Monday, May 11, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

இலங்கை விடயம் பற்றி ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆராய்வு.

இனியொரு... by இனியொரு...
04/23/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

இலங்கையின் மனிதநேய நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆபத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

“மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் மக்கள் குறித்து பாதுகாப்புச் சபை உறுப்பினர்கள் கவலையடைந்துள்ளோம்” என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான மெக்சிக்கோத் தூதுவர் க்லூட் ஹெலர் கூறியுள்ளார்.

இலங்கை விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பொன்றை நடத்திக் கலந்துரையாடியிருந்தாக அவர் கூறினார். இந்தச் சந்திப்பில் பொதுமக்களைப் பலவந்தமாகத் தடுத்துவைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கை கண்டிக்கப்பட்டதாக மெக்சிக்கோத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை விடயம் தொடர்பாக பாதுகாப்புச் சபையில் உத்தியோகபூர்வமாகக் கலந்துரையாடும் தீர்மானத்துக்கு உறுப்பு நாடுகளான சீனா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

அதேநேரம், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் அலுவலகத் தலைமை அதிகாரி விஜய் நம்பியாரின் இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை பாதுகாப்புச் சபைக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் சவேர்ஸ் சுருக்கமாக விளக்கமளித்துள்ளார்.

“இலங்கையின் மனிதநேய நிலைமைகள் ஆபத்தாகவுள்ளன என்று விஜய் நம்பியார் விபரத்துள்ளார்” என சவேர்ஸ் பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ளார்.

மோதல் நடைபெறும் வலயத்திலுள்ள மக்கள் அனைவரும் ஐ.நா.வின் உதவியுடன் வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்ற விடயத்தில் அனைத்து உறுப்பு நாடுகளும் இணங்கியிருப்பதாக பிரித்தானியத் தூதுவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு ஐ.நா. முகவர்கள் செல்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் எனவும், இதன்மூலம் இடம்பெயர்ந்த மக்களை சரியான முறையில் பராமரிக்க முடியும் எனவும் பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் இணக்கம் கண்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் முழு உதவி வழங்கவில்லை: அமெரிக்கா

இது இவ்விதமிருக்க விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பித்துவரும் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் பூரண உதவிகளைச் செய்யவில்லையென ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சுசன் ரைஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் சர்வதேசச் சட்டங்களை மதித்து நடக்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

“பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறிய மக்கள் மீது இரண்டு தரப்பும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது என்பது சர்வதேசச் சட்டத்தை இருதரப்பும் மதிக்கவில்லையென்பதற்கான ஒரு உதாரணமாக அமைந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இலங்கையின் மோதல்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதற்கோ அல்லது பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பிவரும் மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் பகுதிகளுக்கோ ஐ.நா. முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் செல்வதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லையென ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான பிரதித் தலைவர் கத்தரின் ப்ரக் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களிலிருக்கும் ஐ.நா. பணியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என ப்ரக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவர் எச்.எம்.ஜீ.எஸ். பலிஹகார, மோதல் நடைபெறும் பகுதிகளுக்கும், சோதனை நடைபெறும் பகுதிகளுக்கும் ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழர்கள் செறிந்துவாழும் இரண்டு மாகாணசபைகளிலும் சமஸ்டி அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்: ப.சிதம்பரம்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In