Thursday, March 12, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஐ.நாவில் ‘இலங்கை அரசு தண்டிக்கப்படும்’ நாடகக் காட்சி : கோசலன்

இனியொரு... by இனியொரு...
02/09/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
16
Home பிரதான பதிவுகள் | Principle posts

இலங்கையின் இனப்படுகொலை மிகக் குறுகிய கால எல்லைக்குள் வன்னி நிலப்பரப்பில் நிகழ்ந்த மிகப்பெரும் படுகொலை. உலகின் அத்தனை அதிகார மையங்களும் அண்ணார்ந்து பார்த்து மனிதப் பிணங்களை எண்ணிக்கொண்டிருக்க சாரி சாரியாக நடத்தப்பட்ட படுகொலை. ஒரு தேசத்தின் எல்லைக்கு உட்பட்ட சிறுபான்மைத் தேசிய இனம் என்பதால், ஒடுக்கப்படும் தேசிய இனம் என்பதால் கொலையுண்டுபோனவர்கள் அப்பாவித் தமிழ்மக்கள். உலகம் முழுவதும் எதிர்ப்பியக்கங்கள் அதிகார வர்க்கத்தை அசைத்துப் பார்க்கின்றன. மில்லினியத்தின் முதலாவது பத்தாண்டின் இறுதியில், சரி தவறு என்ற விவாதங்களுக்கு அப்பால், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத பலம் மிக்க இயக்கமாக வளர்ச்சி பெற்றிருந்தனர் என்பது மட்டுமன்றி உலகின் விரல்விட்டெண்ணக்கூடிய இராணுவ இயக்கங்களில் ஒன்றாகக் காணப்பட்டது.

ஏகாதிபத்திய நாடுகள் ஒவ்வொன்றாக சரிந்து விழ ஆரம்பித்த வேளையில், தெற்காசிய நாடுகள் மீதான சுரண்டல் தீவிரமடைந்தது. இந்த நிலையில் உலக மக்களின் விரோதிகளான வல்லாதிக்க சக்திகளுக்கு இரண்டு பிரதான எதிர்ர்பு வடிவங்களைக் கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது.

1. எதிர்ப்பு இயக்கங்களின் இராணு பலம்

2. மக்கள் எழுச்சிகள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் எந்த அளவிற்கு அரசியல் எதிர்ப்பியக்கமாக வளர்ச்சியடைந்திருந்தனர் என்ற விவாதங்களுக்கு அப்பால் இந்த இரண்டையும் அழிப்பதற்கான வழிமுறைகளின் பரிசோதனைக் களமாகவே இலங்கை பயன்பட்டது எனலாம்.

இந்த அடிப்படையில் இந்திய அரசின் நேரடியான பங்களிப்பில் இலங்கையில் இன அழிப்புப் பரிசோதனை நடந்தேறியது.

இதற்கு ஐரோப்பிய நாடுகள், அமரிக்கா போன்ற அத்தனை ஏகபோகங்களும் அவற்றின் துணை நிறுவனங்களான ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் அமைப்புப் போன்ற அனைத்தும் பக்கபலமாக அமைந்தன. இனப்படுகொலையை எதிர்ப்பின்றி நிறைவேற்ற அவர்கள் தம்மாலான எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

இந்த ஒருங்கிணைந்த உலக அரசியல் நாடகத்தின் ஒவ்வொரு முனையிலும் ஒரு பகுதித் தமிழர்களாவது பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டனர்.
படுகொலையின் போது மிக அவசியமானதாகக் கருதப்பட்டது உலகின் எந்தப்பகுதியிலும் பொதுவான மக்கள் எழுச்சி இனப்படுகொலையை நிறைவேற்றிக்கொண்டிருந்த இலங்கை அரசிற்கு எதிராகவும் அதன் பங்காளர்களுக்கு எதிராகவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே.
அதற்கான பொறிமுறையை அவர்கள் கச்சிதமாக வகுத்துக்கொண்டனர்.

