லைக்கா நிறுவனத்தின் பிரபல நடிகர் நடித்த கத்தி திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. கத்தி திரைப்படம் வெளியாகும் திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி நாளை நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் கத்தி படத்திற்கான முன்பதிவு நேற்று இரவு தொடங்கியது. தியேட்டருக்கு நேற்றிரவு வாகனங்களில் வந்த 40-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் கண்ணாடி கதவுகளை சரமாரியாக அடித்து நொறுக்கினர். மேலும் பெட்ரோல் குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். தடுக்க வந்த திரையரங்கு காவலாளியும் அவர்கள் தாக்கினர். ராயப்பேட்டையில் மற்றொரு திரையரங்கிளும் மர்மகும்பல் தாக்குதல் நடத்தியது.
தனிநபர்களாகவும் குழுக்களாகவும் மர்ம மனிதர்கள் போன்று தாக்குதல் நடத்துவது லைக்கா போன்ற பல்தேசிய வர்த்தக நிறுவனங்களுக்கு எதிரான மக்களின் விழிப்புணர்வையும் எழுச்சியையும் தடுப்பதற்கே வழிசெய்யும். லைக்காவின் வியாபாரப் போடியாளர்கள் கூட இதனைப் பயன்படுத்திக்கொள்ள முயல்வார்கள்.
பேனர்களையும் அவர்கள் கிழித்து எரிந்தனர். கண்ணாடி கதவுகள் மீதும் கற்களை வீசி கண்மூடித்தனமாக தாக்கினர். தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இரண்டு திரையரங்குக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திரையரங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவான கட்சிகள் அடிப்படையில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீங்களே தூண்டிவிட்டுட்டு இப்ப நழுவப்பாக்கிறீங்களா ?
This is called “Media politics”
இனியொருவில் ஆயுதப்போராட்டம் என்பது சுலபமாகப் பேசப் படுவதை கண்டிக்கும் அதே குரலால் இனியொரு இங்கே குறிப்பிட்டிருக்கும் தீர்க்கதரிசனத்தை ஆமோதிக்கிறேன்.
திருப்பித் திருப்பி மூன்று தடவை எழுத்துக் கூட்டி வாசியும்… உமக்கு விளங்கத் தொடங்கலாம்.
இத்தகைய வன்முறைத் தாக்குதல்கள் மக்களின் விழிபுணர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாகும்.