Tuesday, April 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

எழும்பூரில் உள்ள புத்த மடத் தாக்குதல் – பெரியார் தி.க வினர் 7 பேர் கைது

இனியொரு... by இனியொரு...
01/27/2011
in இன்றைய செய்திகள்
0 0
12
Home இன்றைய செய்திகள்

சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு இத்தாக்குதல் நடந்தது. அதில் அங்கிருந்த ஒரிரு புத்த புக்குகள் உட்பட சிலர் காயமுற்றனர். இத்தாக்குதல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் விசாரணையில் இருந்தனர். இரண்டு நாள் விசாரணைக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 7 பேர் இன்று கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நாடோடிகளின் இனிய இசை (3) : T. செளந்தர்

Comments 12

  1. ayyarenke says:
    15 years ago

    “திராவிடர் கழக” மடையர்களால்தான் தமிழீழத் தமிழர்கள் தள்ளாடிப் போனார்கள்.அய்யரெங்கே

    • THAMILMARAN says:
      15 years ago

      யாரு மடையன்.குட்டக் குட்டக் குனிபவனா?கோபத்தைக் காட்டாது ஒளீபவனா?எரிமலை வெடிக்க வேண்டும்.சுனாமி அலையாய் தமிழன் எழவேண்டும்.சிங்கள நாய் தமிழக மீனவனைத் தீண்டும் அதை தமிழன் கை கட்டி வேடிக்கை பார்க்க வேண்டுமோ.சூடு சுரண அற்றூ கொட்டாவி விடுவது மலையேறீ விட்டது இது புரட்சிகளீன் காலம்.தமிழன் இனியும் தூங்கமாட்டான்.

      • அய்யரெங்கே! says:
        15 years ago

        தமிழ்மாறன் அண்ணா!
        நாய் மீனவனைத் தீண்டினால்,அது மீனுக்காகத்தான் இருக்கும்.உடன கையத்தட்டினா பிரச்சனை முடிஞ்சுது.தூங்காம,சூடு,சுரணை அற்று,கொட்டாவி விட்டுத்தான் இதை எழுதிறன்.நீங்க எழுதிய “காலம்” எப்ப முடியும் எண்டு சொன்னா,இப்பவே தூங்கப் போயிரலாமெல்லே.கண் மூடமுன்ன,அந்தத் “தணிகாசலம்” என்றது சமஸ்கிருதம்தானோ எண்டொருக்கா கேட்டுச் சொல்லுங்கோ! அய்யரெங்கே.

      • suganthan says:
        15 years ago

        புரட்சிமாறன் மன்னிக்கவும் தமிழ்மாறன்! இப்பிடி எத்தனைபேர் கெளம்பி இருக்கீங்க?

        • thuppadda says:
          15 years ago

          ணா, சரி விடுங்கணா, சும்மா தமிழ் மாறனுக்கு உணர்ர்சி வரக்கூடாட்தோ? கலைஜருக்கு கூட வரப்ப..

        • THAMILMARAN says:
          15 years ago

          கண்ண மூடி நடக்கிறீர்கள் என்றூதான் நினைத்தேன் ஆனால் உங்களூக்கு கண்ணே இல்லை என்பது இப்போதுதான் புரிகிறது.

      • chandran.raja says:
        15 years ago

        இன்று புத்தமடாலயங்கள்.நாளை ஆந்திராக்காரன் கேரளாக்காரன்.அது
        முடிய உள்ளுர்காரன் துரோகி பட்டியலில். தமிழ்மாறன் பாஷையில்
        சொன்னால் ” அண்ணன் காட்டிய வழியம்மா”: ஏய்! தமிழினமோ இப்படி அடிபட்டு இழிபட்டு குருட்டுவண்டு போல் மோதுண்டு அழியவா? உனது விதியாயிற்று.
        பாட்டாளிமக்கள் (ராமதாஸ் அல்ல) அரசியல் ஆளுமையை ஏற்கும்
        வரை இந்த இந்தகுட்டிமுதாலிளித்துவ புத்தியீவிகள் ஏகாதியபத்தியதின் வேலைத்திட்டத்திற்கு ஏற்பவே நடந்து கொள்வார்கள். எதுவிருந்தாலும் தமிழ்நாட்டின் ஆரம்பமே: இலங்கை
        அரசுக்கு முடிவுக்கு முப்பதுவருடங்கள் சென்றது. தமிழ்நாட்டிற்கு எத்தனை வருடங்களோ?

  2. sacthivel thanikasalam says:
    15 years ago

    அய்யர் உள்ளே அடிப்பதற்கு மணீ தேடுகிறார்.இத்தனை காலமும் சமஸ்கிருதம்தான் பிழைப்பு மொழி அவருக்கு இனியும் தொடரும்.

