எரிபொருள் விலையேற்றத்தினை ஆட்சேபித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கமும் இடம்பெயர்ந்த மயிலிட்டி மக்களும் இணைந்து அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.
வடக்கு கடற்றொழிலாளர்கள், பெருமளவில் கடற்றொழிலுக்கு மண்ணெண்ணை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மண்ணெண்ணை விலை சுமார் 35ரூபாவினால் அதிகரித்துள்ளதால் தினசரி 3 ஆயிரம் ரூபா செலவிட்டு, தொழிலுக்குச் சென்றாலும் 2ஆயிரம் ரூபாவிற்கு மேல் வருமானம் பெற முடியாதளவு நிலையியே தற்போதுள்ளது.
இந்நிலையில், மீனவர்களிடம் வளம்போதாத நிலை காணப்படுகின்றது. எனவே எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களிலும், எரிபொருள் விலையேற்றத்தினால் நேற்றுமுன்தினம் தொடக்கம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 24கடற்றொழிலாளர் சங்கங்களிலும் கடற்றொழில் முடங்கியுள்ளது. இதேபோல் தென்னிலங்கையிலும், எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து மீனவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடமிருந்து இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஒருங்கிணைத்த கம்யூனிஸ்ட் கட்சி – இலங்கை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்களை ஒன்றுபடுமாறு அழைப்புவிடுத்துள்ளது.








அடுத்து, இலங்கை மின்சார சபையும் தனது கட்டணங்களை உயர்த்தப்போகிறது. எண்ணெய் விலையேற்றம் சகல துறைகளையும் பாதிக்கும். இந்தப் போரில் மகிந்தர் வெற்றிகொள்ள முடியாது. தன்னியல்பான மக்கள் எழுச்சி ஏற்படும் போலுள்ளது.
வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கம் இப் போராட்டத்தை முன்னெடுப்பதை வரவேற்கும் அதே வேளையில் மற்றைய இலங்கை பூராவும் உள்ள கடல்தொளிலார்களுமே இதனால் பாதிப்புக்குள்ளானவர்கள். எனவே இலங்கையின் சகல வட, தென், கிழக்கு, மேற்கு தொழிலாளர்களும் ஒற்றுமைபட்டு போராடினால்த்தான் வெற்றிபெறாலம்.
மின் கட்டணமும் இன்று உயர்த்தப்பட்டுவிட்டது. புத்தளத்தில் கடல் தொழிலாளர்கள் செய்த போராட்டத்தின் மீது இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.