Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கவிதை பகிர்வு 2….. சமுதாயச் சிலுவையைச் சுமந்து வாழ்ந்த பெண் கவி : கவிதா (நோர்வே)

இனியொரு... by இனியொரு...
02/22/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, ஆக்கங்கள், இலக்கியம்/சினிமா
0 0
7
Home பிரதான பதிவுகள் | Principle posts

வரலாற்கு முன்னான காலப்பகுதியெனக் குறிக்கப்படும் குழு நிலைச் சமூக அமைப்பு நிலவிய காலத்திலாயினும், சாம்ராஜ்யங்கள் கோலோச்சிய நிலப்பிரபுத்துவ மன்னர் காலமாயினும், சங்கம் அமைத்து அறநெறி கூறிய வரலாறு தமிழ் இலக்கியத்திற்கு உண்டு.

இச்சங்கங்கள் முறையே முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என குறிப்பிடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் காணக்கிடைக்கும் இலக்கியங்கள் அனைத்தும் கடைச்சங்கத்தில் ஆக்கப்பெற்ற நூல்கள்தான் என்று நம்பப்படுகிறது. முதல் இரு சங்கங்களில் ஆக்கப்பட்டவை அனைத்தும் கடல் நிரப்பரப்பை ஆக்கிரமித்தபோது அழிந்து போயின என்றும் கூறப்படுகிறது.

சங்ககாலத்திலேயே பெண் புலவர்களும் காணப்பட்டிருக்கின்றனர். காதல், வீரம், போர், ஆட்சி, புகழ் ஆகியன புலவர்களது பாடுபொருளாக இருந்திருக்கிறது. 18;ஆம் 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் அந்நிய ஆட்சியினாலும், மேற்கத்தேய கலாச்சாரத்தின் பாதிப்பாலும் மற்றும் இன்றும் எம் சமூகத்திடையே காணப்படும் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தாலும் தமிழ்மொழி நலிவடைந்த காலத்தைக் கடந்து சங்க இலக்கியங்கள் மீள அச்சேறின. 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் உரைநடையும் அறிமுகமாக்கப்பட்டதுடன் அதைத்தொடர்ந்து புதுக்கவிதையும் தோற்றம் கொண்டது.

சங்ககால எதிர்ப்பிலக்கியத்தின் வரலாற்றிற்கு முற்பட்ட வரலாறு தமிழ் இலக்க்கித்தின் பெருமையை உணர்த்தி நிற்கிறது.

சமீபத்திய வருடங்களின் கவிதைப் பெருக்கத்தை நினைக்கும் போது தவிர்க்க இயலாமல் ஒரு பயமும் மனதில் பிறந்துவிடுகிறது. இந்தப்பயம் என்பது கவிதைகளின் தொகையை பற்றியது. போர்க்களத்தில் வாள்களையும் கேடயங்களையும் உயர்த்தி அணிவகுத்து நிற்கும் பல்லாயிரக்கணக்கான வீரர்களைப்போல எழுத்தாணிகளையும் கவிதைகளையும் ஏந்திக் கொண்டு தொகுப்புகள் மூலமும் இணையத்தளங்களிலும் கவிஞர்கள் அணிவகுத்து நிற்பது போன்ற தோன்றத்தைதான் சொன்னேன்.

கவிஞர்களின் எண்ணிக்கையையே எண்ணிவிட முடியாத ஒரு களத்தில் நின்றுகொண்டு அவர்கள் விட்டெறியும் கவிதைத்தாள்களை கோர்த்தெடுக்க முயல்வது என்பது முடியாத காரியம் தான். கையில் கிடைத்தவற்றில் சிலவற்றையாவது பார்ப்போம்.

எம் மண்ணில் விடுத்தலைக்கனவில் வேர்படர்த்தி விறைத்து நிற்க வேண்டி முளைத்த விழுதுகள் சில மண்ணைத் தொடுமுன்னே பிடுங்கி எறியப்பட்டன. இப்படி தளர்ந்துபோன விழுதொன்றின் கவிதைகளில் சில கண்டு வருவோம்.

