இந்திய பொருளாதார அரசியல் ஆக்கிரமிப்பும், பொருளாதார நெருக்கடியும் இலங்கை மக்களின் நாளாந்த வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தணிந்து வரும் தேசிய முரண்பாடு சிங்கள மக்கள் மத்தியில் அரசிற்கு எதிரான தீவிர போராட்டங்களாக உருவெடுக்கின்றன. இந்த நிலையில் தேசிய இன முரண்பாட்டை கூர்மைபடுத்தும் மக்கள் விரோத செயற்பாடுகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், உரிமைப்பறிப்பின் சட்டவாக்கங்கள், பண்பாட்டு அடையாளங்களை அழித்தல், இனச் சுத்திகரிப்பு போன்ற பேரினவாதச் செயற்பாடுகளை இலங்கை அரசு அதன் தமிழ்த் துணைக் குழுக்களோடு இணைந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளின் இன்னொரு பகுதியாக திருகோணமலையில் வரலாற்று அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.
கன்னியா வெந்நீர் ஊற்றில் இராவனணுடைய வரலாற்றுக் குறிப்புகளும், கன்னியா வரலாற்று அம்சங்களும் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை அங்கு விஜயம் செய்த திருகோணமலை அரச அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வாவின் உத்தரவிற்கமைய நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெந்நீர் கிணறுகளிற்கு அண்மையில் அமைந்திருந்த இந்துக் கோயில் தொடர்பான பிரச்சினைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிகழ்வுகள் திருகோணமலையில் தமிழர்களின் வரலாற்றுப் பாராம்பரியங்கள் திட்டமிட்டு அழிக்க முனையும் செயலாக அமைகின்றன.
தொடர்புடைய பதிவுகள்:
வியப்புக் கோடுகள் விழுந்து மறகின்றன்…..கரைகள உடைக்கும் மழைக்காலத் தண்ணீரைப் போல நாளாந்தம் அத்துமீறல்கள்.ஊருக்குப் போய் வருவோர் கனவு தேசத்திற்கு சென்றூ வந்ததாய்க் கதைக்கிறார்கள், ஆனால் அப்படி ஒன்றூம் அமைதியில்லை ஆனால் ஊரைப் போல் அழகில்லை.
இவ்வாறான நிகழ்வுகள் திருகோணமலையில் தமிழர்களின் வரலாற்றுப் பாராம்பரியங்கள் திட்டமிட்டு அழிக்க முனையும் செயலாக அமைகின்றன என்பதில் ஐயமில்லை. ஆனால் “இராவனணுடைய வரலாற்றுக் குறிப்பு” என்று கூறுவது… சொறி கொஞ்சம் ஓவர்.
மாவிலாறு யுத்தம் ஆரம்பமானவுடன் ரஞ்சித் சில்வா திருமலைக்கான அரச அதிபராக பதவியேற்றார். அவர் ஆரம்பம் தொட்டே இனத்துவேசம் பிடித்த ஒரு இராணுவ அதிகாரி.
மாவிலாறு யுத்தத்தின் ஒரு கட்டத்தில் மூதூர் முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த கட்டத்தில் ஜனாதிபதியின் விசேட இணைப்பதிகாரியாக செயற்பட்ட நான் பல தடவைகள் ரஞ்சித் சில்வாவுடனும் அன்றைய கந்தளாய் பிரதேச செயலாளர் சிரிமேவன் என்பவருடனும் தகராறில் ஈடுபட்டிருந்தேன். ஒரு தடவை தாங்க முடியாத கோபத்தில் பிரதேச செயலாளரைத் தாக்கவும் முயன்றுள்ளேன். அதன் பின் எனது தனிப்பட்ட வற்புறுத்தல் காரணமாக பிரதேச செயலாளர் இடமாற்றப்பட்டார். அவரின் குரு ரஞ்சித் சில்வாவை மட்டும் அசைக்க முடியவில்லை. அவர் இன்றைய நிலையில் பிரதியமைச்சர் சுசந்தவின் செல்லப்பிள்ளை.
ரஞ்சித் சில்வா வெளிப்படையாக இனவாதம் பேசுகின்றவர்.பிரதியமைச்சர் மறைமுகமான நிகழ்ச்சி நிரல் கொண்டவர்.
திருமலையின் பெறுமதியான காணிகள் அனைத்தும் தனக்கே உரித்தானதாக வேண்டும் என்ற நோக்கில் பேராசை பிடித்து அலைகின்றவர் தான் பிரதியமைச்சர்.
பிரதியமைச்சரும் ரஞ்சித் சில்வாவுமாகச் சேர்ந்து மிக விரைவில் கோணேஸ்வரம் ஆலயம் அருகில் உல்லாச விடுதி கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்ன செய்வது..? நம்மில் சிலரும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் போது யாரை நோவது?