Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஈழப் போராட்டம் குறித்த இன்னொரு ஆய்வு – புளொட் இயக்கத்தை முன்நிறுத்தி : அசோக் எழுத்தும் வரலாற்றுத் தொடர்

இனியொரு... by இனியொரு...
02/13/2012
in இன்றைய செய்திகள்
0 0
18
Home இன்றைய செய்திகள்

தமிழ்ப் பேசும் மக்கள் மீதான பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் கிழக்கிலிருந்து கருவுற்றது எவ்வாறு? இருளின் விழிம்பிலிருந்து இன்னமும் வெளிவராத, யாழ்.மையவாத சிந்தனைக்குள் முடக்கப்பட்டிருக்கும் தியாகங்கள் இப்போது நமது சமூகத்தின் முன் பேசப்பட வேண்டியவை.

இனியொரு இணையத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியவரான கணேசன் – அய்யர் ஆரம்பித்த தொடர் ஈழப் போராட்ட அரசியல் வரலாற்றில் நிராகரிக்க முடியாத அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. மேலும் செழுமைப்படுத்தப்பட்ட கணேசனின் தொடர் நூலுருவில் வெளியான போது மக்கள் உணர்வுள்ள அனைவரின் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது. தவறவிட்டவற்றிலிருந்து கற்றுக்கொள்வதற்கான  உரையாடல் வெளியை அது ஏற்படுத்தியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இதனைத் தொடர்ந்து முன்னைவற்றை உரசிப்பார்க்க முற்பட்டோர் பலர்.

புளொட்(PLOTE) இயக்கத்தின் அதிகார வெறிக்குள் அழிக்கப்பட்ட அப்பாவிப் போராளிகள் குறித்த சம்பவத் தொகுப்பாக கோவிந்தனின் “புதியதோர் உலகம்” வெளிவந்து கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. இதன் பின்னதாக இலங்கை அரச தூதரகத்தின் முற்றத்தில் கூடாரம் அமைத்துக்கொண்டு வரலாற்றை அலசுவதான மூன்றம்தர கிசுகிசுப் பாணியிலான அருவருப்புக்களைக் காண்கின்றோம். இந்த நிலையில் சுய இலாப நோக்கங்களுக்கு அப்பால் புளொட் இயக்கத்தின் வரலாற்றின் பெரும்பகுதியை தனது இளமைக்கால வரலாறாகக் கொண்ட யோகன் கண்ணமுத்து (அசோக்) எழுதும் வரலாற்றுத் தொகுப்பு இனியொரு இணையத்தில் தொடராக வெளிவரவிருக்கிறது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அப்பாவி மக்களைப் படுகொலை செய்த பின்பு மூன்றாவது கட்டம் : டக்ளஸ்

Comments 18

  1. Vijey says:
    14 years ago

    யோகன் கண்ணமுத்து ஏற்கனவே தனது சுயவிமர்சனத்தில் ஒரு கனதியான பதிவியை ஏற்படுத்தியிருந்தார். இந்தத் தொடரில் தனியே தனிநபர்களைச் சுற்றியல்லாது சமூக நிலை குறித்து அவர் எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள். தனிநபர்கள் மறைந்து போவர்கள். மறைந்தும் போயிருக்கிறார்கள்.
    இந்த எழுத்து மற்றொரு கட்டத்திற்கான பாதையை காண்பிக்குமாறு அமைவதும் அவசியம். நட்புடன் விஜய்

  2. மீராபாரதி says:
    14 years ago

    நட்புடன் யோகன் அல்லது அசோக் அவர்களுக்கு…
    தங்களுடைய சுய விமர்சனத்தை மீளப் பிரசுரிக்க முடியுமா?
    இன்னும் வாசிக்கவில்லை…வாசிப்பதற்கு ஆவலாக உள்ளளேன்.
    நன்றி
    மீராபாரதி