1. இனப்படுகொலையை அதிகாரமட்டத்தில் எதிர்ப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குதல்.

2. மக்கள் எழுச்சி ஏற்படும் வாய்ப்புக்கள் உருவாகும் வேளைகளில் அவற்றிற்கு இதனை அதிகார மட்டத்தில், லொபி அரசியலூடாகத் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையை உருவாக்குதல்.

இவற்றின் நேரடியான அனுபவத்தை கோதாபய ராஜப்கச எவ்வாறு இந்தியாவுடன் இணைந்து நாடகமாடினோம் என்பதை தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனம் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசு தண்டிக்கப்படும் என்றும் அடிக்கடி அறிக்கை விடுத்துக்கொண்டிருந்தனர். உலகின் மற்றைய பகுதிகளில் இதே வகையான இன அழிப்பை நடத்திக்கொண்டிருக்கும் அமரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எதிர்ப்புக்குரல் எழுப்பின. அதுவும் இலங்கை அரசிற்கும் இனப்படுகொலைக்கும் எந்தத் தீங்கும் வந்துசேராத வகையில் மிகவும் அவதானமாக எதிர்ப்புக் காட்டப்பட்டது.

இவற்றை எல்லாம் நம்பிய புலிகளும், அறிவீலிகளான அவர்களின் ஐரோப்பிய முன்னணி நபர்களும் “ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு” என்பன போன்ற கேலிக்குரிய அமைப்புக்களைக் கூட உருவாக்கிக் கொண்டனர்.

இவர்கள் எல்லோருன்ம் இணைந்து தமிழ்ப் பேசும் மக்களை ஏமாற்றிவிடப் போகிறார்கள் என்ற சில குறித்த உதிரிகளின் கூக்குரல்கள் கவனிக்கப்படவில்லை. பல சந்தர்ப்பங்களின் இவர்கள் துரோகிகளாக ஒதுக்கிவைக்கப்பட்டனர்.

மொழி ரீதியான பிணைப்பு என்ற அடிப்படையில் தமிழ் நாட்டில் எழுச்சிகள் எதிர்பார்க்கப்பட்டன. அவை கூட உலக நாடுகளின் துணையுடன் மிக நுணுக்கமாகக் கையாளப்பட்டன. இவற்றின் பின்னணியில் புலிகள் நம்பிக்கை வைத்திருந்த அரசியல் வியாபாரிகள் பங்கும் இந்த அழிவிற்கு அளப்பரியாதக அமைந்தது

குறிப்பாக பிரபாகரன் கொலைசெய்யப்பட்ட போது தமிழ் நாட்டில் எழுச்சியை கட்டுப்படுத்துவதற்காக அவர் இன்னமும் வாழ்கிறார் அல்லது இறப்பு குறித்த சந்தேகங்கள் உள்ளன போன்ற வதந்திகள் தமிழ் நாட்டு மற்றும் புலம் பெயர் வியாபாரிகளால் பரப்பப்பட்டன.
எல்லாவற்றையும் திட்டமிட்டு மிகவும் நுணுக்கமான அரசியலின் வழியாக முடித்துவிட்டார்கள்.

இனப்படுகொலையின் இரண்டாவது பகுதியாக இனச்சுத்திகரிப்பு திட்டமிடப்பட்டது.

நிலப்பறிப்பு, கலாச்சார வன்முறை, பௌத்த சிங்கள மயமாக்கல், சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான திட்டமிட்ட அழிப்பு, மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஆழப்படுத்தல் போன்ற அனைத்து அழிப்புகளும் திட்டமிடப்பட்டன.

