Sunday, June 14, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கொல்லப்படுவதற்கு முன்னர் பிரபாகரன் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்:UTHR

இனியொரு... by இனியொரு...
06/11/2009
in இன்றைய செய்திகள்
0 0
8
Home இன்றைய செய்திகள்

 

 விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கொல்லப்படுவதற்கு முன் இலங்கை ராணுவத்தால் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
  இலங்கை ராணுவத்தின் உயர்நிலை தகவல்களை மேற்கோள்காட்டி “மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்’ என்ற அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு தயாரித்துள்ள 48 பக்க அறிக்கை “இந்திய -ஆசிய செய்தி சேவை’ நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.
  இலங்கையில் முல்லைத்தீவில் மே 18-ம் தேதி, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற கடைசிக் கட்ட சண்டையில் ராணுவத்தின் கொடூரமான தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்களும் விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது முக்கிய சகாக்களும் கொல்லப்பட்டுவிட்டதாக ராணுவம் அறிவித்தது. ஆனால் பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முன் இலங்கை ராணுவத்தால் உயிருடன் பிடிக்கப்பட்டார் என்று மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  பிரபாகரன் பிடிபட்டபோது, இலங்கை ராணுவத்தினருடன் தமிழ் அரசாங்கத்தில் உள்ள முக்கிய அரசியல்வாதி ஒருவரும் (வினாயகமூர்த்தி முரளீதரன் என்கிற கருணா) உடன் இருந்துள்ளார். அவரது முன்னிலையிலேயே பிரபாகரன் துன்புறுத்தப்பட்டுள்ளார். ஆனால் ராணுவத்தினருடன் நடந்த சண்டையில் பிரபாகரனும் அவரது மெய்க்காப்பாளர்கள் 18 பேரும் கொலை செய்யப்பட்டுவிட்டதாக “இந்திய -ஆசிய செய்தி சேவைக்கு’ அளித்த பேட்டியின்போது கருணா தெரிவித்துள்ளார். இதில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டதை கருணா மறைத்துள்ளார்.
  பிரபாகரன் பிடிபட்டவுடன், இலங்கை ராணுவத்தின் 53வது பட்டாலியனின் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு வைத்து அவரை துன்புறுத்தியதாகவும் மனித உரிமை அமைப்பு தகவல் தெரிவிக்கிறது.
  பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முன்பாக, அவருடைய 12 வயது இளைய மகன் பாலசந்திரனும் உயிருடன் பிடிபட்டுள்ளார். பிரபாகரனின் கண் எதிரே அவரது மகனையும் இலங்கை ராணுவத்தினர் துன்புறுத்தி சுட்டுக்கொன்றுள்ளனர்.
  இலங்கை ராணுவ மூத்த அதிகாரிகளின் நேரடி பார்வையிலேயே இந்த சம்பவங்கள் நடந்திருந்தாலும் அவர்கள் அதை மறைத்துள்ளனர்.
  மேலும் பிரபாகரன் பிடிபட்ட பிறகு, எஞ்சிய விடுதலைப் புலிகள் அனைவரையும் கைது செய்த ராணுவம், அவர்களை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்துள்ளது.
  மேலும் பிரபாகரனின் மனைவி மதிவதனி, உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதை இலங்கை அரசு மறைத்துவருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  “பிரபாகரன் பிடிபட்டாரா என்பதைதான் உலக மக்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினர். அவருடைய மனைவி கொல்லப்பட்டாரா, அவரது சடலம் கிடைத்ததா என்பது குறித்து எங்களுக்கு முக்கியமல்ல’ என்று பிரிகேடியர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பேபி சுப்பிரமணியம், கிழக்கு மாகாண முன்னாள் தலைவர் கரிகாலன், புலிகள் அமைப்பின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் யோகரத்தினம் என்கிற யோகி, புலிகள் அமைப்பின் சர்வதேச தலைமையகத்தின் முன்னாள் தலைவர் லாரன்ஸ் திலகர், அரசியல் ஆலோசகர் வி.பாலகுமார், யாழ்ப்பாணத் தலைவர் இளம்பரிதி மற்றும் திரிகோணமலைத் தலைவர் ஈழன் உள்ளிட்டோர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த பிறகு, தற்போது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நாகரீகமற்ற நடவடிக்கைக்காக இந்திய நாடு வெட்கித் தலை குனியும் நாள் வரும்!

