Tuesday, June 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

உள்முரண்பாடுகளை நீடிக்காமல் முடிவுக்கு கொண்டு வாருங்கள் : கூட்டமைப்புக்கு மனோ கணேசன்

இனியொரு... by இனியொரு...
10/04/2012
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

உள்முரண்பாடுகளை நீடிக்காமல் முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்பதுவே தமிழ் மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு

கூட்டமைப்புக்கு ஜமமு தலைவர் மனோ கணேசன்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய ஐந்து கட்சிகளும் தமக்கு இடையிலான உள்முரண்பாடுகளை தொடர்ந்து நீடித்துக்கொண்டு போகாமல் அவற்றிற்கு உடன் முடிவு கண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை பலமிக்க தமிழ் தேசிய ஜனநாயக அரசியல் இயக்கமாக கட்டி எழுப்பும் நோக்கில் செயலாற்றவேண்டும் என்பதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

அசாத்திய பொறுமையுடனும், ஒருவித சலிப்புடனும் கூட்டமைப்பு கட்சிகள் மத்தியிலான இந்த முரண்பாட்டு செய்திகளை நாட்டிலும், புலத்திலும் வாழும் தமிழ் இனமும், சமூக பொறுப்புள்ள தமிழ் உடகங்களும் அவதானித்துக்கொண்டு இருக்கின்றன என்பதை கூட்டமைப்பு அரசியல் தலைவர்கள் மறந்துவிடக்கூடாது.

கூட்டமைப்பு சகோதர கட்சிகளுக்குள் பல வருட காலமாக நீடித்து வந்துள்ள உள்முரண்பாடுகள் பற்றி கருத்து தெரிவிப்பது அரசியல் நாகரீகம் அல்ல என்பதை நிச்சயமாக நானறிவேன். ஆனால், இன்று பகிரங்கமாகியுள்ள முரண்பாட்டு செய்திகள், கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று துன்பங்களை சுமந்து நிற்கும் தமிழர்களின் தேசிய இருப்பை சவாலுக்கு உள்ளாக்கும் விடயமாக மாறி வருகின்றன என்ற காரணத்தினாலேயே இதை கவலையுடன் சொல்ல வேண்டியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

உள்முரண்பாடுகள் பகிரங்கமாகும்போது முதற்பலி, மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கைதான். சொல்லொணா அகோர நினைவுகளையும், அவல நிஜங்களையும் சுமந்து வாழும் தமிழ் மக்களுக்கு இன்று எஞ்சி இருப்பது நம்பிக்கை என்ற ஒன்றே ஒன்றுதான். இந்த நம்பிக்கையும் கனவாகுமானால், அது துர்பாக்கியமாகும். அது கோர வன்னி யுத்தம் தந்த வலிக்கு சமாந்திரமானதாகும்.

ஒரு அங்குலமும் இறங்கி வர தயார் இல்லை என்று இனவாத அரசு தனது நிலைபாடுகள் நாள் தோறும் அறிவித்துகொண்டுள்ளது. தமிழ் மக்களை சாகவிட்டுவிட்டு அதற்கு துணை போன சர்வதேசமும், இப்போதுதான் தாமதமாக விழித்து எழுந்து எம்மை சமாதானப்படுத்தி கொண்டிருக்கின்றது. உலக வல்லரசுகளின் முன்னுரிமை பட்டியலில் நமது விவகாரம் முதல் வரிசையில் இருந்தால், கட்சிகள் செயற்படாவிட்டாலும்கூட, தனது தேவைக்காகவே சர்வதேச உலகம் நம்மை தள்ளி அழைத்து சென்று தீர்வுக்கு வழி காட்டிவிடும். ஆனால், தூரதிஷ்டவசமாக உலக நாடுகளின் முன்னுரிமை பட்டியலில் நமது விவகாரம் முன் வரிசையில் இல்லை. இந்த கசப்பான உண்மையை பகிரங்கமாக சொல்வதற்கு நாம் தயங்க வேண்டியது இல்லை. இதுபற்றி தமிழ் மக்களுக்கு பொய்யான மாய நம்பிக்கைகளை தர முடியாது. எனவே, சர்வதேசம் என்ற ஒரே வார்த்தை பிரயோகம் மூலமாக மாத்திரம் நமது எதிர்பார்ப்புகள் தீர்ந்துவிட போவதில்லை என்பதை நாம் புரிந்துகொண்டால்தான், நம்மை ஜனநாயகரீதியாக தயார் படுத்திகொள்ளலாம். சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கும். ஆனால் அந்த ஒத்துழைப்பை உள்வாங்க காத்திரமான கட்டமைப்பு இருக்க வேண்டும்.

