகி ஒழுகித் தான் விழும். அதனை கவ்வ நாம் ஒன்றும் ஓ(நாய்கள் ) இல்லை.   அதனை கவ்வ  சம்மந்தனும், சுமந்திரனும் லாயக் கானவர்கள்தான் தமிழ் மக்களாகிய  நாம் அல்ல. சம்மந்தன் ஐயாவும் அவர்களின் காலத்தோரும் எம்மீது சுமத்திய அவச் சுமையை நாமே சுமக்கிறோம். இப்போதுபுதிய எஜமான் சுமந்திரன் கூடவே அலைகிறார். ஒன்றை நினைவிருத்துங்கள்முள்ளி வாய்க்காலுடன் போனது பிரபாகரனும் புலிகளும்  அங்கிருத்த பல மக்களும் தான். ஒட்டுமொத்த  தமிழ் மக்களும் அவர்களின்  சிந்திக்கும் திறனும்  அங்கு புதைக்கப் பட்டதாக கனவிலும் எண்ண வேண்டாம்.

  1. சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைகளை பிரதிபலிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்தல்

 

சிறீதுங்க விஜயசூரிய
சிறீதுங்க விஜயசூரிய

தேவை (தீர்வு/உத்தி):- சிறுபான்மை தமிழ் பேசும்  சமூகம் சிறிதுங்கவுக்கு முதல் வாக்கையும் விருப்பு வாக்கினை   நாகமுவவிற்கும் இடமுடியும். இதன் மூலம் 50% வாக்கினை  பெற முடியாத நிலை மகிந்தவுக்கோ மைத்திரிக்கோ  வருமானால் தமிழ் தரப்பும் ஸ்ரீதுங்க, நாகமுவ போன்றோரிடம் இணைந்து எமது கோரிக்கைகளை முன்வைக்க முடியும். அவ்வாறான கோரிக்கை தமிழ், சிங்கள தரப்புகள் இணைந்து வைத்த கோரிக்கையாகவும் அமையும். (மூன்றாவது  விருப்பு வாக்கு மைத்திரிக்கு அளிப்பதை நான் உசிதமாக கருதவில்லை. சர்வதேச அழுத்தம் ஒன்றை சமன் செய்ய தமிழ் தரப்பு நினைத்தால் மூன்றாவது விருப்பு வாக்கை தமிழ் பேசும் மக்கள் மைத்திரிக்கு இடுமாறு கோரமுடியும்)

  1. தமிழ் பேசும் சிறுபான்மை சமூகத்தின் சார்பில் அவர்களின் உரிமைகளுக்கான கோரிக்கையைவைத்து ஜனாதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தி இருத்தல்

sivajilingamஇது காலம் கடந்து விட்ட விடயம். இருப்பினும் அந்த நன்மைகளை மூலோபாயங்கள் உத்திகள் எதுவுமற்ற  தமிழ் தேசிய கூடமைப்பு கைநழுவ விட்டது, அல்லது கைகழுவி விட்டது. கடந்த முறை தேர்தலில் சிவாஜிலிங்கம் தேர்தலில் நின்ற போது கூடமைப்பின் கூத்தையும் மீறி சிவாஜி 37000 வாக்குகளை பெற்றார். இம்முறையும் சிவாஜிலிங்கம் அவ்வாறன கோரிக்கையை வைத்தார். அதனால் அதனை தடுக்கும் பொருட்டு, சுமந்திரன் மிகவும் கீழ்த்தரமான மலிவான கேடுகெட்ட முறையில்  சிவாஜிலிங்கத்திற்கு  எதிராக குற்றச் சாட்டு ஒன்றை முன்வைத்தார். அது மகிந்தவிடம் 45 கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு தமிழ் மக்களின் வாக்குகள் பொது எதிரணிக்கு (மைத்திரிக்கு) செல்லாமல் தடுக்க பார்கிறார் எனச் சொன்னமை. இங்கு இந்த படித்த கனவான் சுமந்திரனிடம் ஒரு கேள்வி மகிந்தவிடம் வாங்கிய 45 கோடியை வாங்கிய சிவாஜிலிங்கம், தான்  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் மகிந்தவை ஏமாற்றி விட்டாரா? ……

சுமந்திரன் போன்றவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு வைத்திருக்கும் வரை, தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பயன்படும் கட்சியாக இருக்கப் போவதில்லை. தமிழ் மக்களின் தேவைகளுக்கு பயன்படுகின்ற கட்சியாக இருக்கவேண்டிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் தவிர்ந்த  மற்றவர்களுக்கு பயன்படும் கட்சியாக இருக்கிறார்கள்.

