Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கோமாளித்தனமா? கொடுங்கோல் குணமா? : இராமியா

இனியொரு... by இனியொரு...
04/19/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
23
Home பிரதான பதிவுகள் | Principle posts

கடந்த 31.3.2012 அன்று இரவு 8.30 முதல் 9.30 வரை சென்னை நகா¢ன் முக்கிய வணிக வளாகங்களில் ஒன்றான ஸ்பென்ஸர் பிளாசாவில் உள்ள கடைகள் அனைத்திலும் கடைக்காரர்கள் தாங்களாகவே முன் வந்து விளக்குகளை அணைத்தனர். இந்த வைபவத்தைக் கொண்டாடுவதற்கு என்றே அங்கே வந்து குழுமியிருந்த ஆயிரக் கணக்கான மக்கள், தங்கள் கைகளில் மெழுகுவர்த்தியைப் பொருத்தி உலக நேர (earth hour) விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர். இதைப் போன்று சென்னை நகா¢ன் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட பல இடங்களில் கொண்டாடப்பட்டன.

சென்னை மக்களுக்கு டெல்லிவாசிகள் சளைத்தவர்களா? அங்கு வணிக வளாகங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மட்டுமல்லாது, குதுப் மினார், செங்கோட்டை போன்ற சுற்றுலா ஸ்தலங்களிலும், குடியரசுத் தலைவர் மாளிகை உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரு மணி நேரம் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

இந்திய மக்களுக்கு மற்ற நாட்டினர் சளைத்தவர்களா? மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமொ¢க்கா, பி¡¢ட்டன், ஜெர்மனி என்று எல்லா நாடுகளிலும் ஒரு மணி நேரம் விளக்கை அணைத்து, உலக நேர விழாவைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

ஆமாம், இந்த விழா எதற்கு என்று தொ¢யுமா? உலகில் வளர்ந்து கொண்டு வரும்ஆற்றல் பற்றாக்குறையைச் சா¢ செய்யவும்,புவி வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, இவ்வுலகை அழிவில் இருந்து காப்பதற்கும் தான் (!) இவ்விழா கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவைக் கொண்டாடுவதினால் ஆற்றல் பற்றாக்குறை தீர்ந்துவிடுமா? புவிவெப்ப உயர்வு பற்றிய விழிப்புணர்வு ஏற்கனவே மக்களிடம் உள்ளதே? இப்பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான வழிகளைப் பற்றி விவாதம் செய்யாமல் விழாக்களைக் கொண்டாடுவதில் என்ன பயன் இருக்கிறது?

இப்பொழுது புவிவெப்ப உயர்வில் இருந்தும், சுற்றுச் சூழல் கேட்டில் இருந்தும் உலகைக் காக்க வேண்டும் என்ற பெயா¢ல் உலக அளவில் நடக்கும் அறிவியல் மற்றும் அரசியல் கருத்தரங்குகளில், புவிவெப்பத்தை உயர்த்தும் மற்றும் சுற்றுச் சூழலைக் கெடுக்கும் பொருட்களின் உற்பத்தியைத் தடை செய்ய வேண்டும் என்று விவாதிப்பதே இல்லை. வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் ஒன்றையொன்று குற்றம் சாட்டிவிட்டு கலைந்து போய்விடுகிறார்கள்.

இன்று உலகம் புவிவெப்ப உயர்வினால் அழிவுப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டு இருக்கிறது. இந்த வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றால் புவிவெப்பத்தை உயர்த்தும் தனியார் வாகனங்கள், ஆயுதங்கள், மற்றும் இதைப் போன்ற பொருட்களின் உற்பத்தியை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒரு பேருந்தை இயக்குவதன் மூலம் நூற்றுக் கணக்கான தனியார் வாகனங்களின் இயக்கமும், ஒரு இரயில் வண்டியை இயக்குவதன் மூலம் ஆயிரக் கணக்கான தனியார் வாகனங்களின் இயக்கமும் தேவையற்றுப் போகும். ஆகவே பேருந்து மற்றும் இரயில் வண்டிகளை இயக்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டால் புவிவெப்ப உயர்வின் வேகம் மிகப் பெரும் அளவில் கட்டுப்படுத்தப்படும்.

