Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

உண்மையை மறைக்கும் இந்து நாளிதழ்

இனியொரு... by இனியொரு...
11/02/2009
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

தி இந்து நாளிதழும், அதன் ஆசிரியர் என்.ராமும் வாசகர்களை ஏமாற்றுவது ஏன், ஊடகங்களின் பொறுப்பு’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக் கிழமை சென்னை தியாகராயர் நகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள தேவநாயகம் பள்ளியில் மே 17 இயக்கம் கருத்தரங்கத்தை நடத்தியது.

தமிழர்கள், ஈழத் தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகளில் உண்மையை மறைத்து எப்படியெல்லாம் தி இந்து கட்டுரை எழுதியது என்பதை இந்தக் கருத்தரங்கில் பேசிய ஒவ்வொருவரும் ஆதாரத்துடன் எடுத்துரைத்தனர்.
இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த ஜி. திருமுருகன், இந்தியாவை நேசித்த ஈழத் தமிழர்கள் சிறிலங்க இனவெறி அரசால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டதனால், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையின் கடற்பகுதி இந்தியாவிற்கு எதிரான சீனா போன்ற சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது என்று கூறினார்.

hiinduதமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியாவின் உதவியைப் பெற்று ஒழித்த சீனா, தென்னிலங்கையில் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவிற்குத் தாரை வார்த்து, அதனை நன்கு காலூன்ற இடமளித்துவிட்டது. இது மட்டுமின்றி, இலங்கையின் மற்ற இடங்களிலும் சீனா பலமாகக் காலூன்றி வருகிறது” என்று கூறிய திருமுருகன், சீனா அமைத்துள்ள தளத்தில் இருந்து 100 கி.மீ. தூரத்திற்கு உட்பட்டுத்தான் கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளது என்று கூறினார்.

இந்தியா, சீனா எல்லைப் பிரச்சனையில் சீனத்தின் பக்கம் சார்ந்த தி இந்து எழுதி வருகிறது என்று குற்றம் சாற்றிய திருமுருகன், இந்தியாவை 20, 30 துண்டுகளாக உடைக்க வேண்டும் என்று சீனத்தின் சர்வதேச இராணுவ ஆய்வு மையம் தனது இணையத்தளத்தில் எழுதியபோது அது குறித்து தி இந்து எந்தணச் செய்தியையும் வெளியிடாதது மட்டுமின்றி, அதுகுறித்து சீனா அரசு கருத்தேதும் கூறாத நிலையில், அதனை ‘அதிகப்படியான கருத்துக் கூறல்’ என்று கூறி தி இந்து அதனை சாதாரணமாகக் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டினார்.

தி இந்து நாளேடு தொடர்ந்து ஆதரித்து எழுதிவந்த சிறிலங்க அரசு தனது நாட்டு மக்கள் மீதே தொடுத்தப் போரில் எப்படிப்பட்ட போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டது என்பதை அமெரிக்க அயலுறவு அமைச்சகம் தயாரித்த அறிக்கையை மேற்கோள் காட்டி விவரித்தார் இந்தியக் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினென்ட் எம். சுப்ரமணியம்.

மனிதாபிமானமும், உண்மை கூறல் வேண்டு்ம் என்ற நேர்மை சற்றும் இன்றி எவ்வாறு ஒவ்வொரு பிரச்சனையிலும் தி இந்து நாளிதழ் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டது என்பதை தமிழ்.வெப்துனியா.காம் இணையத் தளத்தின் ஆசிரியர் கா.அய்யநாதன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

உலகமே அதிர்ச்சியுற்ற செஞ்சோலைப் படுகொலையை கண்டுக்காதது, போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் போராடியபோது அதனை தமிழ் வெறித்தனம் என்று சித்தரித்தது, பாலஸ்தீன விடுதலைப் போரையும், ஹமாஸ் இயகத்தையும் சரியாக தனது செய்திகளில் குறிப்பிட்ட அதே நேரத்தில், ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதும், தமிழீழ விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகள் என்று தொடர்ந்து உண்மையை மறைத்து எழுதி வந்தததையும் எடுத்துக்காட்டிய அய்யநாதன், கச்சத் தீவுப் பிரச்சனையில் எப்படியெல்லாம் உண்மையை மறைத்து, தமிழ் மீனவர் நலனை கேவலப்படுத்தி எழுதியது தி இந்து என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தினார்.

இறுதியாக உரையாற்றிய திபெத் விடுதலைப் போராளி டென்சிங், இந்தியாவின் பாதுகாப்பிற்கும், நலனிற்கும் திபெத் விடுதலைப் பெறுவதன் அவசியத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்தியாவின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்புடைய திபெத்தும், அதன் மக்களும் இந்தியாவின் இயற்கையான நண்பர்களாக வரலாற்றுக் காலத்திலிருந்து திகழ்ந்து வருகின்றனர் என்று கூறினார்.
இந்தியாவை வளப்படுத்தும் ஜீவ நதிகளான கங்கை, யமுனை, பிரம்புத்திரா ஆகியன திபெத்தில் உருவாவது மட்டுமின்றி, இந்துக்கள் மிகப் புனிதமான இடமாக கருதும் கைலாயமும், மானசரோவர் நதியும் திபெத்தில் உள்ளதையும், ஆனால் திபெத் சீனத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளதால் அங்கு இந்தியர்கள் அனைவரும் சென்றுவர முடியாத நிலை உள்ளது என்றும் கூறினார்.

இந்தியாவின் தெற்கிலுள்ள ஈழத்து விடுதலைப் போராட்டமும், வடக்கில் உள்ள திபெத்தின் விடுதலைப் போராட்டமும் ஒன்றிணைவது காலத்தின் அவசியம் என்றும் டென்சிங் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தி இந்து நாளிதழின் உண்மைக்குப் புறம்பான போக்கை விமர்சித்து பத்திரிக்கையாளர்களும், வரலாற்றாளர்களும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘பத்திரிக்கை அறமும் இந்து என்.ராமும்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

இப்புத்தகத்தை முதுபெரும் பத்திரிக்கையாளரும், பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலருமான விடுதலை இராசேந்திரன் வெளியிட, அதனை டென்சிங் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

திருகோணமலை-இன்றுவரை திருடப்படும் தொடர்கதையா?: ஜெ.ஜென்னி

Comments 1

  1. sigaram says:
    16 years ago

    இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்துவின் மோசமான நடத்தை ஒருபுறமிருக்கட்டும்.

    சீனாவைக் காட்டி இந்திய மேலாதிக்க நோக்கங்களையும் அந்தியாவின் அமெரிக்கச் சாய்வை ஊக்குவிப்பதற்கும் இலங்கைத் தமிழர் பற்றிய முதலைக் கண்ணீரைப் பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டும்.

    இலங்கைத் தமிழருக்கு எதிரான உடனடியான அந்நிய மிரட்டல் இந்தியாவாகத் தெரிந்தாலும் அதனிலும் பெரிய ஆபத்து அமெரிக்காவே.

    சபா நாவலனின் அண்மைய கட்டுரைகளிற் இது தொடர்பாகப் பயனுள்ள பல பார்வைகள் உள்ளடங்கியிருக்கின்றன.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...