இவை அனைத்துக்கும் எதிரான மக்கள் எழுச்சிகள் இலங்கையின் ஒவ்வோரு பகுதிகளிலும், இராணுவ ஒடுக்கு முறைகளையும் மீறி எழுந்தன. இவற்றைக் கண்டுகொள்ளாத “தேசிய அறிவிலிகளால்” , அமரிக்கா ராஜபக்சவைக் கைது செய்கிறது, ஐக்கிய நாடுகளில் இலங்கையை தூக்கிலிடப் போகிறார்கள் என்ற போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இன அழிப்பைத் திட்டமிட்டு நடத்திய அதே அதிகாரங்களை மீண்டும் ஒரு முறை நம்புமாறு கோருகின்ற புலி சார் அரசியல் தலைமைகளுக்கு எதிராக காத்திரமான மக்கள் சார்ந்த அரசியலை முன்வைப்பவர்கள் இன்னமும் துரோகிகளளாகவே சித்தரிக்கப்படுகின்றனர். இது தான் நாடகத்தின் இயக்குபவர்களின் அதி முக்கிய திறமை.

ரொபேர்ட் பிளேக் இலங்கை செல்கிறார், கிளிங்டன் அழுத்தம் கொடுக்கிறார் என்ற பூச்சாண்டிகள் இன்னமும் மக்களை மாயைக்குள் வைத்திருக்கிறது. வியாபாரத்திற்கு வசதியான இந்த அழிவு அரசியல் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் சிதைக்கப்படும் வரை நிகழும். அதிகாரவர்க்கங்களதும் அரசியல் வியாபாரிகளதும் இந்த நாடகங்களுக்கு எதிரான புதிய அரசியலை நோக்கி இன்னமும் நீண்ட பயணம் செல்ல வேண்டிய நிலையே காணப்படுவது சாபக்கேடு.
இந்த நாடகங்களின் இறுதியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நடைமுறப்படுத்துமாறு ஐ.நா வில் பரிந்துரைக்கப்படும். சில சலசலப்புக்களுக்குப் பின்னர் இன்னுமொரு நாடக அரங்கம் தயாராகும். இந்த இடைவெளிக்குள் அழிக்கப்படும் அப்பாவிகளின் எண்ணிக்கை கூட எமக்குத் தெரியாத ஒன்றாகிவிடும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மாலைதீவின் முன்னாள்ஜனாதிபதி முஹமட் நசீடீன் இலங்கையில் தஞ்சம்

Comments 16

  1. thamizhan says:
    14 years ago

    இந்தப் பூமியில் “” பலமானது வாழும் “” பலவீனமானது அழிந்து மறைந்து போகும். ஈழத்தில்- தலைவரும் , புலிகளும் இருக்கும் வரை ஈழத்தமிழ் இனம் ஓர் பலமான இனமாகவே இருந்தது. ஆனால் இன்றோ??? இனி ஈழத் தமிழினம் மெல்ல சாகும். அதுக்குதானே அன்றிலிருந்து டக்கிளஸ் , சித்தார்த்தன், ஆனந்தசங்கரி போன்ற அரச எடுபிடிகளும் , இடையில் இருந்து சேர்ந்துகொண்ட கருணா , பிள்ளையான், இமேல்டா போன்ற , சிங்கள அரசுக்கு கக்கூசு வாளி தூக்கும் துரோகிகளும் முக்கி முனகி இராப்பகலாய்ப் பாடு படுகினம். ஆண்டவா..இந்த மானம்கெட்டதுகள் தலை மேல் இடிகூடவா விழச்செய்யாமல் இருக்கிறாய்????

    • அரிச்சந்திரன் says:
      14 years ago

      thamizhan, நிச்சயமாக இடி விழும் அது இறைவனால் அல்ல ஒருவனால்.

      • kovilkaaran says:
        14 years ago

        கனவுகள்  காண்பதற்கு முழு உரிமையும் உண்டு.

        • chandran.raja says:
          14 years ago

          அதை நீங்கள் புரியவைக்க முயல்வது ஒருவனது சுகந்திர கனவைவிட கேவலமானது கோவில்காரரே!. சரி கோவில்காரர் தான் என்ன அர்த்தம் குறிகோள் என்னா? எனசொல்ல மாட்டீர்களா?. கூச்சப்படாதீர்கள்.

