Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கூட்டமைப்பும் தமிழ் மக்களின் அரசியலும் : விஜய்

இனியொரு... by இனியொரு...
03/13/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
6
Home பிரதான பதிவுகள் | Principle posts

தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் எதிர்பார்ப்பு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான போராடத்தினை தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஒரு பலமான அரசியல் கூட்டமைப்பாகும். தமிழர்களின் பலமானதொரு அரசியல் சக்தியாக புலிகள் விளங்கியதைப் போன்று பலமான அரசியல் சக்தி உருவாக வேண்டும் என்றும் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடவேண்டும் என்றும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக் கூடிய ஒரு அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நிலையில் அதனை ஆதரித்து நிற்கும் தமது கடமைப்பாட்டை தமிழ் மக்கள் மேற்கொண்டனர்.

இந்த நிலைமையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுக்கான ஆதரவுத் தளத்தினை உருவாக்கிக் கொண்டதுடன் நடைபெற்ற தோதல்களில் கணிசமானளவு வாக்குகளைப் பெற்றும் கொண்டது.

புலிகள் அழிக்கப்பட்ட பின்னரான காலத்தில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தினை நிரப்புவதற்கு கூட்டமைப்பும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஜனநாயக வழியில் போராட்டத்தினை நடாத்த முற்படுகிறோம் என்ற கோசமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உதவியிருக்கிறது.

ஆயினும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய அரசியல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு முடியாமல் போகின்றமையை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த நிலைமையானது தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும்; அரசியல் விமர்சகர்களின் மத்தியில் அவநம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கிறது. பல கண்டனக் குரல்கள் தோன்றியிருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வலுவான சக்தியாக இந்திய அரசின் அழுத்தங்களை நம்பியிருந்தமை பற்றி ஏற்கனவே கண்டனங்கள் எழுப்பப்பட்டுள்ளது. அவ்விடயம் குறித்து ஒரு மீள் பரிசீலனையை மேற்கொள்ளவோ அல்லது ஒரு விவாதத்திற்கு செல்லவோ கூட்டமைப்பால் முடியவில்லை. அவ்விடயம் குறித்து கூட்டமைப்பு மீள் பரிசிலக்கத் தயாராகவில்லை. மேலாக கூறியதைப் போன்று இந்திய அரசின் அழுத்தங்கள் குறித்து எந்தவிதமான சாதகமான நன்மைகளையும் பெற்றுக் கொள்ள கூட்டமைப்பால் முடியாமல் போயிருக்கிறது.
மற்றொரு புறம் ஆளும் கட்சிக்கெதிராகக் கடைப்பிடித்து வந்த எதிர்ப்பரசியலைக் கைவிட்டு இணக்க – விமர்சன அரசியலை மேற்கொள்வதற்கு முயற்சித்தமை அவநம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கிறது.

இதற்கெதிராக தொடர்ச்சியான கண்டனங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றதனையும் காணமுடிகிறது. இணக்க அரசியலை மேற்கொள்வது ஆளுங்கட்சியுடனான பேச்சு வாhத்தைகளை மேற்கொள்வதற்கே என கூட்டமைப்பு காரணங் கூறியிருந்தது. அனால் கூட்டமைப்பு இன்று பேச்சு வார்த்தைகளை, தொடர்பான “நம்பிக்கையான செய்திகளை” மக்களுக்கு வழங்க முடியவில்லை. இறுதியாக தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்ற செய்தியை வழங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள்.

கூட்டமைப்புக் கட்சிகளுக்கிடையே தோன்றியிருக்கிற முரண்பாடுகள் மற்றொரு பிரச்சினையாக தோன்றியிருக்கிறது. கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி தனித்து இயங்குதவற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமையானது கூட்டமைப்பின் எதிர்காலம் குறித்த சந்தேகத்தினை தோற்று வித்திருக்கிறது. இந்த நிலைமையில் கூட்டமைப்பை ஒரு தனிக்கட்சியாகப் பதிவு செய்வதற்கான அழுத்தங்களும் ஏனைய கட்சிகளை உள்ளீர்த்துக் கொள்வதற்கான விருப்பங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து முதன்மையான கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூட்டமைப்பு கூறிவந்திருக்கிற போதிலும், காணமல் போனேரின் விடுதலை தொடர்பாகவும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் விடுதலைக்காகவும் வன்னி யுத்த நிலைமைகள் குறித்தும் குறிப்பாக அரசாங்கம் குறித்த போர்க்குற்றச் சாட்டுக்கள் குறித்தும் வலுவான அரசியல் நடவடிக்கைகளை கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை.

கூட்டமைப்பின் இந்த அரசியல் நடவடிக்கைகள் குறித்து நாம் விரிவாக நோக்க வேண்டியிருக்கிறது. அதற்கு முன்பாக நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் கூட்டமைப்பின் “தங்களைப் பலப்படுத்த வாக்களியுங்கள்” என்ற கோரிக்கைக்கு தமிழ் மக்கள் எவ்வாறு பதில் வழங்கப் போகிறார்கள் என்ற வினா எழுகிறது.

