Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்க வேண்டும் : Dr.எம்.கே.முருகானந்தன்

இனியொரு... by இனியொரு...
09/21/2009
in அரசியல்
0 0
8
Home அரசியல்

abarநான் இவ்வாறு எழுதுவது பலருக்கு கோபத்தை விளைவிக்கலாம். சமூக கலாசாரத்தை கேவலப் படுத்துவதாகப் படலாம். ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒருவன் என்ற முறையில் இதைச் சொல்லியே ஆக வேண்டும்.

சென்ற சிலகாலங்களில் மூன்று பெண்கள் வேண்டாத கர்ப்பத்தை சுமந்து கொண்டு வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை என்பது உண்மைதான்.

ஆயினும் நபரைக் குறிப்பிடாது விடயத்தை பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது.

கணவன் நீண்டகாலம் வெளிநாட்டில் இருக்க இங்கு கர்ப்பமானாள் ஒருத்தி.

சென்ற ஆண்டு வன்செயலில் கணவனை இழந்தவள் வயிற்றில் மூன்று மாதக் கர்ப்பத்துடன் செய்வதறியாது திகைத்து நின்றாள்.

சிறு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கன்னிப் பெண்ணின் சிறுநீர்ப்பரிசோதனையில் அவளுக்கு கர்ப்பம் தங்கியிருப்பது நிச்சமாயிற்று.

கேட்கவே கோபம் வருகிறதா?

கேவலம்! ஆடாத ஆட்டம் போடும் சிறுக்கிகள் என்று ஏசத் தோன்றுகிறதா?

இவை அவர்கள் தாமாக விரும்பிக் கொண்ட பாலுறுவின் விளைவா?

அல்லது வன்புணர்வின் பலனாக ஏற்பட்டதா என்பதைக் கூட கேட்கவில்லையே நீங்கள்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் பாலுணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது. அது நிறைவு செய்யப்பட வேண்டியது என்பதில் மறு கருத்து இருக்க முடியாது.

ஆனால் இவர்களது பாலுறவுச் செயற்பாடானது சற்று மாறானது என்பது உண்மையே. அதாவது எமது சமூகத்தின் ஒழுக்க வரன்முறைகளை மீறியதாக இருக்கிறது.

சமூக, சட்ட ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்ற போதும் அதனை மீறி ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது?

அதனைத் தீர்ப்பதற்கான மாற்று வழி என்ன?

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே எமது பண்பியல் தடத்தின் மிகக் கௌரவமான அம்சமாகக் கொள்ளப்படுகிறது.

ஆனால் அதே தமிழினத்தின் இலக்கியங்கள்தாம் பரத்தைகள், விலைமாதர்கள் ஆகியோருடன் ஆடவர்கள் கொண்ட உறவு பற்றியும் சொல்லுகிறது.

குலமாதர்களை விலைமாதர்களிடமிருந்து வேறுபடுத்தி ஒழுக்கக் கோவைகளை முன்னோடியாக இயற்றியதும் எமது பண்டைய இலக்கியங்களே.

எனவே அத்தகைய வரன் மீறிய உறவுகள் பண்டைக் காலம் முதல் இருந்து வருவது உண்மையே.

சரியோ பிழையோ அவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரதும் கடமையாகும்.

இதனை வேறு யாரோ ஒருவரது பிரச்சனையாக அன்றி, உங்களோடு சம்பந்தப்பட்ட ஒருவரது பிரச்சனையாக எண்ணிப் பாருங்கள். உங்கள் சினேகிதி, சகோதரி, அல்லது மனைவி அல்லது அம்மா என்று எண்ணிப் பாருங்கள்.

கேட்கவே மனசு கூசுகிறது, திகில் அடைகிறது அல்லவா?

யாருக்கும் எதுவும் நடக்கக் கூடிய காலம் அல்லவா இது?

எனவே இப்பிரச்சனையை திறந்த மனத்துடன் அணுகுவது அவசியம்.

வேண்டப்படாத கர்ப்பம் தங்கிவிட்டால் என்ன நடக்கிறது?

கருக்கலைப்புச் செய்கிறார்கள். கருக்கலைப்பு இங்கு சட்டபூர்வமானது அல்ல என்பதால் ஒளித்து மறைத்து செய்கிறார்கள். எந்தவிலை கொடுத்தேனும் செய்கிறார்கள்.