  2. வரதன் ( கஸ்ட்ரோ says:
    14 years ago

    நிச்சயமாக இடி விழும் அது மக்கள் எழுச்சிகள்

  3. chandran.raja says:
    14 years ago

    தமிழன் யார்என்று பண்பாடு காக்க புறப்பட தமிழனுக்கு தெரிவதில்லை. மட்டக்கிளப்பு தமிழன் தமிழனா? மலையகத்தில்லுள்ள வடக்கத்தயான் தமிழினா? அல்லது நளவன் பள்ளன் அம்பட்டன் தமிழனா? என யாழ்பாண அப்புக்காத்து தமிழ்யரசில்வாதிகளுக்கு தெரிவது இல்லை. இதுவே தமிழனுக்கு கிடைத்த சாபக்கேடு.
    மேற்சொன்னவைகளைக் கூட்டி ஒரு கட்சியையோ ஒருவனையோ தெரிவுசெய்யும் போது தான் ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டம் ஆரம்பமாகிறது. அல்லது விடுதலைப் போராட்டமாகவும் எடுத்துக் கொள்ளலாம். இது எதுவுமே இல்லாத போது அங்கு என்னதான் நடந்தது?.
    கிழக்காசியவைப் பொறுத்தவரை சிங்களயினம் மிகமிகச் சிறுபான்மையான இனம். இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பான்மையான இனம். இந்தவிதத்தில் அவர்கள் தமக்கென ஒருநாட்டை ஒரு கொடியை வைத்திருப்பது எப்படி தவறாகும்?. அவர்களுடன் துப்பாக்கி வெடிகுண்டு இல்லாமல் சமநீதிகாக போராடுவதே! சமநீதியாகும். அதைவிட்டு இனவெறியை வளர்த்துவிடுவது புத்திசாலித்தனமான அரசியல் அல்லாது என்பதைவிட அயோக்கியதனமான அரசியல் என்பதே சரியானதாகும்.
    சிங்களமக்கள் சுயநலதேவைகளும் போலிகளையும் வெறுப்பவர்கள். விருந்தோம்பல் என்பது நாம் படித்தாலும் இலங்கைத்தீவில் அவர்கள் தான் அதை நடைமுறைப் படித்தியவர்கள் எமக்கு ஏதோ! போலிமுகங்களை தான் பிரமா படைத்துவிட்டான். இதை நம்புங்கள். இந்த போலிமுகங்களுக்கு பனைமுனையில் இருந்த தமிழனைப் போல் யாரும் இருக்கவில்லை. இந்த போலிமுகங்களுக்கு பின்னே முப்பது வருடவரலாறு உறுண்டோடியது என்பது ஆச்சரியமான விஷயமே!
    83 யூலை இனக்கலவரம். கொழும்பில் தமிழர்கள் குடியிருப்பை நோக்கி ஒருவாகனத்தில் சிங்களக்காடையர்கள் தமிழர்களின் உடமைகளை உயிர்களை காவுகொள்வதற்கு வருகிறார்கள். அதைக் கண்ட சிங்களப்பெண்மணி அந்த வாகனத்திற்கு முன் குறுக்காக படுத்திருக்கிறாள். முடிந்தால் என்னை மிதித்து அவர்களை சூறையாடுகள் என்பதே அவள் போராட்டம். அவள் போராட்டம் வெற்றியடைகிறது.கடையர்களின் வாகனம் வந்த வழியே இலக்கையடைய முடியாமல் திரும்பி செல்கிறது.
    1986 மேமாதம் இறுதிவாரம் திருசெல்வேலிசந்தியில் அதிகாலையில் 7-8 மணியளவில் ஒருயியக்கம் இன்னொரு இயக்கத்தை போட்டு “துரோகிகள்” என முத்திரை குத்தி அதாவது பாலகர்களை சந்தியில் போட்டு உயிருடன் கொளுத்துகிறது. இதை பார்த்த மற்றைய தமிழன் சோடவாங்கி உடைத்துகொடுத்து கொளுத்துபனை மகிழ்விக்கிறார்கள்.
    இதுவே இலங்கைத்தீவில் தமிழனுக்கும் சிங்களவனுக்கும் உள்ள வித்தியாசம்.எனக்கு இனியொரு பிறவி இருக்குமா எனத்தெரியவில்லை இருந்தால் ஒரு சிங்களதாயின் வயிற்றில் பிறக்கவே ஆசைப்படுகிறேன்.