அவள் ஈழத்துப் பெண் கவி. மிகக்குறுகிய காலத்திலேயே தன்னை ஒரு கவிஞராக நிலை நிறுத்தியவள். சின்ன வயதிலே புகழ் பூக்க வளர்ந்து செடி மலர்களின் வாசத்தை முழுமையாய் உணருமுதல் தன்னைத்தானே வேரோடு பிடுங்கிக்கொண்ட ஒரு கவிதைச் செடியின் விதை ஒன்று பேசுகிறது…

“எனக்கு உண்மைகள் தெரியவில்லை
பொய்களைக் கண்டுபிடிப்பதும்
இந்த இருட்டில்
இலகுவான காரியமில்லை”
……
“ நான்
நாளைக்குத் தோன்றுகின்ற சூரியன் பற்றி
எண்ண முடியாது”
இரவு எனக்கு முக்கியமானது
நேற்றுப் போல்
மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய
இந்த இருட்டு
எனக்கு மிகவும் முக்கியமானது”

இன்று தமிழ்ப்பெண் கவிஞர்களிடம் ஆழமான உணர்வுச் செறிவையும், திண்ணமான தேடுதலையும், தரமான மொழியாள்கையையும் காணக்கூடியதாக இருந்தும் தந்தைவழிச் சமுதாய அமைப்பின் இலக்கியம் படைக்கும் உலகில் பெண்கவிஞர்களின் நிலையும், சித்தரிப்புகளும், கருத்துக்களும் மறுபால்நிலைப்பட்டதாக அமைந்துவிடுவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

மேற்கூறிய இந்தக்கவிதை தனது 23வது வயதிலேயே தற்கொலை செய்து கொண்ட ஈழத்துக்கவிஞர் சிவரமணியுடையது. தனது கவிதைகள் யாரிடம் இருந்தாலும் அதை அழித்துவிடுமாறும், “எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்” என்ற குறிப்போடும் தன்னிடம் இருந்த கவிதைகளை முற்றிலும் அழித்துவி;ட்டு வைசாசி மாதம் 19ஆம் நாள் 1991ஆம் ஆண்டு யாழப்;பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டர்.
இக்கவிக்குயிலின் கரத்தில் இருந்து தப்பிய இன்னொரு கவிதை சொல்கிறது…

“ஆடையின் மடிப்புகள்
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணீர் விட்ட நாட்களை
மறப்போம்.
வெட்கம் கெட்ட
அந்த நாட்கள்
மறந்தே விடுவோம்.
…..
சரிகைச் சேலைக்கும்
கண்ணிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்!
அந்த
வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்தே விடுவோம்.
…
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்…

என்று தனது விடுதலைக் கனவையும் தனது போர் குணத்தையும் மட்டுமல்ல இச்சிந்தனைக்குத் தடையாக விளங்கும் பெண் அழகுச் சாதனங்களையும் ஆசைகளையும் கூட விசிறி எறிந்த போர்குணத்தாளின் வரிகள் இவை. பெண் இப்படித்தான் இருந்தாள். பெண் இப்படித்தான் இருப்பாள். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாகக் கொண்டே எம் மனித சமூக அமைப்பு வேரூன்றியிருக்கிறது. இதிகாசம், புராணம், இலக்கியம் தொட்டு இன்றுவரை புறஅழகே முக்கியம் பெற்றிருக்கிறது.

தமிழ் ஈழப் போர்க்களத்தில் பால் அடையாளங்களை துறந்தும், வளர்ந்தும் வரும் நிலையாக, பெண் விடுதலையெல்லாம் பேசுவதற்கு முதலில் நாம் உயிர் வாழவேண்டும் என்று தெரியும் தோற்றமாக இருந்தாலும். அவை வெறும் கானல் நீர்போலதான் போய்விட்டிருக்கின்றது.

