இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்துள்ள குற்றச் சம்பவங்கள் தொடர்பாக ஐநாவின் நிபுணர் குழு தயாரித்துள்ள இறுதியறிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஐநா குழுவின் அறிக்கையிலிருந்து கசிந்துள்ள சாராம்சங்களை இலங்கையில் சில நாளிதழ்கள் அண்மையில் வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில் குறித்த அறிக்கையில் அடங்கியுள்ள தகவல்ககளை நிபுணர் குழு சம்பவங்களை நன்றாக ஆராய்ந்து எடுத்துள்ள தீர்மானங்களே என தமிழோசைக்குக் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன், அரசாங்கம் அதிலுள்ள விடயங்களை புறந்தள்ளாது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கூறினார்.