    • kovilkaaran says:
      14 years ago

      அம்புலிமாமா  கதையெழுதும் அன்பரே!   இதில் ஏதாவது தர்க்க நியாயங்கள், விஞ்ஞானபூர்வமான ஆய்வு, அணுகுமுறை உண்டா?    உங்களைப்போன்ற தங்கிடு தத்திகளையெல்லாம் எந்தத்தாய்மாரும் பெற்றெடுக்கவே விரும்பமாட்டார்கள். சிங்கள தாயின் வயிற்றில் பிறக்க விரும்பதாக கூறி சிங்கள தாயை  அவமதிக்கும் இந்த ஆசையை வன்மையாக கண்டிக்கின்றேன்.

      • chandran.raja says:
        14 years ago

        வனவாசம் போய் திரும்பி வந்திருக்கும் கோவில்காரரே எதில் தர்க்கநியாயம் தேடுகிறீர்? இனங்களின் வளர்ச்சி போக்கில் இடையிலா? இருந்தால் அந்த தர்க்கநியாயங்ககளையும் விஞ்யாணபூர்வமான ஆய்வுகளையும் எடுத்துவிட கடைமைப் பட்டுள்ளீர். தங்களால் அது முடியுமா? இல்லாததை எடுக்க முயலவேண்டாம்.
        சிங்களயினம் எப்பொழுதும் தமிழ்மக்களைவிட மேலான இனமாகவே தம்மை அடையாளப் படுத்தியிருக்கிறது. 2009 ஆண்டுத் தொடக்கத்தில் பஞ்சோந்தியினமான தமிழினம் பிரபாகரனையும் புலிகளையும் காப்பாற்ற மில்லியன் செலவழித்தி ஊர்வலமும் ஆர்பாட்டமும் நடத்திய போது அவுஸ்ரோலிவில் புலிக்கொடியை பறித்தெறிந்து “புலிகளே பிணையாக பிடித்துவைத்துள்ள வன்னிமக்களை விடு” என்று போராட்டம் நடத்தியது சிங்களஇளையனும் மங்கையும் தான். யாரயைும் இந்த யதார்த்த போரட்டத்தில் ஏதாவது ஒரு தமிழனை காணமுடியுமா கோவில்காரரே! முடிந்தால் சொல்லுங்கள் உங்களிடம் சேர்ந்து கோவில்-மோளம் தட்ட வருகிறேன். இவ்வளவு அசிங்கத்தையும் உங்களில் வைத்துக் கொண்டு விஞ்யாணஆய்வு முறை தேவைப் படுகிறது என்பது யார்யாரோ எதுக்கோ அழ ஏதோ ஒன்று அதற்காக அழுதுதாம். நீங்கள் கோவில்காரர் தான். வெளிமுகமாக வந்தால் மொட்டாக்கு போட்டுத்தான் தமிழ்மக்களிடமும் நடமாடமுடியும். இல்லையாகில் துணிகரமாக பதில் அளியுங்கள்.

    • anton jessenby says:
      14 years ago

      Good on you Chandran raja. I will get back to you later; to share and laugh again untill I drop dead. Thanks.