சிவரமணி இலங்கையில் பெண்ணிய இயக்கங்களோடும் தன்னை இணைத்துக்கொண்டு வீரியமாய் செற்பட்ட பெண். பல கவியரங்குகள் கண்டவள். மட்டக்களப்பு பல்கலைகழகத்தின் பேராசிரியை சித்ரலேகா மௌனகுருவினால் தொகுக்கப்பட்டு “சொல்லப்படாத சேதிகள்” என்ற ஈழத்துப்பெண் கவிஞர்களின் கவிதை நூல் மூலம் எம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சிவரமணியின் கவிதைகள் மிகவும் குறைவான எண்ணிக்கையைக் கொண்டதே. தானே அழித்தவையும், அழிக்கச்சொன்னவையும் போக, சிவரமணி தொகுக்கவும், வாசிக்கவும் கொடுத்துப் போனவைகளில் சில மோசடி செய்யப்பட்டதென சர்ச்சைக்குள்ளானவையும் போக எம் கையில் எஞ்சிக் கிடக்கும் இந்த ஈழத்துக்குயிலின் கவிதைகள் இவை மட்டும்தான்.

அவள் அழிக்கவென்று முனைந்த தன் கவிதைகளில் உயிர்தப்பிய இன்னொரு கவிதையின் சில வரிகள்…

என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக்கொள்ள முடியாது

கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரமாய் நான்.

எனது இருத்தல் உறுதி பெற்றது
நிராகரிக்க முடியாதவள் நான்
இனியும் என்ன?

தூக்கியெறிப்பட முடியாத கேள்வியாய்
நான்.

என்று நிரத்தரமாக தோழர்கள்; மனதில் இடம் பிடித்துக்கொண்ட இவ்விளம் கவிதாயினியின் வரலாறு சங்ககாலமாயிருந்தால் காவியமாகியிருக்கலாம். ஐம்பெரும் காப்பியங்கள் எண்ணிக்கையில் கூடியிருக்கும்.

அவள் தீயிலிட்டு எரித்துவிட்டுப் போன கவிதைகள் கண்முன்னே எழுந்து கதறி அழும் வரலாற்று உண்மைகளை விட்டுச்சென்ற சிறுதுளி கவிதைகளினூடே தரிசிக்க முடிகிறது. எம் சமூகத்தில் பெண்களின் உரிமை, கால அடிப்படையிலும், உள் பிரிவுகள் அடிப்படைகளிலும் பெரிதும் வேறுபடுகிறது. முப்பது வருடங்களாய் போருக்கு முகம் கொடுத்து, முகம் இழந்து போன பெண் குவியல்களுக்குள் தொட்டெடுத்த ஒருத்தியாகத்தான் சிவரமணி இருக்க முடியும். போர்க்களச் சூழலில் தன்னை இணைத்துக்கொண்டு மரணத்தையும் வாழ்வு பற்றிய எதிர்பார்ப்பையும் அருகே வைத்து எழுத்தப்பட்ட கவிதைகளாகவே சிவரமணியி;ன் கவிதை பார்க்;கப்படுகின்றன.

எப்படி முடிந்தது அவளால் தன்னுடன் உடன்கட்டையென உயிர் முளைத்த கவிதைகளையும் தீயில் தள்ள? எம் சமூக அமைப்பின் கோரப்பிடி தவிர்ந்து எவைகளைச் சொல்ல முடியும் இதற்கு பதிலென?

இறுதியாய் சமூதாயச் சிலுவைகளைச் சுமந்து பெண்கள் வாழ்ந்தார்கள், இன்றும் அப்படியே வாழ்கின்றனர் என்று சுட்டும் சிவரமணியின் இன்னுமொரு கவிதையிலிருந்து இந்நொடிக்கு விடைபெறுவோம்…

“….
ஆனால்…
நான் வாழ்ந்தேன்
வாழ் நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்.”

…. தொடரும்…

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

எதேச்சதிகாரத்தைச் சட்டமாக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை கோரும் அரசு

Comments 7

  1. thamilmaran says:
    16 years ago

    கற்பனை அல்ல சிந்தனைதான் சிவ்வரமணீ கவிதை இவரோடு செல்வியின் கவிதைகளூம் ஈழத்துக் கவிதையின் புதிய குரல்கள்.பழைய மரபின் செக்கு மாட்டுத்தனம் இல்லா உயிர்ப்பான கவிதைகள்.காதுக்கும், கண்னுக்குமாக இல்லாது மனதுக்கான கவிதைகள்.இருட்டுத் தன்மையை போக்கும் புதிய போக்கு தொடரட்டும் தங்கள் பணீ.