அடுத்த நடவடிக்கையாக, விவசாயத்தையும் மரம் வளர்த்தலையும் பெருவா¡¢யாக மேற்கொண்டால் அது கா¢யமில வளியை (carbon di-oxide) உறிஞ்சி உயிர் வளியை (oxygen) வெளிவிடுவதன் மூலம் ஏற்கனவே உயர்ந்து இருக்கும் புவிவெப்பம் குறைவதற்கும் வழி வகுக்கும்.

ஆனால் உலகை அழிவில் இருந்து காக்கும் இந்நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கும் சக்தி எது? அது தான் முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறை.

தனியார் வாகனங்களின், ஆயுதங்களின், குளிர் சாதனங்களின் உற்பத்திக்காகவும், இவற்றின் இயக்கத்திற்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் நிறைய மூலதனத்தை முதலீடு செய்ய முடியும்; நிறைய இலாபமும் கிடைக்கும். பேருந்துகள் மற்றும் இரயில் வண்டிகளின் உற்பத்திக்கும் அவற்றை இயக்குவதற்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் அந்த அளவிற்கு மூலதனம் தேவைப்படாது. இலாபமும் அந்த அளவிற்கு இராது. இலாபத்தை குறைக்கவும், முதலீடு செய்யும் வழியைக் குறுக்கவும் செய்யும் இவ்வேற்பாட்டை முதலாளி வர்க்கமும், முதலாளித்துவ அரசும் ஒப்புப் கொள்ளவே செய்யாது.

அடுத்ததாகச் சொன்ன நடவடிக்கை, அதாவது, விவசாயம் மற்றும் மரம் வளர்த்தலை முதலாளிகளால் ஒப்புக் கொள்ளவே முடியாது. பேருந்து, இரயில் வண்டி இயக்கத்திலாவது இலாபம் குறைய மட்டும் தான் செய்கிறது; விவசாயத்திலும் மரம் வளர்த்தலிலும் நஷ்டத்தைத் தவிர்ப்பதே இயலாத கா¡¢யம். ஆகவே உலகை அழிவுப் பாதையில் இருந்து மீட்கும் தீர்வுகளை முதலாளி வர்க்கமும் முதலாளித்துவ அரசும் ஏற்றுக் கொள்ளாது என்பது மட்டுமல்ல; கடுமையாக எதிர்க்கவும் செய்யும்.

அப்படி என்றால் உலகைப் புவி வெப்ப உயர்வில் இருந்து காப்பாற்றும் வழி தான் என்ன? அது தான் உலக மக்கள் அனைவரும் சோஷலிச முறையை ஏற்றுக் கொள்வது.

முதலாளித்துவ முறையில் பொருள் உற்பத்தியில் உருவாகும் மிகை மதிப்பு, ‘இலாபம்’ என்ற பெயா¢ல் முதலாளியின் தனி உ¡¢மையாகச் சேர்ந்துவிடுகிறது. இது மக்களின் பொருளாதார நிலையில் அபா¢மிதமான ஏற்றத் தாழ்வை உருவாக்கி, தனியார் வாகனங்கள், ஆயுதங்கள், குளிர் சாதனங்கள், ஆடம்பரப் பொருட்கள் போன்ற புவி வெப்பத்தை உயர்த்தும் பொருட்களுக்கு நிறைய கிராக்கியை (demand) உருவாக்கி அவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

சோஷலிச முறையில் மிகை மதிப்பு மக்களுக்குப் பொதுவாகவே வைக்கப்படும். அது இன்றைய சமுதாயத்திற்கும், எதிர்கால சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் விதத்தில் பயன்படுத்தப்படும். ஆகவே புவிவெப்ப உயர்வைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவுமான பொருட்களின் உற்பத்தியில் மிகை மதிப்பை ஈடுபடுத்த, தடை இருக்காது மட்டுமல்ல; ஊக்கமும் இருக்கும். ஆகவே சோஷலிச முறையை இவ்வுலக சமுதாயம் ஏற்றுக் கொண்டால் இவ்வுலகைப் புவிவெப்ப உயர்வில் இருந்து காக்க முடியும்.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் விவாதிக்காமல் வெறுமனே ஆண்டிற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்துவிட்டு, உலகைப் புவிவெப்பத்தில் இருந்து காக்கப் போவதாக மார்தட்டுவதைக் கோமாளித்தனம் என்பதா?

