யுத்தம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கமோ, செயற்பாடோ இலங்கை அரசாங்கத்திடம் இல்லை என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
யுத்தத்தில் வெற்றிபெற்றாலும் நிரந்தரமான, திருப்தியான நாட்டை கட்டியெழுப்பும் வரை சமாதானத்தை ஏற்படுத்த முடியாது.
இலங்கையில் சுமார் 20 லட்சம் தமிழ் மக்கள் இருக்கின்றனர். நாட்டின் ஜனத் தொகையில் 10 விழுக்காடான மக்கள் திருப்தியின்மையை மட்டுமல்லாமல், கோபத்தையும் வெறுப்பையும் வலிகளையும் கொண்டிருக்கும்போது ஸ்திரமான நாட்டை கட்டியெழுப்ப முடியாது.
நாட்டில் முன்னெப்போதுமில்லாதளவு ஊழல் மலிந்துள்ளது.அரசு துறைகளில் உயர் பதவிகளிலுள்ளோர் பலர் தகுதியற்றவர்களாக உள்ளனர்.
இவ்வாறு அவர் மேலும் கூறினார்.