  2. alex.eravi@gmail.com says:
    16 years ago

    நேற்று ஓர் “சிவரமணி” “செல்வி” தொடக்கம் இன்று முள்ளிவாய்கால் வரை எத்தனை சிவரமணிகள் செல்விகள்…….

    “எம் மண்ணில் விடுதலைக்கனவில் வேர்படர்த்தி விறைத்து நிற்க வேண்டி முளைத்த விழுதுகள் சில மண்ணைத் தொடுமுன்னே பிடுங்கி எறியப்பட்டன. இப்படி தளர்ந்துபோன விழுதொன்றின் கவிதைகளில் சில கண்டு வருவோம்.”……. இந்த மண்ணின் விடுதலை கனவில் பறந்த…… நீந்திய….குயில்கள்….. மீன் குஞ்சுகளின்….. எத்தனை மனதிலெழுந்த… எழுத்திலுருவான….எழுதுருவாகாத… புறநானூறு வரிகள்…எழுச்சிகள்…..இன்று மண்ணோடு மண்ணாக…..சாம்பலுடன் சாம்பலாக….புழுதியுடன் புழுதியாக….காற்றுடன் காற்றாக….நீருடன் நீராக முள்ளிவாய்க்காலினூடாக …. கடலுடன்….நந்திக்கடலுடன் சங்கமம்.

    வாழாமல் வாழும் “சிவரமணி”யுடன் வாழ்ந்தும் வாழாமல் போன அடையாளமற்ற மனிதங்கள் ……..

    அழியாச் சுவடுகளுடன்….. அழிந்த சுவடுகள்…………

    அழியாச்சுவடுகள்!

    “ஆனால்…
    நான் வாழ்ந்தேன்
    வாழ் நாளெல்லாம் நானாக
    இருள் நிறைந்த
    பயங்கரங்களின் ஊடாக
    நான் வாழ்ந்தேன்
    இன்னும் வாழ்கிறேன்.”

    நேற்று ஓர் “சிவரமணி” “செல்வி” தொடக்கம் இன்று முள்ளிவாய்கால் வரை எத்தனை சிவரமணிகள் செல்விகள்…….

    “எம் மண்ணில் விடுதலைக்கனவில் வேர்படர்த்தி விறைத்து நிற்க வேண்டி முளைத்த விழுதுகள் சில மண்ணைத் தொடுமுன்னே பிடுங்கி எறியப்பட்டன. இப்படி தளர்ந்துபோன விழுதொன்றின் கவிதைகளில் சில கண்டு வருவோம்.”……. இந்த மண்ணின் விடுதலை கனவில் பறந்த…… நீந்திய….குயில்கள்….. மீன் குஞ்சுகளின்….. எத்தனை மனதிலெழுந்த… எழுத்திலுருவான….எழுதுருவாகாத… புறநானூறு வரிகள்…எழுச்சிகள்…..இன்று மண்ணோடு மண்ணாக…..சாம்பலுடன் சாம்பலாக….புழுதியுடன் புழுதியாக….காற்றுடன் காற்றாக….நீருடன் நீராக முள்ளிவாய்க்காலினூடாக …. கடலுடன்….நந்திக்கடலுடன் சங்கமம்.

    வாழாமல் வாழும் “சிவரமணி”யுடன் வாழ்ந்தும் வாழாமல் போன அடையாளமற்ற மனிதங்கள் ……..

    “சொல்லப்படாத சேதிகள்” களுடன்…சொல்லவந்த செய்திகள் எத்தனையோ…….

    தொடரும்…. சொல்லவிருக்கும் செய்திகள் இன்னும் எத்தனையோ…

    அழியாச் சுவடுகளுடன்….. அழிந்த சுவடுகள்…………
    மனிதர்களில் மனிதங்கள்!

    தங்களின் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்! தங்கள் பகிர்வு தொடரட்டும்….

  3. alex.eravi@gmail.com says:
    16 years ago

    அழியாச்சுவடுகள்!