அல்லது, சோஷலிச முறையை ஏற்றுக் கொண்டால் உழைக்கும் மக்களை அடிமை கொள்ளும் சுகம் போய்விடுமே; அடிமை கொள்ளும் சுகத்தைத் தியாகம் செய்வதைவிட, இவ்வுலகம் அழிந்து போவதே மேல் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுவதால் கொடுங்கோல் குணம் என்பதா?

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சொத்து குவிப்பு வழக்கு : தோழிகள் புதிய மனு தாக்கல்

Comments 23

  1. suppiah says:
    14 years ago

    சுத்தி சுத்தி சோசலிசத்துக்கு வந்துட்டாங்கப்பா. உலகத்திலேயே சுற்று சூழலுக்குநடு விரலை காட்டுறவனே சோசலிசம் பேசுற ரஸ்சியனும் சீனனும் தான்.

    • இராமியா says:
      14 years ago

      நண்பர் சுப்பையா அவர்களே! ரஷ்யர்களும் சீனர்களும் இப்பொழுது முதலாளித்துவப் பாதையில் இருக்கிறார்கள். சுற்றுச் சூழல் பிரச்சினை அதிலும் குறிப்பாக புவி வெப்ப உயர்வுப் பிரச்சினை கேலியாகவோ பொழுது போக்கிற்காகவோ பேசப்படக் கூடிய பிரச்சினை அல்ல. முதலாளித்துவ உற்பத்தி முறை, புவி வெப்பத்தை உயர்த்தும் பொருட்களின் உற்பத்தியை, அவை இலாபத்தை ஈட்டித் தருவதால், ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல் கட்டாயப்படுத்தவும் செய்கிறது. சோஷலிச உற்பத்தி முறை இலாபத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குமாதலால், புவி வெப்ப உயர்வை மட்டுப்படுத்தும் மற்றும் குறைக்கும் பொருட்களின் உற்பத்தியைத் தடையின்றி மேற்கொள்ள முடியும். இதை முதலில் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதன் பின் இவ்வுலகம் அழிவுப் பாதையில் இருந்து மீளும் வகையில் பொதுக் கருத்தை உருவாக்குவதும் அவசியம். அழிவுப் பாதையில் ஏற்கனவே அடி எடுத்து வைத்து விட்டதால் வேடிக்கைப் பேச்சுக்கு நேரம் இல்லை. உலகில் உயிரினங்கள் அழிந்து விடக் கூடாது என்று விரும்பும் யாரும் இப்பிரச்சினையை சீரியஸாக எடுத்துக் கொண்டு விழிப்புணர்வு மற்றும் பொதுக் கருத்து ஏற்படுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

      • suppiah says:
        14 years ago

        இந்த உணர்வை உருவாக்கியவர்களே அந்த முதலாழித்துவநாடுகள்தான். சோசலிசப் புண்ணாக்குகள் அல்ல. சும்மா றீலு விடாதேயும் இங்க. ரஸ்சியனும் சீனனும் சோசலிசம் பேசக்குள்ளயே சூளலை பற்றி பேசல்ல சோற்றை பற்றி மட்டும்தான் பேசினான்.

        • இராமியா says:
          14 years ago

          நண்பரே! புவி வெப்ப உயர்வினால் உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்று தெளிவாகத் தெரியும் காலத்தில் சோவியத் யூனியன் சிதறி விட்டிருந்தது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் பாதை மாறிப் போய்விட்டன. தற்பொழுது சோஷலிசக் கொள்கையை உயர்த்திப் பிடிப்பவர்களுள் மக்களுக்கு நன்றாக அறிமுகமானவர் புரட்சி வீரர் பிடல் காஸ்ட்ரோ ஒருவர் தான். அவர் மிக மிகத் தெளிவாக இக்கருத்தைக் கூறிக் கொண்டு தான் இருக்கிறார். முதலாளித்துவ அறிஞர்களும் அரசியல்வாதிகளும் புவி வெப்ப உயர்வினால் உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டு இருப்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் வேலையைச் செய்துள்ளனர் என்பதை மறுக்கவில்லை / மறைக்கவில்லை. ஆனால் அதற்கான தீர்வைப் பற்றி விவாதிக்கவும் மறுப்பது தான் வேதனையாக உள்ளது.