  3. வரதன் ( கஸ்ட்ரோ) says:
    14 years ago

    அவசியம். நட்புடன் வரதன்

  4. அசோக் says:
    14 years ago

    அன்பான மீராபாரதி
    மற்றும் வரதன். வணக்கம். சுயவிமர்சனம் என்ற அடிப்படையில் ‘முழுமையாக’ எதனையும் எழுத்தில் இதுவரை முன் வைக்கவில்லை. ‘ சுயவிமர்சனம்’ என்ற அரசியல் சார்ந்த கோட்பாடு தொடர்பாக என்னிடம் தெளிவான பார்வை எதுவும் இல்லை.
    புரிந்துகொள்ள முயல்கின்றேன். அவதூறுகளும் அவற்றுக்கான பதிலுமாகவே எமது காலம் கழிந்துகொண்டிருக்கிறது. வேதனையும் துயரங்களுமே மிச்சம். சில காலங்களுக்கு முன் திரு.ரயாகரன் அவர்கள் என் பற்றி எழுதிய அவதுர்றுகளுக்கு இனியொருவில் என் பதிலை அளித்திருந்தேன். அக் குறிப்புக்களையே விஜய்
    குறிப்பிடுகின்றார் என நினைக்கிறேன்.

    தோழமையோடு

    அசோக்

  5. வரதன் ( கஸ்ட்ரோ) says:
    14 years ago

    கன்டி தொடக்கம். ஈழப் போராட்டம் குறித்த இன்னொரு தெளிவான பதிலுமாகவே புரிந்துகொள்ள முயல்கின்றேன்…பாதை நீன்டது அவதூறுகளுக்கு பயப்பிட வேண்டாம்

  6. ஆளவந்தான் says:
    14 years ago

    வெள்ளாள இயக்கம் என்பதனால் புளொட் இல் சேர்ந்து  கூட்டணியின் இடத்தை நிரப்ப  வட்டம், மாவட்டம், என தி,மு,க பாணியில்  பாசாங்கு பண்ணி பதவியில் அமர்ந்து, இன்று  வரலாறு என்று எதையோ ஒப்பிக்கின்றார்கள். எல்லா சம்பவங்களுக்கும் பின்னாலும் அரசியல் இருக்கின்றது. கருத்துக்கள்  எங்கிருந்து வருகின்றன?  கேணியடிலும், நந்தாவிலிலும், பொற்பதியிலும், இருந்து வருகின்றது. ஐரோப்பிய மைய வாதத்திலிருந்து விலக முடியாதவர்களை போல  யாழ் சாதிய ஒழுங்கிலிருந்தும், அதன் தூய்மைவாதத்திலிருந்தும், விலகமுடியாமல் அவதூறுகளை  பொழிகின்றார்கள்.  கிழக்கிலிருந்து சமூக உணர்வால், இனவொடுக்குமுறைக்கெதிராக போராட புறப்பட்டு, அதற்காக மிக அதிக விலை கொடுத்த உங்களை போன்ற  போராளிகளை  ஒரு பைக்கட்டில் பிஸ்ரலும், இன்னொரு பைக்கட்டில் பாஸ்போட்டும், வைத்திருந்தவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. உங்கள் தொடருக்காக காத்திருக்கிறோம்.  அராஜகத்தை எதிர்த்தோம் என்போரும், அராஜகவாதிகளும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக இருந்த விந்தயை விளக்கி உரையுங்கள்.

    • mamani says:
      14 years ago

      கேணியடி,நந்தாவில், பொற்பதி யாருக்கையா விளங்கப்போகிறது இவை யாழ் கொக்குவிலின் குறிச்சிகளென நீங்கள் நேசனை திட்டவேண்டுமெனில்நேரடியாகவே அவரை தொடர்பு கொள்ளலாம். கிட்டுவிற்கு குண்டெறிந்தது தனிமனித பயங்கரவாதமா?