    “ஆனால்…
    நான் வாழ்ந்தேன்
    வாழ் நாளெல்லாம் நானாக
    இருள் நிறைந்த
    பயங்கரங்களின் ஊடாக
    நான் வாழ்ந்தேன்
    இன்னும் வாழ்கிறேன்.”

    நேற்று ஓர் “சிவரமணி” “செல்வி” தொடக்கம் இன்று முள்ளிவாய்கால் வரை எத்தனை சிவரமணிகள் செல்விகள்…….

    “எம் மண்ணில் விடுதலைக்கனவில் வேர்படர்த்தி விறைத்து நிற்க வேண்டி முளைத்த விழுதுகள் சில மண்ணைத் தொடுமுன்னே பிடுங்கி எறியப்பட்டன. இப்படி தளர்ந்துபோன விழுதொன்றின் கவிதைகளில் சில கண்டு வருவோம்.”……. இந்த மண்ணின் விடுதலை கனவில் பறந்த…… நீந்திய….குயில்கள்….. மீன் குஞ்சுகளின்….. எத்தனை மனதிலெழுந்த… எழுத்திலுருவான….எழுதுருவாகாத… புறநானூறு வரிகள்…எழுச்சிகள்…..இன்று மண்ணோடு மண்ணாக…..சாம்பலுடன் சாம்பலாக….புழுதியுடன் புழுதியாக….காற்றுடன் காற்றாக….நீருடன் நீராக முள்ளிவாய்க்காலினூடாக …. கடலுடன்….நந்திக்கடலுடன் சங்கமம்.

    வாழாமல் வாழும் “சிவரமணி”யுடன் வாழ்ந்தும் வாழாமல் போன அடையாளமற்ற மனிதங்கள் ……..

    “சொல்லப்படாத சேதிகள்” களுடன்…சொல்லவந்த செய்திகள் எத்தனையோ…….

    தொடரும்…. சொல்லவிருக்கும் செய்திகள் இன்னும் எத்தனையோ…

    அழியாச் சுவடுகளுடன்….. அழிந்த சுவடுகள்…………
    மனிதர்களில் மனிதங்கள்!

    தங்களின் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்! தங்கள் பகிர்வு தொடரட்டும்….

  4. thamilmaran says:
    16 years ago

    கவியரங்குகள் கம்பன் கழ்கத்தால் நடத்தப்பட்ட கால்ங்கள் தமிழுக்குப் பொற்காலங்கள்.இலக்கியம் ஊடாக தமிழர் போராட்டங்கலை பாடினார்கள்.வாழ்க மானுடம் வெல்க பூமி என பாடிய இளங்கம்ப பாரதி என்ற ஜெயசீலன் தமிழ்க்கவிதைக்கு புது மெருகு ஏற்றீயவன் அக் காலங்களீல் வெளீ வந்த புதிய உலகம், மற்றூம் அமிர்தகங்கை கவிதைகலை உள்வாங்கின.சிந்தாமணீ நின்றது இலக்கிய் ரசிகர்களூக்கு பெரிய இழப்பு.சிவனேசச்செல்வன் இருக்கும் வரை வீரகேசரி கவிதைகலை விமர்சித்து வந்தது.ஈழ்நாடு வாரமலர் யாழ்ப்பாணத்தை அழகுபடுத்தியது.இலக்கியத்திற்கு சிறப்புச் செய்த இன்னொரு பத்திரிகை இருக்குமென்றால் அது பொங்கும் தமிழமுது.அழகாக் அச்சிடப்பட்டு அருமையான் கவிதைகலை பிரசுரித்து வந்தது.இப்போதும் பசுமையாய் அதன் அச்சமைப்பும் அழகும் மனதில் அப்படியே இருக்கிரது.புலொட்டின் மாணவர் அமைப்பு என்றூ படித்ததும் என் மனதில் பளீச்சிட்டது பொங்கும் தமிழமுது பத்திரிகையே.

    • alex.eravi@gmail.com says:
      16 years ago

      “தமிழமுது” முற்றுமுழுதாக தமிழீழ மாணவர் பேரவையினால், அவர்களின் கடும் முயற்ச்சியினால் சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது.

      தாங்கள் ஒழுங்காக படிப்பீங்களோ?