இந்த காரணத்தினாலேயே இலங்கை தமிழர்களின் அரசியல் தலைமைகள், உலகின் ஏனைய இன விடுதலை இயக்க தலைமைகளை விட, அதிகமாக, காத்திரமாக, முழுநேரமாக உழைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். காத்திரமான முழு நேர உழைப்புக்கும், ஆளுமைக்கும் கூட்டமைப்பில் பஞ்சமில்லை என நான் நம்புகிறேன். எனவே உழைப்பையும், ஆளுமையையும் முன்னெடுக்கும் எழுச்சியுடன்கூடிய கட்டமைப்பைகொண்ட கட்சி இயந்திரம்தான் தேவைபடுகிறது.

ஆனால், இன்று வானத்தில் பறக்கும் பறவையை பிடிப்பது என்பது விடுத்து, கையில் இருக்கும் பறவையும் நம் கையில் இருந்து பறந்துவிடுமோ என்ற பயம் மக்களுக்கு வந்து விட்டது. புதிய எழுச்சியுடன்கூடிய கட்டமைப்பை ஏற்படுத்துவது என்ற இலக்கை நோக்கி நகர்வது என்பதை விடுத்து, இப்போது கையில் இருக்கும் கட்டமைப்பும் சிதையுமானால், அது வரலாற்று தவறாகிவிடும். நாளைய வரலாறு எழுதப்படுவது என்பது ஒருபுறமிருக்க, இன்றைய நிகழ்காலமே நம்மை நடுச்சந்தியில் நிறுத்திவிடும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டமைப்புரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டு, ஆளுமையும், அர்ப்பணிப்பும், நேர்மையும், தூரப்பார்வையும், துணிச்சலும் கொண்ட கொண்ட தமிழ் தேசிய இயக்கமாக புத்தெழுச்சி பெற வேண்டும் என்பதுவே, சகோதர தமிழ் தேசிய கட்சியான எமது ஜனநாயக மக்கள் முன்னணியின் ஒரே எதிர்பார்ப்பாகும்.

கூட்டமைப்பில் இடம்பெறும் எந்த ஒரு கட்சிக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ எமது கருத்துகள் அமையவில்லை. தமிழ் மக்களை சார்ந்தே நமது கருத்துகள் அமைகின்றன. உள்முரண்பாடுகளை தொடர்ந்து நீடித்துக்கொண்டு போகாமல் முடிவுக்கு கொண்டு வாருங்கள். ஜனநாயக கட்டமைப்பை ஏற்படுத்தி கூட்டமைப்பை வலுப்படுத்துங்கள். இதுவே இன்று நாட்டிலும், புலத்திலும் வாழும் தமிழ் மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு. இந்த மக்கள் குரலையே நாம் இங்கு எதிரோலிக்கின்றோம்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
புதிய பண்பாட்டுத் தளம் அங்குரார்பண நிகழ்வு : லெனின் மதிவானம்

புதிய பண்பாட்டுத் தளம் அங்குரார்பண நிகழ்வு : லெனின் மதிவானம்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Mani Ganeshan knows when to say what.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...