தமிழ் மக்கள் இத்தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதனை மீள் பரிசீலிப்பதற்கான நியாயங்கள் பலவற்றை கூட்டமைப்பினரே ஏற்படுத்தியுள்ளனர். இருந்த போதும் பல தரப்பிலிருந்தும் இறுதி வேண்டுதல்கள் ஊடகங்களில் வெளிவந்தமுள்ளன. இது ஒரு துயரத்திற்குரிய நிலையே.

கூட்டமைப்பு தமிழ் மக்களின் பெரிய அரசியல் சக்தியாக – தனிப் பெரும் அரசியல் சக்தியாக கருதிக் கொண்டு செயற்பட்டு வருகிற போதிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தலைமை தாங்கக் கூடிய “தனி ஒரு அரசியல் சக்தியாக” அது நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது போன்றே தோன்றுகிறது.

அதன் தற்போதைய தோல்விகள் தமிழ் மக்களின் எதிர்ப்பரசியலுக்கு எதிரானதாக அதாவது அரசாங்கத்தின் ஆதரவுக் கட்சிகளினைப் பலப்படுத்துவாதாக அமைந்து விடும் என்ற கருத்து மெய்யாக்கப்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் அதனை கூட்டமைப்பபின் அரசியல் பலவீனத்தால் ஏற்பட்டதாகவே நோக்கப்பட வேண்டும்.

அரச ஆதரவுக்கட்சிகளையும் அரசையும் பலப்படுத்தும் குறுந்தேசிய  அரசியலுக்கு எதிரான அரசியல் தலைமை தாமதமின்றிக் கட்டியெழுப்பப்பட வேண்டும். தேசத்திற்கு வெளியில் வாழ்கின்ற ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சார்ந்தவர்களும், முற்போக்கு சக்திகளும் இலங்கையில் ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்த அழுத்தங்களை வழங்கும் போதே புதிய மக்கள் சார் அரசியல் தலைமைக்கான ஆரம்பம் குறித்து சிந்திக்க வழிபிறக்கும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழகச் சட்டமன்றத் தேர்தலும் தமிழினவாதிகளின் பிழைப்புவாதமும் : இளங்கோ

Comments 6

  1. Vijey says:
    15 years ago

    குறுந்தேசிய அரசியலுக்கு எதிரான அரசியல் தலைமை தாமதமின்றிக் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதுவே கலாத்திற்குரிய பணியாகும்.

  2. THAMIL MARAN says:
    15 years ago

    சம்பந்தர் அய்யாவை சம்பந்த சம்பதம் இல்லாமல் இழுப்பதும் கூட்டமைப்பு மீது எச்சில் துப்ப நினைப்பதும் தாம் தமிழர் எனும் நினைப்பில்லாதோரின் பண்பாடு.என்னதான் நீங்கள் இழுத்து இழுத்து நடந்தாலும் வெள்ளயைப் போல இங் லீஸ் பேசினாலும் வெள்ளக்காரன் ஆக முடியாதோ அதைப் போல கூட்டமைப்பு இல்லை என்றால் இலங்கையில தமிழனாய் வாழ முடியாது.உண்மையை எழுதுவதாக நினைத்து பொய்கள பரப்பாதீர்கள்.நன்றீ.

    • Vijey says:
      15 years ago

      கூட்டமைப்பு குறித்து பேசப்படுகின்ற விடயங்களைத் தொகுத்தே என் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நானாக எந்த புனைவுகளையும் எழுதவில்லை. கூட்டமைப்பிலிருந்தும் அதன் ஆதரவாளர்கள் மத்தியிலிருந்தும் எழுகின்ற விமர்சனங்கள் இவை என்பதனை புரிந்து கொள்ளங்கள். கூட்டமைப்பு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி> மக்களின் விடுதலைக்காக சரியான வழயில் செயற்பட வேண்டும் என்ற அவா கொண்டுள்ளவர்களின் கருத்துக்களே இவை. கூட்டமைப்பின் அண்மைக்கால தவறுகள் தொடர்பாக மேலும் மேலும் எழுத முடியும். எது எவ்வாறாயினும் தமிழர்களின் போராட்டத்தினை தங்கள் நலனுக்கு அல்லது தங்கள் அரசியல் தவறுகளின் விளைவாக தவாறான பாதையில் இட்டுச் சென்றாலும் தமிழனாய் வாழ இருக்கிற ஒரே தெரிவு கூட்டமைப்புத்தான் என்பது சரியானதே. கூட்டமைப்பின் தேர்தல் தோல்வி ஒடுக்குமுறை அரசாங்கத்தினையே பலப்படுத்தும். அவ்வாறு ஒரு தோல்வி ஏற்பட்டால் (நடக்காது என நம்புவோம்) அது மக்களின் தவறல்ல என்பதே என் கட்டுரையின் சாராம்சம்.