மூலோபாயங்கள் எதுவும் அற்றவர்களாக இருக்கிறார்கள்.

ஆக இதுதென்னிலங்கைக்கு ஆன தேர்தல் இதில் பேரின வாத கட்சிகளுக்கு வாக்களிக்கும் இயந்திரங்களாக மாத்திரம்  நாம்  இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் என்ன?

நாம் எமது  கோரிக்கைகளை முன்வைத்து எமது நியாயங்களை தேசிய, சர்வதேசிய பரப்புக்கு நகர்த்த முடியாமல் போவது ஏன்? அதற்கு முட்டுக் கட்டையாக இருக்கும் கபடதாரிகள் யார்?

திட்டமிடப்பட்ட கூட்டு இனப் படுகொலையை இனப் படுகொலை என்று தமிழ் மக்கள் உரத்துச் சொல்ல விடாமலும்,  அவ்வாறு சொல்ல முனையும் தமிழ் தரப்பின்   குரல்  வளையை  இந்திய இலங்கை விசுவாசத்திற்காய் நெரிக்கத்துணியும் அல்லது  விட்டுக்கொடுக்கத்  துணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டத்தினரை நம்பியா, இம்முறையும் நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது குரலை எமது கோரிக்கைகளை சொல்லாமல் கைநழுவ விடப் போகிறோம்?

எமது ஆதரவு மகிந்தவுக்கா அல்லது மைத்திரிக்கா என்பதை நாம் சம்மந்தன் வந்தவுடன் அறிவிப்போம் என்கிறார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். மாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவானது தமிழ் மக்கள், முதல் வாக்கை ஸ்ரீதுங்க ஜயசூரியவுக்கும் , இரண்டாவது விருப்பு வாக்கை நாகமுவக்கும், ஏதாவது தகுந்த மூலோபாயம் இருப்பின் மூன்றாவது விருப்புவாக்கை  மைத்திரிக்கு அல்லது மகிந்தவுக்கோ வாக்களிக்கவும் கோர முடியும்.

shanthiஇங்கே பிறிதொரு சமூக ஆர்வலர்  – சாந்தி சச்சிதானந்தம் – அவர்களின் கட்டுரையொன்றின் ஒரு பகுதி ஒன்றையும் இணைக்கிறேன். அவர் சொல்ல வரும் விடயங்களும்  தமிழ் பேசும் மக்களையும் அவர்களை வழிநடத்துபவர்களையும் சென்றடையும் என்ற நம்பிக்கையுடன்.

ஆட்சி மாற்றம் வரலாம், தமிழ் மக்களுக்கு சாதகமான சில சூழ்நிலைகள் உருவாகலாம். இந்த சந்தர்ப்பங்களை இலாபகரமாக உபயோகித்துக்கொள்வதற்கு தமிழர்          மட்டும் தமது மூலோபாயங்களைக் கொஞ்சமேனும் மாற்றிக் கொள்ளாமல் அன்று 1950களில் இருந்தபடியே இருக்கலாமா? ஆனால், தமிழ் தேசியக்       கூட்டமைப்பினரிடம் தமிழ் மக்களின் தலைமை இருக்கும்வரை அது அப்படித்தான் இருக்கப் போகின்றது. அவர்களுக்குள் புதிதாக சிந்திக்கக்கூடிய புதிய             தலைமுறையினர் இல்லை என்பதுடன், அவர்கள் உள்ளெடுக்கும் நபர்களும் சிங்கள தலைமைகளுடன் கெஞ்சிக் கூத்தாடி ஏதோவொரு உடன்பாடு             காண்பவர்களாகவே இருப்பார்கள். தமிழ் மக்கள் தமது நாட்டில் சிறுபான்மையினர், அவர்கள் பொருளாதார வளர்ச்சி கண்ட நாடுகளுக்கு முக்கியமற்ற ஸ்திர      நிலையில் இருக்கும் ஒரு நாட்டில் வாழுகின்றனர். இந்த இரு பிரதிகூலங்களையும் கணக்கில் கொண்டு தகுந்த மூலோபாயங்களை முன்னெடுக்கும் தலைமைத்துவத்தினைத் தமிழ் மக்கள் உடனடியாகத் தேடாவிடில்,  இப்பொழுது கட்டியிருக்கும் எமது கோவணத்தினையும் இழக்க வேண்டி நேரிடும்.     என    குறிப்பிடுகிறார் சாந்தி சச்சிதானந்தம்.