          • suppiah says:
            14 years ago

            முதலாளித்துவநாடுகள் புவிவெப்பமயமாதலை குறைக்க/தடுக்க எத்தனையோ முயற்சிகள் எடுத்துவருவது உமக்கு செவிடன் காதில் ஊதிய சங்கா என்ன? பச்சை வண்டிஎண்டும், சுத்தமான சக்தியென்றும் எத்தனையோ ஆக்கபூர்வமான வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதைவிட்டுட்டு சோசலிசம்தான் மருந்தெண்டுட்டு போதிக்கவராதெயும்.

  2. alagu says:
    14 years ago

    சோசலிச பொருளாதாரம் என்றால் என்ன? அதை செல்பவர்களுக்கே அதில் தெளிவு கிடையாது.

    • suppiah says:
      14 years ago

      சரியாக சொன்னீங்க. உங்க கருத்த சொல்லுஙக ஏத்துகிறம்.சும்மா சோசலிசமுன்னு ஊர ஏமாத்த வேணாம்.

    • இராமியா says:
      14 years ago

      தங்களுடைய வினாவிற்கு விடை இக்கட்டுரையிலேயே இருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு இலாபம் தான் உந்து விசை. சோஷலிச உற்பத்தி முறைக்கு மக்களின் தேவை தான் உந்து விசை. முதலாளித்துவ உற்பத்தி முறையில் இலாபம் கிடைக்கிறது என்பதற்காக மக்களின் தேவையைக் கணக்கில் கொள்ளாமல் வாங்குபவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக, பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை சுற்றுச் சூழலைக் கெடுப்பதைப் பற்றியும் அக்கறை கொள்ளாமல் உற்பத்தி செய்யப்படுகின்றன. மக்களுக்கு மிக மிக அவசியமாகத் தேவைப்பட்டாலும் (உதாரணமாக பட்டினி கிடக்கும் மக்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்கள், நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்துகள்) அவை இலாபத்தை ஈட்டித் தரவில்லை என்பதற்காக உற்பத்தி செய்ய மறுக்கப்படுகின்றன. சோஷலிச உற்பத்தி முறை என்பது மக்களின் தேவையை மனதில் கொண்டு பொருட்களை உற்பத்தி செய்யும் முறைதான். இதில் எங்களுக்குத் தெளிவில்லை என்றால் தெளிவானவர்கள் வந்து அதைச் செய்யட்டும். இவ்வுலகம் புவி வெப்ப உயர்வினால் அழிவுப் பாதையில் ஏற்கனவே அடியெடுத்து வைத்துவிட்ட நிலையில் அப்பாதையில் இருந்து திரும்பும் விதமாக முதலில் முதலாளித்துவ உற்பத்தி முறையைக் காவு கொடுக்க வேண்டியுள்ளது. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நமது மீட்சிப் பாதையின் தொலைவை அதிகமாக்கிக் கொண்டு உள்ளது. இங்கு கூறப்பட்டவை சரியில்லை என்றோ போதாது என்றோ நினைத்தால் வேறு தீர்வுகளைத் தாருங்கள். மீண்டும் சொல்கிறேன், வேடிக்கைப் பேச்சுக்கு நேரமில்லை. உண்மையை உணருங்கள்.

      • Raman says:
        14 years ago

        So you are saying it is the fault of the producer and not the consumer? Wrong buddy, the consumer always has an option to not to consume in the capitalist system. As long as we educate the consumers the producers cannot profit from making things that we do not care for. In your socialist system they get told what to consume. Who tells them the socialist rulers ( you can call any names – comrades etc. ) . They know better than the consumer. You want to treat the masses as dumb idiots who have to be dictated by a group of few. Isn’t that comical? This is a failed experiment in many of those socialist countries and you want to resurrect it. You stand like a comedian in front of us readers here, not us.