  7. வ.ஐ.ச.ஜெயபாலன் says:
    14 years ago

    அசோக் உங்கள் தொடரை எதிர்பார்த்திருக்கிறேன். கனவுகள் நிறைந்த ஒரு இளைஞனாக யாழ் பல்கலைக் களக கலந்துரையாடகளில் உங்களைச் சந்தித்த நாத்கள் நினைவு வருகிறது. களக யாழ்ப் பொறுப்பாளராக ஒரு முஸ்லிம் இருக்கிறார் என்று நீங்கள் சொல்லியது என்னுடைய ஆர்வத்தைத் தூண்டியது. நாம் இருவரும் அவரை சந்திததும் நினைவில் கிளருகிறது. கனவிகள் அழந்துபோகலாம் தொடரும் வரலாற்றுக்கு தேவையான பங்களிப்பு. நல் வாழ்த்துக்கள்

  8. மீராபாரதி says:
    14 years ago

    நட்புடன் அசோக்குக்கு….
    தங்கள் பதிலுக்கும் விளக்கத்திற்கும் நன்றிகள்… நண்பர் விஜய் “யோகன் கண்ணமுத்து ஏற்கனவே தனது சுயவிமர்சனத்தில் ஒரு கனதியான பதிவியை ஏற்படுத்தியிருந்தார். ” என எழுதியிருந்தார். அதனால்தான் வாசிக்க விரும்பினேன்….
    நன்றி
    மீராபாரதி

  9. chandran.raja says:
    14 years ago

    கொலைகள் செய்தால் தான் விடுதலை கிடைக்கும் என்கிற ஒருகாலம் இருந்தது. இன்று அந்தமாதிரி நிலையில்லை என்பது மகிழ்ச்சியே!. தோழர் புஸ்பராஜா. ஐயர் என்கிற கணேஷ். இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் “வதைமுகாமில் பதினெட்டு மாதங்கள்” என்கிற மணியத்தின் அனுபவங்களும் அரசியல் கருத்தகளும் போன்றவை இனிவரபோகும் தலைமுறைக்கு ஒரு நேர்மையான அரசியல் பாதையை வழங்கும். அந்த வகையில் யோகன்கண்ணமுத்துவின் அனுபவங்களும் கருத்துகளும் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியவையே!.

    • Selvan says:
      14 years ago

      நேர்மையும் அரசியலும் நீரும் உமது புதிசாலித்தனமும் மாதிரி ஒரு ஒக்ஸிமோறோனாகும். நீர் சிங்ளத்தாயின் வயிற்றில் பிறப்பதற்கு விரும்புவதாக கூறும் புலுடாக்களில் உதுவும் ஒன்றே ?

  10. alex.eravi@gmail.com says:
    14 years ago

    காந்தியத்தினூடாகவும்… புலிகளில் இருந்து பிரிந்தவர்களினூடாகவும்… பலரின் அற்பனிப்புகளினூடாகவும் அமைக்கப்பட்ட… பல மக்கள் அமைப்புகளைக் கொண்ட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்ப காலத்திலிருந்து பல அனுபவங்களை… அமைப்பிற்குள்ளும்… வெளியிலும் அனுபவமாகவும்… பாடமாகவும்… அறிந்து கொண்ட மாணவப் பராயத்திலிருந்து தான் நேசிக்கும் மக்களின் விடியலிற்காக புறப்பட்ட நண்பர்… தோழர்… அசோக் இதை ஓர் வரலாற்றுக் குறிப்பாக்க இனியொரு தளத்தில் வெளிக் கொண்டுவருவது வரவேற்கத்தக்கது மட்டுமல்ல… தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் என்ன நடந்தது என அறியா முன்னால் உறுப்பினர்களுக்கு ஓர் தெளிவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்…
    இனவிடுதலைக்கு புறப்படும் அமைப்புகளுக்கும்… தலைமைகளுக்கும்… தலைமைகளை நம்புவர்களுக்கும்… ஓர் படிப்பினையாக மட்டுமல்லாமல்… ஓர் ஆவணமாக அமையும் என எதிர்பார்ப்போம்…!!!

