கிரேக்கத்தில் இடதுசாரிக் கூட்டணி அரசு ஆட்சியைக் கையகப்படுத்திய பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கிரேக்கத்திற்குமான முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. வரலாற்றுரீதியாகப் அதிகாரவர்க்கத்திற்கு எதிராகப் போராடிய கிரேக்க மக்கள் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணியை தமது பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மாற்றாகத் தெரிவு செய்தனர். சிரிசாவின் உறுப்புக் கட்சிகள் பாராளுமன்ற வழிமுறையை ஒரு இடைக்காலத் தீர்வாகவே ஏற்றுக்கொள்வதாகக் கூறுகின்றன.
கிரேக்கத்தின் புதிய பிரதமர் கிரேக்கம் கடனாளி நாடாகத் தொடரமுடியாது என்றும் ஐரோப்பிய ஒன்றியம், ஐ.எம்.எப் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி போன்றவையே கிரேக்கத்தின் இன்றை லைக்கு அடிப்படைக் காரணம் என்றும் கடந்தவாரம் தெரிவித்தார். இந்த மூன்று நிதி வழங்கும் நிறுவனங்களும் கிரேக்கத்தில் புதிய பொருளாதாரச் சீர்திருத்தத்தை அறிமுகம் செய்து உழைக்கும் -மக்களிடமிருந்து அதிக வரிப்பணத்தை அறவிடுமாறும், எஞ்சியிருக்கும் சமூக உதவித் திட்டங்களை நிறுத்துமாறும் கிரேக்க அரசை மிரட்டிவருகின்றன. இப் புதிய பொருளாதாரத் திட்டங்க்ளை கிரேக்க அரசு நிராகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கிரேக்க வங்கிகளிலிருந்து கடந்த வெள்ளி -19.06.2015- வரைக்கும் மூன்று பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான பணத்தைப் பல்தேசிய நிறுவனங்கள் வேறு நாடுகளுக்கு மாற்றம் செய்துள்ளன. நாளை திங்கள் வங்கிகளை நடத்துவதற்குப் போதிய பணம் இல்லை என வங்கிகள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் பல்தேசிய நிறுவனங்களுக்குச் சார்பான பொருளாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தவறினால் கிரேக்கத்திற்கு வழங்கப்படவிருந்த உத்தேசக் கடன் தொகைகளை நிறுத்திக்கொள்ளப்போவதாக வங்கிகள் ஐ.எம்.எப் அறிவித்துள்ளது.
தவிர கிரேக்க நிதியமைச்சர் லானிஸ் வரூபக்கிஸ் குழுவினருடன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.எ.எப் நடத்திய பேச்சுக்களில் இதுவரையான கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நிபந்தனைகளை கிரேக்க அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதேவேளை கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கிரேக்க அரசின் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்ளவில்லை.
முற்றுமுழுதாகப் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் நலன்களைப் பிரதிபலிக்க்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.எம்.எப் போன்ற நிறுவவங்கள் கிரேக்கத்தில் மாற்று அரசியல் மற்றும் மக்கள் சார்ந்த தேசியப் பொருளாதாரத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதை விரும்பவில்லை. கிரேக்க அரசு முன்வைக்கும் தேசியப் பொருளாதாரத் திட்டங்கள் வெற்றிபெறுமானால் ஐரோப்பா முழுவதும் அவ்வாறான திட்டங்களை அறிமுகப்படுத்த மக்கள் எழுச்சிகள் தோன்றும் என்பதே ஐரோப்பிஅ அரசுகளதும் பல்தேசிய நிறுவனங்களதும் இன்றைய அச்சம்.
கிரேக்கத்தில் மக்களின் அடிப்படை உயிர்வாழும் உரிமையை மறுக்கும் ஐரோப்பிய ஒன்றியமும், ஐ.எம்.எப் உம் பல்தேசிய நிறுவனங்கள் சார்பான அரசியலை முன்வைக்கக் கோருகின்ன்றன. இதனைக் கிரேக்க அரசு நிராகரித்தால் எதிர்காலத்தில் கிரேக்கத்தில் நிறவெறியையும் பாசிசத்தையும் அமெரிக ஐரோப்பிய அரசுகள் தோற்றுவிக்கும் என்பது வரலாறு.
ஐரோப்பாவின் கொல்லைப் புறத்தில் இன்னொரு உக்ரேயின் உருவாகலாம்.
Interestingly the person who writes this is a refugee living in the EU !