Comments 8

  1. sri says:
    17 years ago

    NEW DELHI: Tamil Tigers leader Velupillai Prabhakaran was tortured by the Sri Lankan military before being killed, a leading human rights body said
    in a report released on Wednesday.

    The University Teachers for Human Rights (UTHR) quoted high-level military sources as saying that Prabhakaran was tortured in the presence of “a Tamil government politician and a general”.

    The torture, it said, took place probably at the headquarters of the army’s 53 Division, which battled the Liberation Tigers of Tamil Eelam (LTTE) before crushing it last month.

    “Several army sources have said that Prabhakaran’s (younger) 12-year-old son Balachandran was killed after capture. Our (sources) said that he was killed in front of his father,” said UTHR, which has always been critical of excesses both by the military and the LTTE.

    “These sources added that this information is correct unless officers at the highest level are fibbing to one another.
    “Our sources in addition to several others have said that all the LTTE persons remaining in the NFZ (No Fire Zone) were massacred,” it added in a 48-page report, an advance copy of which was made available to IANS.

    Sri Lanka announced May 18 that Prabhakaran, founder leader of the LTTE, was killed in a lonely coastal stretch in the northeastern district of Mullaitivu where the Tigers had massed their forces before going down. His body was put on display, placed on a stretcher, the back of the head blown off.

    Sri Lankan minister Vinayagamurthy Muralitharan alias Karuna, a former confidant of Prabhakaran, had told IANS that the LTTE chief was shot dead with 18 of his guards.

    Prabhakaran’s death marked the end of the LTTE’s dragging conflict that claimed 90,000 lives since 1983.

    UTHR said: “Information seeping into the public domain from within the army points to capture or surrender, but the official responses dismissing this are a rehash of stories that public no longer finds credible. It is left to an impartial enquiry to answer this and related questions.”

    UTHR pointed out that the government was evasive about the fate of Prabhakaran’s wife Mathivathani.
    It quotes a brigadier as saying: “We had to look for Prabhakaran’s body because the world was interested in seeing it. But the body of his wife is not of any importance to us.”

    The UTHR report said: “That would be the fate of the unknown hundreds of civilians and militants killed in those last days (of fighting).”

    According to the report, among the LTTE leaders who surrendered to the army included Baby Subramaniam, a member of the group since 1976 and one of Prabhakaran’s oldest associates.

    Others reportedly now in government custody included former eastern province political leader Karikalan, former spokesman Yogaratnam Yogi, former head of the LTTE international secretariat Lawrence Thilakar, political advisor V. Balakumar, Jaffna leader Ilamparithi and Trincomalee political leader Elilan.

  2. sam says:
    17 years ago

    தற்பொழுது இலங்கை காட்டிற்குள் தஞ்சமடைந்துள்ள எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளை கொன்று அழிப்பதற்கு முழு மூச்சுடன் இந்திய பார்ப்பன ஆளும் அரசு ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளது………………….
    —————————————————

    இந்திய ராணுவம் இலங்கை காடுகளில் விடுதலைப் புலிகளை தேடும் பணியில் உள்ளனர்.
    இலங்கை ராணுவத்தின் வழிகாட்டலில் இந்திய ராணுவம் காடுகளில் விடுதலைப் புலிகளை தேடி வருகின்றனர். கைது செய்து….சட்டத்தின் முன் போர்க் கைதியாக நிறுத்த அல்ல …..கொன்று ஒழிப்பதற்காக …..

    கடைசி 72 மணி நேர யுத்தம் பற்றிய பல செய்திகள் உலக பத்திரிக்கைகள் மற்றும் இந்திய ஊடகவியலாளர்களும் ஒரு மர்ம நாவல் எழுதுவதை போல் பல உண்மைகளையும் அங்கு நடைபெற்ற கொடூர யுத்த மீறல்களை மறைத்து விட்டு ராஜபக்க்ஷே, சோனியா மனம் குளிரும் படி செய்திகள் வருமாறு பார்த்துக் கொண்டனர்.