    • selvan says:
      14 years ago

      You don’t worry about any wankers, feel free to say what you want to say.

  4. selvan says:
    14 years ago

    ஆகா எவ்வளவு அழகாக உருகிகிறார் சிங்கள மக்களுக்காக. சிங்கள மக்கள் ஒரு சமுதாயமாக நல்லவர்கள் என்றால் இந்த அளவு அழிவு நடந்திராது. அவர்களும் சந்தர்பவாதிகளே. அவர்களுடன் இருந்து வாழ்ந்து பார்தவர்களுக்கு தெரியும். நீயா நானா என்று வரும்போது எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். என்னிடம் வெள்ளையர்கள் துவேசிகள் என்று எனது சிங்கள நண்பன் கூறியபோது இதுதானேயப்பா நாங்களும் இலங்கையில் அனுபவித்தது என்ன்றதும் வார்த்தையற்று நின்றார் நண்பன். தனிப்பட்ட சில நிகள்வுகளை மட்டும் வைத்து அதுதான் பொதுவான உண்மை என்று வாதிப்பது விதண்டாவாதம். யாழ் மக்கள் மகான்களல்ல அதுபோலத்தான் மற்றத்தமிழரும், ஒரு அங்குலம் கூடவோ குறைவாகவோ இருப்பார்கள். அவ்வளவுதான்.நண்பரே இப்பவும் ஒன்றும் குறைந்து போகவில்லை.நீங்களோ இல்லை உங்கள் சந்ததியினரோ அவர்கள் சமுகத்தில் கலந்துவிடுங்களேன், யார் தடுக்கிறார்கள். 

    • chandran.raja says:
      14 years ago

      உங்களை யார் தடுத்தார்கள்? திருவாளர் செல்வன் அவர்களே! யாரும் யாரையும் தடுக்க முடியாது என்கிற மெளன பாஷைவது புரிந்து கொள்ளுங்கள்.
      தமிழனின் கேடுகெட்ட சுயநலச்சிந்தனையால் சொந்தவீடுக்கு தீவைத்துவிட்டு பாதுகாப்பாக அடைக்கலாம் தேடி கோட்டைபுகையிரதநிலயத்தையும் கட்டுநாயக்கா விமானத்தளத்தையும் வந்தடைந்தான். அதில் இருந்து புறப்பட்டு வந்தவர்களே கோட்டை புகையிரநிலையத்தையும் கட்டுநாயக்கா விமானத்தளத்தையும் வெடிவைத்து தகர்க முற்படுகிறவர்கள்.
      இப்படியான பிரச்சாரங்களே புலம்பெயர்நாட்டில் மேல்லோங்கி இருக்கிறது. மவுசும் ஏற்பட்டிருக்கிறது. புலி வைக்கல்புலியானதின் பின் ஏகாதிபத்தியத்திற்கு எப்படி புடைபிடித்து வாழலாம் என உங்களைப்போல் சிற்ரறிவு உள்ளவர்கள் தான் ஏற்றுக் கொள்ள முடியும்.
      எல்லா இனத்தோடும் வாழப்பழகிய தமிழன் சிங்களயினம் தான் பகையானது என விளம்புவது அறிவீத்தனமல்லமா?

      சிங்களமக்கள் சந்தித்த-சந்தித்துக் கொண்டிருக்கிற வறுமையை ஏழனமானவாழ்கையை தமிழ்மகன் சந்தித்தது மிகமிக குறைவாகவே இருக்கும்.இதில் இனவெறியை தூண்டிவிட்டவர்கள் தமிழ்சிங்கள பதவிவெறிக்காக ஓட்டுவேட்டைக்காக மேடையிலும்பாரளுமன்றத்தில் முழங்கிய குட்டிமுதாலித்துவ அரசியல்வாதிகளே!. இதில் பலியாக்காப்பட்டது இலங்கைப் பாட்டாளிவர்கமே! இதை இன்னும் தொடரவேண்டுமென்பதே உமது அவாவாக இருக்கிறது. இந்த அவாவை யாரால் தான் ´தடுக்க முடியும்.