        • இராமியா says:
          14 years ago

          Mr.Raman, Do you seriously believe that in capitalist system, the consumers can be educated and thereby direct the capitalists to produce only the ecologically conducive commodities? No. Medias design the mentality of the consumers and again they are in the hands of capitalists. Kindly don’t be carried away by the false propaganda against socialist system. It is pitiably wrong to assume that consumers’ requirement is thrust by state. Any decision would be taken for the welfare of the people. If any restriction is imposed, it will be for the welfare of the people. Such restrictions are imposed in capitalist society also. For example, in big cities, cattle breeding, bullock carts etc., are not allowed. Don’t you agree these as measures to manage urban problems? Similarly, in socialist society also there would be some restrictions. But in socialistic society people will have a role in decision making, whereas in capitalist society boss and media will twist the decisions as they like. In socialist system all are permitted / welcomed to take part in politics. But in capitalist system government employees are prohibited from entering into politics. Further in capitalist system, wealthier people would have stronger grip than poor people. In socialist system, people alone can be the deciding factor. As the capitalist state crushes the working class, the socialist state will crush the ambitions of the capitalists’ resurrection. Now the burning problem is global warming. Market economy can never mitigate this. Why mitigate? It is not even possible to maintain status quo. It will propel to add on to global warming. I again request you not to be carried away by the false propaganda against socialism. Please think deeply without desire and dislike and arrive at a conclusion.

          • Raman.C says:
            14 years ago

            I have reponded to this but your socialist web manager has deleted it. So much for having a meaningful debate with socialists. It is either their way or no way. And you want to save this world from warming. Like I said you folks are really comical.

  3. இராமியா says:
    14 years ago

    ஐயா! சுப்பையா அவர்களே! புவி வெப்ப உயர்வைக் குறைக்கவும் தடுக்கவும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யானைப் பசிக்குச் சோளப் பொரி என்று கூட சொல்ல முடியாத அளவிற்கு மிக மிக …. மிகக் குறைவாக உள்ளன. ஆனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உமிழும் வெப்பத்தின் அளவோ எல்லை கடந்து உள்ளது. இது முதலாளித்துவ அறிஞர்கள் அளித்துள்ள ஒப்புதல் வாக்கு மூலம் தான். ஒரு இரயில் வண்டி வேகமாகப் போகும் போது முன்னால் உள்ள பெட்டியில் இருந்து பின்னால் உள்ள பெட்டிக்குச் சென்று அழிவு இலக்கில் இருந்து நான் இருக்கும் தூரத்தை அதிகமாக்கி விட்டேன் என்று திருப்தி கொள்வது போன்றது தான் இந்நடவடிக்கைகளைப் பற்றித் திருப்தி அடைவதும்.

    • suppiah says:
      14 years ago

      சோசலிசம் அதற்கு என்ன செய்தது செய்கிறது என்று முதலில் சொல்க அதுதானே இங்கு விவாதம். சார்பு வேகமோ ரயில் பெட்டியில் முன்னும் பின்னும்நடப்பதோ அல்ல. 

      • இராமியா says:
        14 years ago

        ஐயா, சோஷலிச ஆட்சி வலுவுடன் இருந்த சமயத்தில் இப்பிரச்சினை வெளியே தெரியாததால், சோஷலிசம் இப்பிரச்சினையில் என்ன செய்தது? என்ன செய்கிறது? என்று கேட்பது பொருத்தம் அற்றதாக இருக்கிறது. சோஷலிசத்தின் உள்ளார்ந்த குணம் மக்களின் நலனுக்காகத் தான் என்பதால் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று தான் இங்கு கூறப்பட்டு உள்ளது. நோய் முற்றிய பிறகு மருத்துவரிடம் அழைத்துப் போனால், அவராலும் குணப்படுத்த முடியாமல் போகலாம்; ஆகவே நோயின் அறிகுறி தெரிந்த உடனேயே மருத்துவரிடம் அழைத்துப் போக வேண்டும். அது போல இப்பிரச்சினையும் தீர்க்க முடியாத அளவிற்கு முற்றி விட்டால் சோஷலிச அமைப்பால் கூட தீர்வு காண முடியாமல் போகலாம்; ஆகவே இதைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த யோசனை என் சிந்தயைில் தோன்றியது. இது தான் இறுதியான முடிவு என்றும் நான் சாதிக்கவில்லை. இதை விட நல்ல யோசனைகள் இருந்தால் அவற்றையும் மக்கள் முன்னே வைக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன். எது எப்படி இருந்தாலும் இப்பிரச்சினையில் பாராமுகமாக இருப்பது பொறுப்பற்ற தன்மையாகும்.‌