ஒளிவு மறைவாகச் செய்யப்படுவதால் மருத்துவர் அல்லாதவர்களால்தான் பெரும்பாலும் செய்யப்படுகிறது.

பயிற்சி அற்றவர்கள் செய்வதால் இசகுபிசகாகச் செய்யப்பட்டு பல உயிரிழப்புகள் நடக்கின்றன.

அத்தோடு இவற்றில் பல, சுகாதார முறைப்படி செய்யப்படாததால் கிருமித் தொற்றுகள் ஏற்பட்டு மேலும் இழப்புகள் தொடர்கின்றன.

தனது பிரசைகளின் நல்வாழ்க்கை, ஆரோக்கியம், உயிர் உத்திரவாதம் ஆகியவற்றை காக்கும் கடமை அரசுக்கு உண்டு.

சட்ட உருவாக்கத்தில் உள்ளவர்கள் பண்டைய வாழ்வின் பெருமைகளை மட்டும் எண்ணிக் கொண்டிருக்காது கண்ணைத் திறந்து இன்றைய நடப்பைக் கவனிக்க வேண்டும். அவர்கள் பிரச்சனையை மனிதாபிமான உணர்வுடன் அணுக வேண்டும்.

கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்க வேண்டும்.ஆயினும் கருக்கலைப்பு என்பது கருத்தடை முறைகளுக்கான மாற்று முறை அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.

 

எமது நாட்டைவிட நீண்ட காலாசார வரலாற்றைக் கொண்ட இந்திய அரசு கருக்கலைப்பை பல வருடங்களுக்கு முன்பே சட்ட பூர்வமாக்கிவிட்டது.

எனவே சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இப் பிரச்சனை பற்றி வெளிப்படையாகப் பேசுவது அவசியம்.

THANKS:http://hainallama.blogspot.com/2009/09/blog-post.html

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

புலம்பெயர் புலிசார் வர்த்தகர்களிடம் கப்பம் கோரும் இலங்கை அரசு!

Comments 8

  1. மயூரேசன் says:
    17 years ago

    வைத்தியர் ஐயா அவர்களே நானும் உங்கள் கருத்துடனே ஒத்துப் போகின்றேன். பல பழைமை வாதிகள் இன்னமும் இது சமூகத்திற்கு எதிரானது என்று கூச்சலிடுகின்றார்கள். உங்கள் பதிவு தொடக்கதில் அமைந்துதள்ள படிமத்தில் கூறவதே என் வாதமும்.

    “கருக்கலைப்பு என்பது ஒரு தனி மனித விருப்பம். அதில் சட்டம் தலையிட சட்டத்திற்கு எந்த உரிமையும் இல்லை”

  2. எம்.கே.முருகானந்தன் says:
    17 years ago

    ‘இனியொரு.. ‘ இணைய தளத்தில் எனது ‘கருக்கலைப்பை சட்ட பூர்வமானதாக்க வேண்டும்’ என்ற கட்டுரையை மறுபிரசுரம் செய்ததற்கு மிக்க நன்றி

  3. பத்மா says:
    17 years ago

    நான் முழுமையாக இதை ஆதரிக்கிறேன். கருவை சுமக்கும் பெண்ணுக்கு அதை முடிவு செய்ய உரிமை வேண்டும். போர்க்காலங்களில் நடக்கும் வன்புணர்வுகளில் கரு உருவாவதை தடுக்க மருந்துகள் கொடுப்பதை கூட சில நாடுகள் தடை செய்தன. கருக்கலப்ப்பு முன்னால் கரு உர்வாவதிலேயே பெண்கள் முடிவெடுக்க முடிவதில்லை. இது குறித்த என் பார்வை http://reallogic.org/thenthuli/?p=157

  4. பத்மா says:
    17 years ago

    இந்தியாவில் சட்ட பூர்வமாகப்பட்டாலும் முடிவெடுப்பது அந்த பெண் இல்லை. சட்ட பூர்வமாக இருப்பதாலேயே சரியான முறையில் செயல்படும் என்றும் பொருள் கொள்ளத் தேவையில்லை. வேண்டாத பெண் குழந்தைகளை கருவில் கொல்ல கருக்கலைப்பை கட்டாயமாக கூட செய்கிறார்கள். இது பல தளங்களில் பேசப்படவேண்டிய கருத்து. இப்பதிவிற்காக என் நன்றி

  5. துடைப்பான் says:
    17 years ago

    இலங்கையில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க அனைத்து அழுத்தங்களையும் பெண்ணியளார்களும், சமூக அக்கறை கொண்டோரும் முயலவேண்டும். டாக்ரர் எம்.கே முருகானந்தம் அவர்களின் கட்டுரையை படிக்க நேர்ந்தபோது நான் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.நான் இலங்கையில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவே நினைத்திருந்தேன். என் தேடலில் உள்ள குறைபாட்டை எண்ணி வெட்கமடைந்தேன்.