  3. chandran.raja says:
    15 years ago

    பெரியார் சீர்திருத்தவாதி ஒருபகுதி தமிழ்மக்களின் பெயரில் புரட்சியாளன். அண்ணா கருணாநிதி எம்.ஜி. ராமச்சந்திரனின் குருவும் இந்த ஈ.வே.ரா. பெரியாரே இந்த சுழல்சியில் தான் தமிழ்நாடு போய்கொண்டிருக்கிறது. இவர்களுடைய முதல் வேதம் பிராமணியத்தை ஒழித்தல் என்பதே! குறிப்பாக பிராமணனைக் கண்டாலே பாம்பை கண்டாலோ அடித்து கொல் என்பதே. இல்லை நான் சொல்வது தவறா? என்பதை வாசகர்கள் அல்லது பச்சைகுத்திக் கொண்ட தமிழிச்சி சொல்னால் போது மானது. நான் பார்த்த அறிவாளிகள் பிராமணகளிலே கொட்டிக்கிடக்கிறார்கள். யூதமதத்தில் இருந்து கால்மாக்ஸ் உதித்தது போல. உதாரணத்திற்கு இலங்கையில் தொழில்சங்கத்தை ஸ்தாபித்தவரே நடேஐயர் என்கிற பிராமணன் தான் என்பதை கவனத்தில் எடுக்கவேண்டும். உண்மைகள் இப்படியிருக்கும் போது தமது துன்பத்திற்கு ஒரு இனத்தையோ குலத்தையோ இழிவு படுத்துவது என்னவிதத்தில் பொருந்தக்கூடியது. பிராமணகுலத்தில் வறுமையில் வாடிக்கொண்டு இருந்து விபச்சாரத்திற்கு தள்ளப்படுகிற பிராமணிய பெண்களுக்கு என்ன? பதிலை கொடுக்கப் போகிறீர்கள்?? வாழவழியில்லாமல் கோவிலும் இல்லை பூசையும் இல்லை வயிற்று உண்டியும் இல்லை என்று தள்ள பட்ட பலஆயிரம் பிராமண இளைஞர்களை என்ன செய்யப் போகிறீர்கள். ஆகவே உண்மையை தேடும் போது இனத்திலோ குலத்திலோ மதத்திலோ இருந்து தேடாதீர்கள். ஒருமனிதனின் அடிப்படை தேவை ஊண் உடை உறைவிடம் என்பதில் இருந்து ஆரம்பியுங்கள். இந்த வகையில் பார்க்கும் போது ஈ.ரா.வே பெரியாரும் அவர்கள் சீடர்களும் நிரந்தர மரணத்தை தழுவி பல ஆண்டுகள் ஆகின்றன்.

    • THAMILMARAN says:
      15 years ago

      அய்யர்மாரெல்லாம் குடும்பி வெட்டி கிராப் வைத்து அமெரிக்காவில் வேலைசெய்யினனம் இன்னும் பலர் இங்க வந்து மணீ அடிக்கிணம் ஆனால் சைவக் குருக்கள் என்றதையே தமிழர் மறந்து கிடக்கினம் எண்டதுக்கு ராசா நீங்களே உதாரணம்.இதில் மார்க்ஸ் யூதர் என்ற உங்கட கற்பூரம் வேற எரிந்து மணக்குது.ஏசுவே யூதர் எனும்போது மாக்ஸ் யூதர் என்பதில என்ன அதிசயம் இருக்கு.உண்மையை நீங்கள் தேடாமல் எங்கள் தேடச் சொல்லுறீயளே அப்பு.

      • chandran.raja says:
        15 years ago

        அறிவுக் களஞ்சியமே! குடும்பி வெட்டி கிராப்வைத்து அமெரிக்காவில் இருந்தால் எந்த பிராமணதிற்கு எதிராக உங்கள் வெறியை காட்டுகிறீர்கள்?. வடமாகாணத்தில் இருந்து முப்பதுயாயிரம் முஸ்லீம் குடும்பங்கள் வெறியேற்ற பட்டபோது ஆமாப் போட்ட தமிழரின் கருத்துக்கு ஒப்பானதல்லவா? இந்தக் கருத்தும். பிராமணத்திலும் யூதத்திலும் வந்த அறிவை ஏற்றுக்கொள்ளாதது இனி எந்த அறிவும் தங்களை சுகப்படுத்தப் போவதில்லை. தொடர்ந்தும் இப்படியே இனத்திலையும் குலத்தலையும் மதத்தலையும் சாதியிலையும் குறைகண்டு வெறிகொண்டு உங்கள் அறிவை வளர்த்துக் கொண்டு முதாலித்துவதிற்கு வேவகர்களாக வாழவேண்டு மென்றால் அதை யாரால் தடுக்க முடியும்?. மற்றைய இனத்தின் வதைகளை கண்டுகொள்ளாதவன் அலட்சியப் படுத்துபவன் போலிக் காரணங்களை தேடிக்கொள்பவன் தனது இனத்திற்கும் தனது இனத்தில் இருக்கும் உழைப்பாளிமக்களுக்கும் பிணப்பாரம் மட்டுமல்ல ஆபத்தானவர்களுமே!.

        • THAMILMARAN says:
          15 years ago

          அவாள் எல்லாம் தங்களூக்குத்தான் அறீவு இருப்பதாய் பீற்றீக் கொள்ளூம்போது அவாள பல்லக்கில் தூக்கும் அடிமைப் புத்தி ஆருயிர் ராசாவுக்கு புரியவே இல்லை.என்ன செய்வது கோயில்ல தேவாரம் பாடி அய்யர் கையில படாமல் குடுக்கும்(தொட்டால் தீட்டாயிற்றே,தமிழ் தூஸணபாசையாயிற்றே) வாங்கி நெற்றீயில் பூசினால் போதும் என்ற பொதுவான அடிமைப் புத்தியில் சந்திரன் ராசா நிற்கிறார்.நாமும் பூசை செய்த சாதி மூல விக்கிரகத்தை தொடமுடியாமல் நிற்கிறோமே ஏன் என நினைத்துப் பார்த்தாரா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In