    தோழமையுடன்
    இரவி வர்மா
    (அலெக்ஸ் இரவி)

  11. ஸ்பாட்டகஸ்தாசன் says:
    14 years ago

    அசோக்கின் பேச்சுக்களிலும் உரையாடல்களிலும் அவரின் கட்டுரைகளிலும் அவரிடமொரு ”அரசியல் அறம்” அல்லது அவர் ஒரு ”அறம்சார்ந்த அரசியலை முன்னியைப் படுத்துபவராக பரவலாக அறியப்பட்டவராக உள்ளார். அதனால் அவரின் அனுப பதிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்..
    எல்லாவற்றிலும் ”முழுமையான உண்மையை” காண்பது அரிது என்பதையும் அறிவேன்.. வாழ்த்துக்கள்.

  12. Vijey says:
    14 years ago

    அசோக் குறிப்பிடும் பதிலுரை

    https://inioru.com/?p=7948

  13. -வசந்தன் says:
    14 years ago

    தோழர் யோன் கண்ணமுத்துவின் சமூக பார்வையும்இ விடுதலை உணர்வையும் நன்கு அறிவேன். அரசியலில் இருந்து ஒதுங்கி கொண்டாலும் சமூகத்தின் மீதான தங்களது பார்வை இன்றும் தொடர்வது மகிழ்வுக்குரியது. விடுதலை என்ற கோதாவில் அன்று புறப்பட்டவர்கள் சிலர் ஒரு சிலர் மீது தவறுகளை சுமத்திவிட்டு இறுதியில் பிரபாகரனுக்கு பின்னால் துதிபாடியவர்கள் இன்;று விடுதலை குறித்த விமர்சனம் பற்றி கதைப்பதற்கு அறுகதையற்றவர்கள்.
    தோழர் அசோக் உங்களிற்கு விமர்சனம் செய்வதற்கு தககையிருக்கிறது. இதனை மற்றையவர்கள் ஏற்றிவிட்டு விடுப்பு பார்ப்பதற்கு அனுமதிக்காமல் சுயமான நேர்த்தியான காலத்தின் தேவை கருதிய விமர்சனமாக முன்வையுங்கள். அது எதிர்கால சமூகத்;திற்கு ஆரோக்கியமாக இருக்கும். தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தை பற்றி தெரியாமல் இருக்கவில்லை. அன்றைய உட்கட்சி மோதலுக்கு தூபம் இட்டவர்களும்இ சந்தேகத்தை உருவாக்கியவர்களும் புலிகளே. இறுதியில் அது உறுதியாடி எத்தனை ஆயிரம் பேர் முள்ளிவாய்கால் வரை கொண்டு சென்று படுகொலை செய்யப்பட்டனர்.
    இன்று புலம்பெயர் தேசங்களில் வாழும் சிலருக்கு கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிந்து பார்ப்பதுவே வேலை. உங்களின் இந்த விமர்சன பகுதியில் குறிப்பிட்டுள்ள பலர் இலங்கை அரசின் முகவர்களாகவே செயற்படுகின்றனர். ஏன் கடந்த காலங்களில் புலிகளின் தீவிர தேசிய கோட்பாட்டாளர்களாக கூறிக்கொண்ட பலர் இன்று என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
    விடுதலை போராட்டத்தில் தமிழீழ மக்கள் விடுதலை கழகமே பாரிய தவறை மேற்கொண்டது போலவும்இ மற்றையவர்கள் எல்லாம் விடுதலை உணர்வுடன் போராடியவர்கள் போலவும் அந்த அமைப்புக்களை சேர்ந்தவர்களே தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தை விமர்சனம் செய்யும் நிலை இந்த ஜனநாயக நிலையை ஏற்று கொள்ளும் பக்குவம் வேறு எந்த அமைப்பிற்காவது உண்டா? தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தை பற்றி விமர்சிக்க முயலும் தரப்பினரால் ஈ.பி.டி.பியை யோ அல்லது ஸ்ரீ ரேலோவையோ அல்லது கடந்த காலங்களில் புலிகளையோ வெளிப்படையாகவே விமர்சிக்க முடிந்ததா? உயிர் அச்சறுத்தலால் பதுங்கிய பலருக்கு இன்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. புளொட் தன்னை பற்றிய விமர்சனத்தை பக்கம் பக்கமாக விமர்சனம் செய்த தீப்பொறி கோவிந்தனையும்இ திவாகரன்(சிவா சின்னப்பொடி)இ ஜென்னிஇ சிவராம்இ போன்ற பலரது விமர்சனங்களை தாங்கி கொண்டு இன்றும் தமிழ் மக்கள் மத்தியில் தனது ஜனநாயக அரசியலை செய்து கொண்டுதான் உள்ளது.
    விமர்சனங்களை கண்டு நடங்கிய புலிகளையே அல்லது இன்றை இலங்கை அரசினையோ அல்லது அந்த அரசிற்கு முண்டு கொடுக்கும் தமிழ் அமைப்புக்களை போலல்லாமல் ஆயிரம் விமர்சனங்கள் வரட்டும் அதுவே எமது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் என்ற இன்றைய தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் சித்தார்த்தனின் கருத்தினையும் இங்கு சுட்டிக்காட்டி. ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வையுங்கள் அதுவே முறையான வளர்ச்சிக்கு ஊன்று கோலாக அமையும். கடந்த காலங்களில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் உட்கட்சி ஜனநாயகத்தை குறை கூறி வெளியேறிய தீப்பொறிஇ அல்லது பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எவ் கழகம் தவறு என்று சுட்டிக்காட்டி வெளியேறியவர்கள். சரியான தலைமை துவத்தை காட்டி தவறான அமைப்புடன் சென்று கொண்டிருக்கும் தோழர்களை காக்க தவறியவர்கள் இறுதியில் என்ன ஆகி இன்று எவரின் கைப்பொம்மையாகி நின்றிகின்றார்கள் என்பருது வரலாறகிவிட்டது. ஆகவே எழுந்தமானமான விமர்சனங்களை விடுத்து ஆரோக்கியமானதாக அமைய எனது வாழ்த்துக்கள்.