        • Suppiah says:
          14 years ago

          மக்களின்நலனில் மக்களுக்கு இல்லாத அக்கறை எப்படி இந்த சோசலிசவாதிக்குமட்டும் வந்தது. அவனும் மனுஷந்தானே. வானத்தில் இருந்து குதித்தவன் அல்லவே. எதோ சோசலிசம் பெசுரவனெலாம் மகாஙளாகவும் மற்றவனெல்லாம் மக்கன் களென்ன்றும்நினைப்போ?

  4. Mahendra says:
    14 years ago

    சுண்டெலியைக் கொன்று தின்பதற்கு முன்னராக அதனுடன் சிறிதுநேரம் விளையாடும் பூனையைப்போன்று ஜனநாயகமும், சோசலிசமும், இன்று மனிதர்களோடு விளையாடி வருவதுதான் யதார்த்தம். மனிதப்பிறவி எடுத்த நாங்களும் எமக்கு கிடைத்த விளையாட்டு நேரத்தை மிக்க மகிழ்ச்சியாகவே கொண்டாடி மகிழ்கிறோம். இந்த மகிழ்ச்சியின் உச்சநிலையே புவியை வெப்பமயமாக்கி வருகிறது. ஜனநாயக, சோசலிச ஆட்சிமுறைகள் சிறந்த தத்துவங்களைக் கொண்டிருக்கலாம் ஆனால் அவற்றைக் கையாளக் கூடியவர்களையும் நாங்களே அழித்து மகிழ்கிறோம்.

    திரு இராமியா அவர்கட்கு: ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள்மேல் எரிகுண்டும், அமிலக்குண்டும் போட்டழித்து தமிழர்களின் பெப்பநிலையை உயர்த்துவதற்கு தன்னால் இயன்ற உதவிபுரிந்த இராஜாதி ராஜன் மகிந்த இராஜபக்ஸ்சாவை பாராட்டி மகிழும் நாட்டினை உருவாக்கிவிட்டவர்தான் புரட்சி வீரர் பிடல் காஸ்ட்ரோ என்பதனை மறந்துவிடவேண்டாம்.
    .

    • இராமியா says:
      14 years ago

      சுண்டெலியைப் போல் மடிந்து போவதற்கு முடிவு செய்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது. இம்மண்ணில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்துத் தான் இதை எழுதிக் கொண்டு இருக்கிறேன். புரட்சி வீரர் பிடல் காஸ்டரோவிற்கு ஈழத் தமிழர் பிரச்சினையில் கிடைத்த தகவல்கள் பற்றி அறியாத நிலையிலும் அவர் ராஜபக்சவைப் பாராட்டினார் என்பது உண்மையா என்றும் தெரியாத நிலையிலும் அதைப் பற்றிப் பேசுவது சரியாக இருக்குமா? அதுவும் சுற்றுச் சூழல் கேடு பற்றிப் பேசும் போது விவாதத்தைத் திசை திருப்பி விடுவது சரியாக இருக்குமா? வேண்டுமானால் அதைப் பற்றி விரிவான கட்டுரை எழுதி அதில் விவாதிக்கலாமே?

