இலங்கைப் போலிசிற்கு ஸ்கொட்லான்ட் தொடர்ந்தும் பயிற்சியளிக்கும் எனத் தெரிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பிரித்தானிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இப் பயிற்சி இன்றும் தொடர்கிறது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் நிதியுதவியுடன் வழங்கப்படும் இப் பயிற்சி 2015 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என ஸ்கொட்லண்ட் போலிஸ் அறிவித்துள்ளது இலனுக்கையில் உயர்தர போலிஸ் உத்தியோகத்தர்களை உருவாக்கும் நோக்கத்தில் இப் பயிற்சி வழங்கப்படுவதாகக் கூறும் ஸ்கொட்லாண்ட் இத் திட்டத்தை வழி நடத்துபவர்களில் ஒருவராக புரூஸ் மில்ன்ஸ் ஐ நியமித்துள்ளது.
வன்னிப் இனப்படுகொலையின் போது பிரித்தானிய அரசு இலங்கை அரச படைகளுக்கு ஆலோடனையும் பயிற்சியும் வழங்கியுள்ளது. இன்று வட கிழக்கிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் செயற்படும் கொலைப்படைகள் பிரித்தானிய அரசின் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை.
பிரித்தானிய அரசு காலனி ஆதிக்கத்தின் பின்னரும் இலங்கையில் மக்களின் அழிவிற்கும் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அழிப்பதற்கும் துணை செல்கிறது. தனது திட்டங்களைப் புலம்பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் நிறைவேற்றுவதற்காக ஆதரவுக் குழுக்களை உருவாகியுள்ளது. இந்த ஆதரவுக் குழுக்கள் தமிழர்களைத் தலைமை தாங்குவதாகக் கூறி உளவுப் படைகளிடம் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை ஒப்படைத்து வருகின்றன.