    1983களில் பாலியல் பலாத்காரத்தினால்- வன்புணர்ச்சினால் கர்ப்பம் அடைந்த பெண் ஒருவர் வேண்டாத கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்வதற்கு அவர் எதிர்கொண்ட துன்பங்களையும், போராட்டங்களையும் உடல் -உள பாதிப்புக்களையும் கண்டு அதிர்ந்துள்ளேன். அக் காலத்தில் சில பெண்ணியளார்களோடும், சமூக அக்கறையாளர்களோடும், பல வைத்திய நண்பர்களோடும் கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்படவேண்டியதன் அவசியம் பற்றி உரையாடியுள்ளோம்.

    இப்போது 2009 . இருபத்தைந்து வருடங்கள் கடந்துவிட்டன. இக் காலங்களில் போர்களும், அது தந்த வன்முறைகளும், அதனோடு சேர்ந்த பாலியல் பலாத்காரங்களும், வன்புணர்ச்சிகளும் ஏராளம் நடந்துள்ளன. இக் கொடுமைகளை துயரங்களை சுமந்த பெண்ணின் வாழ்வு எத்தகைய போராட்டத்தை, சமூக எதிர்கொள்ளலை, அனுபவித்திருக்க முடியுமென்பதை உணரும்போது மிக கடுமையான வேதனை கொள்கின்றேன்.

    ஆண்மனப்பட்ட எங்களால் இத் துயருக்கு உள்ளாக்கப்ட்ட பெண்ணின் வாழ்வு நிலையை எண்ணி பார்ப்பது கடினமே. இதுவே இலங்கையில் இப் பிரச்சனை பாரிய தாக்கத்தை உருவாக்க முடியாமல் போய்விட்டதோ தெரியவில்லை. இனியாவது பெண்களின் வாழ்வு உரிமை சுதந்திரம் பற்றி வாய்கிழிய கதைக்கும் நாம் இதுபற்றி உரையாடல்களை உளப்பூர்வமாக, போராட்ட முனைப்போடு தொடரவேண்டும். இக் கட்டுரையைத் தந்து என் அறிதலின் அறியாமையை,என் சமூக அக்கறையை “என்னுள்ளே கேள்விக்குட்படுத்த தூண்டிய” டாக்ரர் எம்.கே.முருகானந்தம் அவர்களுக்கு நன்றிகள்.

    –
    துடைப்பான்-

  6. Saraladevi.M says:
    17 years ago

    பெண்மையை காக்க பெண்ணால் மட்டுமே முடியும் பெண்ணின் சதையிலிருந்து உருவான ஒரு ஆணை கண்டு பயப்படும் நம் மடமையை கொழுத்துங்கள் ஒவ்வொரு பெண்ணும் தன் பெண்ணை கண்ணகியாய் வாழவேண்டும் என்று வலியுத்தவதில் காட்டும் அக்கறையை ஆண் குழந்தையிடம் கோவலனாக வாழாதே என்று சொல்லி வளர்த்தால்; ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் உணர்வுபூர்வமான உறவுகளை உருவாக்க முடியும் இதை ஒவ்வொரு பெற்றொரும் வேதமாக நினைத்து கடைபிடியுங்கள் தீவிரவாதமில்லாத தீயவைகள் இல்லாத உலகை உருவாக்கலாம்

  7. இவன் says:
    17 years ago

    Dr.எம்.கே.முருகானந்தன் அவர்களுக்கு வணக்கம்,

    கரு களைப்பு பற்றிய உங்கள் கருத்து மருத்துவர் போல் அல்லாமல் ஒரு வியாபாரியை போன்று இருக்கிறது,

  8. fathima says:
    15 years ago

    டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களேஇ உங்களை தொடர்பு கொள்வது எப்படி?
    usfathima@yahoo.com please reply this ID . thanks

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...