    உண்மையில் நடைபெற்றது என்ன ?

    முள்ளிவாய்க்கால் முழுவதும் யுத்தம் நடைப்பெற்றுக் கொண்டிருந்த பொழுது மூன்று அடுக்கு ராணுவ வியூகம் இந்திய ராணுவத்தால் திட்டமிடப்பட்டு அதில் வெற்றியும் பெற்றனர்… 50 ஆயிரம் மக்களை கொன்று ..யுத்த விதிமீறல்களை செய்து, …. போரில் தோற்கும் நிலையில் இருக்கும் பொழுது சரணடைவது என்பது பொதுவான யுத்த விதிகள்.. சங்க காலம் தொட்டு இன்று வரை..

    முதல் ராணுவ வளையத்தில் சிங்கள ராணுவம் புலிகளுடன் யுத்தம் நடத்தினர். …
    இரண்டாவது இந்திய ராணுவ வளையத்தில்….. கடற் புலிகள் மற்றும் காயம் அடைந்த புலிகள் மற்றும் தலைவர்கள் வெளியேறும் பொழுது அவர்களை கொன்று அழிப்பது….
    மூன்றாவது இந்திய ராணுவ வளையத்தில் …. யுத்தம் நடைபெறும் பொழுது அங்கிருந்து வெளியேறும் ( மற்ற நாடுகளில் தஞ்சம் அடையும் ) மக்களை தடுத்து கொல்வது, இதுதான் கடைசி மாதங்களில் நடந்த துயரம் …. இதற்க்கு சான்றாக இன்று வரை இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டும் பெரும் அகதிகள் வெளியேறாமல் போன துயர சம்பவம் நடந்தது….இவை எந்த யுத்த நாடுகளிலும் நடைபெறாத மிகப்பெரிய போர்க் குற்றம் …..

    இவ்வளவும் இந்திய ஆளும் பார்ப்பன கும்பல் திட்டமிட்டு செய்த மகாபாதக செயல்… யுத்தம் முடிந்தவுடன் …சிங்கள ராணுவம் அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். தற்பொழுது இந்திய ராணுவம் முழு அளவில் அங்கிருக்கும்….அங்கிருந்து வெளியேறிய மக்களை …..வவுனியாவிற்கு மற்றும் வெவ்வேறான முகாம்களுக்கு வலுக்கட்டையமாக கொண்டு அடைக்கும் பணியில் ….இந்திய ராணுவம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன…

    .இந்த மாபாதக செயல்கள் போதாதுஎன்று ….தற்பொழுது இலங்கை காட்டிற்குள் தஞ்சமடைந்துள்ள எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளை கொன்று அழிப்பதற்கு முழு மூச்சுடன் இந்திய பார்ப்பன ஆளும் அரசு ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளது….

    இவையெல்லாம் ஆளும் போலி….. தமிழின தலைவராக தானே பட்டம் சூட்டிக் கொண்ட MNC கருணாநிதிக்கு நன்றாகத் தெரியும்…. தற்பொழுது இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்கிறார்கள் ஈழத் தமிழனுக்கு விரைவில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று…..இவர்கள் விவாதித்து முடிந்தவுடன் ராஜபக்க்ஷே சமஉரிமை கொடுத்து விடுவார் என்று மக்களிடம் சொல்வார்கள்… தனது ஊடகங்கள் வழியாக….
    இவற்றையும் உலக சமூகமும்….ஐ.நாவும் ஒப்புக் கொண்டு விடுவார்கள்…

  3. shathis says:
    17 years ago

    யூ.ரி.எச்.ஆர் சிறீதரன் சில வாரங்களுக்கு முன் பி.பி.சி தமிழோசைக்கு கொடுத்த பேட்டியில் இலங்கை அரசின் அடாவடிகளை கொலைகளை யுத்தகாலத்தில் தவிர்க்கமுடியாது என்று நியாயப்படுத்துவதுபோல் கூறினார். திடீரென்று ஏன் இந்த பல்டி? இவர்களுக்கு பணம் கொடுக்கும் அமெரிக்காகாறனின் நிர்ப்பந்தமோ? யார் அறிவார். ? இவர்கலெல்லாம் விரைவில் வெளிச்சத்துக்கு வந்துதான் தீரவேண்டும்.

