இலங்கை அரசாங்கத்தினால் சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறைமைக்கு எதிராக செயற்பட்டமைக்காக இந்த நிறுவனங்களின் செயற்பாடுகள் ரத்து செய்யப்பட்டு அவற்றின் பிரதிநிதிகள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு விசாரணைகளின் போது, அந்த நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கொள்கைகள் பரப்பியுள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுகின்றவர்கள் விசாரணைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு ஒருவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.







