Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கிரேக்கத்தில் மூவர் மரணம் : சரிந்து விழும் ஐரோப்பியப் பொருளாதாரம்!

இனியொரு... by இனியொரு...
05/05/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

கிரேகத்தில் தொழிலாளர் போராட்டங்களின் போது மூன்று வங்கி ஊழியர்கள் மரணமடைந்துள்ளனர். 50 ஆயிரத்திற்கும் அதிகமான உழைக்கும் மக்கள் பொது வேலை நிறுத்ததின் இடையே  கிரேக்கப் பாராளுமன்றத்தின் முன்பதாக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது  பலர் காயமடைந்ததுடன் பாராளுமன்றத்தை நோக்கி வீசப்பட்ட பெற்றோல் குண்டுகளின் போது அதற்கு அருகே இருந்த வங்கி ஊழியர்கள் மூவர் மரணமடைந்துள்ளனர்.

தொழிலாளர்கள் போராட்டத்தின் போது நடந்த குண்டுவீச்சுக்களாலும் ஏனைய நடவடிக்கைகளாலும் மத்திய ஏதென்ஸ் நகரம் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. மார்பின் வங்கியின் உள்ளேயிருந்து இருவரின் எரிந்த உடல் கைப்பற்றப்பட்டது.

யூரோ நாணயத்தில் இணைந்து கொள்வதற்காகவும், வங்கிகளுக்குப் பணம் வழங்குவதற்காகவும், உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக பெரும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கிய பணத்தொகை காரணமாகவும் கிரேக்கம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது.

இந்தப் பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ளும் முகமாக அரச சேவை ஊழியர்களின் ஊதியத்தைக் குறைக்கவும், ஓய்வூதியத்தைக் குறைக்கவும், பாவனையாளர் வரியை அதிகரிக்கவும் கிரேக்க அரசாங்கம் முடிவு செய்திருந்தது. கிரேக்கத்தில் பெரும் பணம் படைத்தோர் செலுத்தும் வரி மிகக் குறைவானதாக உள்ள நிலையில் தொழிலாளர்களிடம் பணம் வசூலிக்கும் அரச திட்டத்திற்கு எதிராகத் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திவருகின்றன.

சில ஐரோப்பிய ஊடகங்கள் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு எதிரான கிரேக்கத் தொழிலாளர்களின் எதிர்ப்பு இது என வர்ணித்தன. பொருளாதாரம் ஆசியாவை நோக்கி நகர்ந்து செல்ல உருவான புதிய உலக ஒழுங்கை நிலை நாட்ட அமரிக்க ஐரோப்பிய நாடுகள் முனைந்து வருகின்றன.

கிரேக்கப் பிரதம ஜோர்ஜ் பப்பன்ரூ தனது அரச திட்டங்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் கைவிட முடியாது என தெரிவிக்கிறார். இதே வேளை தொழிற்சங்கங்களும் இடது சாரிக் கட்சிகளும் மக்கள் நடுத்தெருவில் விடப்பட்டதாகக் கருதுகின்றனர்.

கிரேக்கத்தின் பின்னனதாக போத்துக்கல், ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் இதே நிலை தோன்றலாம் எனவும், யூரோவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்படலாம் எனவும் பொருளியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

நெக்ஸ்ட் நிறுவனத்தின் பிரதம நிர்வாகி சைமன் வூல்வ்சன் கருத்துத் தெரிவிக்கையில் கடன் தொகை அளவை முன்வைத்து அடுத்ததாகச் சரிந்து விழும் அபாயம் பிரித்தானியாவிற்கே உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

கிரேக்கத்தில் சந்தைப் பொருளாதாரமும் மூலதனமும் அரசைவிடப் பலம் வாய்ந்திருப்பதாக பிரித்தானிய  சனல் 4 செய்தி ஆய்வாளர் தெரிவித்தார். மலிவான கூலியை நோக்கி ஆசிய நாடுகளை நோக்கி நகரும் பெரும் கோப்ரேட் நிறுவனங்கள் ஆசிய நாடுகளில் அதிகரிக்கும் செலவினங்களுக்கு ஒப்ப எந்த சமூக உதவிகளையும் வழங்குவதில்லை. அந்த நாடுகளைல் இதே போன்ற போராட்டங்கள் உருவாகுமானால் அவற்றை மூர்க்கத்தனமாக அடக்கும் வகையில் இந்தியா சீன போன்ற நாடுகளின் அரசுகளை உருவாக்கி வருகின்றன. இலங்கை இனப்படுகொலை போன்ற மேலும் பல படுகொலைகள் இவ்வாறான போராட்டங்களுக்கு  எதிராக ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்படலாம்  என ஆய்வாளர்கள்  எதிர்வு கூறுகின்றனர்.

முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு முறை நிலைக்க முடியாத சூழல் உருவாகிவிட்டதாகவும் கார்ல் மார்க்ஸின் மூலதனம் குறித்த ஆய்வு சரியானது என்றும் மிக முக்கியமான பொருளியலாளர்கள் அமரிக்க ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடி உருவான காலப்பகுதியில் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய பதிவுகள் :

பொருளாதார சுனாமி : மூழ்கும் வல்லரசுகள்

புதிய உலக ஒழுங்கு விதி – சாம்பல் மேடுகளிலிருந்து

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இனப்படுகொலையைக் கொண்டாட்டமாக்கும் மகிந்த அரசு

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...