எனவே ,  இந்த தேர்தல் குறித்து, இத் தேர்தலில் தமிழ் மக்களின் மூலோபாயங்கள் நிறைந்த  பொது  நிலைப்பாடு குறித்தும்  இன்னும் பலரது கருத்துக்கள்,         கட்டுரைகள்,         ஆய்வுகள்,   வரவேண்டும். அவை  துல்லியமான முறையில் தமிழ் பேசும் மக்களை சென்றடைய வேண்டும்.  நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எத்தகைய பொது முடிவை எடுக்க வேண்டும் என்பதையும் அதை எவ்வாறு, எப்படி வேகமாக  வெகுஜனப்  பரப்பில் கொண்டு சென்று தமிழ் பேசும் மக்கள்          ஒரு பொது முடிவினை           ஆதரித்து அதன் படி செயல்பட ஊக்கமளிக்கவேண்டும் என்பதிலும் இனிஒரு வாசகர்கள் ஆர்வமாக இருக்கவேண்டும்.

S.G.Ragavan –  Canada

 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? : சபா நாவலன்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்யின் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய பகிரங்க அரசியல் கருத்தரங்கில் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் ஆற்றியஉரை.
சனாதிபதி தேர்தலில் என்ன செய்திட வேண்டும்? : பழ றிச்சர்ட்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
162 பேருடன் மயமான சிங்கப்பூர் விமானம் : அமெரிக்காவின் சதி?

162 பேருடன் மயமான சிங்கப்பூர் விமானம் : அமெரிக்காவின் சதி?

Comments 4

  1. lala says:
    11 years ago

                         நல்ல  காத்திரமான  கட்டுரை. ஆனால் பிரதான  மூபோபாயத்திற்கு காலம் கடந்து விட்டது. சிவாஜி போட்டியிடுவதிலிருந்து தடுக்கப்பட்டது தமிழ் மக்களுக்கு பின்னடைவுதான். கடந்த முறை அவர்  போட்ட்டியிட்டபோது  பொறுப்பற்ற  ஊடகங்களின்  புண்ணியத்தில்  தமிழ் மக்களுக்கு அவர் மீது சந்தேகம் எழுந்திருந்தது . ஆனால் அத்தைகைய சந்தேகங்கள் எதுவும்  அவர் மீது இப்போது இல்லை . எனவே இந்த தடவை அவர் போட்டியிட்டிருந்தால் கடந்த முறையை விட  பல மடங்கு அதிக  வாக்குகுகளை அவர் பெற்றிருப்பார்,இரு பிரதான வேட்பாளர்களும்  50 வீதத்தை பெற முடியாதவிடத்து சிவாஜிக்கு விழுந்த  வாக்குகளை தமிழர்கள் பேரம் பேசுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம்,அந்த சந்தர்ப்பம் தவற விடப்பட்டுள்ளது.இப்போது சிவாஜியே கூட மக்களுக்கு நீங்கள் மூச்சு விடுவதற்கும் ஆசுவாசப்படுவதற்கும்  வாக்களிப்பதாக இருந்தால் அதற்குரிய வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்றுதான் சொல்கிறார்.
    சிறிதுங்கவையோ ,நாகமுவவையோ  குறிப்பிட வில்லை.