      இடதுசாரியத்தை பற்றி தெரியாதவர் ஈரானுக்கும் இஸ்ரைலுக்கும் என்ன பகையிருக்க முடியும் என விளங்கிக் கொள்ள முடியாத ஒரு பேதை இலங்கையரசியலை கதைக்க முயல்வது. ஒரு மீன்குஞ்சு இப்பதான் முட்டையில் இருந்து நீந்தி பழகுவதற்கு வந்திருக்கிறது. அது சமுத்திரத்தையும் கான ஆவல் படுகிறது.

      • Selavn says:
        14 years ago

        யாரையா சொன்னர்கள் என்னை நீர் தடுத்தீர் என்று. நீர்தான் சிங்கள தாய் வயிற்றில் பிறக்க விரும்புவதாக கூறினீர், அதற்கு ஒரு மாற்று வழி கூறினேன். அவ்வளவுதான். மறுபடியும் ஒரு சிலரது உதாரணங்களை காட்டி தமிழர் எல்லோரும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்கிறீர். இது விதண்டாவாதம் இல்லையா. “சிங்களமக்கள் சந்தித்த-சந்தித்துக் கொண்டிருக்கிற வறுமையை ஏழனமானவாழ்கையை தமிழ்மகன் சந்தித்தது மிகமிக குறைவாகவே..” அதனால் அவ்ர்கள் நியாயமற்றவகையில் சலுகைகள் பெறலாம்.நான் உழைத்து உழைக்கமறுக்கும் அவ்ர்களுக்கு தீனி போடவேணும். என்ன அருமையான சமத்துவம்.நாங்கள் கத்துக்குட்டிகள், நீர் மேதாவி இதிலயே தெரிகிறதே உமது அறியாமை. தமிழனோ சிங்களவனோ ஒருநாட்டின் பிரஜை என்றவகையில் அனைவரும் சமன். இதை சொல்வதற்கு நான் உம்மைபோல் மார்தட்டிக்கொள்ளும் மேதாவியாக இருக்கத்தேவையில்லை. உம்மை போல் ஒரு தமிழ் சோசலிசவாதி சிட்னியுல பெண்களின் உள்ளாடைகளை திருட்டுத்தனமாக படம் எடுத்தான் என்பதற்காக நீங்கள் எல்லோரும் அந்த வர்க்கம் என்று நான் சொல்லலாமா.

        • chandran.raja says:
          14 years ago

          இனங்களின் பெருமைகளை பற்றி கதைக்க புறப்பட்டு உள்ளாடைக்குள் விழுந்துவிட்டீர்? வார்த்தைகள் வெளிவருகுதில்லையோ! யாருடைய உள்ளாடை? அதையாவது தெளிவாக விளக்கம் கொடுக்கவும். உள்ளாடையில் இருந்தா? வர்க்கம் பிறக்கிறது என இவ்வளவு காலமும் நம்பியிருந்தீர்?. திரு செல்வன். இது உங்கள் மொழி அழகாக உங்களால் கதைக்க முடியும். கதையுங்கள்.

          • Selvan says:
            14 years ago

            I didn’t know undies will have you excited like this. You must consult that socialist friend of yours I will say for greater details. Your method to generalize things like Singhalese are great people sounded not so scientific. You use a small sample size and then come out with your hypothesis. You can use either induction or deduction to find the truth the philosophers would say. I think you will want to find an empiricist and have your theories validated before you publish them for the consumption of the general public.

          • RS says:
            14 years ago

            I didn’t know undies will have you excited like this. You must consult that socialist friend of yours for greater details since you guys live around there. Your method to generalize things like Singhalese are great people sounded not so scientific. You use a small sample size and then come out with your hypothesis. May be you need an applied statistician to correct your non-sense correlations.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...