  4. parthasarathi says:
    17 years ago

    WE HAVE NO EVIDENCE THAT MR KARUNA WAS THERE AT TIME HE CAPTURE OR SURENDE OR ARMY FOUND HIS DEAD BODY, ALL ARE ASUMED BY US.TRUTH IS ONLY ARMY SENIORS HANDS,THEY NOT GOING TO SHOW THEIR HANDS ANYWAY,ITS MAY BE COMES SOON.

    BUT WE ALL KNOW WAR GOING TO END TIGERS STORY WILL END.

    NOW MANY INNOCENT DIED ON THIS WAR AND WE WANT ANY OTHER WAR AGAIN WE ALL HAVE TO LEARN HOW WE ALL LIVE TOGETHER AS A COMMUNITY,ALL SRILANKANS.

    TIGERS WERE WONT LET ANYONE TO LEAVE THE WAR ZONE AND THOSE INNOCENT BEEN DEAD,WHY WE STILL TAKING ABOUT PIRABAHARAN.WE NOW TAIK ABOUT PEOPLE OF SRILANKA SPECIALY TAMILS.

  5. Ramani says:
    17 years ago

    Hi Parshanthi
    You are talking about the bloody “evidence”. ?? The whole world has enough evidence that the genocide which was committed by the government and the Para military groups led by karuna and Douglas. The UTHR stated on BBC, that the government is not committing genocide as they want to safe the government from being convicted! In the end the they all are doing their business at the expense of Tamils life!

  6. msri says:
    17 years ago

    கருணா அம்மானுக்கு>கொலைத்தொழில் ஓர் கலையே! அதுவும் தன் கைப்பட> அதிலும் சின்னஞசிறுகளைக் கொல்வதென்றால் அதல் இரட்டிப்பு ஆனந்தம்! பிரபாகரனை இப்படி கொலை செய்துவிட்டு> அதற்கு கண்ணீர் விட்டு அழுது ஓர் நாடகம்!

  7. THAVAMALAR says:
    17 years ago

    மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பின் இவ்வறிக்கை நம்பிக்கை இழந்திருந்த மனிதநேய பண்பாளர்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. சிறீலங்கா அரசை தட்டிக் கேட்க யாருமற்ற அநாதைகளாக இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். இந்த நிலையில் உங்கள் துணிவான செயல் பராட்டுக்குரியது. இவ் அமைப்பில் துணிந்து செயல்பட்டடுக்கொண்டிருக்கும் அனைவரக்கும் குறிப்பாக மனித உரிமைபோராளி சிறீதரன் அவர்களுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் என்றும் கடமைப்பாடு உடையவர்களாக இருப்பார்கள்.

  8. Kulanathan says:
    17 years ago

    uthr அறிக்கையை மட்டும் விடுவதோடு நின்றுவிடக்கூடாது.
    இலங்கை பேரினவாத அரசுமீது சட்டநடவடிக்கை எடுக்க முயலவேண்டும்.
    வன்னி அகதிமுகாம்களில் அரச சார்பு குழுக்கள் ஈபிடிபி கருணாகுழு புளொட் பல்வேறு
    மோசடிகளைச் செய்வதாக தெரிகிறது. இவற்றை கண்டறிந்து அந்த வன்னி மக்களுக்கு பேருதவி செய்யவும். வன்னி அகதிமுகாம்களிலிருந்து சந்தேகத்தின்பேரில் பலபேர் கைது செய்யப்பட்டு அவர்கள் நிலை இன்னும் தெரியவில்லை. எனது உறவினாகள் மூவர் இவ்வாறு காணாமல் போய்விட்டார்கள். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க uthr முயன்றால் என்னைப்போன்ற ஐரோப்பாவில் வாழும் பலர் ஆதரவும் உதவியும் செய்ய சித்தமாக உள்ளோம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In