Tuesday, April 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கனடா – ரோரன்ரோவில் இடம்பெற்ற உலகத் தமிழ் பேரவையின் பொதுக்கூட்​டம்.

இனியொரு... by இனியொரு...
09/01/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
2
Home பிரதான பதிவுகள் | Principle posts

ஈழத்தமிழர்களின் அவலத்திற்கான தீர்வினையும் அதற்கான இறுதி வழிமுறையையும் புலம் பெயர் நாடுகளிலிருந்து இயக்க முற்படும் அமைப்புக்களில் உலகத் தமிழர் பேரவை முதன்மையானது.

தமிழ்ப் பேசும் மக்கள் மகிந்த பாசிசத்தின் ஒடுக்கு முறைக்கு மத்தியில் வாழ்கிறார்கள். நாளாந்த அவலம் ஈனக் குரலில் எமது காதுகளில் ஒலிக்கின்றது. அவர்கள் தமது வாழ்விற்காகத் தெருக்களில் இறங்கியும் போராடத் தயார் என பல தடவைகள் அறிவித்திருக்கிறார்கள். தேர்தல்கள் வரும் வேளைகளில் கூட தமது தன்னாட்சிக்கான கோரிக்கைகளை முன்வைக்கிறர்கள். மலையக மக்களும், முஸ்லீம் மக்களும் சிங்கள மக்களும் கூட மகிந்த பாசிச அரசிற்கு எதிராகப் போரடுகிறார்கள்.

இவையெல்லாம் உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகார அரசுகளில் ஒன்றான ராஜபக்ச அரசைப் பலவீனப்படுத்தி குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளைப் நிலை நாட்டுவதற்கும் உரிமைக்கான போராட்டத்தை முன் நகர்த்துவதற்குமான ஆரம்ப நிலைகளாகும்.

ஆக, இன்று இலங்கையின் நடைபெறுகின்ற ஒவ்வொரு போராட்டங்களுக்கும் புலம்பெயர் நாடுகளில் போராடும் அமைப்புக்களோடு இணைத்து அவற்றை சர்வதேச மயப்படுத்தல் மிகப் பிரதானமான கடமையாகும். இந்தியாவிலும் ஐரோப்பவிலும் ஏனைய நாடுகளிலும் இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு எதிரான பிரச்சாரங்களும், போராட்டங்களும் இலங்கை நிகழ்வுகளோடு இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.

இது ஒன்று தான் மக்களின் கோரிக்கைகளுக்காக புலம் பெயர் நாடுகளிலிருந்து தமிழ்ப் பேசும் மக்கள் உடனடியாகச் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாக அமைய முடியும்.

இதுவே தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலும் ஏன் ஏனைய ஒடுக்கப்படும் மக்கள் மத்தியிலும் உறுதியான அரசியல் தலைமை உருவாக வழிகோலும்.

போர்க்குற்ற விசாரணையும், மனிதாபிமான உதவிகளும் அவசியமானவையே. ஆனால் அவைமட்டும் மக்களின் உணர்வுகளின் குறைந்தபட்ச நிலையையேனும் பிரதிபலிப்பவையல்ல. இன்று ராஜபக்ச அரசும் பேரினவாதமும் எதிர்கொள்ளப்படுதும் குறைந்த பட்ச வாழ்வுரிமைக்காகப் போராடும் மக்களுக்கு ஆதரவளிப்பதும் பிரதானமானது.

இவை எதையும் பிரதிபலிக்காத் உலகத் தமிழர் பேரவையின் மாநாடு குறித்த ஊடகங்களுக்கான அறிக்கை::

தாயகத்தில் தமிழரின் உரிமைகளைமீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்குஎதிராகப் பக்கசார்பற்றஅனைத்துலக விசாரணைகளின்அவசியத்தை அனைத்துலகமட்டத்தில் வலியுறுத்தவும் முனைப்பாகச்செயற்பட்டு வருகின்ற, உலகெங்கும் பரந்து வாழும்தமிழரின் அமைப்பானஉலகத் தமிழர்பேரவையின் பொதுக்கூட்டம்ஞாயிற்றுக்கிழமை, கனடா ஐயப்பன் ஆலய மண்டபத்தில்ஆவணி 28ஆம்நாள் மாலைஏழு மணியளவில் ஆரம்பமானது. உலகத் தமிழர் பேரவையின்தலைவர் அருட்கலாநிதிஎஸ். ஜே.இம்மானுவேல் அடிகளாரும், உலகத் தமிழர் பேரவையின்ஊடகப் பேச்சாளர்சுரேன் சுரேந்திரன்அவர்களும் சிறப்பு பேச்சாளர்களாககலந்து கொண்டனர்.

ஆகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பொதுக்சுட்டத்தில்முதலில் உரைநிகழ்த்திய அருட்கலாநிதி இம்மானுவேல் அடிகள், உலகெங்கிலும் வாழும் தமிழர்களைபிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களை ஒன்றிணைப்பதன்மூலம் இப்பேரவையானது2009 ஆம் ஆண்டுஆவணி (ஆகஸ்ட்)மாதம் பிரான்ஸ்நாட்டின் தலைநகரானபாரிசில் 14 நாடுகளிலுள்ள அமைப்புகளுடன்பிரதிநிதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு, உலகத்தழிழ்பேரவைக்கான அரசியல் யாப்பும் உருவாக்கப்பட்டது. உலகத் தமிழ் பேரவையை சம்பிரதாயபூர்வதாக2010ஆம் ஆண்டுபெப்ரவரி மாதம்பிரித்தானிய நாடாள மன்றத்தில் பிரித்தானிய வெளிநாட்டுஅமைச்சர், மற்றும்பிரித்தானிய எதிர்க்கட்சிகளின் வெளிநாட்டுக்கொள்கைக்குபொறுப்பான நாடாளமன்ற உறுப்பினர்கள்முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் சர்வதேசமயமானசுயாதீனமான, ஜனநாயகப்பண்புகளோடு அகிம்சாவழியில்இப்பேரவையின் கருத்துருவாக்கம் அமைந்துள்ளதுஎனவும் குறிப்பிட்டார்.பிரித்தானிய நாடாள மன்றத்தில் உலகத் தமிழர்பேரவை ஆரம்பிக்கப்பட்டதின்முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
உலகத் தமிழர் பேரவையின்உடனடியான இலக்குகளாகஅன்று வதைமுகாம்களில்வாடும் எமதுஉறவுகள் தாயகபூமியில் இயல்புநிலை வாழ்க்கைக்குதிருப்புவதற்கு பாடுபடுவதும், தொடர்ந்து இனப்படுகொலையின் குற்றவாளிகளைநீதியின் முன்நிறுத்துவதற்கு உழைப்பதுவுமாகவும், மேலும் ஐந்து கண்டத்திலும்வாழும் தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்பேரவையின் முதன்மைஇலக்குகளாக வரையறுக்கப்பட்டன என தனது உரையில்தெரிவித்தார். அத்துடன் அறுபத்தைந்து நாடுகளில் தனதுதூதுவர்கள் ஊடாக தனது இராஜதந்திர நடவடிக்கைகளைமுன்னெடுக்கும் சிறிலங்கா அரசை புலம்பெயர்ந்த உலகத்தமிழர்கள்ஒவ்வொருவரும் தமிழ் மக்களின் தூதுவார்களாக அர்ப்பணிப்புடன்,இதய சுத்தியுடன் இலட்சியத்தில்அசையாத பற்றுடையவர்களாகசெயல்பட்டு தம்மாலான வழிகளில் சிங்கள் அரசின்சதிகளை முறியடிக்கவேண்டும் எனவேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து உரையாற்றிய உலகத்தமிழர் பேரவையின்ஊடகப் பேச்சாளர்சுரேன் சுரேந்திரன்அவர்கள் இதுவரைகாலமும் உலகத்தமிழர்பேரவை எமதுதாயக மக்களுக்குநீதி கிடைக்க,ஒடுக்கு முறைகளைநீக்க குறிப்பாகமுள்ளிவாய்க்கால் அவலத்திற்க்கு பின்னர் ஆற்றிய செயற்திட்டங்களை விளக்கினார்.பிரித்தானிய சனல் நாலு ஊடக தொலைக்காட்சிபோர்குற்ற ஆதாரங்களைஎமக்காக பெற்றுசர்வதேச ரீதியில்காண்பிக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்வதேசதாக்கங்கள் பற்றிக் கூறினார். அதேவேளை இந்தவிதமானஆதாரங்களை, இன்றைய தாயக நிலைமைகளை மனதில்கொண்டு சாதாரணமக்கள்கூட தம்மால்முடிந்தளவுக்கு தமது நாடுகளில் தமிழரல்லாதவர்கள் மத்தியில் எடுத்துச்செல்லவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
உலகத் தமிழர் பேரவையின்அழைப்பையேற்று ஆர்வத்துடன்வந்த பொதுமக்கள்மண்டபத்தை நிறைந்திருந்தனர். மக்களின்பலவேறு கேள்விகளுக்குபேரவை பேச்சாளர்கள்விபரமாகவும் திருப்தியாகவும் பதில்களை வழங்கினர்.
இறுதியாக பல்வேறு திட்டங்களையும்முன்னெடுக்க நிதி உதவியையும் நேரத்தையும் கோரினர்.மக்களின் வசதியைகருத்தில்கொண்டு கனேடிய வங்கி ஒன்றில் கணக்குஒன்று ஆரம்பிக்கப்படுள்ளதாகவும்கனேடிய மக்கள்இதில் தாமாகவேஇணைந்து, மாதாந்தகொடுப்பனவுகளை மேற்கொண்டு, தாயக உறவுகளின் அரசியல்சமூக விடுதலைக்குஉதவவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள்;. மக்கள்மத்தியில் இந்தகோரிக்கைக்கு பலத்த ஆதரவு கிடைத்தது. மேலும்இப்பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துஉழைத்த தன்னார்வத்தொண்டர்களும், பொதுமக்களுக்கு இச் செய்திகளையும் தகவல்களையும்வழங்கிய வானொலி,தொலைக்காட்சி பத்திரிகை போன்ற ஊடகங்கள் அனைத்துக்கும்உலகத் தமிழ்பேரவை பேச்சாளர்கள்தமது மனமார்ந்தநன்றியை தெரிவித்தனர்.
இந்த கணக்கிலக்கம் பற்றியமேலதிக தகவல்களைஉலகத்தமிழர் பேரவையின் இணையத்தளத்திலும்பெறலாம் எனகூறப்பட்டது.(http://globaltamilforum.org/gtf/content/donate).
அத்துடன் ஒருவருடம் கழித்துஒரு கணக்காளர்நிறுவனத்தால் கணக்கு விபரங்கள் சரிபார்க்கப்பட்டு (யரனவை) அறிக்கை வெளியிடப்படும் எனவும்கூறப்பட்டது. சந்திப்பின் இறுதியில் மக்கள் பலரும்உலகத்தமிழர் பேரவையின் உறுப்பினர்களை தனிப்பட்ட முறையில்சந்தித்து பேரவையின்செயற்பாடுகள் குறித்து நன்றி தெரிவித்ததை காணக்கூடியதாகஇருந்தது.

