இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான நாடல்ல என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ள கருத்து இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரிகா பண்டாரநாயக்கா முதல் அனைத்து ஜனாதிபதிகளும் பௌத்த மத்தின் வழிகாட்டலில் ஆட்சி நடத்தி வந்துள்ள நிலையில் பட்டமுல்ல கந்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என அரசியல்வாதிகள் பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர் எனினும் அவர்களது கூற்றில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
வாழும் அனைவருக்கும் இலங்கை சொந்தமான நாடு எனவே சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
அத்துடன் நாட்டில் இன,மத,குல பேதங்களைக் களைந்து சமாதானத்துடன் வாழ அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்









She once said at Moneragala, that we cannot give Ealam. I was going to say, to whom? Ealam means the Land Under. Sinhalese are Aryans and only they had the technology then to colonize and make this place habitable. I just want to be in par with Dr. Sumanasiri Liyanage.