  14. pidungi says:
    14 years ago

    ஊர் தீப்பற்றிப்பிடிக்கையில் மேலும் கொள்ளி செருகியவர்களும்,மேட்டிமையோடு எண்ணெய் ஊற்றியவர்களும்,ஒதுங்கி நின்று ஒட்டுப்பார்த்தவர்களும் மாறிமாறி எதிரி,துரோகி என்கின்ற வெற்றுச் சூத்திரங்களே எமது வரலாறாய்க் கிடக்கிறது. வரலாற்றிலிருந்து மனிதன் கற்றுக் கொள்ளவேண்டும். துரதிஸ்டவசமாக ஒருவர் மீது ஒருவர் சேற்றைவாரிக் குவிப்பதே அண்மித்த கால வரலாறுகளின் கருவாகவிருக்கிறது. உண்மை என்பது ஒன்றே ஒன்றுதான். அதன் காரணமும் ஒன்றே ஒன்றுதான்!!!! உண்மை பொய்யாகவும்,பொய் உண்மையாகவும் மாறிய இப்பொழுதுகளில் தங்களின் ஆய்வு யாதார்த்தத்தைப் பேசட்டும்.

  15. கரட்டி says:
    14 years ago

    அசோக் அண்ணா , உள்ளதை உள்ளபடி எழுதுங்கள் . முகஸ்துதிக்கு, அன்பான மிரட்டலுக்கு , அச்சுருத்தல்லுக்கு எல்லாம் இடம் கொடாதிர்கள். 

  16. தங்கரூபன் says:
    14 years ago

    ஸ்பாட்டகஸ்தாசன் உங்கள் வருகைக்கு நன்றி .

    தங்கரூபன்
    21.02.2012

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...