  5. இராமியா says:
    14 years ago

    Mr.Raman, I don’t understand which socialist web manager deleted and what was deleted. Please note that the socialist philosophy alone answered all the questions raised by opponents as well as cleared doubts raised by common people. On formation of Soviet Union, false propaganda was unleashed against it, stating that there was no freedom. In 1929 when famine disrupted all over the world (due to economic crisis), only Soviet Union was unaffected. This induced the intellectuals to examine the socialist system in spite of false propaganda. Hewlett Johnson, the Canterbury Arch Bishop (Head of the Protestant faith of Christianity) took a tour to Soviet Union studied the situation there and understood that real freedom exists only in socialistic society and the much sounded freedom in capitalist society is only a false propaganda. He clearly brought out this in his book “Socialism in one sixth of the world”. Till now socialism was advocated for the reason that people should have freedom. But now the situation now is that to save the life in the earth, the only way available is to adopt socialist system. If you have any doubt about freedom in socialist society or any other problem in understanding socialist system the same can be raised which can be replied appropriately. But being indifferent towards global warming problem is not humanitarian.

  6. இராமியா says:
    14 years ago

    ஐயா, சுப்பையா அவர்களே! தங்களுடைய கருத்து தர்க்க வாதத்திற்கு மட்டுமல்ல; எந்த வாதத்திற்கும் பொருந்துவதாகத் தெரியவில்லை. மக்களின் நலனில் மக்களுக்கு இல்லாத அக்கறை சோஷலிசவாதிகளுக்கு மட்டும் எப்படி வந்தது? சோஷலிசவாதிகள் மக்கள் இல்லையா? உலகத்தில் நடக்கும் நடப்புகளை அனைத்து மக்களும் ஒரே விதத்தில் புரிந்து கொள்வதில்லை. வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் யாராவது சிலர் தங்களுக்குத் தோன்றியதைக் கூற மற்றவர்கள் அதை ஒப்புக் கொண்டோ மறுத்தோ செயல்படும் நிகழ்வுகள் நடைபெறத் தான் செய்துள்ளன. இன்று உலகம் வெப்பமயமாகிக் கொண்டு வருவதையும் அதற்கு வாகனப் பெருக்கமும் ஆயுதப் பெருக்கமும் இன்னும் இவை போன்ற பொருட்களின் உபயோகமும் தான் காரணம் என்றும் இவற்றின் உபயோகங்களைக் குறைப்பதும், விவசாயத்தையும் மரம் வளர்த்தலையும் பிரம்மாண்டமாக அதிகரிப்பதும் தான் புவி வெப்ப உயர்வில் இருந்து உலகைக் காப்பதற்கான வழி என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறிக் கொண்டு இருக்கின்றனர். இதை முதலாளித்துவ சமுதாயத்தில் செய்ய முடியாது என்றும் சோஷலிச சமுதாயத்தில் தான் செய்ய முடியும் என்றும் நான் கூறி இருக்கிறேன். தங்களுக்கு வேறு வழி இருப்பதாகத் தெரிந்தால் அதை மக்களின் முன்வைக்கலாம். நான் கூறும் வழியில் பிழை இருந்தால் அதைச் சுட்டிக் காட்டலாம். அல்லது நான் கூறும் வழி அபத்தமானது என்று தோன்றினால் அதையும் விளக்கிக் கூறலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு மக்களை மக்குகள் என்று கூறுவதாகத் தாங்களே கற்பனை செய்து கொண்டு கற்பனையின் அடிப்படையில் வாதம் புரிவதைத் தவிர்க்கலாமே?

    • Suppiah says:
      14 years ago

      சோசலிசம் சோசலிசம் என்று சொல்கிறீரே இந்த சோசலிசத்தால் இதுவரை என்னதான் சாதிக்கமுடிந்த்தது. இனிமேலும் என்னதான் சாதிக்கமுடியும்.நீர் இப்ப பாவிக்கிற கொம்பியூட்டரை கண்டுபிடிக்கமுடிந்ததா இல்லை இன்டர்னெட்டைதான் கண்டுபிடிக்க முடிந்ததா. இது எல்லாம் இல்லாமல் உம்மால் எங்களுக்கு இதையெல்லாம் போதிக்கமுடியுமா. இவ்வளவு செய்தவனுக்கு இதை அணுகமுடியாதா என்ன. உம்முடயதுதான் கற்பனை வாதம், அதாவது சோசலிசத்தால் எல்லாவற்றையும் சாதித்துவிடலாமென்று. கடைசியாக வாதிபவனையும் சாடை மாடையாக முட்டாளென்ன்று சாடுவதும்.