  2. a voter says:
    11 years ago

    ஒரே ஒரு கேள்வி: 
    “சிறுபான்மை தமிழ் பேசும்  சமூகம் சிறிதுங்கவுக்கு முதல் வாக்கையும் விருப்பு வாக்கினை   நாகமுவவிற்கும் இடமுடியும். இதன் மூலம் 50மூ வாக்கினை  பெற முடியாத நிலை மகிந்தவுக்கோ மைத்திரிக்கோ  வருமானால் தமிழ் தரப்பும் ஸ்ரீதுங்கஇ நாகமுவ போன்றோரிடம் இணைந்து எமது கோரிக்கைகளை முன்வைக்க முடியும்” என்று எழுதியிருக்கிறீர்களே. அதன் பொருள் என்ன? 
    எவரும் முதலாவது தெரிவில் 50 வீதம் பெறாதவிடத்து போட்டியில் முதலிரு இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்கள் பெற்றவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள். ஆனால் அவர்களிற்கு வாக்களித்தவர்கள் முதலிரு இடங்களில் இருப்பவர்களிற்கு வாக்களித்திருந்தால் அவர்களது வாக்குகள் எண்ணப்படும் ஏனையவை நிராகரிக்கப்படும். முடிவில் செல்லுபடியான வாக்குகளில் 50 வீதம் (அதாவது பெரும்பான்மை உள்ளவர்) ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார். வேட்பாளரிற்குத் தனக்கு விழுந்த வாக்குகளைப் பேரம் பேசும் வல்லமை கிடையாது.

  3. a voter says:
    11 years ago

    உதாரணத்திற்கு 70 லட்சம் செல்லுபடியான வாக்குகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் மைத்திரி 30 லட்சம் மகிந்த 31 லட்சம் ஏனையோர் 9 லட்சம் வாக்குகள் பெற்றிருப்பதாக இருக்கட்டும். இங்கு ஒருவரும் 50 சதவீதம் பெறாததினால் மைத்திரி மகிந்த தவிர்ந்த ஏனையவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவர். ஆனால் அந்த 9லட்சம் வாக்குகளில் 2ம் விருப்பு வாக்கு யாருக்காவது இடப்பட்டிருந்தால் (5 லட்சம் வாக்குகளில் 2ம் விருப்பு இடப்பட்டிருக்கிறது என எடுத்துக்கொள்வோம்) அவை தவிர்ந்த ஏனையவை நிராகரிக்கப்படும். இப்போது செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்படுபவை 66 லட்சம் மட்டுமே. 
    அந்த 5லட்சம் வாக்குகளில் 2லட்சம் மைத்திரிக்கும் ஒரு லட்சம் மகிந்தவிற்கும் ஏனையவை மற்றவர்களிற்கும் வழங்கப்பட்டிருந்தன. அதன்படி மகிந்த 32 லட்சமும் மைத்திரி 32 லட்சமும் பெற்றிருக்கிறார்கள். இன்னமும் 50 சதவீதத்தை யாரும் பெறவில்லை. 
    இனி மீதியான 2 லட்சம் வாக்குகளில் 3ம் விருப்பத்தேர்வு பார்க்கப்படும். மகிந்த மைத்திரி தவிர்ந்த ஏனையோரிற்கு ஒரு லட்சம் பேர் வாக்களித்திருப்பார்கள். (அல்லது 3ம் தேர்வை அளிக்காமல் விட்டிருப்பார்கள்) அவர்களின்  தேர்வு நீக்கப்பட்டு விட்டதால் அந்த வாக்குகளும் செல்லாததாகக் கருதப்படும். இப்போது செல்லுபடியான வாக்குகள் 65லட்சம் மட்டுமே. 
    கடைசியாக மீந்துள்ள ஒரு லட்சத்தில் மைத்திரி 50 ஆயிரத்தைவிட அதிகம் பெற்றால் அவர் ஜனாதிபதி. (ஏனனில் அவர் அப்போது 50 வீதமான 32 லட்சத்து 50ஆயிரத்தை விட அதிகம் பெற்றிருப்பார்.)
     இதிலும் இருவரும் சமமாக 50 ஆயிரம் பெற்றிருந்தால் பூவா தலையா முறையில் ஜனாதிபதி தெரிவாவார்.

  4. தமிழ் மூடன் says:
    11 years ago

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
    த.தே. கூட்டமைப்பினர்   ஒட்டகத்தின் கொட்டை எப்போது விழும் என அலையும் ஓநாய் போன்று  சதா ஒவ்வொரு ஒட்டகத்தின் பின்னாலும் அலைகிறார்கள். தமிழ் மக்களையும் அலையும் படி கட்டாயப் படுத்துகிறார்கள்.

    அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது. 
    இந்தியா வென்றதா??? சம்பந்தனுக்கு வெற்றி!!!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...