Canadian Bank Account Details:

Organization: GLOBAL TAMIL FORUM

Bank: Royal Bank of Canada

Suite 200-1610 Kenaston Blvd

Winnipeg MB R3P 0Y4

Canada

Account no: 1002856

Transit/branch no: 00543

Bank no: 003

Quoting reference: GTF Donation

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

முன்னை நாள் புலி ஆதரவு அமைப்புக்களிடையே மோதல்கள் ஆரம்பம்?

Comments 2

  1. நெருஞ்சி says:
    15 years ago

    அய்யப்பன் கோவில் அருட்கலாநிதி,”ஸ்கைப்பில் வந்த பெண்”ணாகி நிற்கிறார்;காசு கறப்பதில்.

  2. மறவன் says:
    15 years ago

    இன்னும் ஒரு முப்பது வருட கறவைக்கு ரெடியாகி விட்டார்கள்.ஏற்க்கனவே கறந்த கறவை எல்லாம் முள்ளிவைக்காலில்
    கொத்தபாயாயுக்கு தங்கமாகவும் ,புலத்தில் புலி பொறுப்பாளர்களுக்கு வீடுகளாகவும் ,கடைகளாகவும் தேறிவிட்டன.
    இனி அடுத்த ரௌண்டு ஆரம்பமாகி விட்டது.அப்பா அடுத்த தைக்கு தமிழ் ஈழம் தான்.
    ஐயகோ.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...