  5. thamilmaran says:
    16 years ago

    பொங்கும் தமிழமுது அப்படியே மனதில் பதிந்திருக்கிறது.சிறப்பான அச்சமைப்பும்,சிறந்த படைப்புக்களூமாய் நல்லது செய்தது.எங்காவது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறதோ தெரியவில்லை.நல்ல விசயங்கலை பகிர்ந்து நல்லதொரு கவிஜராகவும் தெரிகிற அலெக்ஸ் அவர்களூக்கு மிகவும் நன்றீ.

  6. alex.eravi@gmail.com says:
    16 years ago

    நான் கவிஜரும் இல்லை, எழுத்தாளனும் இல்லை…. ஓர் மானிடன், மனிதத்தை நேசிக்கும் சாதாரண மானிடன்.

    மேலும் பொங்கும் தமிழமுதில் முக்கிய பங்காற்றியவர் அவரின் மொபெட்டில் ஓடோடி கவிதைகள், ஆக்கங்கள் (முக்கியமாக புலமைப்பித்தன் ஒவ்வை நடராஜன்), சேர்ப்பது, அழகான காலத்திற்கு ஏற்ற அட்டைப்பட ஓவியங்கள் முக்கியமாக ஓவியர் மணியம் செல்வம் கொண்டு வரைந்தமை முதற்கொண்டு காலத்திற்கு பிந்தாமல் ஒவ்வொரு மாதமும் தவறாமல் அச்சகத்திலிருந்து எடுத்து சகல நாடுகளிற்கும் அனுப்பி வைத்த நந்தனம் ஆர்ட்ஸ் இல் படித்த நண்பர் இப்போ எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. (பிற்காலத்தில் இவர் அமரர் “காந்தீயம்” சந்ததியாருடன் நெருங்கிப் பழகிறார், சந்திக்கிறார் என்றும் அச்சுறுத்தப்பட்ட நிலையிலும் இருந்தார், இதற்க்கு காரமான மூட்டிகொடுத்த சக தமிழீழ மாணவர் பேரவையில் இணைந்திருந்த மாணவனும் தற்போது வடஅமெரிக்காவில் அகதியாக வசிக்கிறார், பிற்காலத்தில் தமிழீழ மாணவர் பேரவையில் மாணவர்களுக்கு மத்தியில் இருந்த நற்பெயரையும் அழித்த முக்கிய பங்கு இவருக்கும் இவரை சேர்ந்த சில சுயநல நண்பர்களுக்கும் சேரும்).

    தமிழமுதில் ஆசிரியர் பங்காற்றிய பச்சையப்பாக் கல்லூரியில் கல்வி பயின்ற நண்பர் சிங்கப்பூரில் உள்ளார் என கடைசியில் அவருடன் இருந்த நண்பர் ஒருவர் மூலம் அறிந்தேன். இவருக்கும் கவிஜர் கண்ணதாசனின் மகனிற்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. ஆனால் இவ் ஆசிரியரிடம் ஓர் ஆக்கம் எடுப்பதென்றால் மிகக் கஷ்டம், சிலவேளை இந்தமுறை என்ன ஆசிரியர் தலைப்பு எழுதுவது என்று கலந்தாலோசித்து சூளைமேட்டில் அவர் தங்குமிடத்திலேயே படுத்து காலையில் கல்லூரி சென்ற அனுபவங்கள்.

    தாங்கள் குறிப்பிடும் “சிறப்பான அச்சுவேலைகள்” இற்கு பொறுப்பானவர் கணேஷ் அண்ணையாகும், இவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவராவர், பின் இலங்கை இராணுவத்தினால் தேடப்பட்ட நிலையில் அகதியாக குடும்பத்துடன் இடம் பெயர்ந்து பாவாணர் அச்சகத்தில் தொழில் புரிந்தார், அங்கு தமிழமுதும் அச்சடிக்கப்பட்ட வேளை இவரே அதை தன் புத்தகமாக பொறுப்பெடுத்து அழகாக கோர்த்து அச்சிட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவரும் ஓர் கவிஜராவர். இவரின் தமிழமுதில் வந்த கவிதைகள் பின் “சூரியனைத் தொலைத்தவர்கள்” என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்பட்டது. இத் தலைப்பை வைப்பதற்கு இவரும் இவருடன் இருந்த சக தமிழீழ மாணவர் பேரவையில் நிதிப்பொறுப்பாளராக இருந்த தியாகராஜா கல்லூரியில் கல்வி பயின்ற மாணவனும் என் உற்றநண்பனும் பல மணிநேரம் இரவிரவாக ஆலோசித்தது முடிவெடுத்தது நினவு கூறத்தக்கது. இவ் நிதிப் பொறுப்பாளராகவிருந்த நண்பரும் பிற்காலத்தில் தமிழீழ மாணவர் பேரவை இணைந்து செயற்பட்ட அமைப்பினரால் அச்சுறுத்தப்பட்டார்.

