இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசின் உண்மையான நண்பர்கள் தாங்கள்தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கருணாநிதி. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட விவாகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது இனியொரு மீனவன் தாக்கப்பட்டால் கூட இங்குள்ள சிங்களவன் எவனும் உயிரோடு திரும்பிச் செல்ல முடியாது என்று பேசினார் சீமான் சிங்களர்களுக்கு எதிரான இந்தப் பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி போலீஸ் சீமானை கைது செய்து வேலூரில் உள்ள தனிமைச் சிறையிலடைத்தது. இந்நிலையில் நேற்று இரவு சீமானை ஜாமீனில் ஓராண்டுக்கு வெளிவர முடியாத தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டது. சென்னை நகரப் போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சீமானிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அதற்கான ஆணையின் நகலையும் சீமானிடம் வழங்கினர். கடந்த வருடம் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இந்திய மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மட்டுமல்ல சிங்களர்களுக்கு எதிராகவோ இலங்கை அரசுக்கு எதிராகவோக் கூட பேச முடியாத நிலை எழுந்துள்ளது.
தமிழர்களின் பொது எதிரி ராஜ பக்சேவும்,புது டில்லியும்.
அங்கே தமிழினம் அடிமை. தமிழ்நாட்டில் புது டில்லியின் அடிமை. இதை உடைக்க தமிழின உணர்வு பொங்கியெழ வேண்டிய காலகட்டத்திலே உள்ளோம்.இதைப் போராட்டங்கள் மூலமாகத்தான் செய்ய முடியும்.அதற்கான விலை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
இதைப் புது டில்லி புரிந்து கொள்ள ஒரே வழி தமிழ்நாட்டில் காங்கிரசைத் தோற்கடிப்பது தான். காங்கிரசைத் தோற்கடித்தால் மற்றவர்கள் புரிந்து கொண்டு மாறித்தான் ஆகவேண்டும். நடக்கும் போராட்டங்கள் மைய அரசையும்,காங்கிரசையும் குறிவைத்தே நடத்தப் படுவது நல் வழி காட்டும்.
தமிழர்கள் நமக்குள் மோதிக் கொள்வது நல்லதல்ல. உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்.
புது டில்லியின் நெருங்கிய கூட்டாளிகளான தமிழகக் கட்சிகள் அரசியல் தலைவர்களெல்லாம் எங்கே சேர்த்தி?
காஙிரசுக்குப் பின்னால் மாறி மாறி ஓடுகிறவர்களுக்குப் போய் இந்த ஆலோசனைகளைச் சொல்லிப் பார்க்கலாம். ஒரு வேளை அயலில் நிற்கிற முழுச் செவிடர் யாருக்கும் காதில் விழலாம்.
‘Seeman’ as ‘Seeman’ in Vellore prison: Granted ‘A’ class facility
The Superintendent of the Central Prison, Vellore, on Tuesday submitted to the Madras High Court that film director and leader of the ‘Naam Thamizhar Iyakkam’ Seeman has been granted ‘A’ class facility in the prison.
Mr. Seeman was lodged in prison after he was arrested and remanded to judicial custody on July 12 for his alleged inflammatory speech near the Chennai Collectorate on July 10.
The director filed a petition before the High Court seeking a direction to the authorities to provide him ‘A’ class facility in prison as per the order of the magistrate who remanded him to custody.
When the matter came up before a Division Bench comprising Justices C. Nagappan and P.R. Shivakumar, the Superintendent of Central Prison, Vellore, in his status report said Mr. Seeman had been lodged in the same yard where 15 other remand prisoners were admitted. As per the order of the magistrate, he had been granted ‘A’ class facility. He had been lodged in the yard with attached toilet facilities. He was being provided with a cot, a bed, a chair and a table, daily newspapers and food as per ‘A’ class rules. Source: The Hindu!!
Courtesy: http://www.athirady.info/category/athirady-on-english