  7. இராமியா says:
    14 years ago

    ஐயா சுப்பையா அவர்களே! சோஷலிசம் சாதித்த சாதனைகளைப் பட்டியலிட்டால் அது பெரும் புத்தகமாகிவிடும். எடுத்துக் காட்டிற்குச் சில; அது வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்தது. அனைவருக்கும் கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமாக அளித்தது. (அயோக்கியத்தனமான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு, சிரமங்கள் பலவற்றைச் சந்தித்துக் கொண்டு உள்ள நிலையிலும் மக்கள் மருத்துவத்தை அளித்துக் கொண்டு இருக்கும் நாடு சோஷலிச கியூபா தான்.) சமூக ரீதியில் மட்டுமல்லாமல் அறிவியலில் செய்த சாதனைகளும் பல உள்ளன. முதலில் விண் வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டது சோவியத் யூனியன் தான். செயற்கை ரப்பரைக் கண்டு பிடித்தது சோவியத் அறிவியல் அறிஞர்கள் தான். மாஸ்கோ நகரின் மண் தரத்தையும் மேடு பள்ளத்தையும் ஆராய்ந்து அங்கு பாதாள ரயில் சாத்தியமில்லை என்ற முதலாளித்துவ விஞ்ஞானிகளின் முடிவைப் புறந்தள்ளி அங்கு மக்களுக்கு மிகவும் பயன்படும்படியான பாதாள ரயிலை அமைத்தவர்கள் சோவியத் விஞ்ஞானிகள் தான். இப்பொழுது பிரச்சினை அதுவல்ல. முதலாளிகளின் பிடியில் உள்ள விஞ்ஞானிகள் தான் புவி வெப்ப உயர்வு பற்றிய எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்குத் தீர்வாக வாகனப் புகை மற்றும் பிற புகைகள் வெளியிடப்படுவது வெகுவாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிட்டு, புவியைக் குளிர்விக்கும் நடவடிக்கைகளை அபரிமிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தெளிவாகவே கூறுகிறார்கள். ஆனால் புவி வெப்ப உயர்வை அதிகரக்கும் பொருட்களை உற்பத்தி செய்தால் தான் இலாபத்தை ஈட்ட முடிகிறது. பூமியைக் குளிர்விக்கும் நடவடிக்கைகளான விவசாயமும் மரம் வளர்த்தலும் இலாபத்தை ஈட்டவில்லை என்பது மட்டுமல்ல; நஷ்டத்தைத் தவிர்க்கவும் முடியாமல் போகிறது. ஆகவே விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளும் அறிவுரைகளும் பின்பற்ற முடியாமல் போய்க் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் முதலாளித்துவ அரசுகள் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் என்று குருட்டு நம்பிக்கையுடன் இருப்பது மிகவும் ஆபத்தானது. ஆனால் சோஷலிச சமூகம் இலாபத்தை நோக்காமல் மக்கள் நலத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குமாதலால் அவற்றைச் செயல்படுத்த முடியும். நண்பரே! புவி வெப்ப உயர்வு எந்த தனிப்பட்ட மனிதரின் பிரச்சினை அல்ல. புவியில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் உள்ள பொதுவான பிரச்சினை. இப்பிரச்சினை பற்றித் தான் பேசிக் கொண்டு இருக்கிறார்களே ஒழிய, தீர்வைப் பற்றி யாரும் பேசவில்லை. நான் சொல்லும் தீர்வைத் தான் ஏற்க வேண்டும் என்பதில்லையே? வேறு தீர்வு இருந்தால் அதைக் கூறலாமே!

  8. Suriya says:
    14 years ago

    “WASHINGTON (Reuters) – In a major new climate finding, researchers have calculated that dinosaur flatulence could have put enough methane into the atmosphere to warm the planet during the hot, wet Mesozoic era”. May be we can ask the 1billion plus Indians to stop eating the spicy curry and that can help ?

    • இராமியா says:
      14 years ago

      It will be helpfull if you amplify the issue to understand the matter clearly.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In