    இன்று கணேஷ் அண்ணை சிறுநீரகக் கோளாறினால் அமரத்துவம் அடைந்துவிட்டார், 80 பதுகளின் ஆரம்பத்திலேயே திருச்சியில் வைத்து தமிழீழ மாணவர் பேரவை (TESO) ஆரம்பிப்பதற்கு பிள்ளையார் சுழி போட்ட இராஜ்மோகன் அண்ணை யாரின் உயிர் காப்பாற்ற உதவி செய்தாரோ, அவர்களினாலேயே கொல்லப்பட்டார், மற்ற நண்பர் மாறன் (தேவதாசன்) தான் இணைத்திருந்த அமைப்பிலிருந்தே அமரத்துவமாகிவிட்டார், மற்றும் அக்காலத்தில் பாண்டி பஜார் வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த காக்கா என்று அழைக்கப்பட்ட சிவனேஸ்வரனும் திருச்சியில் இருக்கும் போது இந்தியாவில் கல்விபயிலும் மாணவர்களிடையே ஓர் மாணவர் அமைப்பின் தேவையை உணர்ந்து கல்லூரி விடுமுறை காலத்தில் தம்மாலான உதவிகளும் செய்வதாக தெரிவித்திருந்தார். இன்று மூவரும் எம்மத்தியில் இல்லை. என்றும் என் நினைவிலிருப்பவர்களை இங்கு எழுத்தில் கொண்டு வந்ததிற்கு திரு. தமிழ்மாறன் அவர்கட்குத்தான் நன்றி சொல்லவேண்டும். மேலும் தமிழமுதின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இராஜ்மோகன் அன்ணரின் பாசம் கொண்ட அன்புத் தம்பியும் எனது ஒன்றாக பாடசாலை சென்று வந்த, பள்ளிப் பருவத்தில் இணைந்து இனவாத அரசுக்கு எதிரான வேலைத்திட்டங்களில் பங்காற்றிய, பின் கடைசி மட்டும் தான் ஏற்ற கொள்கைக்காக மாலைதீவு வரை சென்று அமரத்துவம் அடைந்த என் உற்ற பால்ய நண்பனை நான் என்றும் மறக்கமுடியாது.

    சென்னையில் தமிழீழ மாணவர் பேரவையின் ஆரம்பமாணவர்களானவர்களில் ஒருவர் தமிழீழ மாணவர் பேரவை இணைந்து செயற்பட்ட அமைப்பில் முழுநேர உறுப்பினராக இணைந்திருந்து செயற்ப்பட்ட நிலையில் அவ்அமைப்பினரால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் தீப்பொறி குழுவினராக தனியே ஒதுங்கினார், மற்றைய ஒருவர் என்னுடன் கூட இருந்து கல்லூரிகள் சென்று மாணவர்களிடம் அங்கத்துவ படிவம் கொடுத்து அங்கத்தவராக சேர்ப்பது முதல் சகலவற்றிலும் உதவியாக இருந்தவர், லயோலா கல்லூரியில் கல்வி பயின்றவர், தாயார் ஈழத்தில் ஓர் பெண்கள் கல்லூரியின் உப அதிபராகவிருந்தவர், இப்போ எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.

    தற்போது ஐயர் அவர்கள் பதியும் ” ஈழப் போராட்டத்தின் பதிவுகளில்” எது மட்டும் பதியப்போகின்றார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...