  3. S.G.Raghavan says:
    15 years ago

    சிவஜானம் தமிழ் அரசு கட்சியில் குந்திக் கொண்டு தமிழ் மக்களின் ஒற்றுமையையும் போராடும் திறனையும் மலுங்கடிகிறார். இவ்வாறு தமிழரசு கட்சியில் இருக்கும் சிலர் சமூகச் சிந்தனை அற்று அடுத்த தேர்தலில் பாராளுமன்ற கதிரையை தமதாக்கும் பொருட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை தூக்கிஎறிந்து விட்டு தமிழரசு கட்சியை பலப் படுத்தினால் தாம் பதவி சுகம் காணலாம் என அலைகிறார்கள். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறேன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு தமிழரசு கட்சி பிரிந்து தேர்தலில் நிற்ற்கு மானால் ஒரு ஆசனத்தை கூட பெறமுடியாது. சிவயானம் புலிகளின் பின்னால் பதவிக்காக நாயாக அலைந்து திரிந்து எதுவும் கிடைக்கவில்லை மாநகர ஆணையாளராக இருந்து சுருட்டிச் சுத்தினவர்கள் எல்லாம் மக்களின் நலனில் சமுகத்தில் அக்கறை வைக்கப் போகிறார்களா? துரைரத்தினம் சுகு அணியினரை இணைப்பதில் சுரேசுக்கு என்ன தயக்கம்? சிவாயிலிங்கம் இணைக்கப் படுவதில் செல்வத்திற்கு என்ன சுணக்கம்? தெரியவில்லை!. இது இருக்க சம்மந்தனை தவிர கிழக்கில் இருந்து குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறையில் இருந்து அரசியல் ரீதியான சந்திப்புகள், முடிவுகள் என்பன எடுக்கும் போது, கூட்டு முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. யாழ்பாணத்தை மையப் படுத்திய சிலர் மாத்திரம் முடிவுகளை எடுக்கின்றனர் இது அபத்தமானதும் ஆபத்தானதும் ஆகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட ரீதியாக செயல் குழுவை உருவாக்கி தேசிய ரீதியாக அவற்றை பலப் படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கட்சியின் மத்திய குழுவில் இடங்கொடுக்கப் பட்டு சகல மக்களையும் பிரதி நிதித்துவப் படுத்துவதோடு உட்கட்சி ஜனநாயகம் பேணப் படவேண்டும். செய்வார்களா? யாழ் மாவட்டத்தில் சில மேலாதிக்கச் சக்திகளிடம் கூட்டைமைப்பு சிக்கி சீரழிவதை தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. சீரழிவுவாதமே தமிழ் மக்களின் சாபக் கேடு. தமிழ் மக்கள், புத்தியீவிகள், சமுக நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டைப்பை மாவட்ட மத்தியில் பலப் படுத்தி ஒவ்வொரு மாவட்டங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தக் கூடிய முறையில் ஒரு மத்திய குழுவையும் அக்குழுவால் உருவாக்கப் படும் தலைமையையும் உருவாகப் பாடுபடவேண்டும். இது சகலரினதும் உடனடி செயல் பாடாக இருக்கவேண்டும்.

    • Vijey says:
      15 years ago

      விடயங்கள் குறித்து சரியாகவே மகூறியிருக்கிறீர்கள் .கூட்டமைப்பு புலிகளின் வீழ்ச்சியின் பின்னர் தன்னை பல வழிகளில் புணரமைத்துக் கொண்டு வருகின்ற பாங்கினைச் சரியாகக் கணக்கிட்டால் நீங்கள் கூறுவதற்கப்பாற்பட்ட பல்வேறு அரசியல் தவறுகளை மேற்கொண்டு மக்களின் போரட்டத்தினை சீரழித்துச் செல்வதனை புரிந்து கொள்ள முடியும்.

  4. Kathir says:
    15 years ago

    தமிழ் தேசியக் கூ ட்டமைப்பு ஒரு முதலாளித்துவ சிந்தனைகொண்ட கட்சி அது அதற்கே உரிய செயற்பாட்டைத்தான் செய்யும் . அதில் உள்ளவர்கள் எல்லோரும் பதவியாசை கொண்டவர்கள் . தமது பதவிகளை தக்க வைத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் . EPRLF சுகு, வரதர் போன்றவர்கள் அரசியல் தெளிவு கொண்ண்டவர்கள் இவர்களை இணைத்து செயற்பட்டால் தமது பதவி பறிபோய்விடும் என்ற பயம்கொண்டுள்ளனர் . தமிழ் மக்களை எப்படி ஏமாற்றலாம் என்பது இவர்களுக்கு தெரிந்தவிடயமாக இருப்பதினால் தேசியம் , தமிழ்மக்களின் உரிமை என்றெல்லாம் பேசிக்கொண்டேயிருப்பார்கள் இவர்களை நம்புவது இன்னும் ஒரு தோல்விக்கு கொண்டுபோய்விடும் . இவர்கள் எதிர்ப்பு அரசியல் செய்யமாட்டார்கள்.மக்களுக்கு விளங்காத இணக்க அரசியல் தான் செய்வார்கள் .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...